What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
327
அத்தியாயம் 121

வாய் மலரா மன்னிப்பில், கண்ணீர் கொண்ட தவிப்பில், ஔகத்தின் மீது கொண்ட காதலை, ரத்த சகதியில் குளித்திருந்த கணவனை கண்ட நொடி உணர்ந்துக் கொண்டாள் அகம்பாவத்திற்கு பேர் போன கிருத்திகா.

புத்தி பேதலித்தவளாய் அன்பை பறைசாற்றிய அலரோ, ஹோலியின் கைவசத்தில் பாதுகாப்பாய் இருக்க, இரண்டு மூன்று நாட்களிலேயே டாக்டரை குணப்படுத்தியிருந்தான் சுரஜேஷ்.

பழைய நிலைக்கொண்டவன் மனைவியை மனையில் சேர்த்து மீண்டும் பறந்தான் தம்பியோடு ஜெர்மனிக்கு. கண்கள் விழித்தவளோ குழப்பத்தோடு புருஷனுக்கு போனை போட, அவனோ பட்டும் படாமலும் பேசி ரிசீவரை வைத்தான்.

கட்டளைக்கு பிறந்த கட்டழகி ஹோலியோ அதன் ரோபோ ரூல்ஸ்களை மீறிட முடியாது, கீத்துவின் கர்ப்ப மேட்டரை கடைசி வரைக்கும் அதற்குள்ளேயே தக்க வைத்துக் கொண்டது.

காரணம், ஔகத் துணைவியவளைக் கூட்டி போகையில் பெண்டு அவளோ மயக்கத்தில்தான் இருந்தாள். ஆகவே, ஹோலியால் குட்டி பேபியின் நற்செய்தியை கீத்துவிடத்தில் கூறிட முடியவில்லை.

அதேப்போல், அவ்விஷயத்தை டாக்டரிடமும் கூறிட கூடாதென்பது ஹாலியின் ரோபோ ரூல்களில் ஒன்றாகும். அதனால், என்னதான் ஔகத் அக்கருவின் தந்தையாகினும் ஹோலியை பொறுத்த மட்டில் அவன் மூன்றாவது நபரே.

இப்படி வீட்டாள் அவள், அவனின் குழந்தையை சுமந்திருக்கும் விடயம் அறியாமலேயே டாக்டர் வெளியூர் பறந்திருக்க, அவனை நினைத்து நித்தமும் மனசளவில் ஏங்கிப் போனாள் சீமாட்டியவள்.

உடம்பு கொஞ்சம் எடைக் கூடியிருக்க, விடுப்பட்டு போயிருந்த உடற்பயிற்சியின் மீதோ பழியை போட்டு மனசை திருப்திப்படுத்திக் கொண்டாள் காரிகையவள்.

தாய்லாந்து போன குஞ்சரியோ அங்கேயே செட்டில் ஆகிட, இங்கோ போலீஸ்காரி கிருத்திகாவோ தனியொருத்தியாய் நான்கு சுவர்களோடு குடும்பம் நடத்திட ஆரம்பித்திருந்தாள்.

வேட்டாள் அவளாகவே அழைத்து குசலம் விசாரித்தாள் ஔகத்திடம். ஆயந்தியின் கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்தவன், அடுத்தடுத்து பேச்சை வளர்க்காது போனை கட் செய்தான்.

ஏன் இப்படி நடந்துக் கொள்கிறான் என்று புரியாதவளோ, காரணமே தெரியாது மன்னிப்பை வேண்ட, கல் நெஞ்சுக்காரனோ ஓகே என்ற ஒத்தை வார்த்தையில் வாட்ஸ் ஆப் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

நொந்தவள் வேறு வழி தெரியாது கொழுந்தனை அழைக்க,

''இது அண்ணனும் நீங்களும் சம்பந்தப்பட்ட விஷயம் அண்ணி. நான் சொல்ல என்ன இருக்கு?!''

என்றவனோ வேண்டுமென்றே கழண்டிக் கொள்ள பார்த்தான்.

''நீயே இப்படி சொன்னா எப்படி சுரஜேஷ்?! நான் கேட்டு அவர் சொல்றதே விட, அவர் சொல்லாமலே அவருக்கு இருக்கறே பிரச்சனையே பத்தி நான் தெரிஞ்சிக்க நினைக்கறேன். என்னாலே முடிஞ்சளவுக்கு அவருக்கு உதவி பண்ணத்தான் உனக்கு தெரிஞ்சதை சொல்ல சொல்லி கேட்கறேன்!''

''புரியுது அண்ணி! ஆனா, ஐம் ரியலி சோரி! என்னாலே உங்களுக்கு எந்த விதத்துலையும் உதவி பண்ண முடியாது! எனக்கு என் அண்ணன்தான் முக்கியம்! அவனே சங்கடப்படுத்தறே எதையும் இந்த சுரஜேஷ் பண்ண மாட்டான்!''

''அப்போ, அவருக்கு என்ன பிரச்சனைங்கறதே நான் எப்படித்தான் தெரிஞ்சிக்கறது சுரஜேஷ்?!''

''தெரிஞ்சிக்காதீங்க அண்ணி! அதுதான் உங்களுக்கு நல்லது!''

என்றவனோ அண்ணிக்கு விபூதியான பதிலை சொல்லி தொடர்பைத் துண்டித்தான்.

நாட்கள் உருண்டோட, குளியலறை செம்புனலில் தகித்த சம்பவங்கள் நடந்து முடிந்து, டாக்டர் குணமாகி ஜெர்மன் போய், இரு வாரங்கள் கடந்திருந்தன.

தூரப்போகின்றவனின் காரணம் தெரியா தலைமகளோ, அவர்களின் காதல் சின்னமான புருஷனின் பதின்ம வயது சிவப்பு சட்டையை இறுக்கமாய் நெஞ்சில் புதைத்துக் கொள்ள, முந்தைய இரவுகளை போல் அன்றைய ராத்திரியையும் சாபமாய் கழித்தாள் கீத்து பஞ்சணை வேதனைக் கொள்ள.

கண்ணீர் கொள்ள கோமகளின் காதுகளிலோ திடிரென்று கேட்டது பூட்டிய படுக்கையறை கதவை டொக்கு டொக்கென்று தட்டும் சத்தம்.

அவன்தான், அவனேதான், என்று பகினியின் நெஞ்சம் சொல்ல, மானாய் குதித்தோடி போய் கதவைத் திறந்தாள் கீத்து. மாயோளின் கணிப்பு தவறவில்லை. டாக்டரேதான் வந்துச் சேர்ந்திருந்தான் ட்ரவலிங் பேக்கோடு.

