What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
414
ததர்முகம்

அடல்விடையான் (சிவன்) எதிர்மறையான முடிவுகளோடு அவன் திருவிளையாடல்களை முடித்து வைப்பதில்லை.

அதுவும், அவனை மனதார நம்புவோரை ஒருக்காலும் ஏமாற்றிட மாட்டான் ஆனையுரியன் (சிவன்) அவன்.

படிப்பினைகளின் முடிவில் சர்வ நிச்சயமாய் நேர்மறையான சந்தோஷங்களையே வாரி வழங்கிடுவான்.

ஔகத் பக்கமில்லாத போதும், தைரியத்துக்கு குறைச்சல் இல்லா கீத்துவோ, சுகப்பிரசவத்தில் குழந்தையை நல்லபடியாகவே பெற்றெடுத்திருந்தாள்.

மூன்றாண்டுகள் கடகடவென ஓடி மறைய, பிறந்திருந்த பெண் குட்டிக்கும் அப்பனை போலவே சவண்ட் சிண்ட்ரம் இருப்பதைக் கண்டறிந்திருந்தனர் மருத்துவர்கள்.

பாட்டி ஸ்தானத்தை அடைந்திருந்த குஞ்சரியோ தாய்லாந்துக்கு முழுக்கு போட்டு முழுநேர நேனியாகினாள் (nanny), பேத்திக்கு.

இன்ஸ்பெக்ட்டர் கிருத்திகாவோ, அதே பதவி வகித்தாலும் ரேங்கிங்கில் ஏற்றங்கொண்டு சம்பள உயர்வு பெற்றிருந்தாள்.

படுக்கையறையிலிருந்த புருஷனின் மேக் கணினியில் கேஸ் ரிப்போர்ட் ஒன்றை மும்முராய் படித்துக் கொண்டிருந்த கீத்துவின் கண்களோ, அவ்வப்போது படுக்கையில் எகிறி குதித்த சின்ன வாண்டின் பக்கம் போய் வராமல் இல்லை.

''நீயா அட நானா

நெஞ்சை முதல் முதல் இழந்தது யார்

னன னன னன னன னா

காதல் என்னும் ஆற்றில்

இங்கு முதல் முதல் குதித்தது யார்

னன னன னன னன னா!''

என்ற சின்ன குட்டியோ, காஜி மன்னனை போலவே கைகளை ஆட்டி, பாட்டு பாடி உடலை அசைத்தாள் முன்னும் பின்னும், தனியொரு ஸ்டெப்ஸ் போட்டு.

மூன்று வயதில் பாட்டிக்கே கிளாஸ் எடுக்கும் வல்லமைகளைப் பெற்றிருந்தாள் டாக்டர் மகள், தகப்பனை போலவே அதீத திறமைகள் கொண்டு.

''பாப்பா! கீழே விழுந்தே, அம்மா அடி பிச்சு எடுத்திடுவேன் பாரு!''

என்றவளோ பெற்றவளுக்கே உரிய தொனியில் ஒரு மிரட்டு போட, வாலுத்தனம் கொண்ட மகளோ,

''அகம்பாவ கள்ளியே கொள்ளையடிக்காதே!

ஆங்கார வள்ளியே உள்ளம் பறிக்காதே!''

என்று ஔகத்தைப் போலவே பாடல்களின் வரிகளை கீத்துவிற்கு ஏற்றாற்போல மாற்றி பாடி, புருவங்கள் உயர்த்தி முறுவலிக்க, நொடியில் நங்கையின் கண் முன்னோ கணவனின் வதனம் வந்துப் போனது.

மெல்லிய புன்னகையோடு ஆட்டங்கொண்ட மகளை கண்டிப்பதை விட்டுவிட்டு, கணினியின் தொடுதிரையில் பார்வைகளைப் பதித்தாள் பாவையவள், வால்பேப்பராய் டாக்டரின் முகமே இருக்க.

''புறக்கண்ணால் பார்க்காதடி கிருத்தி! மனக்கண்ணால் பார்!''

