- Joined
- Jul 10, 2024
- Messages
- 414
அத்தியாயம் 120
படைப்பவனும் அவனே, பாடையேத்துபவனும் அவனே.
அந்த ஒருவன் கணிச்சியோனே.
ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமென்றால், ஔகத்தோ புதுசு புதுசாய் எதையாவது கண்டுப்பிடித்து மனித குலத்தை வாழ வைத்திடும் எண்ணங்கொண்டவன்.
ஆனால், படாஸோ அதர்மத்தை கொண்டாடும் நரன்களை களையெடுத்திடும் எமனின் குணம் கொண்டவன்.
ஒன்றல்ல ரெண்டல்ல, மொத்தம் நாற்பது வகையான மூலிகைகளைக் கொண்டு அதிமுக்கியமான திரவத்தைத் தயாரித்திருந்தான் படாஸ் சின்னவனுக்காய்.
சுரஜேஷின் உடல் எடையை மாற்ற எண்ணி, அதற்கான மருந்தை ரோமம் சூழ்ந்த அவன் சதைக்குள் மாட்டு ஊசி போலான தடுமனான இன்ஜெக்ஷன் மூலம் செலுத்தினான் படாஸ்.
வாரம் ஒருமுறை இதைத் தொடர, சுரஜேஷின் பெருத்த உருவமோ மீண்டும் மானிட அளவுக்கு திரும்பியது. கரடியை போலான ரோமங்கள் உதிர்ந்து கொட்டின. செங்குத்தான சிகையோ படிய ஆரம்பித்தன.
ஒன்றாகி போன நாசித்தூவரங்களை மறுபடியும் ரெண்டாக்க, சிறியதொரு ஆப்ரேஷன் கொண்டான் படாஸ் ஒட்டிக்கொண்ட சுரஜேஷின் மூக்கு சதையைப் பிரித்திட.
சுரஜேஷின் ஓட்டையிலான காயங்களிலோ தோல் திரும்பவும் உருவாகிட திசு இன்ஜினியரிங் வழியை பின்பற்றினான் படாஸ். முற்களோ உதிரிப்பூவாய் உதிர்ந்து போயின.
அவைக் குடிக்கொண்ட துவாரங்களோ புது தோல் கொள்ள மூடிக்கொண்டன. நல்லி எலும்புகள் மறைய சதை பிடிப்பு கொண்டது சின்னவனின் தேகம்.
அடுத்த ஆறாவது மாதத்தில், சுரஜேஷின் செவிகளோ பின்னந்தலையிலிருந்து முன்பக்கமாய் பிரிந்து வந்தன பழைய உருவத்திற்கு மாறி. பற்களோ அளவில் மீண்டும் சிறியதாகி வாயுக்குள் அடங்கிப் போயின.
பொசுங்கிய முகமோ பழைய அழகு கொண்டது. தலை நிறைய சிகை முளைக்க, கைகால்கள் கொண்ட நகங்களோ மீண்டும் பழைய நிலைக்கே திரும்பின.
விவரிக்க முடியா அகோரத்தின் பேருருவமாய் நாட்களை கடத்திய சுரஜேஷ்ட ஏகஷ்ருங்கா, சாபத்தின் விமோச்சனம் பெற்றான் மொத்தமாய் இரண்டு வருடங்கள் கழிய.
சின்னவனை டாக்டரின் பொறுப்பில் கைமாற்றிய படாஸ் அவனின் வேட்டையை தொடங்கிட ஆரம்பித்தான்.
சதஸ் மூலம் ஓவியாவின் கதையை தெரிந்துக் கொண்ட படாஸோ, அதை டாக்டர் அறியாமல் பார்த்துக் கொண்டான்.
பெண்ணவளின் திருட்டுத்தனங்களை ரெண்டே வாரத்தில் கண்டறிந்தவன், அவளோடு கூட்டுச் சேர்ந்த மற்றவர்கள் யாரென்ற தேடல் கொண்டான்.
அதே வேளையில், ஆய்வகத்துக்குள் நுழைந்து மமாடி இப்படி நடந்துக் கொள்ள என்ன காரணம் என்பதையும் கெய்டன் மூலம் தெரிந்துக் கொண்டான் படாஸ்.
வார இறுதியில் ரெண்டு சிப் மட்டுமே இழுக்கும் மமாடி எப்படி மொடா குடிகாரன் ஆனான் என்ற கேள்வியின் முடிவில் புரிந்துக் கொண்டான் ரேவ், சகுனி முன்னாளில் ஔகத்தோடு ஒன்றாய் படித்தவன் என்று.
ஊர் விட்டு போனவன் திரும்பி வந்து நெஞ்சை நக்கிய காரணத்தை தோண்டிட ஆரம்பித்தான் படாஸ்.