காத்திருந்த ஒளியிழையோ பிரகாசித்த முகத்தோடு ஏக்கங்கலந்த குரலில்,

''ஔகத்!''

என்றழைக்க,

''டயர்டா இருக்கு கீத்து அப்பறம் பேசலாம்.''

என்ற ஆளானோ, ஆசையாக பேச வந்த பொஞ்சாதியை முகத்தில் அடித்தாற்போல நிறுத்தி, அறைக்குள் நுழைந்தான்.

சில்லாய் சிதறிய உணர்வுகளோடு அமைதியாய் மஞ்சம் நோக்கிய நங்கையோ, குனிந்த தலை நிமிராது அதன் விளிம்பில் சென்றமர்ந்தாள்.

கீத்துவை ஜாடை பார்வை பார்த்தவனோ, ஆடைகள் களைந்து டவலுக்கு மாறி, நேராய் சென்று நுழைந்தான் குளியலறைக்குள்.

வந்தவன் வாரியணைத்து வஞ்சனையற்ற கூடல் கொள்வான் என்று நினைத்திருந்த நறுதுதலின் விழிகளோ சில துளிகளை பளிங்குத் தரைக்கு தாரம் வார்த்தன.

நிமிடங்கள் கடந்துதான் மிச்சம். குளித்து வந்தவன் சோர்ட் பேண்டோடு மேக் கணினியின் முன் அமர்ந்தான்.

காயம்பட்ட மனதோடு மெத்தை சரிந்த சுந்தரியோ, அவனையே இமைக்காது ஒருக்களித்தப்படி பார்க்க, கணினியில் மூழ்கியிருந்த டாக்டரோ மணவாட்டியவள் கண் சிமிட்டிய நொடியில் ஓரக்கண்ணால் பார்த்தான் போர்வைக்குள்ளிருந்தவளை.

புருஷனை வெறித்த வல்லபியோ, அவன் கண்டுக்காத ரோதனையில் முட்டிக்கொண்டு வந்த விசும்பலை அடக்கியவளாய் டாக்டரின் சிவப்பு சட்டையை அணைத்தவாறே உறங்கிப் போனாள்.

அம்மணியின் நித்திரை கொண்ட மூளையோ, மெல்லியாளின் கேதார்நாத் நினைவுகளை அவளுக்குள் உலாவ விட்டது.

நாடு விட்டு நாடு, கொலைகாரனை பிடிக்க போன அகம்பாவ கள்ளியவள், முகம் தெரியா ஆண்ட்டி ஒருத்தியின் இறப்பால் அடக்கமான வள்ளியானாள்.

மனமாற்றமான பக்குவங்கொண்டு கேதார்நாத் மலையேறி அரிவைபங்கனை (சிவன்) காண போன பதுமையோ, சாவின் எல்லை வரை சென்று மீண்டும் உயிர்த்தெழுந்தாள்.

அரவம் ஒன்றோ பனிமலர் அவளை உத்ரகாஷி செல்ல சொல்லி விரட்ட, உடுக்கையொலியனின் (சிவன்) ஆசிர்வாதத்தால் எமனிடமிருந்து தப்பித்த தளிரியலவள் அவளோ, முடிவெடுத்தாள் செவியுணர்ந்த இடம் நோக்கி ஓடிட தாமதிக்காது.

கேதார்நாத்திலிருந்து உத்தரகாஷிக்கு செல்ல எப்படியும் ஏலெட்டு மணி நேரங்கள் ஆகிடும் என்பதை அங்கிருந்த ஆட்களிடம் விசாரித்து தெரிந்துக் கொண்ட வஞ்சியோ, வாடகை காரொன்றை வழக்கம் போல் பேரம் பேசினாள்.

பெண் ட்ரைவரோ போகுமிடத்தின் பெயர் கேட்க, என்ன சொல்வதென்று தெரியா கீத்துவோ அவளுக்கு தெரிந்த ஹிந்தியில், மஹாதேவ் மண்டீர் என்று கூறிக் காரிலேறி அமர்ந்தாள்.

சவாரிக்கு சரி சொன்ன இளங்கன்னியோ, ஷிவ் குஃபா என்ற ஹிந்தி வார்த்தையைக் கேள்வியிலான தொனியில் வேள்விக்கொள்ள, ஒன்றும் புரியா போலீஸ்காரியோ, மண்டையை மட்டும் ஆட்டி வைத்தாள், உத்தரகாஷிக்கு போன பின்னாடி கோவிலை தேடிக்கொள்ளலாம் என்றெண்ணி.

பிஜிலி என்று அறிமுகமாகிக் கொண்ட டாக்சி கன்னியா, காரை தேனுபுரீசுவரர் (சிவன்) இருக்குமிடம் நோக்கி பயணித்தாள்.

உத்ரகாஷிக்கு செல்லத்தான் நெடுநேரமாகும். ஆனால், கீத்துவோ ஷிவ் குஃபா எனும் குகைக்கோவிலுக்கு செல்வதாகவே பிஜிலியிடம் ஆமோதிக்க, தோராயமாக நான்கு மணி நேரங்கள் மட்டுமே பயணப்படக்கூடிய அவ்விடத்துக்கு காரை அழுத்திடாமல் மெதுவாகவே செலுத்தினாள் கோதையவள்.

பர்கோட் மற்றும் உத்ரகாசிக்கு இடையே அமைந்துள்ள எரும்பீசனின் (சிவன்) அக்குகைக்கோவில், கங்கோத்ரிக்கு செல்லும் வழிப்பாதையில் அமைந்துள்ளது.

கௌரிகுண்ட் (Gaurikund), சோன்பிரயாக் (Sonprayag) மற்றும் குப்தக்காஷி (Guptkashi) என்ற நகரங்களைக் கடந்தே நகர்மெஹர்கானுக்கு (Nagarmehargaon) பயணித்தது பிஜிலியின் நான்கு சக்கர வண்டி.

கேதார்நாத்திலிருந்து ஏறக்குறைய 107 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நாகர்மெஹர்கானில்தான் யாழ்மூரிநாதன் (சிவன்) அக்குகைத்தலம் இருந்தது.

உத்ரகாசிக்கு செல்ல விமானம் மற்றும் ரயில் போன்ற அதிவேகமான வசதிகள் தாராளமாகவே இருக்கின்றன. ஆனால், கேடி மருமகள் போக விரும்பிய இடத்திற்கோ சாலை வழியை தவிர்த்து வேறெந்த போக்குவரத்து வசதியும் இல்லை.