என்ற மழலையோ கையில் சிங்க பொம்மையோடு மஞ்சத்திலிருந்து தரைக்கு எகிறி குதித்து,

''குட் நைட் மம்மி!''

என்றுச் சொல்லி தாயின் கன்னத்தில் முத்தமொன்றை பதிக்க,

''குட் நைட் பேபி!''

என்ற கீத்துவோ, மெல்லிய புன்னகை கொண்டு மீண்டும் கோப்பில் கவனம் செலுத்தினாள், பெற்றவள் அவளுமே மகளின் நுதலில் இதழ் ஒட்டிய பின்பு.

குழந்தையோ சிங்க பொம்மையை ஆட்டிக்கொண்டே படுக்கையறையின் வாசலை தாண்ட, அகல விரிந்தது விறலியின் நேத்திரங்கள் ரெண்டும் திடிரென்று.

சடீரென்று தலை தூக்கி, மகளை ஏறெடுத்த காவல்காரியோ,

''பாப்பா, குட் நைட்க்கு முன்னாடி என்னே சொன்னே?!''

என்று அதிர்ச்சியோடு வினவ,

என்றுச் சொல்லிய மகளோ செல்ல சிரிப்போடு, அங்கிருந்து ஓட்டமெடுக்க,

''யார் பாப்பா இதை உன்கிட்ட சொன்னா?!''

என்றக் கீத்துவோ, பதைப்போடு நாற்காலியிலிருந்து எழ,

''வேறே யாரு, படாஸ் தான்!''

என்றுச் சிரித்த லிட்டில் கள்ளிய, ஓடோடியே போனாள் தாயின் பார்வைகளிலிருந்து மறைந்தவளாய்.

ஈரக்குலை ஆடிப்போக, நாற்காலியை வேகமாய் பின்னோக்கி தள்ளிய கீத்துவோ, பின்னங்கால் பிடரியில் பட படுக்கையறையின் கதவை நோக்கி ஓட, அறையின் மின்சாரமோ பட்டென நின்றுப் போனது.

அலைபேசியை கையிலெடுக்க மீண்டும் மேஜைக்கு திரும்பிய யுவதியின் உடலோ அறைக்குள் புதியதொரு அனலை உணர்ந்தது.

அடிகளை துரிதப்படுத்திய கீத்துவின் பாதங்களோ சத்தமில்லாமல் பரபரக்க, அரிவையின் செவிகளோ சிலிர்த்தது, யாரோ அறையின் காதவை தாழிட.

தளிரியலின் உள்ளமோ அச்சத்துடன் கூடிய குழப்பத்தில் வேகங்கொண்டு துடித்தது. வாசமற்ற கதகதப்பில் யார் எவரென்று கணிக்க முடியாது கன்னை சீக்கிரமாய் கைப்பற்றுவதே சிறப்பென்ற முடிவுக்கு வந்தாள் பகினியவள்.

ஏசியிருந்தும் கன வினாடியில் குப்பென்று வியர்த்தது மலரவளுக்கு. நெற்றியோரத்து ஈரம் மெதுவாய் மொட்டுக் கொண்டு காதோரம் இறங்க, இருட்டுக்கு பேர் போன போலீஸ்காரியோ, கைத்துப்பாக்கி வைத்திருக்கும் அலமாரியை டக்கென அடைந்தாள்.

மேஜைக்கு முன்னதாகவே அலமாரி இருக்க, முதலில் கன்னை கையிலெடுப்பதே நல்லது என்று பட்டது மங்கையவளுக்கு.

பேதையின் பரிதவிப்பின் ஊடே அலறியது மேடமின் கைப்பேசி. தூக்கி வாரிப்போட்டது வஞ்சினியவளுக்கு அந்நேரத்தில் அலைபேசியின் அலறல்.

கன்னை கையில் இறுக்கி, மேஜையோடிய காந்தாரியோ,

''சொல்லு சுரஜேஷ்?!''

என்றாள் போனை ஸ்பீக்கரில் போட்டு, டார்ச்சை ஆன் செய்த வண்ணம்.

''ஹான், அண்ணி எல்லாம் ஓகேதானே?''