அதிர்ச்சியில் விக்கித்து போனான் பேரழகனவன், எது நடக்கக் கூடாதோ அது நடந்திருக்க.
வந்தவன் சாமானியன் அல்ல. எமனின் தூதன். உலகை ஆழ துடிக்கும் குரூர உள்ளம் படைத்த மெடிக்கல் மாஃபியாவான தட்சனின் துடுப்பு.
ஆர்செனியோ அவன், தூக்க வந்தது சுரஜேஷின் செல்களை அல்ல, டாக்டர் தியூடிதரா ஔகத் சர்வேஷ் குமார், சின்னவனுக்காகவே பிரேத்தியேகமாய் கண்டுப்பிடித்திருந்த துர்லபம் திரவத்தை.
நல்லவேளை அதை ஆணவன் மிக மிக பத்திரமாய் கேடியின் ஆழ்கடல் மாளிகையின் ரகசிய அறைக்குள் பதுக்கியிருந்தான்.
ஆனால், ஆர்செனியோவோ இப்போது ஔகத்தின் அவசர இன்ஜெக்ஷனுக்கான திரவத்தைத்தான் ஆட்டையைப் போட்டு போயிருந்தான்.
அதைக் கொண்டு டாக்டரின் வியாதியை அவனால் கண்டுப்பிடித்திட முடியாது. ஆனால், விபரீதமே அதில் தான் அடங்கியுள்ளது.
சாதாரண மனிதனுக்குள் அத்திரவத்தை செலுத்தினால், மரித்து போயிடுவான் மானிடன் அவன், மருந்தின் வீரியம் தாளாது. இல்லையேல், ஏடாகூடமாய் உருவங்கொண்டிடுவான் புதிதாய்.
டாக்டரோடு மெடிக்கல் மாஃபியா கொண்ட பகை இன்று நேற்று தொடங்கியது அல்ல, ஔகத்தின் இருபதுகளிலேயே ஆரம்பித்ததாகும்.
தம்பி சுரஜேஷுக்காக அவன் கண்டுப்பிடித்த 'துர்லபம்' என்ற திரவத்தை உலகறிந்த விஞ்ஞானிகளின் கையில் பரிசோதனைக்காக ஒப்படைத்திருந்தான் ஔகத்.
வருங்கால ஹைபிரிட் உயிரினங்களுக்கு இது மருந்தாக பயன்படும் என்று அவன் நம்பினான். இருப்பினும், அதை சந்தைப்படுத்திட அவன் விரும்பவில்லை.
டாக்டரின் திரவம் கொண்ட அற்புதத்தை சைண்டிஸ் கவுன்சலில் இருக்கின்ற தட்சனின் ஆளொருவன் அரவிந்தனிடம் தெரியப்படுத்த, நேரடியாக வந்தான் ஆணவன் ஔகத்தை சந்தித்து பேச்சு வார்த்தைக் கொள்ள.
என்னதான் விபுலையை (பூமி) காப்பற்ற ஆராய்ச்சி மேற்கொண்டிருப்பதாய் அரவிந்தன் மூச்சு பிடித்திட பேசினாலும், அவனின் ஒவ்வொரு வார்த்தையிலும் சுயநலத்தின் வாடையே வீசிட கண்டான் டாக்டர்.
ஆதலால், வெளிப்படையாகவே சொன்னான் ஔகத், அவர்களோடு இணைய விருப்பமில்லை என்று.
அரவிந்தனோ கடுங்கோபம் கொண்டான் டாக்டரின் மீது, இளைஞனவன் மெடிக்கல் மாஃபியாவின் வாய்ப்பை வேண்டாமென்று தட்டிக்கழிக்க.
ஆகவே, டாக்டரின் கண்டுப்பிடிப்பை ஆபத்தான திரவமென்று முத்திரைக் குத்திட மேலிடங்களுக்கு பணத்தை வாரிக்கொடுத்தான் அரவிந்தன்.
பொய்க்கே இத்தனை பேர் சிபாரிசுக்கு இருக்க, உண்மை மட்டும் என்னே ஆளில்லா அனாதையா. ஔகத்தின் உழைப்பின்பால் நம்பிக்கை கொண்ட சிலர் இருக்கவே செய்தனர் அதே ஆராய்ச்சி கவுன்சலில்.
செய்தி தெரிய உடைந்து போனான் இளவயது டாக்டரவன்.
நிராகரிக்கப்பட்ட திரவத்தின் காரணத்தை கேட்டு ஔகத் சான்றிதழில் கையெழுத்து போட்ட தலைமையை தேடி போக, அங்கோ தட்சன் கால் மேல் கால் போட்டப்படி அமர்ந்திருந்தான்.
முதல் முறை சந்தித்துக் கொண்ட இருவரும் பார்வைகளாலேயே முட்டி மோதிக் கொண்டனர்.