என்னதான் வழியெங்கும் இயற்கை எழில் கொழித்திருந்தாலும், அது எதையும் கண்டிட முடியா கும்மிருட்டில் ஹோட்டல் விஜய் மற்றும் உணவகம் என்ற பெயர் கொண்ட விடுதியின் முன் காரை நிறுத்தினாள் பிஜிலி விடியற்காலை மூன்றுக்கு.

துயில் கலைந்த கீத்துவோ பேந்த விழிக்க, பிஜிலியோ தங்கும் விடுதிக்கு ஆள்காட்டி விரல் கொண்டு ஆங்கிலத்தால் நற்சான்றிதழ் வழங்கி ஹோட்டலுக்குள் சென்று நுழைந்தாள்.

காரிலிருந்து கீழிறங்கிய மடவரலோ ட்ரவலிங் பேக்கை வெளியிலெடுக்க,

''Thithi, room ok.''

(அக்கா, அறை இருக்கு.)

என்ற பிஜிலியோ அவளுக்கு தெரிந்த ஆங்கிலத்தில் சொல்ல, புரிந்துக் கொண்ட டாக்டரின் கற்பாளோ, உதடு பிரிக்கா மென்புன்னகையோடு அவளுக்கு கொடுக்க வேண்டியதையும் தாண்டி கூடுதலாகவே கொடுத்து இளம்பிடியாளை அங்கிருந்து வழியனுப்பி வைத்தாள்.

ஐந்து நட்சத்திர விடுதியெல்லாம் இல்லை. வெறும் டபுள் ஸ்டார் ஹோட்டல்தான். இருப்பினும், நீட் அண்ட் க்ளினாக (neat and clean) இருந்தது.

காவல்காரிக்கோ பார்த்த உடனே அந்த இருபத்தி நான்கு மணிநேர ஹோட்டலை ரொம்பவே பிடித்துவிட்டது எனலாம்.

அறைக்கு சாவி கொடுத்த ரிசப்ஷன் பையனோ, அணங்கவளை அழைத்து போய் காண்பித்தான் டைனிங் இடத்தை.

அமைதியே உருவான புத்தரின் படமோ, பலகையிலான சுவற்றில் ஆள் உயரத்துக்கு இருக்க, அப்படத்தை விரல்களால் தொட்டவளுக்கு காஜி மன்னனின் ஞாபகம் வராமல் இல்லை.

மணவாளி அவளோடு செல்லக்கோபம் கொள்ளும் போதெல்லாம் அடிக்கடி சொல்லிடுவான் டாக்டரவன், புத்தராய் தவங்கொண்டிருப்பவன் மனதை சகட்டு மேனிக்கு சஞ்சலப்பட வைக்கிறாள் இல்லாள் அவளென்று.

கணவனின் ஊடலை நினைத்து முறுவழிப்போடு மூன்றாவது மாடி நோக்கிய கீத்துவோ, அவளின் ட்ரவலிங் பேக்கை தூக்கிக் கொண்டு வந்த பையனிடத்தில் பக்கமிருக்கும் கோவிலை பற்றி லைட்டாய் விசாரித்தாள் ரெண்டே வார்த்தைகளில், சிவ மண்டீர் என்று ஆரம்பித்து.

அவனோ குகைக்கோவில் காலை பத்துக்கு திறந்து ராத்திரி ஒன்பதுக்கு மூடும் என்றுச் சொன்னான், மாடிப்படியில் ஏறிக்கொண்டே.

முதலில் பிஜிலி சொன்ன பெயரையே விடுதியின் ரிஷப்ஷன் கவுண்டர் சிற்றேடுகளில் கண்டாள் கீத்து. அதையே திரும்ப உச்சரிக்க, ஆமோதித்த சிறுவனோ, சீக்கிரமாய் செல்வது நன்று என்றான் அவனுக்கு தெரிந்த ஆங்கிலத்தில், ஓரிரு வார்த்தைகள் மூலம்.

நேரங்கடந்தால் வரிசையில் நிற்கணும், அதுவும் இரண்டு மூன்று மணிநேரங்கள் என்றவன் சொன்னதைக் கேட்ட கீத்துவோ விழிகளை உருட்டி, எட்டு மணிக்கெல்லாம் எழுந்து ஓடிட வேண்டுமென்று போனில் அலாரம் செட் செய்தாள் அவளறையை நோக்கியவாறு.

விலாவை போலான தோற்றங்கொண்ட அவ்விடுதியோ, நான்கு மாடி கட்டிடங்களைக் கொண்டதாகும். ரெஸ்டாரண்டும் சேர்ந்திருக்க உணவுக்கு பிரச்சனை இல்லை எனலாம்.

அறையை திறந்து பேக்கை உள்ளே வைத்த சிறுவனோ கிளம்பாது அங்கேயே நிற்க. புரிந்துக் கொண்டவளோ அவனுக்கான டிப்ஸை சிரித்த முகத்தோடு கொடுத்தனுப்பினாள்.

வஞ்சியவளுக்கு உத்ரகாஷி வந்தால் போதுமென்றிருந்தது. ஆனால், தங்கும் விடுதி பற்றியெல்லாம் கொஞ்சமும் ஆடவள் அவள் யோசித்திடவே இல்லை.

இருந்தும், அடிக்கடி பக்தர்களை இவ்விடம் அழைத்து வரும் பிஜிலியோ, குகைக்கு மிக அருகிலிருக்கும் இத்தரமான விடுதிக்கே கூட்டி வந்துச் சேர்ந்திருந்தாள் டாக்டரின் கண்ணாட்டியை.

காலணியை கழட்டி ஓரம் வைத்த மதங்கியோ, இடை இறுக்கி சுற்றி முற்றி பார்த்தாள் அறையை. நல்ல பெரிய விசாலமான அறைதான் அது. அறைக்குள்ளேயே பாத்ரூம் வசதியும் இருந்தது, ஹிட்டரோடு.

சிமெண்ட் தரையோ சாக்ஸ் கொண்டிருந்தாலும் பூவையின் அடிப்பாதத்தை உணர வைத்தது சில்னஸை. அப்போதுதான் மழை வேறு பேய்ந்து விட்டிருக்க, குளிரோ அப்படியே இருந்தது இம்மியும் குறையாது.

சிங்கிள் பெட் ரெண்டை ஒன்றாய் ஒட்டி போட்டிருந்தார்கள். அதற்கு ஓரத்திலோ சிறியதொரு மேஜை, நாற்காலி மற்றும் கிளாஸ் என்று சில அத்தியாவசியமான பொருட்கள் இருந்தன.

