What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
414
அத்தியாயம் 125

மழை மீண்டும் தரணியைக் குளுமையாக்க ஆரம்பித்திருந்தது.

ஆனந்தம், அழுகை என்று இரண்டற கலந்த தம்பதிகளோ நல்லுறக்கம் கொண்டிருந்தனர் நிம்மதியாய் கேடியின் படுக்கையறையில்.

திடிரென்று டமார் என்ற சத்தத்தோடு யாரோ எதையோ உருட்ட, பட்டென தூக்கம் கலைந்து விழிகள் விரித்தாள் கீத்து.

புருஷனோ குப்பிற கிடக்க, ஆளில்லா வீட்டில் என்ன சத்தமென்று யோசித்தவள் வேகமாய் எழுந்து ஔகத்தின் டி- ஷர்டை அணிந்துக் கொண்டாள்.

ஓசையென்னவோ மிக அருகிலேயே கேட்பது போலிருக்க, டாக்டரை எழுப்ப நினைத்தவள், பின் அவன் நெற்றி கேசத்தை மட்டும் கோதி விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

திருடனோ, என்ற சந்தேகத்தோடு அவளின் இறுக்கமான ஷோர்ட் பேண்டின் பின்பக்கம் கன்னை ஒளித்து வைத்துக் கொண்ட கீத்துவோ, அலைபேசியை கையில் எடுத்துக் கொண்டு மாளிகையின் நடைப்பாதையில் நடக்க, சத்தமோ கீழிருந்து கேட்பதை போலிருந்தது பேதை அவளுக்கு.

கீழ் மாடி நோக்கி டார்ச் அடித்து பார்த்தவளுக்கோ எதுவும் சந்தேகிக்கும் படியாய் தெரியவில்லை. .

கேடியின் விருப்பப்படி மூத்த பேரன் ஒருவனுக்கு மட்டுமாய் அம்மாளிகையை எழுதிக் கொடுத்ததோடு சரி, தாத்தா கஜேன் அதற்கு பிறகு அந்தப்பக்கம் எட்டி பார்த்திடவே இல்லை.

காரணங்கள் ஏதுமின்றி காய் நகர்த்திட மாட்டான் கேடி என்றறிந்த தகப்பன் அவனிடத்தில் வேறேதும் கேட்டுக்கொள்ளவில்லை.

போலீஸ்காரி நின்ற இடத்திலோ திடிரென்று அதிர்வுகள் தோன்ற பக்கென்றது பாவையவளுக்கு நிலநடுக்கமோ என்று.

டக்கென தரையில் காதை பதித்து கண்களை மூடியவளுக்கோ தூக்கி வாரிப்போட்டது. சத்தம் அடியிலிருந்து வர அம்மணியின் மேனி ரோமங்களோ சிலிர்த்து போயின.

ஆனால், செவிகள் கேட்ட ஓசையோ ஒரே இடத்தில் நில்லாது அங்கும் இங்கும் நகர்வதை போலுணர்ந்தாள் கீத்து. சத்தத்தோடு பயணிக்க ஆரம்பித்தாள் காவல் காரியவள் தரையில் காதை வைத்தப்படியே.

நடைப்பாதையில் தொடங்கிய மடந்தையின் பயணம் அப்படியே கேடியின் ஆபிஸ் அறைக்குள் நுழைந்தது. ஆனால், அவ்வறையோ பூட்டியிருந்தது.

ஔகத் எப்போது கேடி வீட்டுக்கு வந்தாலும் எல்லா அறைகளையும் ஒரு எட்டு போய் பார்த்து விளக்குகளை ஆன் செய்து, திரை சீலைகளை விலக்கி, கதவுகளை திறந்து விட்டுத்தான் மற்ற வேலைகளிலேயே மூழ்கிடுவான்.

இன்றைக்கும் அப்படித்தான். ஆனால், ஏன் இந்த ஒரு அறை மட்டும் இன்றைக்கு திறக்கப்படாமல் இருக்கிறது என்ற கேள்வியோ கீத்துவிற்கு சந்தேகத்தை அதிகப்படுத்தியது.

வேகமாய் ஓடிப்போய் அவ்வறையின் சாவியை எடுத்து வந்தவளோ அதை திறந்து உள்ளே போனாள். முதலில் தூரமாய் கேட்ட சத்தங்களோ இப்போது மிக நெருக்கத்தில் கேட்டிட ஆரம்பித்தது.

அறைக்குள் விளக்கை போட்ட பெண்டுவோ மீண்டும் தரையில் செவியை பதித்து சவுண்ட் வரும் திசை நோக்கி பயணித்தாள்.

