What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
382
நாளுக்கு நாள் சின்னவனின் உடல் நலம் குன்றி போனது. ஆளே அடையாளம் தெரியாதவன் போல் மாறிப்போனான் தம்பியவன். பாதி மிருகமாகவும் மீதி மனிதனாகவும் உருக்கொண்டு உக்குரலில் உரும்பினான்.

சோறு தண்ணி கொள்ளாது பச்சை மாமிசம் கோரி கதறினான். கெய்டனோ மகனை அறைக்குள் வைத்து பூட்டினான்.

மாற்றங்கொண்டிருந்தவனோ சர்வ் சாதாரணமாய் கதவை உடைத்துக் கொண்டு அறையிலிருந்து வெளியேறினான். பசியில் மனையை தும்சம் செய்தான்.

மீன் தொட்டியிலிருந்த அழகு மீன்களை பிடித்து தின்றான். போதாது வயிறு காய, பக்கத்து வீட்டு நாயையும் விட்டு வைத்திடாது கடித்து தின்றான்.

வேறு வழியில்லாத தகப்பனோ, வெறிக்கொண்ட மகனை கூண்டுக்குள் அடைத்தான். மயக்க ஊசியைப் போட்டு வெறும் நீரை மட்டுமே உணவாக்கினான்.

மூர்த்திகன் பொறுப்புகளை சுரஜேஷின் நம்பிக்கைக்கு பாத்திரமான அவனின் தனிப்பட்ட உதவியாளனான சதஸ், எவ்வித பிரச்சனையுமின்றி பார்த்துக் கொண்டான்.

கெய்டனும் அவனால் இயன்ற ஆராய்ச்சிகளை செய்தான் மகனை காப்பாற்ற வேண்டி.

கண்டுப்பிடித்த எதுவுமே வேலைக்கு ஆகாத பட்சத்தில், தொழில், படிப்பென்று எல்லாவற்றையும் மூட்டைக் கட்டி ஓரம் போட்டான் ஔகத். விரக்தியில் காடு மலையென ஏறி இறங்கினான். பண்டிதர்கள் பலரை நேரில் சென்று கண்டான். பல நூல்கள் படித்தான்.

தொன்மை மருத்துவம் கற்றுத் தேர்ந்தான். அரிய மூலிகைகள் தேடி அலைந்தான். இருந்தும், எதுவுமே கைக்கொடுக்கவில்லை பேரழகனுக்கு. ஏமாந்தவன் சோர்ந்து போனான்.

தம்பியை இழந்திடுவானோ என்று பயங்கொண்டான். அச்சத்தில் நிம்மதி இழந்தான். தாய் மடி நோக்கி ஓடினான்.

தன்னையே மறந்திருந்த சுஜியோ, மகனின் துயரம் உணர்ந்தாள் அவன் சொல்லாமலேயே. தொல்லைக் கொடுக்காது கரிசனமாய் பிசைந்து நீட்டினாள் கறி சோறை.

''சாப்பிடு..''

என்றவளோ முதல் முறை அவனுக்கு ஊட்டி விட முனைய, மகனோ வேண்டாமென்று தலையாட்டினான்.

''வயித்து வலிக்குதா?''

என்ற கயலோ சிறு குழந்தையாய் மாறி கொஞ்சல் தொனியில் வேள்விக்கொள்ள,

''மனசு வலிக்குது.''

என்றவனின் கண்களோ கலங்கி போயின, எங்கே சுரஜேஷை வாரி எமனுக்கு கொடுத்திடுவானோ என்ற கலக்கத்தில்.

''அது எங்க இருக்கு?''

என்றவளோ புரியாத மழலை போல் கேள்வி எழுப்ப,

''அதை பார்க்க முடியாது! ரொம்ப தூரமா இருக்கு!''

என்றவனோ கொட்டிய கண்ணீரை துடைத்துக் கொண்டான் தலையைத் தொங்கப்போட்டு.

''அவ்ளோ தூரமா?''

என்ற சுஜியோ, கையை நீட்டி சுவற்றிலிருந்த ஓவியத்தைக் காட்ட, தலையை தூக்கி பார்த்தவனோ மண்டையை மட்டும் ஆட்டி வைத்தான் அன்னையின் கூற்றை ஆமோதித்து.

''இது ஒரு தூரமா?!''

என்ற கயலோ விழிகளை உருட்டி, மகனின் கரமிழுத்து போனாள் சுவர் ஓவியத்தை நோக்கி.