போலீஸ்காரியின் புத்தியோ சந்தேகம் படும்படியான எல்லா மூலை முடிச்சுகளையும் பக்காவாய் ஆராய்ந்த பின்னரே நிம்மதிக் கொண்டது.

ஷவரில் சூடாய் ஒரு குளியலை போட்ட அம்மணியோ, ஜன்னலோரம் சென்று திரையை விலக்கி ஜன்னலை திறந்தாள். ஆவி பறந்த தேநீரை குடித்தவளோ, இருண்டு கிடந்த ஊரை பார்த்தாள் பனி சூழ.

இன்னும் கொஞ்ச நேரத்தில் மீண்டும் எழ வேண்டும் என்பதால் ஜன்னலை மூடி, மெத்தையில் போய் சரிந்தாள் கீத்து.

நல்லுறக்கத்தில் உணர்ந்தாள் ஒண்ணுதல் அவள் மனம் கவர்ந்த படாஸின் நறுமணத்தை மிக அருகினில்.

ஒருக்களித்து படுத்திருந்தவள் கருவிழிகள் திறந்திடும் முன்னே,

''புறக்கண் வேண்டாமடி கிருத்தி! அகக்கண் போதும்!''

என்ற வசனத்தோடு அவள் கன்னம் உரசியது படாஸின் இதழ்கள்.

''படாஸ்!''

என்ற பெண் மயிலோ தேகம் கொதிக்க மேலெழும்ப, மாயோளின் திறவா அம்பகங்களை வழக்கம் போல் கட்டியவனோ, அவளை அழைத்துக் கொண்டு வெளியேறினான் அறையிலிருந்து.

''எங்க போறோம் படாஸ்?''

''வா, கிருத்தி!''

என்றவனோ இறுக்கமாய் பற்றினான் பெண்ணவள் உள்ளங்கையை கதகதப்பான கரங்கொண்டு.

ஆளில்லா ரோட்டில், பனி சூழ்ந்த நிலையில், வெறுங்கால் கொண்ட குளிரில் நடந்தே வந்துச் சேர்ந்திருந்தாள் கிருத்திகா தீனரீசன், ஷிவ் குஃபா என்றழைக்கப்படும் குகைக்கோவிலுக்கு.

''படாஸ், நாமே எங்க இருக்கோம்?!''

''ஸ்ரீ பிரகதேஷ்வர் பஞ்சனன் மகாதேவ் கோவில்! ஷிவ் குஃபா!''

என்றவனின் குரலோ கம்பீரமாய் ஒலித்தது.

''இங்க பக்கத்துலே ஏதும் ஆறு இருக்கா என்னே?! தண்ணி சத்தம் கேட்குது!''

என்ற கீத்துவோ தெள்ளத் தெளிவாய் காதில் விழுந்த நதியின் கரகோஷத்தில் வேள்விக் கொள்ள, முகிழ்நகை கொண்ட படாஸோ வேறேதும் பேசாது கோவிலை முன்னோக்கி பயணித்தான்.

வனத்தின் நடுவில் கொலு கொண்டிருக்கும் அக்குகையின் நாயகனான அரவத்தோள்வளையவன் (சிவன்) சுயம்புவாக உருவாகியவன் ஆவான்.

கோவிலின் வாயிலிலிருந்த பெருஞ்சுவரின் மேற்புறத்திலோ, ஏழு தலை சர்பத்தில் அமர்ந்தவாறு விஷ்ணுவும், பக்கத்திலேயே புலியுடைப் போர்த்திய திரிசூலம் கொண்ட சிவனும் கீத்துவை வரவேற்றனர், விடிந்தும் விடியா அக்காலை வேளையில்.

108 படிகளைக் கொண்ட அஞ்செழுத்தனின் (சிவன்) அக்குகையோ, கர்வால் இமயமலை (Garhwal Himalayas) தொடரில் அமைந்திருக்கும் தலமாகும்.

குகைக்கு பக்கத்திலேயே அதை ஒட்டியப்படி பளிங்கு தரை கொண்ட கோவிலொன்றும் எழுப்பப்பட்டிருந்தது.

''படாஸ் இது என்ன இடம்?!''

என்றவளோ கண்கட்டோடு கேள்வியெழுப்ப,

''நிலையற்றவைகள் நிரந்தரமா இருக்கறே இடம்!''

என்ற படாஸோ, காதலியின் கைப்பிடியை விடாது பற்றிக்கொண்டு ஒவ்வொரு படிகளாய் அடி வைத்து கோவிலை அடைந்தான் யுவதி அவளோடு.

விடுதியிலிருந்து குகைக்கோவிலுக்கு வர வெறும் பத்து நிமிடங்கள் மட்டுமே. ஆனால், பாதையோ மண்ணிலான சீரற்ற மேல்நோக்கும் காட்டு பாதை. சுற்றீரும் பெரிய மரங்கள் சூழ்ந்த பாதுகாப்பற்ற அடவி.

இளஞ்சிவப்பு வண்ணத்தில் கோவிலின் தூண்கள் ஒவ்வொன்றும் இதமாய் காட்சியளிக்க, அவைகளிலோ சிவ சுலோகங்கள் எழுதப்பட்டிருந்தன சிவப்பு நிற சாயத்தில்.

ஆங்காங்கே பதாதைகளும் வைக்கப்பட்டிருந்தன கோவிலுக்கான கட்டளைகளை முன்னிறுத்தி.

''படாஸ், இதுதான் அந்த அகோரி சொன்ன கோவிலா?!''

என்றவள் கேட்டுக் கொண்டிருக்கையிலேயே,

''கீத்து!''

என்றுக் கேட்டது ரீசனின் குரல்.

''டேடி!''

என்றவளோ அதிர்ந்தவளாய் குரல் கேட்ட திசை நோக்க முற்பட, அவளின் கையை பற்றியிருந்த படாஸின் கரமோ பிடியை விட்டு அவளை விரும்பும் திசை நோக்கி பயணிக்க விட்டது.

''இங்க வா கீத்து!''

என்று மீண்டும் ரீசன் அழைக்க,

''டேடி!''

என்றவளோ கண் கட்டை அவிழ்த்து கோவிலுக்கு பின் பக்கமாய் போக,

''வா கீத்து!''

என்ற குரலோ அவளைத் தொடர்ந்து வரச்சொல்லி பணித்தது.