என் அனுமதியின்றி உன்னால் சிறு துரும்பை கூட அசைக்க முடியாது என்பது போலிருந்தது தட்சனின் கர்வமான பார்வை.
அவனுக்கு கவுண்டர் கொடுக்கும் விதமாகவே அமைந்தது ஔகத்தின் நக்கல் பார்வைகள், அத்துரும்பில் இருக்கும் சர்வேஷ் (சிவன்) நானென்று.
எப்போது அரவிந்தன் நிற்க, தட்சனை நாற்காலியில் கண்டானோ அப்போதே விளங்கிக் கொண்டான் டாக்டரவன் இதுவரை ஆடிய குடுமிகளின் சாமியார் அவன்தானென்று.
போதைகளின் அளவீடுகள் அதிகமாக உள்ளது என்ற அடிப்படையில் ஔகத்தின் 'துர்லபம்' ரிஜெக் செய்யப்பட்டிருக்க, அதுவெல்லாம் சும்மா பேச்சு என்பது டாக்டருக்கு நன்றாகவே தெரிந்தது.
தட்சனோ மீண்டுமொரு வாய்ப்போடு ஔகத்தை சந்தித்தான், அவனோடு கூட்டுச் சேர சொல்லி.
முடியவே, முடியாது என்றவனிடம் திரவத்தையாவது தாரம் வார்த்திட சொல்லிக் கேட்டான் தட்சன்.
போடா, என்ற டாக்டரோ, இதற்கு மேல் 'துர்லபம்' அவன் கையில் இருந்தால் பாதுகாப்பில்லை என்றுணர்ந்தான். ஆகவே, அதைக் கொண்டு போய் கேடியின் ஆழ்கடல் மனையில் பத்திரப்படுத்தினான்.
ஆனால், ஆணவன் அறியவில்லை இன்றைய தட்சன் அன்றைய போக்கா வாரானின் கூட்டத்தில் ஒருவனென்று.
விதுர் மற்றும் அமோரின் குழந்தையான சுரஜேஷை, ஹைபிரிட்டாக மாற்றும் பரிசோதனையில் அன்றைக்கு வாரானோடு இருந்த குழுவில் இத்தட்சனும் ஒருத்தனே.
அப்போது சிறு பொடியனாக இருந்தான். இப்போதோ, வளர்ந்த வில்லனாய் இருக்கிறான்.
டாக்டரோ அவனுக்கு தட்சனோடு இருந்த பிரச்சனையை கெய்டனிடத்தில் சொல்லிடவில்லை. அதேவேளையில், 'துர்லபம்' தகுதியற்ற சான்றிதல் வாங்கிய கதையையும் மறைத்து விட்டான்.
ஆகவே, கண்டுப்பிடிப்பை ஒளித்த சம்பவம் சுரஜேஷ் மட்டும் அறிந்திருக்க, அண்ணனோடு சேர்ந்த தம்பியும் இவ்விடயத்தில் வாயை மூடிக்கொண்டான்.
அன்றையிலிருந்து அரவிந்தன் பல வழிகளில் டாக்டருக்கு தொல்லைக் கொடுத்துக் கொண்டே வந்தான். கல்லூரி போனவனை ஆள் வைத்து அடித்தது தொடங்கி சுரஜேஷை கூட கடத்தி போக முயற்சித்து இறுதியில் கெய்டன் கடத்த வந்தவர்களை உருட்டி எடுக்க ஓடி போனான் கும்பலோடு சேர்ந்து.
இப்படி நித்தமும் ஏதாவது செய்து அவனின் ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டான் அரவிந்தன்.
ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் தட்சன் நிறுத்தச் சொல்ல, அரவிந்தனும் ஏமாற்றத்தை ஓரந்தள்ளி முதலாளி சொல்வதைக் கேட்டு அடக்கி வாசித்தான்.
மெடிக்கல் மாஃபியாவோ, டாக்டரை போலவே இருந்த கெய்டனை ஒருமுறை மீட்டிங் ஒன்றில் கண்டிட, அதிசயித்தே போனான் ஆணவன், விஞ்ஞானி அவன் அச்சு அசல் ஔகத்தை போலவே இருக்க.
அவனின் ஆட்கள் மூலம் தட்சன் ரகசியமாய் கெய்டனை பற்றி அலசி ஆராய, சில மேலோட்டமான விடயங்களை கண்டறிந்துக் கொண்டான் ஆடவன் அவன்.
குடும்பத்தில் டாக்டர் இருக்கலாம். ஆனால், ஒரு குடும்பமே விஞ்ஞானியான டாக்டராய் இருக்க, ஆடித்தான் போனான் தட்சன்.
அதுவும் அதீத புத்திசாலியான குரூப்பாக ஒரு குடும்பமே இருக்க, ஆணவன் கை வைக்க நினைக்கும் இடம் ரொம்பவே பெரிதென்று உணர்ந்துக் கொண்டான்.