சுரஜேஷ் வரைந்திருந்த படத்தில் ஔகத்தின் விரல்களை இழுத்து பதித்த சுஜியோ,

''இதோ வந்துட்டோமே, மனசுக்கு!''

என்றுச் சொல்லி சிரிக்க, இமைக்காது பார்த்தான் டாக்டரவன் ஓவியத்திலிருந்த கேதார்நாத் கோவிலையே.

கெய்டன் அவன் காதலி ரீவாவை கேதர்நாத்தின் மறிக்கையானின் (சிவன்) முன்னிலையில்தான் திருமணம் செய்துக் கொண்டான்.

பெற்றோர்களின் காதல் சின்னமென்று சொல்லிக்கொள்ள எதுவுமில்லாத நிலையில், அத்தலத்தையே படமாய் வரைந்து அவர்களுக்கு பரிசளித்திருந்தான் சின்னவன்.

ரீவா போய் சேர்ந்த பிறகு கெய்டனுக்கு அப்படத்தை காண்கையில் துக்கம் தொண்டையை அடைத்தது. ஆகவே, அதைத் தூக்கி ஔகத்திடம் கொடுத்து விட்டான். மகனோ அதை அம்மாவின் அறை சுவற்றில் மாட்டி விட்டான்.

''நிமல், என்ன இங்க கூட்டி போறியா?!''

என்ற கயலின் முழங்கை குலுக்கலில் சுதாரித்தவனோ, தலையை ஆட்டினான் சரியென்று வார்த்தைகள் ஏதுமின்றி.

''என்னோட மனசு இங்கதான் இருக்கு, தெரியுமா?!''

என்றவளோ மகனைத் தாண்டியோடி,

''அங்க வெச்சுக்கிட்டு இங்க தேடினா எப்படி கிடைக்கும்?! உனக்கு மூளையே இல்லே நிமல்! டால்டா! டால்டா!''

என்று தலையில் அடித்துக் கொண்டு, சோறை உண்டிட ஆரம்பித்தாள்.

சுஜி என்னவோ கிறுக்குத்தனமாகத்தான் உளறினாள். ஆனால், ஔகத்திற்கோ அம்மாவின் வார்த்தைகள் மூலம் பார்ப்பதிகொழுநன் (சிவன்) எதையோ பூடகமாய் சொல்ல வருவது போல் தோன்றியது.

தாமதிக்காதவனோ மறுநாளே கேதார்நாத் பயணிக்க தேவையான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்தான். உடன், சுஜியையும் அழைத்துப் போனான் டாக்டரவன்.

திட்டமிட்டப்படி களர்முளைநாதன் (சிவன்) வீற்றிருந்த மலைக்கோவிலை சென்றடைந்தான் ஔகத் அவன் மம்மி சுஜியோடு.

வி.ஐ.பி. பாஸ் கொண்டு கருவறைக்குள்ளிருந்த ஏனவெண்மருப்பனை (சிவன்) வணங்கி முடித்தவனோ, இதுநாள் வரை மனங்கொண்ட பாரம் காணாது போய் லேசாகியது போலுணர்ந்தான்.

கயலோ மகனின் கைப்பிடியை உதறி தள்ளி ஓடினாள் பீம் ஷீலா கரும்பாறையை நோக்கி. ஆட்கள் குறைவான நேரமென்பதால் அடிகளை துரிதப்படுத்தியவனோ கூச்சல் ஏதும் கொள்ளாதே தாயை பின் தொடர்ந்தான்.

சுஜியோ முரம்பின் (பாறை) முன் அமர்ந்திருந்த அகோரியின் ஜடையை பிடித்திழுத்து வம்பு செய்து சிரித்தாள். முறுவலித்த அவரும் அவளோடு ஏதேதோ பேசினார்.

காட்சியைக் கண்ட மகனோ அம்மாவின் முகம் சந்தோஷத்தில் விரிய கண்டு சிறியதொரு நிம்மதிக் கொண்டான், புத்தி பேதலித்தவள் தெளியாதிருந்தாலும்.

சிறிய சந்தோஷத்தோடு கயலை நெருங்கிய டாக்டரின் போனோ அலற, அதை எடுத்து காதில் `வைத்தவனோ பாறைக்கு முதுகு காண்பித்த பேச்சை வளர்த்திட ஆரம்பித்தான்.

அகோரியிடம் கேலி கிண்டல் கொண்ட சுஜியோ கரும்பாறையை சுற்றி கண்ணாம் பூச்சி ஆட, மூச்சு வாங்கியவளின் கையில் யாரோ தண்ணீர் குவளையொன்றைக் கொடுத்தனர்.