படாஸை மறந்திருந்த விறலியோ, அடிகளை வேக வேகமாய் குகையின் பின் பக்கத்தின் சருகலான பாதையில் வைக்க, கையில் தட்டுப்பட்டு தொடையில் இடித்த பொருளை கண்கொண்டு தலை குனித்து பார்த்தவளுக்கோ பேரதிர்ச்சி.

செய்யிழையின் உள்ளங்கையோ ருத்ராட்ச மாலையை இறுக்கியிருந்தது. அதுவும் அவளின் கைப்பையில் பூமகளவள் பத்திரப்படுத்தியிருந்த பன்முகங்கள் கொண்ட அதே மாலைதான்.

இது எப்படி கையில் என்று சிந்தித்தவள், எங்கே கண் கட்டை அவிழ்த்த துணியும், இவ்வளவு நேரமாய் உடன் வந்த படாஸும் என்று தேடும் பொருட்டு,

''படாஸ்!''

என்றழைத்து தலையை திருப்பிய நொடி, விட்டில் பூச்சியொன்று முகத்தின் முன் பறக்க, அதை கைகளால் துரத்தியவள் பாதமோ அங்கும் இங்கும் நகர, முன்னோக்கி போன துடியிடையோ எதர்ச்சையாய் குகையின் பின்பக்க வலைவினில் சறுக்கி விழுந்தாள்.

கீத்து பிடிமானங்கொண்டு அக்கம் பக்கத்திலிருந்த செடி கொடிகளை பிடித்திட முயற்சிக்க, அதற்குள் குவிரத்தின் சருகலான வழிப்பாதையோ, பைந்தொடி அவளை ரோலர் கோஸ்டர் கணக்காய் இழுத்து போய் விட்டிருந்தது குறுகலான நீர் கொண்ட புதைகுழி ஒன்றில்.

பொத்தென நீருக்குள் விழுந்தவளோ சுற்றி வந்த மயக்கத்தில் தண்ணீருக்குள் முங்கிப்போனாள்.

அறைக்குள் படுத்துறங்கிய கீத்து, அவளாகவேதான் குகைக்கோவிலை நோக்கி தன்னந்தனியாய் வந்துச் சேர்ந்திருந்தாள்.

அவளுடன் படாசும் இல்லை, முற்றிழையின் கண்களை யாரும் கட்டிடவும் இல்லை.

கையில் ருத்ராட்ச மாலையை இறுக்கியப்படி, ஜிம் சூட்டின் நீண்ட ட்ராக் பேண்டும், கையில்லா பனியனின் மீது சாம்பல் வர்ணத்தில் மெல்லிய ஜாக்கெட்டும் அணிந்திருந்த மகிலையை விலாவின் வளாகத்தில் கண்டான் ரிஷப்ஷன் பையன்.

அதுவும் கண்களை திறந்தப்படியே நுண்ணிடையாள் அவள் தனியொருத்தியாய் காலில் செருப்பு கூட இல்லாது, விலாவிலிருந்து வெளியேறுவதைக் கண்ட ரிஷப்ஷன் பையனோ திடுக்கிட்டு அவளை அழைக்க, ஆயிளை அவளோ காது கேளாதவள் போல் நடையைத் தொடர்ந்தாள்.

கனவு கண்டு அதில் லயித்து அரை நித்திரையிலேயே ஷிவ் குஃபாவிற்கு வந்துச் சேர்ந்திருந்தாள் கீத்து.

கோவில் வந்தும் மாதவளின் துயில் கொண்ட கனவு கலையாதிருக்க, படாஸ் உடனிருப்பது போலவே அவளாகவே கற்பனை செய்துக் கொண்டு படியேறி கோவிலின் முன் பக்கம் போனவளின் கற்பனையில் ரீசனும் சேர்ந்துக் கொண்டான்.

ஆனால், அப்பனாயிற்றே எப்படி மகளை துன்பத்தில் ஆழ்த்திடுவான். கனவாகினும் அவளை தெளிய வைத்திடவே வந்திருந்தான்.

நிஜம் உணர்ந்த தையல்காரியோ கட்டிடா கண் கட்டினை அவிழ்த்ததாய் உணர்ந்து துணியை தேட, கையிலோ ருத்ராட்ச மாலை சிரித்துக் கொண்டு நின்றது.

ஆனால், குழப்பம் தீர்ந்து விடைக்காணும் முன்னரே புதைக்குழி கொண்ட நீர் தாடகத்துக்குள் முங்கிப்போனாள் கிருத்திகா.

ஜில்லென்ற நீரின் மொத்தத்தையும் இருள் வாடகைக்கு வாங்கியிருக்க, குளிர்ந்த ஜலத்தில் கீழ் நோக்கி போன தளிரடியோ, சரலகத்தின் (நீர்) ஆழத்தில் முங்காது நடுவிலேயே மிதந்தாள்.

காந்தாரியின் கரமோ அவ்வளவு ரணகளத்திலும் கையிலிருந்த ருத்ராட்ச மாலையை நழுவ விடாது இறுக்கமாய் பற்றியே இருந்தது.

நீசகத்துக்குள் (நீர்) கிடந்த குஞ்சரி மகளுக்கு கொஞ்சங்கொஞ்சமாய் மயக்கம் தெளிய ஆரம்பித்தது. ஆனால், அவளால் கண்களை திறக்க முடியவில்லை. உடலையும் அசைத்திட முடியவில்லை.

ஏதோ ஒன்று அவளின் யாக்கையை இழுத்து பிடித்து நிறுத்தியிருப்பதைப் போலுணர்ந்தாள் கோற்றொடி அவள்.

என்னதான் கனரசத்துக்குள் (நீர்) இருந்தாலுமே கீத்துவாள் நன்றாகவே சுவாசிக்க முடிந்தது. கிட்டத்தட்ட கோமா பேஷண்ட் போலிருந்தாள் ரீசனின் செல்லக்குட்டி.

மெல்லிய வெளிச்சம் ஒன்று நீருக்குள் ஊடுறுவி நேரிழையின் நெற்றி பொட்டில் ஒளிர, சொக்கியது சுந்தரியவளுக்கு தண்ணீருக்குள் இருந்தாலுமே.

மீண்டுமொரு தூக்கத்துக்கு தயாராகியது கீத்துவின் உடலும் மனமும். கனவோ கருவிழிகளை சொந்தமாக்கி கொண்டு காட்சிகளை விரிவுப்படுத்தியது.

எங்கும் மலை, எதிலும் பனி.

அகர்பக்தியின் நறுமணத்தில் மண்டலம் மொத்தமும் வாசத்தில் கமழ்ந்திருக்க, ஓம் நமசிவாய என்ற பிரணவமோ, மெலிதாய் ஒலித்து அவ்விடத்தை தெய்வீகத்தன்மை மாறாது பார்த்துக் கொண்டது.