அங்கே இங்கே என்று அறையை நாய் குட்டி போல் அலசியவள், இறுதியில் போய் இடித்து நின்றாள், கேடியின் ஆபிஸ் மேஜையின் நாற்காலி இருக்குமிடத்தில்.

தலையை கையால் தேய்த்துக் கொண்ட மடவரலோ, நாற்காலியை நகர்த்தி மேஜையின் அடியில் சுற்றி முற்றி பார்க்க, வித்தியாசமாக எதுவுமே தெரியவில்லை.

ஆனால், உள்ளுணர்வோ ஏந்திழையின் அத்தனை கேள்விகளுக்கும் அங்குதான் விடை இருக்கிறதென்று சொல்லியது.

அதனால், மீண்டும் ஒருமுறை அகலமான பரப்பளவு கொண்ட அம்மேஜையின் அடியில் நுழைந்து, அதன் மேற்புற விளிம்புகளை விரல்களால் தொட்டுரசி பார்த்தாள் பேடையவள் அலைபேசியின் டார்ச் மூலம் ஏதாவது சிக்குகிறதா என்று தேடி.

மூலை முடுக்குகளை நுணுக்கமாய் நுண்ணிடையாளவள் ஆராய, விறலியின் விளிம்பினை பற்றியிருந்த விரல்களோ தன்னிச்சையாய் அங்கும் இங்கும் நகர்ந்து கண்ணுக்கு புலப்படா ஒரு சில கோர்ட் எண்களை க்ளிக்கியது.

கேடியும் அவன் வாரிசும் மட்டுமே அறிந்தே அம்மேஜையின் அடியிலிருந்த ரகசியத்தை எதிர்பாரா வண்ணம் கீத்து தொட்டிருக்க, அவளை சதுரங்க வடிவிலான பெட்டி ஒன்று சூழ்ந்துக் கொண்டது.

திடுக்கிட்ட கீத்துவோ சுற்றி முற்றி அப்பாக்ஸை பார்க்க, அதுவோ கண்ணிமைக்கும் நொடியில் நாலாப்புறத்தையும் டைட்டாய் லாக் செய்து, ராக்கெட் வேகத்தில் பயணிக்க ஆரம்பித்தது.

கீத்துவால் நன்றாகவே உணர முடிந்தது அவள் எங்கேயோ போகிறாள் என்று. ஆனால், எவ்விடம் என்று அறியாதவளுக்கோ சிறு அச்சம் இருக்கவே செய்தது உள்ளுக்குள்.

இருப்பினும், மாமனாரின் வீடென்பதால் இது கண்டிப்பாய் கேடியின் கைவரிசைகளில் ஒன்றாகத்தான் இருக்க வேண்டுமென்று தீவிர நம்பிக்கைக் கொண்டாள் மருமகள் அவள்.

ஆனால், இது ஔகத்திற்கு தெரியுமா தெரியாதா என்ற ஒன்று மட்டும் மண்டையைக் குடைய, கண்டிப்பாய் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லையென்று போலீஸ் புத்தி எடுத்துரைத்தது மெல்லியல் அவளுக்கு.

அலைபேசியை எடுத்து கவரேஜ் இருக்கிறதா என்று செக் செய்த புனைகுழலோ ஆச்சரியமே கொண்டாள் கவரேஜ் முழுமையாக இருக்கக் கண்டு.

தாமதிக்காதவள் உடனே ஔகத்திற்கு அழைக்க, தொடர்பு என்னவோ இணைக்கப்படாமலேயே இருந்தது.

என்னடா இது என்று சளித்துக் கொண்ட கீத்துவோ, மாமியாருக்கு ட்ரை செய்ய, அப்போதும் அலைபேசி அதேப்போல் இணையாதே இருந்தது தொடர்பில்.

சரி கேமராவை கொண்டாவது அமர்ந்திருக்கும் பெட்டியின் சுற்றத்தை படம் பிடிக்கலாம் என்றால் அதுவும் அந்திகையை ஏமாற்றியது. பிடித்த படத்தை பார்க்க, அதுவோ கருப்பாய் பிரதிபலித்தது.

தலையை இறுக பற்றியவளோ,

''யாருடா இந்த ஜீனியஸ்?! எனக்கே பாக்கணும் போலிருக்கே!''

என்று வாய் விட்டு புலம்ப, பாக்ஸ்சின் லாக்குகள் திறக்கும் சத்தம் கேட்டது கீத்துவின் காதுகளில்.

காவல்காரியோ எதற்கும் முன்னெச்சிரிக்கையாய் இருக்க வேண்டி பின்முதுகிலிருந்த பிஸ்ட்டலில் கையை வைக்க, அவளுக்கு முன்னிருந்த பெட்டியின் வாயிலோ திறந்த வழிவிட்டது கோமகளின் பொற்பாதம் ஜில்லென்ற வைரத்தரையில்.