அதை வாங்கி பாதியாய் நெட்டியவளோ, மீதியை தவித்த வாய்க்கு உதவிய நல்லவனின் தலையிலேயே ஊற்றி கைத்தட்டி சிரித்தாள்.

இதழ்கள் மடங்க குறுநகை கொண்ட அழகனோ, அவன் குழல் சொட்டியை நீரை கையால் தாங்கி, உபத்திரத்தில் வேடிக்கை கொண்ட தளிரியலின் முகம் படர வீசினான்.

''டால்டா! டால்டா! சாம்பார் டால்டா!''

என்று தூரப்போய் சத்தம் போட்டு சிரித்த சீமாட்டியோ, அவளின் ஷோல் கொண்ட சுடியின் விளிம்பை விரல்களால் பற்றி ராட்டினமாய் சுற்றினாள்.

முரம்போரம் நின்று வா என்றழைத்தவனின் கண்ணசைவில் சாவிக்கொண்ட பொம்மையாய் அடிகளை முன்னெடுத்த வைத்த மகிலையோ, நீண்டிருந்த அவன் கரத்தின் உள்ளங்கையில் அவள் கை பதித்தாள்.

கன்னத்தில் குழி விழ, கடுக்கன் கொண்ட மயில் வர்ண கண்காரனோ ஒரே இழுப்பில் மாதவளை அவன் நோக்கி இழுக்க, சிங்கப்பல் தெரிய இதழ்கள் விரித்திருந்த ருத்ராட்ச மாலைக்காரனோ, மாயோளின் விரல்கள் பற்றி கிறுக்கிட ஆரம்பித்தான் பாறையில்.

எழுத்தாணியாய் மாறியிருந்த கூர்மையான பனிகட்டி கொண்ட குளிர்ச்சியில் சுஜியின் முகமோ மாறிப்போனது விரல்கள் மருத்துப்போக.

சிணுங்கியவளின் காது மடல் உரசிய திருநீறு அங்கக்காரனோ, அவளுடலோடு அழகனின் தேகத்தை மென்மையாய் ஒட்டிக்கொள்ள, ஆயந்தியின் இதயமோ புயலாய் வேகமெடுத்து தென்றலாய் இளைப்பாறிட ஆரம்பித்தது.

முகம் ஒன்றென்றாலும், உணர்வு வேறல்லவா. தாயவளுக்கு தெரியாதா, தாரமெது தமையனெது என்று.

மேனி சிலிர்த்தது சுந்தரியவளுக்கு, கட்டழகனின் நெருக்கமான கன்ன உரசலில். கந்தமூல்லை 'கடாக்' என்று கடித்தவனின் பிடிக்குள் அடைப்பட்டிருந்த அந்திகையோ, சொருகிய அம்பகங்களை மெதுவாய் மூடிட,

''கேடி!''

என்ற தளிரியளின் வாயோ ஊமையாகி அவன் கந்தரம் சாய்ந்தது.

''அடியே தீரா!

என் கயல் தீரா!

அபிருசியின் (விருப்பம்) முயல் தீரா!

சாம்பாரின் மயில் தீரா!

விதி செய்த சதி தீரா!

தீட்சையும் தீக்கரையாகுதடி என்னுயிர் தீரா!

என்றுக் கொஞ்சும் குரலில் கவி சொல்லி குறுஞ்சிரிப்பு கொண்ட வெற்றுடல் வேஷ்டிக்காரனோ, எழுதி முடித்திருந்தான் கரும்பாறையில், நிமலன் சர்வேஷ் குமார் என்ற பெயருக்கு கீழ் கயல் தீரா என்ற பெயரை.

போன் பேசி முடித்த மகனோ முரம்பைத் திரும்பி பார்க்க, பெத்தவளை காணாது பதறிப்போனான். ஓடினான் பாறையை நோக்கி டாக்டரவன்.

சுஜியோ பாறையின் பின்பக்கத்தில் யாருமற்று தனியே நின்றிருந்தாள். சிவ பக்தனாய் வந்தவன் காரியம் முடிய அங்கிருந்து நகர்ந்திருந்தான்.

டாக்டரின் மம்மியோ கரும்பாறையின் பள்ளத்தில் தேங்கியிருந்த நீரை விரல்களால் தொட்டு சப்பி ருசி பார்த்துக் கொண்டிருந்தாள்.