காணும் திக்கெல்லாம் பனிப்பாறைகள் ஓங்கி நின்றிருக்க, அவைகளுக்கு நடுவிலோ மாசு மருவற்ற வெள்ளாற்று நதி, அமைதியாய் பயணித்து சேர வேண்டிய பஞ்ச பிரயாகைகளை போய் சேர்ந்தன.

''படாஸ்!''

என்ற அழைப்போடு, முகங்காட்டிடா நாயகனை தேடிய மகிலையோ, ஆளில்லா பனிமலையில் பூமாதேவிக்கு கை வலிக்கா வண்ணம் அன்ன நடைப்போட்டாள்.

உணரவில்லை வல்வியவள், அவள் முன்னோக்க, முற்றிழையின் பின்னே இருந்த பனிப்பாறைகளோ, சத்தமில்லா பிளவுகள் கொண்டு கரைந்துருகிய சம்பவத்தை.

''ரேவ்!''

என்ற பைந்தொடியோ, கன்னமேந்திய விரல்களில் ஒன்றை பற்களுக்கு கரும்பாக்கி, கோதையின் மனம் கொய்ந்தவனை வலை வீசி தேடினாள் பனிகல்லகம் (மலை) முழுதும்.

''படாஸ்!''

என்ற தெரியிழையின் உள்ளுணர்வோ, சௌந்தரன் அங்குதான் இருக்கிறான் என்றுச் சொல்ல, காற்றில் பரவி வந்தது அதற்கு தோதாய் ஆணவனின் எலுமிச்சை வாசம்.

''என்னகம்பாவ கள்ளியே

ஆங்கார வள்ளியே!''

என்ற குரலோ, நீலகண்டனின் வர்ணங்கொண்ட கமலத்தை தாங்கியிருந்த ஏந்திழையின் குழல் ஒளித்திருந்த செவியில் விழுந்து, மூளை நுழைந்து, நிறுத்தியது நாயகியின் இதயத் துடிப்பை.

ஊர்ம்மிகை (அலை) அடிக்க கரைந்த மணல் சிலையாய் நின்ற பதுமையோ, ஏறெடுத்தாள் மைதீட்டியவளின் கயல் விழிகளை, வானுயர்ந்த கைலாச மலையை நோக்கி.

அதுவோ போர்த்திக் கொண்டிருந்த பனிப்போர்வையைக் கொஞ்சங் கொஞ்சமாய் விலக்கிட ஆரம்பித்தது, அதன் வெள்ளை தேகத்திலிருந்து.

''நேர்த்தியின் இதத்தில்

நின்னுருவம் படைத்தானோ!

பிரகாசத்தின் ஒளியில்

நின் தோல் நெய்தானோ!

நிகாரத்தின் (பனி) துளியில்

மச்சம் பொதித்தானோ!

அசுரக்குல நெடியெடுத்து

நின் திமிர் திரித்தானோ!

நளினத்தின் நயத்தில்

நின் வெட்கம் உதிர்த்தானோ!

வகதியின் (காற்று) வருடலில்

குழல் தொடுத்தானோ!

திராபத்தின் (வானம்) கனமெடுத்து

எடை கொடுத்தானோ!

பொன்னிழையின் பளபளப்பில்

உன்னங்கம் குடைந்தானோ!

விண்மீனின் கூர்முனையில்

புரூரம் (புருவம்) தீட்டினானோ!

புணரியின் (கடல்) ஆழமாய்

தாரகம் (கண்) நிறைத்தானோ!

சுழலின் வீரியத்தை

நின் பார்வைகள் பதித்தானோ!

அமைதியின் இருப்பில்

உன் நாசி வடித்தானே!

துலவத்தின் (பஞ்சு) மென்மையில்

பொசு பொசு கன்னமிழைத்தானோ!

கொங்கின் (தேன்) ருசியெடுத்து

கந்தரம் கொடுத்தானோ!

மேகப்புள்ளின் (வானம்பாடி பறவை) இசையில்

குரல் வார்த்தானோ!

நிலத்தின் ஈரமெடுத்து

கரங்கள் புனைந்தானோ!

குன்றின் நிமிர்வுகளில்

நின் மார் செய்தானோ!

சஞ்சலத்தின் (மின்னல்) கீற்றெடுத்து

நின்னிடை மொழிந்தானோ!

பிரந்தாகாரத்தின் (அதிசயம்) மர்மத்தில்

நின் பீளல் (பெண்மை) உருவாக்கினானோ!

புடகினியின் (தாமரைக்கொத்து) சாந்தத்தில்

பின்னழகு அடைத்தானோ!

சுருட்டின் புகையெடுத்து

உன் கால்கள் உழைத்தானோ!

ஆபகையின் (ஆறு) நெளிவெடுத்து

நின் வளைவுகள் வரைந்தானோ!

தகையின் (அன்பு) பௌத்திரமாய் (புனிதம்)

காதல் கொட்டினானோ!

கிருத்தியின் பொருத்தம்..''

என்றவனின் கவி சொன்ன குரலோ பாதியில் நிறுத்தங்கொள்ள, செம்பரதி கண்ட சூரியகாந்தியை போல் மெதுவாய் கவியொலித்த திசை நோக்கி தலையை திருப்பினாள் தெரியிழையவள்.

கடுக்கண் செவியோடு, மயூர கண்கள் ரெண்டும் ஆளை இழுக்க, முழங்கை வரை மடக்கிய லோங் ஸ்லீவ் கரங்கள் பேண்ட் பாக்கெட்டுக்குள் அடக்கமாயிருக்க, குறுக்கிய புருவ மத்தியிலோ ஓரடி மேல் போன நுதலில் சின்னதாய் திருநீறு கீற்றிருக்க, இதழோரமோ முகிழ்நகை பூக்க நின்றிருந்தான் தியூடிதரா ஔகத் சர்வேஷ் குமார்.

''ரேவ்வின் மறத்துமிரத்தில் (கோபம்)

உன்னதரம் இழைத்தானோ!

கிருத்தியின் பொருத்தம்

ஔகத் என்றானோ!''

என்ற புத்திமானோ, ஒருகாலை தரையிலும் மறுகாலை நந்தியின் சிலை கொண்ட விளிம்பு சுவற்றிலும் பின்னேற்றியப்படியும் நின்றிருந்தான் குறுஞ்சிறுப்பு குறையாது.