அசந்து நின்றாள் திருமதி ஔகத், எதை பார்ப்பது, எதை விடுப்பதென்று தெரியாமல் கண்கள் கண்ட காட்சிகளில்.

மானினியவள் நின்ற இடம் தொடங்கி தலைக்கு மேலிருந்த விட்டம் வரைக்கும் ஜொலித்தது வைரம்.

தங்கத்தை இழைத்து கோவில் கட்டியவர்கள் மத்தியில் வைரத்தை சகட்டு மேனிக்கு தாராளமாய் வரி இறைத்திருக்கும் நல்லுள்ளம் யாரென்று அறிய ஆவல் கொள்ளாமல் இல்லை கீத்து.

மெதுவாய் அடிகளை முன்னோக்கி வைத்தவள் அங்கிருந்த வைர சோபாவின் விளிம்புகளை விரல்களால் உரச, யாரோ வருவதை போலுணர்ந்தாள் ஆட்டியவள்.

எங்கு ஒளிவதென்று கூடத்தெரியாது, தற்சமயத்துக்கு எங்காவது போய் சொருகிக் கொண்டு நின்றால் போதுமென்ற அளவில் அங்கிருந்த கேபினெட் ஒன்றின் பின்னால் போய் நின்று உடலை மறைத்துக் கொண்டாள்.

காலணி தடங்கள் கேட்க, நடமாட்டத்தின் உருவத்தைக் கண்ணால் பார்த்திட முடியவில்லை பொற்றொடியாள்.

அவ்விடத்தின் குளிர்ச்சியில் பிணவறை கூட தோற்றிடும் என்றுத் தோன்றியது கீத்துவிற்கு.

தோளை தேய்த்துக் கொண்டவளின் நாசியோ திடிரென்று எலுமிச்சை வாசத்தை நுகர, அவளை அறியாது கண்களை மூடினாள் ஒண்ணுதல் அவள் சில நொடிகளுக்கு.

படாஸ் என்றவள் மனம் கூப்பாடு போட, விழிகள் விரித்தவளின் கால்களோ நறுமணத்தின் வழி நடந்திட ஆரம்பித்தது.

கணவன் மஞ்சத்தில் குப்பிற கிடக்க, இங்கு எப்படி அவளுக்கு முன்னதாக வந்திருக்க முடியும் என்ற யோசனையில் திடிரென்று பிரேக் போட்டு நின்றாள் கீத்து பாதி வழியிலேயே.

அதுவும் படுக்கையறையில் சத்தம் கேட்கையில் டாக்டர் விழிக்காது உறக்கத்தில்தானே இருந்தான் என்ற நிதர்சனம் வேறு செய்யிழையின் சிந்தையை சூடாக்கியது.

நடு வீதியில் நின்று குழம்பி போவதை விட வாசம் வீசிய இடம் நோக்கி சென்று விடை பெற்றுக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தாள் விளங்கிளை அவள்.

வேக வேகமாய் நடந்தவளோ இறுதியில் அடைந்தாள் சிங்கத்தின் தலை கொண்ட வாயிலையை.

அதைக் கண்ட நொடி கீத்துவிற்கு ஜெர்மனியில் பார்த்த மூர்த்திகன் குரூப்ஸ்சின் ஆழ்கடல் மனைதான் ஞாபகத்திற்கு வந்தது.

இங்கேயும் அப்படித்தான் இருந்தது. ஆனால், சிறு வித்தியாசம். வாசலே அரிமாவின் வாயாகத்தான் இருந்தது. அதுதான் வியந்து பார்க்க வைத்தது கீத்துவை.

அகல திறந்திருந்த கேசரியின் வாயுக்குள் அடியெடுத்து வைத்த வாஞ்சியோ, அதன் பற்கள் தளிரியளின் தலையையும், அடிப்பாதத்தையும் இடிக்காத வண்ணம் அறையின் உள்ளே கால் பதித்தாள்.

''காதல் தீண்டவே

காதல் தீண்டவே

கடல் தாகம் தீர்ந்ததே

உன்னாலே தன்னாலே

உன்னாலே தன்னாலே

உயிரே உயிரே உளறுகிறேன்

உளறியும் கவிதைகள் எழுதுகிறேன்!

என்றுப் பாடிய இனிமையான குரலே வரவேற்றது, தியூடிதரா ஔகத் சர்வேஷ் குமாரின் காதல் மனைவியான கிருத்திகாவை, இந்தோனேசியாவின் கவா இஜென் எரிமலைக்கு (Indonesia's Kawah Ijen volcano) அடியில் வீற்றிருந்த படாஸின் வைர மாளிகைக்குள்.