அதே வேளையில், அறிவாளி குடும்பத்தின் மண்டையை பிளந்தே ஆக வேண்டும் என்று ரகசியமாய் வேட்கை ஒன்றுக் கொண்டான் வாய்ப்பு கிடைக்கையில், ஜீனியஸ்களின் காரணம் அறிய.
ஆகவே, எடுத்தோம் கவிழ்த்தோம் முறை அக்குடும்பத்தை மடக்கிடாது என்றுணர்ந்தவனோ ஆற போட்டு காய் நகர்த்திட எண்ணங் கொண்டான்.
அதனாலேயே, அரவிந்தனை அடக்கிக் வைத்தான், நேரம் வரும் வரைக்கும் காத்திருந்து.
இப்படியான தருணத்தில்தான் ஒரு மருத்துவ முகாமில் தட்சனின் வலக்கரமான அரவிந்தனை சந்தித்தான் ஆர்செனியோ.
வஞ்சகன் அவனோ, நிஜத்தில் எந்த வியாதிக்கும் மருந்து கண்டுப்பிடித்திட ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவில்லை. மாறாக, ஹைபிரிட் உருவாக்கத்தை ஆதரிக்கும் புதுவித முயற்சியில்தான் ஈடுப்பட்டிருந்தான்.
டாக்டராய் வேலை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு தீராக்குறை ஒன்று இருந்துக் கொண்டே இருந்தது. அதுதான், அவனின் போதா சம்பளம். குறுகிய காலத்தில் பணக்காரன் ஆகிட ஆசைக் கொண்டான் ஆணவன்.
பேச ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே புரிந்துக் கொண்டான் அரவிந்தன், ஆசை கொண்டவனின் பேராசையைத் தூண்டி விட்டால், கோடியில் புரண்டிடலாம் என்று.
ஆகவே, அதற்கான வேலைகளில் மும்முரமாய் இறங்கினான் அரவிந்தன். காரணம், அவன் கும்பலின் கள்ள ஆராய்ச்சிகளுக்கு அவசரமாய் புதிய இளிச்சவாய் ஒருவன் தேவைப்பட்டான்.
மாபெரும் மாஃபியாவின் மிக முக்கிய புள்ளியின் நட்பு கிடைக்க, அதன் மூலம் எப்படியும் பெரியாளாகிடலாம் என்று எண்ணங்கொண்டான் ஆர்செனியோ.
அதனாலேயே, ஹைபிரிட் ஆராய்ச்சிகளை பற்றி அரவிந்தன் சொல்ல, யோசிக்காது அவர்களோடு சேர்ந்து பங்காற்ற பச்சைக் கொடி காட்டினான் படித்த முட்டாள் அவன்.
தானாய் வந்து சிக்கிய ஆட்டுக்குட்டியை முடிந்தளவு பயன்படுத்தி, பின்னர் பலி கொடுக்கவே திட்டம் தீட்டியிருந்தான் தட்சன்.
அப்படியான ஒரு நாளில்தான், அரவிந்தன் கொண்டு வந்த கோப்பிலிருந்த ஔகத்தின் புகைப்படம் தவறி கீழே விழுந்ததைக் கண்டான் ஆர்செனியோ.
ஒரே வகுப்பில் படித்தவன் என்று ஏமாளி அவனோ பெருமை பீத்த, சுலபமாகி போன வேலையை நினைத்து சிரித்துக் கொண்டான் அரவிந்தன்.
தட்சனோ நேரடியாக ஆர்செனியோவை சந்தித்து, ஹைபிரிட் ஆராய்ச்சியின் மூலம் அவர்களுக்கு கிடைக்க போகும் கோடிகளை பற்றி பேசி பணத்தாசைக்காரனின் பேராசையை அதிகமாக்கினான்.
லாபத்தில் அவனுக்கும் பங்குண்டு என்றான். கூடவே, அது தொடர்பான கொடுக்கல் வாங்கல் ஷேர்களில் முன்னுரிமை வழங்குவதாகும் நம்பிக்கை அளித்தான்.
ஆனால், எல்லாமே ஆர்செனியோ ஜெர்மன் பயணித்து ஔகத்தோடு பழகி அவனிடம் இருக்கின்ற திரவத்தை கொண்டு வந்தால் மட்டுமே என்றுச் சொல்லி கண்டிஷன் வைத்தான்.
வாய்ப்பை நழுவ விட விரும்பாத ஆர்செனியோவோ, வருங்காலத்தின் விளைவை உணராது செக்கு மாடு போல் தட்சன் சொன்ன எல்லாவற்றிக்கும் தலையை ஆட்டி வைத்தான்.