நயனங்கள் முன்பு காதல் கணவனை கவியோடு உணர்ந்த உல்லியின் உள்ளமோ, அவன் வரிகளில் அவர்களின் முதல் சந்திப்பை சீமாட்டியின் நினைவுகளில் உலாவ விட்டது.

''பேரழகு உனை பூஜிக்கவே

சர்வேஷ் என்னுயிர் ஜீவித்தானோ!''

என்றவனின் கன்னக்குழி முகத்தை பார்த்த சுந்தரியின் மனசோ, விபஞ்சிகம் (வீணை) கலந்த கின்னரப்பெட்டியின் (பியானோ) இதமான பின்னணி இசையில், படாசின் கோட்டையில், அவன் வருகையை முதல் முறை நெருக்கத்தில் உணர்ந்த தளிரியளின் சிந்தை பாடிய வரிகளை மீண்டும் மதங்கியின் செவிகளுக்குள் தேனாய் ஒலிக்க விட்டது ரகசியமாய்.

இருவரிக்குறளை மென்மையாய் இழைந்தோட விட்ட விறலியின் பார்வைகளோ கிறங்கின, ஆணவனின் மையலுறும் பார்வைகளில் இனம் புரியா செல்லரிப்பு ஏற்பட.

தேகம் உணர்ந்த அனல் கபாலம் ஏற, பெண்ணவள் உடலோ அனத்தியது மணாளனின் பெயரை மௌன மொழிக் கொண்டு.

புன்னகைத்து நின்ற பேரழகனோ, வசீகரிக்கும் தோரணையில், அவன் காதல் மனையாளை இமைக்காது பார்த்தான் நெஞ்சுக்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு.

கீத்துவோ, ஸ்தம்பித்து நின்றாள் அவனழகில் மயங்கி.

காணாததை கண்டது போல் மாயோளின் உள்ளமோ அசந்து போனது, நேரெதிரில் நிற்கும் வித்தகனை பார்த்து. நங்கையின் மேனியோ நாணத்தில் பசலை பூசிக்கொண்டது நழுவிய ஒன்று கைசேர்ந்தது போலுணர்ந்து.

ஆரணங்கின் நெஞ்சமோ பூரிப்பில் தலைகால் புரியாது ஆட்டங்கொண்டது, தொலையா தேடலொன்று வரமாய் கிடைக்க.

பஞ்ச பூதங்களை ஐம்புலனாய் சிலாகித்தாள் பொற்றொடியவள், ஆளனின் வதனத்தில்.

அவன் பார்வைகளில் சிலிர்த்த கருணைக்கு தழங்கலற்ற (ஒலி) நன்றி நவிழ்ந்தாள் நேரிழையவள். எழிலனின் நேர்மை கீழுதட்டில் இளைப்பாற, மேலுதடு கொண்ட பொறுமைக்கு தலை வணங்கினாள் அலரவள்.

விகடகவியின் மயில் நீல தேவதீபங்களோ (கண்), கோற்றொடியின் நெஞ்சுக்குள் படிக மலையொன்றை உருவாக்க, ஆனந்த கூத்தின் வர்ணத்தை அனுகனின் (கணவன்) குருசிரிப்பில் கண்ட பேதையோ, பச்சிளங்குழந்தையின் புனிதத்தை அவனுருவில் மொத்தமாய் உணர்ந்தாள்.

கேள்வனைக் (கணவன்) கண்ட நொடி உள்ளுக்குள் பெருக்கெடுத்த உணர்ச்சிகளை அடக்க முடியாதவளோ அவன் நோக்கி ஓட எத்தனிக்க, டாக்டரோ அவள் செயல் அறிந்தவனாய் ஓடிப்போய் எகிறி குதித்தான், நந்திக்கு முன்பிருந்த கம்பியிலான நுழைவாயின் இரும்புக் கம்பிக்கு அப்பால் அஜாவின் (சிவன்) திருத்தலதின் அடிவாசலில்.

''ஔகத்!''

என்ற பனிமொழியோ ஓட்டமாய் ஓடினாள் உரியவனை அழைத்த வண்ணம்.

கைலை மலை பின்னிருக்க, கரந்தைச்சூடியன் (சிவன்) குடிக்கொண்ட கேதார்நாத் கோவிலோ கம்பீரமாய் தவங்கொண்டிருந்தது பனிப்பாறைகள் சூழ்ந்திருந்த, கீத்துவின் கனவினில்.

ஆலயத்தை பனி மொத்தமாய் மூடியிருக்க, வாகனின் (அழகன்) வருகையில், பனி உருகையில், கவிஞனின் முகங்கண்டால் மலரவளால், உயர கோபுரம் அவன் சிரதுக்கு பின்னே முழு தரிசனம் தந்திட.

''ஔகத்!''

என்றழைப்போடு ஆணவன் நோக்கி ஓடி வரும் ஆயிழையை, துளியும் குறையா புன்னகையோடு வரவேற்றான் தேசிகனவன் (அழகன்), அடிகளை பின்னோக்கி வைத்து லிங்காத்யக்க்ஷா (சிவன்) கோவில் கர்ப்பக்கிருகத்தை அடைந்த வண்ணம்.

நேயத்தை நேத்திரங்களில் தேக்கி ஓடோடி வந்த அந்திகையோ, நந்தியின் மீது நுதலொட்டி நின்றாள் மூச்சிரைப்புக் கொண்டு, சட்சுகள் ரெண்டும் தானாய் மூடிக்கொள்ள களைப்பில்.

மஹாம்ருத்யுஞ்ஜெயன்ந்தனின் (சிவன்) கருவறைக்குள் முற்றிலுமாய் நுழைந்திருந்த கிருத்தியின் காதல் மணாளனோ, வராங்கத்தை (தலை) மட்டும் திரும்பி, பரம்ஜ்யோதியின் (சிவன்) வாகனமான நந்தியின் பக்கத்தில் நின்றப்படி அவனை ஏக்கத்தோடு ஏறெடுத்திருந்த சுரிகுழலை வருநகையோடு (புன்னகை) பார்த்தான்.

அரிவையவள் அம்பகங்கள் சிமிட்டிய நொடியில், வெற்றுடலில் வேஷ்டி கொண்டவனாய் காட்சியளித்தான், தியூடிதரா ஔகத் சர்வேஷ் குமார் அவனின் மனைவிக்கு.

வல்லபியவளோ வியப்புகளிலிருந்து இன்னும் மீளாதிருக்க, அடிகளை மெது மெதுவாய் முன்னோக்கி வைத்தாள் இரும்புக் கம்பிகளை நோக்கி.