தாயை கண்ட பிறகுதான் மூச்சே வந்தது ஔகத்திற்கு. அவளை நோக்கி போன மகனோ, பள்ளத்தில் வாய் வைத்து பனி நீரை குடிக்க விழைந்த தாயை தடுத்து நிறுத்த, உதட்டை பிதுக்கி செல்லக்கோபம் கொண்டவளோ ஓரமாய் போய் பாறையில் சாய்ந்துக் கொண்டாள்.

வாயை குவித்து காற்றூதிக் கொண்ட மகனோ மம்மியை சமாதானமாக்கும் பொருட்டு அவள் பின்னால் போக, சுஜியோ வம்படியாக அடிகளை பாறையை சுற்றி வைத்தாள்.

தாயை பின்தொடர்ந்த ஔகத்தின் காலோ, எதர்ச்சையாய் எதிலோ பட்டு இடறிட, தலை குனிந்து பார்த்தவனின் கண்ணிலோ மஞ்சள் வர்ண கமலம் தென்பட்டது.

பீம் ஷீலா பாறைக்கு கீழிருந்த பனிக்குவியல்களின் மத்தியில் ஒளிந்திருந்தது, மங்கள வர்ணங்கொண்ட பூவது.

ஔகத்தின் மூளையோ என்றோ ஒரு நாள் அவன் படித்த சங்கக்கால முளரியோடு (தாமரை) இப்போது சிக்கியிருக்கும் சாரசத்தை (தாமரை) ஒப்பிட்டு பார்த்தது.

அதிசய சீதளமாக (தாமரை) இருக்குமோ என்ற சந்தேகத்தோடு, சட்டென தரை அமர்ந்த ஔகத்தோ அம்மஞ்சள் கதிர்ப்பாரியை (தாமரை) ஒருவழியாய் பிடிங்கி எடுத்தான் சிறிய தண்டோடு, பாறைக்கு அடியில் உள்நோக்கியிருந்த பனி குவியல்கள் அத்தனையையும் கையாலேயே ஓரந்தள்ளி.

நுகரவே தேவையில்லை என்பது போல் சந்தனம் மற்றும் எலுமிச்சை நறுமணத்துடன் கூடிய கற்பூர வாசம், ஔகத்தின் சந்தேகத்துக்கு விடையளிக்க, முகம் மலர்ந்தவன் காதிலோ கேட்டது, கேதார்நாத் புனர்வசுவின் (சிவன்) சன்னிதி மணியோசை.

சுஜியோ பாறையை சுற்றி மகன் நோக்கி வர, பூரித்திருந்தவனோ புதிய நம்பிக்கையோடு தாயை அழைத்துக் கொண்டு கிளம்பினான் அங்கிருந்து ஜெர்மனுக்கு.

வெள்ளியார் (சிவன்) அவனை நம்பியோரை எப்போதுமே கைவிட்டிட மாட்டான், எச்சூழ்நிலையிலும்.

சுஜி மூலம் ஓவியத்தை டாக்டருக்கு உணர்த்தியதும் அத்துவவிலிங்கம்தான் (சிவன்), கயலை பாறையை நோக்கி ஓட வைத்தவனும் சூலபாணிதான் (சிவன்).

ஔகத்தின் பாதத்தை இடற வைத்ததும் நஞ்சுண்டான்தான் (சிவன்), அவன் விழிகளில் கைலாயத்தின் அரிய சோமாக்கியத்தை (தாமரை) தென்பட வைத்ததும் சாட்சாத் மூலோகத்துக்குள் கடவுளான சங்காரகர்த்தாவேதான் (சிவன்).

அவனின்றி ஓரணும் அசையாது அதுவே நிஜம்.

நாடு வந்துச் சேர்ந்த ஔகத்தோ ஆராய்ச்சியை ஆரம்பிக்க, பங்கசாதம் (தாமரை) மீது படர்ந்திருந்த ஈரமோ, சாதாரண பனி நீர் அல்ல என்பதைக் கண்டறிந்தான்.

உருமாற்றப் பாறைகள் எனப்படும் மெத்தாபோர்ஃபிக்ஸ் பாறைகளில் (Metamorphic rocks) காணப்படும் கனிமம்தான் செலினியம் (Selenium) ஆகும்.

இக்கனிமம் பீம் ஷீலா போலான நைசஸ் மற்றும் ஸ்லேட் (gneiss and slate) வகையைச் சேர்ந்த பாறைகளில் உருவாகிடும் ஒன்றாகும். அதீத வெப்பமும், அழுத்தமும்தான் இது உருவாகிட காரணமாகும்.