மெடிக்கல் மாஃபியா சொல்லியே ஜெர்மனி வந்தான் ஆர்செனியோ. நல்ல நண்பர்களை பிரித்த பாவியாகினான்.
கடைசியாய் எதை எடுக்க வேண்டுமோ அதை விடுத்து, வேறொன்றை கைப்பற்றியிருந்தான் கள்வனவன்.
அவன் சரியாக கவனிக்கவில்லை, ஔகத்தின் பெயர் கொண்ட புதிய லேபிள் (label) குப்பியிலிருந்து பிரிந்து கீழே விழுந்திருந்ததை.
சுரஜேஷ் என்ற பழைய லேபிளோ குப்பியில் அப்படியே ஒட்டிக்கொண்டிருக்க, அதுதான் அவன் தேடி வந்த திரவம் என்று நினைத்து கொண்டான் ஆர்செனியோ.
சில மாதங்களுக்கு முன், அவசரக்கால இன்ஜெக்ஷன்களை குளிர் பெட்டிகளில் நிரப்பிடும் பொழுது டாக்டர் அவசரத்தில் நிகழ்த்திய குளறுபடி இப்படி ஔகத் அவனுக்கே, எமனாகி நிற்குமென்று அவன் நினைக்கவில்லை.
பொறுத்து செய்வோம் என்று காத்திருந்த தட்சனோ தனியார் டிடெக்டிவ் மூலம் தெரிந்துக் கொண்டான் சுரஜேஷ் யாரென்று.
தமிழன் ஒருவன் ஹைபிரிட் சம்பந்தமான மருந்தை கண்டுப்பிடித்திருக்கிறான் என்றத் தகவலை முதல் முறை கேள்விப்பட்டதும் ஆச்சரியமே கொண்டான் தட்சன்.
அவன் யாரென்று தெரிந்துக் கொள்ளும் முயற்சியின் ஊடே விபரங்களை சேகரித்துக் கொடுத்த தனியார் டிடெக்டிவ்வோ, சுரஜேஷின் படத்தை காண்பிக்க, அதிசயித்து போனான் வில்லனவன் படத்திலிருந்தவன் விதுரின் ஜாடை கொண்டிருக்க, கூடவே அவனின் காது மடல் கொண்ட கழுத்தோரமோ அமோரை போலவே மச்சமொன்று கொண்டிருக்க.
இத்தடயங்களைக் கொண்டு சுரஜேஷை மேலும் படித்திட நினைத்தவன் அதற்கான வேலைகளில் ஈடுப்பட ஆரம்பித்தான். அதற்குள் கெய்டன் பற்றிய விஷயங்கள் தெரிய வர, பல ரகசியங்களைக் கொண்டிருக்கும் அக்குடும்பத்துக்குள் எப்படியாவது நுழைந்து காரியம் சாதித்திட வேண்டி துடித்தான் தட்சன்.
அதற்கான பிளானை மூளைக்குள் தீட்டிக் கொண்டிருக்க, கண்டிப்பாய் சுரஜேஷுக்காகத்தான் ஹைபிரிட் சம்பந்தப்பட்ட திரவத்தை டாக்டர் கண்டுப்பிடித்திருப்பான் என்ற உறுதியான எண்ணத்தில் அதை எப்பாடு பட்டாவது சொந்தமாக்கிட முடிவெடுத்தான் தட்சன்.
அதில் ஏதாவதொரு குளறுபடி செய்தால்தான் அவனின் ஹைபிரிட் ஆராய்ச்சிகளை அவனால் நிம்மதியாகி தொடர முடியும் என்று நம்பினான் மெடிக்கல் மாஃபியா அவன்.
காரணம், தட்சனுக்கு வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான், அது அவன் பேச்சைக் கேட்டு ஆடும் ஹைபிரிட்களை உருவாக்கி அவைகளை கொண்டு தரணி ஆள வேண்டும்.
ஆகவே, ஔகத்தின் பரம்பரை வியாதிக்கான திரவத்தைக் கொண்டு ஹைபிரிட் ஆராய்ச்சியில் புதுவித திருப்பத்தை கொண்டு வர வெறிக்கொண்டிருந்தான் தட்சன்,
ஆனால், அது சுரஜேஷின் மருந்து இல்லை என்ற உண்மையை அவன் அறியவில்லை.
ஹைபிரிட் என்றழைக்கப்படும் மனிதன் மற்றும் விலங்கின் டி.என்.ஏ (DNA) கலவையை, கைமேரா (chimera) என்றும் அடையாளப்படுத்திடலாம்.
கைமேரா, இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட வெவ்வேறான இனங்களின் செல்களைக் கலவையாக கொண்டிருக்கும் உயிரினமாகும்.
விலங்குகளின் மத்தியில் இது இயற்கையாகவே உருவாகிடும். உதாரணத்திற்கு, கலப்பிலான நாய் வகைகளை போல.