அடர் பச்சையிலான வேஷ்டி இடையை இறுக்கியிருக்க, புஜங்களில் பட்டையோ முக்கோடுகளாய் விரிந்திருக்க, வெற்றுடலின் புறமுதுகிலோ மூர்த்திகனின் சிங்கம் கர்ஜித்திருக்க, கந்தரமோ ருத்ராட்ச மாலைகள் கொண்டிருக்க, செவிகளிலோ கடுக்கன் மின்னியிருக்க, வைர சுவற்றில் திருநீறை தூக்கி வீசினான் படாஸ்.

அதிர்ச்சியும் ஆர்வமும் மேலோங்கியிருக்க ஸ்தம்பித்து நின்றிருந்தாள் கிருத்தி.

கணவன் சாமி கும்பிடுவதே அரிது என்பதை கண்ணால் கண்டிருப்பவள் முன் முழு நேர சாமியார் போல் தோற்றங்கொண்டவனின் தோற்றம் தெரிவை அவளை ரொம்பவே ஆச்சரியப்படுத்தியது.

''கனவா கனவா

நான் காண்பது கனவா

என் கண் முன்னே கடவுள் துகளா

காற்றின் உடலா கம்பன் கவிதை மடலா

இவள் தென்நாட்டின் நான்காம் கடலா!''

என்றுப் பாடியப்படி கண்ணிமைக்கும் நொடியில், குழைத்த சந்தனத்தையும் குங்குமத்தையும் மட்டுமே கொண்டு கிருத்தியின் சிரித்த முகத்தை இருக்கர விரல்களால் வரைந்து முடித்தான் படாஸ்.

வியப்பில் வாய் பிளந்து நின்ற கோதைக்கோ அப்போதும் உரைக்கவில்லை முன்னிருப்பவன் புருஷனில்லை என்று.

இதுவரையிலும் படாஸின் முகத்தை நேரடியாக பார்த்திடாத கீத்துவிற்கோ சில நிமிடங்கள் கடந்த பின்புதான் மூளையே வேலை செய்திட ஆரம்பித்தது.

சுவர் சித்திரத்தில் பிசியாக இருப்பது ஔகத்தானா என்று மனம் பதைக்க, சந்தேகத்தின் வேரை முலையிலே கிள்ளியெறிய முனைந்த முற்றிழையோ, போலீஸ் புத்தியை ஆப் செய்தாள், சித்திரக்காரன் கணவன் தானெனென்று தன்னிலை விளக்கத்தோடு.

பகுத்தறிவோ, தற்குறி அவளை கழுவி ஊற்றியது டாக்டர் மஞ்சத்தில் குப்பிற கிடக்க எப்படி இவளுக்கு முன்னாள் இங்கே வந்திருக்க முடியும் என்ற உண்மையை யோசிக்க சொல்லி.

ஆனால், நேற்றுவரை படாஸை காதல் கோட்டை தேவயானி ரேஞ்சில் லவ் பண்ணிய கீத்துவிற்கோ இப்போது அவன் முகம் கண்டாலே போதும் என்றிருந்தது.

அதுவும் காதல் கணவன் ஔகத்தை அவள் விரும்பிய அஃறிணையான உயர்திணையாகவே பார்த்திட விரும்பினாள் கிருத்தி.

''ஒரு முறை சிாிக்கிறாய்

ஏன் உயிாினை பறிக்கிறாய்

கண்கள் ரெண்டும் அணுகுண்டா

கத்திக்குள்ள பூச்செண்டா

இன்பமான சிறை உண்டா

ஈர விழியில் இடம் உண்டா

கடவுள் பூமி வந்தால்

உன் கண்ணை பாா்க்க வேண்டும்

மனிதன் பாவம் என்று அவன்

மெரண்டு போக வேண்டும்!''

என்ற படாஸோ, பாட்டிலாடும் விஜயை மிஞ்சிடும் அளவுக்கு ஓவியத்திலிருந்த கிருத்தியோடு டூயட் பாடிக்கொண்டிருந்தான்.

கைக்கு எட்டிடா தூரத்தில் அவளின் சித்திரத்தை முத்தமிட்டு பித்தனாய் உருமாறியிருந்த காதல் மணவாளனை பெயர் சொல்லி அழைக்க, மெய்குழல் அவளோ மெதுவாய் வாயெடுக்க,

''தலையைக் குனியும் தாமரையே

தலையைக் குனியும் தாமரையே!''

என்று ஓவிய பாவையின் இதழ்களை வருடியப்படி பாடியவனின் வரிகளில் அது ஔகத்தை தவிர வேறு யாராக இருந்திட முடியும் என்ற முடிவுக்கு வந்த கிருத்தியோ,

''உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து

உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து!''