இக்கனிமம் மருத்துவ ரீதியில் ரொம்பவே பெயர் பெற்றதென அதைப்பற்றி அலசி ஆராய்கையில் தெரிந்துக் கொண்டான் ஔகத்.

அதுவும், அது தைராய்டு செயல்பாடு (thyroid function), டி.என்.ஏ. பழுதுபார்ப்பு ( DNA repair) மற்றும் புற்றுநோயை எதிர்க்கும் தன்மை (anti-cancer properties) கொண்ட மினரல் என்பதால் நிச்சயம் சுரஜேஷின் புதிய மருந்துக்கான கண்டுப்பிடிப்பில் அதிகளவிலான பங்களிப்பை அது கொண்டிருக்குமென நம்பினான் டாக்டரவன்.

ஆகவே, நிமிடங்களை வீணடிக்க விரும்பா மூத்தவனோ, உடனடியாக மூர்த்திகன் குரூப்ஸ் மூலம் மெத்தாபோர்ஃபிக்ஸ் பாறைகளைக் கொண்டு வந்து லேப்பில் போட்டான்.

அபூர்வமாய் கிடைக்கக்கூடிய நாளிகத்தையும் (தாமரையையும்) செலினியத்தையும் கொண்டு புதுவித மருந்தொன்றை கண்டுப்பிடித்தான்.

வழக்கம் போல் சுரஜேஷின் செல்களை எலியாருக்குள் செலுத்தியவன், பின் கட்டுக்கடங்காது வெறி பிடித்த மகிந்தகத்துக்கு, அவன் கண்டுப்பிடித்த புதிய திரவத்தை தீர்வாக்கினான்.

மூஷிகனோ குணமாகி பழைய நிலைக் கொண்டான். டாக்டரோ பரிசோதனையின் வெற்றியைக் கொண்டாடினான்.

அத்திரவத்திற்கு துர்லபம் என்று பெயர் சூட்டினான் ஔகத். அப்பெயரின் அர்த்தமோ அரிது என்பதாகும்.

கெய்டனை அழைத்து தகவலை சொன்னவன், சின்னவனை தகப்பனின் உதவியோடு ஆய்வகத்துக்கு நாடு கடத்தினான் இல்லத்திலிருந்து. துர்லபத்தை அவனுக்குள் செலுத்தினான்.

முதல் மூன்று மணி நேரங்களுக்கு சுரஜேஷிடம் எவ்வித மாற்றமும் இல்லை. கேடி மகனுக்கோ அடிவயிறு கலக்கியது. எங்கே பழைய சம்பவம் ரிப்பீட் ஆகிடுமோ என்று.

ஐந்து மணி நேரமாகியும் எதுவும் நடக்கவில்லை சுரஜேஷுக்கு. பதற்றத்தில் தவித்தான் டாக்டர். ஆறுதல் படுத்தினான் கெய்டன். பொறுமை கடலை விட பெரியதென்றான் அனுபவசாலியவன்.

எட்டு மணி நேரங்களுக்கு பிறகு, சின்னவனின் உடலுக்குள் சில மாற்றங்கள் ஏற்படுவதை கணனியின் தொடுதிரை மூலம் கண்டனர் அப்பனும் மகனும்.

மெதுவாய் ஆரம்பித்த மாற்றம் அடுத்த சில மணி நேரங்களிலேயே வேகமெடுத்து அஃறிணையாய் கிடந்தவனை முழு மனிதனாய் மாற்றியது.

கண் விழித்தான் சுரஜேஷ்ட ஏகஷ்ருங்கா மறுபிறவி கொண்டவனாய்.

அன்றையிலிருந்து இன்று வரை நன்றாக இருக்கிறான் சின்னவனவன், ஔகத்தின் புண்ணியத்தில்.

இன்ஜெக்ஷனை தேவைப்பட்டால் மட்டுமே எடுத்துக் கொள்வான் சுரஜேஷ், மிருகமாய் உருமாறும் எண்ணமோ அல்லது உணர்ச்சிகளோ அவனுக்குள் தோன்றுகையில்.

படாஸ்...
 

Author: KD
Article Title: படாஸ்: 116 (பாகம் 2)
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

jershika

New member
Joined
Oct 6, 2024
Messages
3
Sis neenga stry kondu pora way superb neraya visayam solreenga oru stry kkaga ivlo menakkidal unmayilaye bramippa irukku hats off to u sis
 

jershika

New member
Joined
Oct 6, 2024
Messages
3
Sis ithu rerun stry na appo full stry already ezhuthi irupeenga athu ethula irukku suspens thaangala
 
Top