அதே வேளையில், கைமேராவை ஆய்வகத்தில் செயற்கையாகவும் உருவாக்கிடலாம். இதில் இரண்டு முறைகள் உண்டு.
முதலாவது, ஒரு உயிரினத்தின் செல்லை மற்றொரு உயிரினதுக்குள் நேரடியாக செலுத்துவது மூலமாகும். இதை ரத்த நாளத்தில் ஊசி ஏற்றி செயல்படுத்திடலாம். உறுப்பு தானங்களின் போதும் இப்படியான மாற்றங்கள் நிகழ்ந்திட சாத்தியங்கள் உண்டு.
இரண்டாவது முறையானது, கருவாகிய உயிருக்குள் மற்றொரு உயிரினத்தின் செல்களை உட்புகுத்துவதாகும். இது கருவின் ஆரம்பக்கால நிலையிலேயே செய்யப்பட்டிடும்.
படாஸோ ஒருவழியாய் ஔகத் மற்றும் தட்சனின் பிரச்சனை, ஓவியாவின் திருட்டு, ஆர்செனியோவின் கூட்டு என்று மொத்தமாய் எல்லாவற்றையும் அறிந்த பின்னால் மிகப்பெரிய திட்டம் ஒன்றை வகுத்திட ஆரம்பித்தான்.
ஒருத்தனை கூட விட்டு வைத்திட கூடாதென்ற முடிவுக்கு வந்தான் படாஸ்.
சுரஜேஷே இல்லை டாக்டரோ மன்னித்தாலும் கூட , ரேவ்விடத்தில் அவர்களுக்கு தயவு தாட்சனையே இல்லையென்று உறுதிக்கொண்டான்.
யார் அவன் திட்டத்துக்கு குறுக்கே வந்தாலும் அவர்களையும் உண்டில்லை என்று செய்திடவே திண்ணங்கொண்டான்.
ஜெர்மனியில் தொடங்கினான் அவனின் ஆட்டத்தினை படாஸ். அரவிந்தனை போகும் இடமெல்லாம் கண்காணிக்க ஆரம்பித்தான். பயந்தவனோ அடியாட்களை இறக்கி விட, அவர்களை கடித்து குதறி வீசினான் அஃறிணை நாயகனவன்.
பிணக்குவியல்களை கண்ட அரவிந்தனுக்கோ மரண பீதி விடாது பேதியை ஏற்படுத்தியது.
தட்சனும் அவனை யாரோ வாட்ச் பண்ணுவதை போலுணர்ந்தான். ஆனால், யாரிடமும் அதைப் பற்றி சொல்லி விஷயத்தை பெரிதாக்கிடவில்லை. இருப்பினும், உள்ளுக்குள் அவனுக்கு கலக்கம் பிறந்திடாமலும் இல்லை.
எப்போதுமே ஒட்டிக்கொண்டு வரும் அவனின் அடியாள் படையோ, பத்திலிருந்து எட்டாகி, எட்டு ஆறாகி போனது. எத்தனை பேரை புதிதாய் சேர்த்தாலும் எண்ணிக்கையின் அளவு குறைந்துக் கொண்டேதான் வந்தது ஒவ்வொரு வாரமும்.
பதற்றம் கொண்ட தட்சனோ, இது ஏதோ கூட்டு சதியென்று போலீசை துணைக்கு அழைக்க, பாதிக்கப்பட்ட போடி கார்ட்ஸுக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்த மருத்துவர்களோ கையை விரித்தனர் அவர்களின் நிலைக்கு காரணம் கண்டறிய முடியவில்லை என்று.
படாஸ் ஒன்றும் அவ்வளவு நல்லவன் எல்லாம் இல்லை டாக்டரை போல். அவன் ஹரிஹரன் என்றால் இவன் ஹரன்ஹரி.
ஆகவே, கைக்கூலிகளாக இருந்தாலும் ஔகத்தை தாக்கி தொல்லைக் கொடுத்ததற்காகவும் சுரஜேஷை கடத்த பார்த்ததற்காகவும் அவர்களுக்கு வலிக்காத முறையில் இறப்பை கொடுத்திருந்தான் படாஸ்.
அதுதான், அணு கழிவான (nuclear waste), சீசியம்-137 கதிரியக்க (caesium-137 radioactive) துகளை, அவர்கள் பயன்படுத்தும் காரின் கைப்பிடியின் உள்பக்கமாய் தடவி, ஒரே வாரத்தில் ஒவ்வொருத்தரையும் பரலோகம் அனுப்பினான் படாஸ்.
கையால் கைப்பிடியை தொட்டவர்கள் அதே கையை முகம், உடல் என்று ஆங்காங்கே தொட சாவு அவர்களோடு பயணித்து உள் அங்கங்களைக் சத்தமின்றி சாகடித்து, சில நாட்களிலேயே ஆளைக் கொன்று தின்றது.