ஆணவனின் புறமுதுகிலிருந்த டாட்டூவோ கர்ஜித்தது, மூர்த்திகனை போலவே சங்குக் கொண்டு, கேதார்நாத் அதிர.

கழுத்தில் ருத்ராட்ச மாலைகள் தொங்க, புஜங்கள் தொடங்கி அழகனின் அங்கங்களில் ஆங்காங்கே தீருநீறு பட்டையோ அவனை புதுத்தோற்றக்காரனாய் காண்பித்தது.

எட்டி போய் அவனை தொட நினைத்தவள் கரத்தை வலிமையான கரமொன்று பட்டென இழுக்க, திரும்பிய வேகத்தில் அதிர்ந்துப் போனாள் காதல் ரதியவள் கண் முன் நின்ற புறமுதுகு கண்டு.

கந்தரத்தை ருத்ராட்ச மாலை அலங்கரித்திருக்க, உடலெங்கும் திருநீறு கொண்டிருந்த பேரழகனோ எலுமிச்சை மணத்தில் பின்னிருந்த மாயோளை மலையேற்றினான் ஸ்தம்பிப்பில்.

உள்ளம் குழப்பத்தில் மிதந்தாலும் முன்னிருந்த கரத்தை பின்னோக்கி வளைத்து இடை நெருக்கியிருந்த வித்தகன் கொடுத்த ஸ்பரிசத்தின் போதையில் பித்தேறியே முற்றிழையோ அழகனின் வெற்றுடல் தேகம் தொட்டு மேலேறினாள்.

விகடகவியின் பின் முதுகிலான சிங்கமோ வெட்கி தலைகுனிந்தது, தளிரியலின் உள்ளங்கை ஆழகனின் முதுகில் மென்னுரசல் கொள்ள காதலோடு.

முகம் பார்க்கா ஆணின் தோளில் தலை சாய்த்தாள் சீமாட்டியவள், ருத்ராட்ச மாலை கொண்டவனின் புஜங்களை இறுக்கி. அவன் மேனி கொண்ட திருநீறெல்லாம் வல்வியின் வதனத்தில் ரங்கோலியாய் வர்ணம் கொள்ள,

''படாஸ்!''

என்று காதலோடு அழைத்து, இதழொத்தினாள் இளம்பிடியாளவள் மனம் கொய்ந்த கள்வனின் தோள்பட்டையில்.

இடமார்பில் பதிந்த காதலியின் மற்றொரு கையை நெஞ்சோடு சேர்த்திருக்கிக் கொண்டான் படாஸ்.

காதலில் லயித்த கிருத்தியின் மனமோ எதையோ இழந்து துடிப்பதை போலுணர, இனம் புரியா அக்கலவரத்தில் சிக்குண்டவளோ பட்டென விழிகள் விரிக்க, ஔகத்தை கண்டாள் சீமாட்டியவள் ரத்த வெள்ளத்தில் பனியில் சுருண்டு விழுந்த கோலத்தில்.

''ஔகத்!''

என்றலறியவளோ ஓடினாள் கணவனை நோக்கி.

படாஸ் பற்றி பிடித்து நிறுத்திய பொற்றொடியின் கரத்தையோ, பெண்ணவள் அவன் முகத்தை பார்க்காதே உதறித் தள்ளி ஓடினாள்.

''ஔகத்!''

என்றலறி புருஷனை தூக்கி மடியில் வைத்து கதறியவள் முகத்தை மெல்லிய இதழ் முறுவலோடு கண்ட டாக்டரோ,

''கிருத்தி!''

என்று சொல்லி மெதுவாய் அவன் கண்களை மூடினான், கீத்துவோ அவனை நெஞ்சோடு புதைத்திருக்க.

காதலித்த கிருத்தி உதறித்தள்ளி போன உள்ளங்கைகளை கண்ணீர் கொண்டு நோக்கிய படாஸோ, ஏறெடுத்து மரித்த ஔகத்தை கட்டுக்கொண்டு ஓலமிடும் அகம்பாவ கள்ளியை பார்த்தான்.

அவன் காதல் பொய்யா இல்லை ஔகத்தின் அன்பு மெய்யா என்று அவனுக்கு புரியவில்லை.

கை நழுவி போன பாவை செத்தவனைக் கட்டுக்கொண்டு அழுகைக் கொள்ளும் காட்சி மரண வலியைக் கொடுத்தது படாஸுக்கு.

கீத்துவின் மனமாற்றம் அவனுக்கு விளங்கவில்லை. யார் சரி தவறென்று கூட அவனுக்கு உணரவில்லை.

ஆனால், ரண ரோதனையில் நரக வேதனை கொண்டான் ஆணவன். ஏமாந்து நின்றான் முக்கோண காதலில் சிக்கி சீரழிந்தவன்.

சங்கொலியில் மொத்த இடமும் அதிரியது. உடுக்கையும் பம்பையும் ஒருசேர இசைக்க, மலையும் மடுவும் மறைய ஆரம்பித்தன.

பனிபாறைகளோ உடைந்து தெறித்து கரைந்தோடின. கையிலை நாதனின் தலமோ காற்றில் துகளாய் போயின.

படாசும் காணாது போனான் அங்கிருந்து.

தியூடிதரா ஔகத் சர்வேஷ் குமாரின் மரித்த உடலும் தொலைந்து போனது.

யாருமற்ற தனியொருத்தியாய் அப்பெரிய பனியிலான பாலைவனத்தில் உயிர் போக அலறினாள் கீத்து, தலைவிரிக்கோலமாய் மடியிலிருந்த கணவன் கணத்தில் மறைய.

''ஔகத்! ஔகத்!''

என்ற கிருத்திகாவோ கனவில் நிஜத்தை கண்டு ஒப்பாரிக் கொண்டாள், இதுதான் தியூடிதரா ஔகத் சர்வேஷ் குமாரின் விதி என்றறியாது.

படாஸ்...

முந்தைய அத்தியாயங்களை படிக்க:

https://amydeepz.com/forums/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D.14/
 
Author: KD
Article Title: படாஸ்: 121
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

nisha

New member
Joined
Jul 17, 2024
Messages
2
Augath kum rev kum enna relationship 🤔
Last chapters la augath rev ku romba close nu solli irukkenga but relationship enna brothers a
 
tamilselvi

New member
Joined
Oct 5, 2024
Messages
10

Purila....augath and badas rendu perum vera vera but close relationship apdina kiruthiya epdi rendu perum love panna mudium...athuvum sex ..???? Kiruthi than paavam....baby oda daddy yaru???? Kodumai da sami
 
Top