என்று அவளறியாது பாட,

''தலையைக் குனியும் தாமரையே!''

என்றுப் பாடிய படாஸோ பட்டென பாட்டை நிறுத்தி சுவர் சித்திரத்திலிருந்து பின்வாங்கினான்.

மயூர வர்ண விழிகளை உருட்டி முதுகுக்கு பின்னால் என்ன நடக்கிறதென்பதை தலையைத் திருப்பாதே கணித்தான்.

இதழோரம் சிறியதாய் வன்ம புன்னகை துளிர்க்க, அதை சத்தம் போட்டு காட்டிடாத படாஸோ சித்திரத்தில் வெவ்வேறான வர்ணங்களை கலந்திட ஆரம்பித்தான் மெல்லிய விசிலோடு.

எப்போது சுந்தரியின் வாய் பாட்டு பாடி முடித்ததோ, அந்நொடியே துணைவியின் வாயை பட்டென பொத்தி ஓரமிழுத்து போயிருந்தான் ஔகத்.

கணவனை கண்ட பரவையோ பேச்சற்று போனாள். அதிர்ச்சி விலகாத விழிகளோடு கண் முன்னிருந்த டாக்டரை பேயறைந்தவள் போல் பார்த்த கீத்துவின் காதுகளிலோ,

''கண்ணாடி நிலவாய் கண் கூசினாய்

வெண்வண்ண நிழலை மண் வீசினாய்

புல்லில் பூத்த பனி நீ

ஒரு கள்ளம் இல்லை

வைரஸ் இல்லா கணினி

உன் உள்ளம் வெள்ளை

நீ கொல்லை மல்லி முல்லை போலே

பிள்ளை மெல்லும் சொல்லை போலே!''

என்றொலித்தது படாஸின் குரல் ரம்மியமாய்.

வைர சுவரிலிருந்த கீத்துவின் படத்திற்கு முன்னாள் தனியொரு ஆடல் பாடல் கச்சேரி நடத்திக் கொண்டிருந்தான் படாஸ்.

அவனைத் திரும்பி பார்த்து, வித்தகனின் முதுகு வெறித்த வஞ்சியவளாள் அவளின் விலோசனங்களையே நம்ப முடியவில்லை.

இதயமோ வெடித்து சிதறியது. ஒருவனல்ல இருவன் என்ற நிஜத்தை ஜீரணிக்க முடியாதவளின் நயனங்களோ பொலபொலக்க ஆரம்பித்தது.

மனசை மட்டுமல்லாது உடம்பையும் இரு வெவ்வேறான ஆண்களுக்கு விருந்தாக்கியிருக்கும் அவளின் அவல நிலையை நினைத்து வெம்பியது குழந்தையை சுமந்திருப்பவளின் உள்ளம்.

ஒருபுறம் கோபம் மறுப்புறம் ஏமாந்த வலி. யாரை சொல்லி என்ன பலன். டாக்டர் சொன்னானே அவன் இவனில்லை என்று. கேட்கவில்லையே கோதையவள்.

குலுங்கி கதறிய தளிரியளோ, வாயை மூடிக்கொண்டாள் கைகளால் வைரத்தரையைக் கண்ணீரில் குழுப்பாட்டி.

சத்தம் போட்டு கத்தி கதறிட தோன்றியது தெரிவை அவளுக்கு. ஆனால், எங்கிருந்து, எப்படி, எதை, யாரிடமிருந்து ஆரம்பிப்பதென்றே தெரியவில்லை ஏமாந்த பேதைக்கு.

சமாதானம் செய்ய முனைந்த ஔகத்தையோ கைகளால் தடுத்து முகத்தை மூடிக்கொண்டாள் கீத்து.

ஆனால், அப்போதுக்கூட ஏந்திழையின் உள்ளமோ சொன்னது, இருவரும் ஒன்றே என்று. இதில் ஏதோ சதியிருக்கிறதென்று கண்ணால் பார்த்தப் பின்னும் காட்சிகளை ஏற்க மறுத்தது பாவையின் பாழும் மனது.

குமுறியவளை மார்போடு அணைத்துக் கொண்டான் ஔகத் அவள் திமிறி துடித்தாலும்.

''நாமே இங்கிருந்து போயாகணும் கீத்து!''

என்றவனை வீங்கிய விழிப்படலங்கள் கொண்டு ஏறெடுத்தவளோ புருஷனின் மரகத விழிகள் ரெண்டும் மயூர வர்ணத்தில் மாறுவதைக் கண்டாள்.

மீண்டும் டக்கென திரும்பி படாஸை நோக்க,

''இது என்னடி

இதயம் வெளியேறி அலைகின்றதே

காதல் இதுவா?!''