காவல் துறையோ ஒரே மாதிரியான இறப்பு நடக்க முதல் சந்தேகத்தையே தட்சனிடம்தான் கொண்டனர்.
அவனோ, வம்பே வேண்டாமென்று அவர்கள் வாயை அடைக்க பணத்தை கொடுத்து முன்னாடி பதிந்திருந்த கேஸ்களை மௌன சமாதி ஆக்கினான்.
மரணத்தை விட கொடியது அதன்பால் கொண்ட பயமே. அப்படியான அச்சத்தைத்தான் தூண்டிவிட்டு தட்சனின் துயிலை பறித்திருந்தான் படாஸ்.
நடக்கும் அசம்பாவிதங்களுக்கு டாக்டர்தான் காரணமென்று நினைத்துக் கொண்ட தட்சனோ, உடனடியாக அவன் கைவசமிருந்த திரவத்தை ஓவியாவின் பாதுகாப்பில் சேர்த்தான்.
பலமான ஆணை விட தந்திரக்காரி பொருளை கண்ணாய் காத்திடுவாள் என்று நம்பினான் ஆணவன்.
என்னதான் வெளிநாட்டில் பணிப்பெண் போர்வைக் கொண்டாலும், பல வசதிகளை தட்சன் மூலம் ரகசியமாய் அனுபவித்த ஓவியாவோ, இதுதான் சமயம் அவன் நம்பிக்கைப் பெற்று ஒரேடியாக அவனோடு செட்டில் ஆகிட என்று எண்ணினாள்.
ஆகவே, தட்சன் கொடுத்த திரவத்தை பதுக்கினாள் ஓவியா, நகைகள் கொண்ட பாக்ஸ் ஒன்றுக்குள் ஒளித்து வைத்து, போலி ஆவணங்கள் மூலமாய் வங்கியில்.
அதை முதலில் ஸ்கெட்ச் போட்டு கொள்ளையடித்த படாஸோ, அவனின் ஈவு இரக்கமற்ற ரத்த வேட்டையைத் தொடங்கிட புள்ளையார் சுழி போட்டிட தயாராகினான்.
வங்கி கொள்ளையில் ஈரக்குலை நடுங்கிப் போனது ஓவியாவிற்கு.
தட்சனிடம் விஷயத்தை பயந்துக் கொண்டே சொன்னவள், எங்கே மாஃபியா அவன் போட்டுத்தள்ளிடுவானோ என்று உள்ளுக்குள் நடுக்கமே கொண்டாள்.
தட்சனோ நம்பியவளை வார்த்தையால் நாறடிக்க, முட்டிக்கொண்டு இருவரும் ஒருவரை ஒருவர் பழித்தே போனை சூடாக்கினர்.
கோட்டை பிடிக்க ஆசைக்கொண்டவன் பேடையவளை நம்பி கைக்கு கிடைத்த வரப்பிரசாதத்தை கோட்டை விட்டிருக்க, ஞாலமே அவனை பார்த்து கைக்கொட்டி சிரிப்பதை போலுணர்ந்தான் தட்சன்.
அரவிந்தனைக் கொண்டு ஓவியாவின் கதையை முடித்திட நினைத்தவன், வைரங்களுக்காக அவளை விட்டு வைத்தான், மொத்த கோபத்தையும் அவனுக்குள் புதைத்துக் கொண்டு.
வங்கியின் சி.சி.டிவி. கேமராவோ திடிரென்று தோன்றிய புகையையும் அது மறைய சேஃப்டி பாக்ஸ்களில் பதிந்திருந்த நகக்கீறல்களையும் காண்பிக்க, மண்டைக் காய்ந்தது மெடிக்கல் மாஃபியாவிற்கு, கண்ட காட்சியை நம்புவதா இல்லையா என்று.
இருப்பினும், வங்கிக்காரர்களுக்கு தனிப்பட்ட முறையில் பிரஷர் கொடுத்தான் தட்சன். அவர்களோ கேஸை வேறு விதமாக முடித்திட சொல்லி போலீசை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்தனர், காப்பீடு பணத்தை பெற்றிட எவ்வித பிணக்குமின்று.
படாஸோ அந்நேரத்தில் முதல் கொலைக்கு இரையான டேனியலை ஆக்ரோஷமாய் அடித்தே கொன்றிருந்தான்.
இடைவெளியாய் ஆறு மாத கேப்பில் லண்டன் பயணித்தான். பக்கிங்ஹாம் மாளிகையில் ஓவியாவின் நண்பனான சைமனை அவனறியாது கண்காணிக்க ஆரம்பித்தான்.
சலவை பிரிவில் வேலை பார்ப்பவனிடத்தில் கொடுத்து வைத்திருந்தாள் கள்ளியவள் கல்லினான் வைரக்கல்லை (Cullinan diamond).
ராவோடு ராவாக அங்கிருந்த அத்தனை காவலாளிகளின் கண்களிலும் மண்ணைத் தூவி அதை அடித்துக் கொண்டு வந்தான் படாஸ்.
இதை சற்றும் எதிர்பார்த்திட ஓவியாவோ மாரடைப்பு கொள்ளா மயக்கமே கொண்டாள். டேனியலின் இறப்பு அனைவரையும் கலவரமாக்கியது.
ஒரே கூட்டத்தை சேர்ந்தவர்கள் ஆகினும் ஒருவரை ஒருவர் தொடர்புக் கொள்ளக்கூட யோசித்தனர். எங்கே அவர்களின் குட்டு வெளிப்பட்டிடுமோ என்று பயந்தனர்.
ஆகவே, அவரவர் வேலையை அவரவரே பார்த்துக் கொண்டு எதுவும் தெரியா சாமானியர்கள் போலவே அவர்களை மற்றவர்கள் முன்னிலையில் நிலை நிறுத்திக் கொண்டனர்.
லண்டனிலிருந்து மீண்டும் மலேசியா திரும்பிய படாஸோ, விட்டு வைத்திருந்த மிச்ச மீதிகளையும் கொன்று குவித்தான்.
கயவர்கள் யாரும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளாமல் இருந்ததே படாஸுக்கு பேருதவியாக இருந்தது. அப்படி ஏதேனும் அவர்கள் முயற்சித்திருந்தால் கண்டிப்பாய் போலீஸ் விசாரணையில் அவர்களுக்குள் இருக்கின்ற தொடர்பு தெரிய வந்திருக்கும்.
முதல் ரெண்டு கொலைகள் நடந்தேறிடும் வரை டாக்டர் எதையுமே அறியவில்லை. பின்னர், எல்லாம் தெரிய வர படாஸை நிறுத்திட அவனிடத்தில் சரியான காரணமும் இல்லை.
அவனைக் கட்டுப்படுத்திட ஔகத் நினைக்க, அவன் வழியில் மூத்தவனை குறுக்கிட வேண்டாமென்றான் படாஸ் கராறாய். மீறினால் விபரீதம் ரொம்பவே மோசமாக இருக்குமென்றும் எச்சரித்தான் ரேவ், டாக்டரை.
மாமடியை கொல்லுகையில் அப்படியானதொரு ஆத்ம திருப்திக் கொண்டான் படாஸ். அவனுமே கண்ணீர் வழிந்திறங்க செய்த தவறை அலுமினிய கட்டிலின் மீதிருக்கையில் உணர்ந்தான்.
தட்சனை லிங்கமாய் உருமாற்றி அவன் அகந்தையை அழித்ததாய் உணர்ந்துக் கொண்டான் படாஸ்.
மொத்தம் ஏழு கொலைகள். ஒவ்வொன்றையும் ரசித்து தனித்துவமாய் செய்து முடித்தான்.
ஆர்செனியோவோ டாக்டரின் இன்ஜெக்ஷன் திரவத்தை மொத்தமாய் தட்சனிடம் கொடுத்திடவில்லை பத்திரப்படுத்திட. மாறாக, அதிலிருந்து பாதியை எடுத்து ஒளித்து வைத்திருந்தான்.
அபரீதமான விடயங்களை அத்திரவத்தில் கண்ட பேராசைக் கொண்டவனோ, அதை யாரும் அறியா வண்ணம் அவனுக்குள்ளேயே செலுத்தி ஆராய்ச்சியின் முடிவினை தெரிந்துக் கொள்ள விபரீத ஆசைக்கொண்டான்.
ஆனால், பாவம் ஆர்செனியோ அவன், அதற்கு முன்னாடியே படாஸின் கையில் கைமாவாகியிருந்தான்.
ஒவ்வொரு கொலையிலும் அவனை பிடிக்க முயன்ற அகம்பாவ கள்ளிக்கு ஹிண்ட் கொடுத்தான் படாஸ். கூடவே, கிருத்திக்கு கவிதைகளையும் எழுதி வைத்தான்.
ஆனால், பைத்தியக்காரி அவளோ அதைத் கண்டுக்காதே இறுதியில் அவனிடத்தில் காதல் வயப்பட்டு போனாள்.
சுரஜேஷின் அகோர நிலைக்கொண்ட வலியும், கயவர்கள் ஔகத்திற்கு இழைத்த துரோகமும்தான் படாஸை இப்படியான கொலைகளை செய்ய வைத்தது.
டாக்டருக்கோ சின்னவன்தான் எல்லாமே. படாஸுக்கோ அவர்கள் இருவரும்தான் உலகமே.
படாஸ்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/படாஸ்.14/

Author: KD
Article Title: படாஸ்: 120
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.