என்றவனோ காதல் முத்தியவனாய், வர்ணங்களை அவன் மீதே ரங்கோலியாக்கிக் கொண்டு ஓவியமானவளை ரசித்தான்.

நம்பிக்கை நொடிக்கு நூறு முறை பரிசோதனை செய்ய சொல்லி வேண்டியது அவளின் காதலை.

புழுவாய் துடித்தாள் கீத்து. அருவருப்பாய் உணர்ந்தாள். காதலித்தவனோ கட்டியவன் என்று நினைத்திருந்தவளின் கண்ணியம் ஒரு நொடியில் புஷ்வனமாகியது.

எவனை மறக்க முடியாது, அவனையே அடவி நாயகனாய் உணர்ந்து, வாழ்க்கையை மொத்தமாய் அவனிடத்தில் சமர்ப்பித்திருந்தாளோ இருவரும் ஒருவரல்ல என்ற நிஜம் சுட்டெரித்தது காவல்காரியை.

தீ ஜுவாலையாய் பற்றி எறிந்த மனதை இனி எக்காலத்திற்கும் அணைக்க முடியாது என்றுணர்ந்தவளின் உள்ளமோ, அப்போதும் கடுகளவு ஏங்கியது இருவரும் ஒருவராய் இருந்திட மாட்டார்களா என்றெண்ணி.

மெய்யை கண்ணால் கண்ட பின்னும், தீர விசாரித்திட சொல்லி கர்ப்பஸ்திரி மனம் ஏமாற்றத்திடம் கெஞ்ச,

''நிஜமாவே ரெண்டு பேரா?!''

என்றவளோ நெஞ்சை கல்லாக்கி கொண்டு ஔகத்தின் முகம் பார்த்தாள் மூக்குச் சளி ஒழுக கண்ணீரில் ஆர்ப்பரித்து.

''அவன் நான் இல்லே!''

என்ற ஔகத்தோ இப்போதும் குண்டக்க மண்டக்கவே பதில் சொல்ல,

''கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல மாட்டியா நீ?!''

என்று வாழ்ந்து கெட்டவளோ புருஷனின் கன்னத்தில் பளாரென்று ஒன்று வைத்தாள்.

''வீட்டுக்கு போய் பேசிக்கலாம் கீத்து!''

என்றவனோ மனைவியின் கரத்தை இறுக்கமாய் பற்ற,

''என்ன பேசணும்?! ஹான், என்ன பேசணும்?! என்ன இருக்கு பேச?!''

என்றவளோ அலறினாள் உயிரே போகும் படியான சினத்தில் ஔகத்தின் பிடியை உதறித்தள்ளி.

அங்கொருத்தி நரக வேதனைக் கொண்டு கத்துவது படாஸின் செவிகளில் விழுந்திடாமல் இல்லை.

ஆனால், அவனோ வரைவதில்தான் மும்முரமாக இருந்தான் நடக்கின்ற சண்டையில் மூக்கை நுழைக்காது.

''கீத்து சொன்னா கேளு! வா முதல்லே இங்கிருந்து கிளம்பலாம்!''

என்ற டாக்டரோ மீண்டும் மணவாட்டியின் கையை பற்ற போக,

''தொடாதே என்னே! தொடாதே! என் வலியே சொல்ல வார்த்தையே இல்லே ஔகத்! இந்த துரோகத்துக்கு மன்னிப்பும் இல்லே! நீங்க ரெண்டு பேரும் யாரு, எவருன்னே எனக்கு தெரியலே?! எப்படி உங்களுக்குள்ளே இவ்ளோ ஒத்துமைன்னு எனக்கு புரியலே?! ஆனா, நீங்க விளையாட என் மனசுதான் கிடைச்சதா?! அதுக்கு மட்டும் பதில் சொல்லு ஔகத்!''

என்றலறிய கீத்துவோ அவளின் முதுகுக்கு பின்னாலிருந்து கன்னை கைப்பற்றி நிறுத்தினாள் டாக்டரை கைத்துப்பாக்கியின் முனையில்.

''ஐயோ, கீத்து! பைத்தியக்காரி மாதிரி பண்ணாதே! வா முதல்லே!''

''கிட்ட வராதே! வராதே ஔகத்! ஐயோ! கடவுளே! ஏன், எதுக்குன்னு இப்போ வரைக்கும் எனக்கு புரியலையே?! படாஸ் பத்தி நீ பேசும் போதெல்லாம் உன்னே நீயே நக்கல் பண்ணிக்கறன்னுதானே நான் நினைச்சேன்! ஆனா, இப்போ!''

என்றவளோ காட்டு கத்து கத்திட, நெஞ்சை அழுத்தி பிடித்தான் ஔகத் அவனுக்குள் தோன்றிய திடீர் வலி ஆணவனின் ரத்த நாளங்களை புடைத்திட வைக்க.

''அவனே விட்டுத்தள்ளு! ஆனா, நீ?! எத்தனை வயசுலருந்து நான் உன்னையும், நீ என்னையும் லவ் பண்ணிக்கிட்டு இருக்கோம்?! எப்படி உன்னாலே என்னே அவனுக்கு விட்டுக்கொடுக்க முடிஞ்சது?! எதுக்காக அப்படி செஞ்சே?! எதுக்காக?!''

''கீத்து, கீத்து வா கீத்து! நாமே இங்கிருந்து போயே ஆகணும்! வா!''

என்றவனோ நிலையை சமாளித்தவனாய் கெஞ்ச,

''படுக்கறே பொம்பளைக்கு தெரியும் ஒவ்வொருத்தனும் எப்படின்னு! ஆனா, எப்படி நீங்க ரெண்டு பேருமே ஓரல் செக்ஸ் பண்ணும் போது குளோவர் டங் யூஸ் பண்ணி என்னே பிளஷர் (pleasure) பண்ணீங்க?! சொல்லு?! சொல்லு?!''

என்றவளோ அழுகையை ஓரங்கட்டி வெகுண்டெழுந்தாள் காளியாய். ஔகத்தின் கழுத்தோர சட்டியை கையால் கொத்தாய் பற்றி, கன்னை அவன் நெற்றியோரத்தில் இறுக்கி அவனை வார்த்தையால் மடக்கினாள்.

தொலைவில் இருந்த படாஸோ தனக்குத்தானே சிரித்த வண்ணம்,

''பதில் சொல்லு ஔகத்?! பதில் சொல்லு?! என் கிருத்தி கேட்கறள்ளே?!''

என்று குரூரமாய் புன்னகைக் கொண்டான்.

''என் டேடி மேலே வெச்ச நம்பிக்கையே உன் மேலே வெச்சேனே ஔகத்! ரெண்டு பேருமே ஒன்னுன்னு நம்பித்தானே என்னையே கொடுத்தேன! ஆனா, இப்படி நம்ப வெச்சி கழுத்தரறுத்திட்டியேடா பாவி!''

என்றவளோ தலையில் அடித்துக் கொண்டாள் பிஸ்டல் கொண்ட கையாலேயே ஒப்பாரிக் கொண்டு.

''சொல்லுடா?! சொல்லு?! இம்மியளவும் வித்தியாசம் இல்லாமே எப்படி இருக்க முடியும்? யாரு நீங்க ரெண்டு பேரும்?! யாரு?! உன்கூட ஒட்டி பிறந்து சொத்தானே, அவனா சொல்லு?! சொல்லு ஔகத்?! சொல்லு?! அவன்தானே?! அவன்தானே?! சொல்லு ஔகத்?! அவன்தான்! அவனேதான்! எனக்கு தெரியும்! ஒரு தடவே கூட அவனோட சமாதியே பத்தி நீங்க யாருமே பேசினது இல்லே! அவனுக்கான ஷேர்ஸ் கூட அப்படியே இருக்கு! குடும்ப சொத்துக்கூட அவன் பேருலே இருக்கு! இந்த உலகத்திலேயே இல்லாத ஒருத்தனுக்கு ஏன் இதெல்லாம்?! எதுக்கு இதெல்லாம்?!

என்றவளை நெருங்கிய டாக்டருக்கோ கண்ணெல்லாம் மங்கலாகி போனது. தலையோ கிர்ரென்றது.

''என்னடா பாவம் பண்ணேன் நான் உனக்கு?! உன்னே லவ் பண்ணதே தவிர வேறென்னடா ஔகத் தப்பு பண்ணேன் நான்?! எதுக்குடா என்னே ரெண்டு பேர் கூட சேர்ந்து குடும்பம் நடத்த வெச்சீங்க?! கடவுளே! வாய் கூட கூசுது இதை சொல்ல! அவ்ளோ அருவருப்பா இருக்கு! எப்படிடா உங்களுக்கு மனசு வந்துச்சு இப்படியான ஒரு கேவலத்தே என்ன செய்ய வைக்க?!''

என்றவளோ தரையில் மண்டியிட்டு ஓலமிட்டாள் ஒண்டொடியின் மனதை போலவே உடலும் ஏமாற்றத்தில் சிக்குண்டிருக்க.

''கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் எத்தனை தடவே நீயும் அவனும் மாறி மாறி என்கூட படுத்திருப்பீங்க?! கலைஞ்சு போன கருவே கூட உன் குழந்தன்னு நீ சொல்லும் போது நான் நிஜமாவே உள்ளுக்குள்ளே அவ்ளோ சந்தோஷப்பட்டேன் ஔகத்! ஏன்னா, என்ன பொறுத்த வரைக்கும் ஔகத்தான் படாஸ்! ஆனா, இப்போதானே புரியுது! நீ ரொம்ப பெருந்தன்மையா உன் டிவின் பிரதர் (twin brother) ஸ்பெர்முக்கு (sperm) இனிஷியல் (initial) கொடுத்திருக்கன்னு!''

''ஐயோ, கீத்து! பிளீஸ்! நீயா எதையாவது கற்பனை பண்ணி உளறாதே! வா!''

என்றவன் அழைக்க,

''இன்னமும் நீ என்முட்டாளவே நினைச்சிக்கிட்டு இருக்கல்லே ஔகத்! இதுக்கு மேலையும் அண்ணன் தம்பி உங்க ரெண்டு பேரோட உடம்பு சுகத்துக்கு நான் ஊறுகா ஆகி ஏமாற மாட்டேன் ஔகத்!''

''ஆண்டவா! கீத்து என்னாலே முடியலே! இல்லன்னு வெச்சுக்கோயேன், நானே உன்னே தூக்கிட்டு போயிடுவேன்! பிளீஸ்! வா மா!''

என்றவனோ நெஞ்சை பிடித்துக் கொண்டு வேண்டி நிற்க,

''கிருத்தி! கிருத்தி! என் அகம்பாவ கள்ளியே!''

என்ற படாஸோ வைர சுவற்றின் முன் நின்று கரகோஷம் கொள்ள, குலுங்கினாள் கீத்து கண்களை மூடி அருவியாய் கன்னம் நனைத்த கண்ணீரில் முக்குளித்து ஆணவனின் குரல் சொன்ன வார்த்தைகளில்.

வதூ அவள் அசந்த நேரம் ரிவால்வரை ஔகத் கைப்பற்றி தூரம் வீச,

''கன்னே புடிங்கி போட்டுட்டா, உன் கூட வந்திடுவேன்னு நினைச்சியா?! என்னே ஏமாத்தின உங்க ரெண்டு போரையும் ஜட்டியோடு அடிச்சு இழுத்திட்டு போய் களி தின்ன வைக்கலே, நான் கிருத்திகா தீனரீசன் இல்லே!''

என்றவளோ இழந்த மிடலில் கோபத்தின் ரூபங்கொண்டு எழுந்து நின்றாள்.

தள்ளாடிய ஔகத்தோ,

''கீத்து பிளீஸ்! நான் எல்லாத்தையும் சொல்றேன்! வா, வீட்டுக்கு போகலாம்! என்னாலே முடியலே! வா!''

என்றவனோ அவளின் கையை மீண்டும் தடுமாற்றத்தோட பற்ற முனைய,

''ஒருதன்னு நினைச்சது என் தப்பா? இல்லே, நீங்க ரெண்டா என்னே ஏமாத்தனது தெரியாமே ஏமாந்தது என் தப்பா?!''

என்றவளோ அவள் மீது சாய எத்தனித்தவனின் சட்டையைப் பிடித்து உலுக்க,

''கீத்து!''

என்றவனின் செவியிலோ குருதி வழிய தொடங்கியது.

''என் உணர்வுகளையும் மனசையும் ஒரு பொருட்டாவே மதிக்காமே என்ன முட்டாளாக்கி, வேசி வேலை பார்க்க வெச்ச உங்க ரெண்டு பேருக்கும் என் அகாரதியிலே கருணையே கிடையாது!''

என்ற கிருத்தியோ தளர்ந்திருந்த ஔகத்தை வேகமாய் பின்னோக்கி தள்ள, ஆணவனோ தரையில் போய் விழுந்தான் ரத்த வாந்தியோடு தெம்பில்லாது.

''முதல்லே அவனே போட்டுட்டு அப்பறமா வந்து உன்னே போடறேன்!''

என்றவளோ இழப்பின் ரணத்தில் பத்திரக்காளியாய் உருமாறி, வைரத்தரையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஔகத்தின் வாய் தாடையை காலணியால் அசைத்து,

''நேத்து வரைக்கும் அண்ணன் தம்பி நீங்க, என்ன போட்டிங்க, இன்னைக்கு மொத்தமா உங்க ரெண்டு பேரையும் நான் போடறேன்!''

என்ற கிருத்தியோ நேற்று வரை காதல் கணவன் என்று நினைத்து கூடி களித்த தருணங்கள் அத்தனையும் கசந்து போக, ஏமாந்த வெறியோடு படாஸை நோக்கி படையெடுத்தாள்.

படாஸ்...

முந்தைய அத்தியாயங்களை படிக்க:

https://amydeepz.com/forums/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D.14/
 

Author: KD
Article Title: படாஸ்: 125
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top