''என்ன ஓகே?!''

என்று புரியாது வினவியவளோ, சுற்றத்தை ஒரு ரவுண்டு வந்தாள், நின்ற இடத்திலேயே புள்ளையார் கணக்காய், டார்ச் கொண்டு.

''அண்ணன் நல்லாதானே இருக்கான்?! எதுவும் பிரச்சனை இல்லையே?! நான், சொன்னேன், எதுக்கும் ஒரு ரெண்டு மூனு நாளைக்கு இங்கையே ஆப்ஸர்வேஷன்லே இருந்திட்டு அப்பறமா வீட்டுக்கு போகலாம்னு. ஆனா, அவன்தான் கேட்கலே! உங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தே ஆகணும்னு சொல்லி..''

என்ற கொழுந்தனின் வார்த்தைகள் தொடர்ந்து ஒலிக்க,

''ஆர்ஹ்!''

என்ற அண்ணியின் அலறலில்,

''அண்ணி! அண்ணி என்னாச்சு அண்ணி?! அண்ணி!''

என்ற சுரஜேஷின் பதட்டமிக்க குரல் கொண்ட அழைப்போ துண்டிக்கப்பட்டது.

இருட்டில் உருவம் ஒன்று தெளிவாய் தெரியாமல் டிமிக்கி கொடுக்க, சுரஜேஷிடம் பேசியப்படியே கையால் அதை எட்டி பிடிக்க முயன்றவளின் கன்னை தட்டி விட்டு, ஏந்திழையை இழுத்து சுவற்றில் சாய்த்தது வலிமையான கரமொன்று.

மூன்றாண்டுகளுக்கு முன், வைர மாளிகையில் நடந்த போரில் கீத்து காயங்கள் ஏதுமின்று தப்பித்திருந்தாள்.

சின்னவனோ ஆறு மாதங்களுக்கு பெட் ரெஸ்ட் கொண்டான். ஆனால், மூத்தவனோ உள்காயங்கள் வெளிக்காயங்கள் என்று எதுவுமே இல்லாத போதும் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டான்.

படுத்த படுக்கையாய் கிடந்த டாக்டருக்கோ கடவுளின் கருணை அப்போதைக்கு கிடைக்காது என்ற பட்சத்திலேயே மாதங்கள் உருண்டோடின.

செத்து விட்டான் என்றுதான் கிருத்திகா நினைத்தாள். ஆனால், நடந்ததோ வேறு.

பேதையவளை இப்படி சிறுவயதிலேயே துணையற்று போகவா, கேதார்நாத் வரை இழுத்து போய் பாடம் நடத்தி கூட்டி வந்திருந்தான் ஆலமர்பிரானனவன் (சிவன்).

எப்படி கைவிட்டிடுவான் உள்ளங்கவர்கள்வனவன் (சிவன்), குடும்பமே ஈசனின் பக்தர்களாய் இருக்க, அளவாக சாமி கும்பிடும் ஒருவனை மட்டும் அல்பாயிசில் போக விட்டு.

ஏடகநாதன் (சிவன்) பஞ்ச லிங்கமாய் அவதரித்திருந்த ஷிவா குஃபாவில் உலா வந்த பாம்பு கக்கிய நாகமணியோ, காரணமின்றி பனி லிங்கத்துக்குள் அடக்கமாகி போகவில்லை. எல்லாம், கைலையாளியின் (சிவன்) திருவிளையாடலே.

அன்றைக்கு கேடியின் வீட்டுக்குள் சத்தம் கேட்க, கைத்துப்பாக்கியைக் கைப்பையிலிருந்து வெளியில் எடுத்த கீத்துவோ, கன்னை மெல்லிய ருத்ராட்ச மாலையொன்று சுற்றிக்கிடக்க கண்டாள்.

அதைப் பிரித்தெடுக்க விரும்பிய மானினியோ, டமார் டிமார் என்ற சத்தங்களில் ஆர்வங்கொண்டு மாலையைப் பிரிக்காதே தூக்கிக் கொண்டு ஓடினாள் ரிவால்வரை, சத்தங்கேட்ட திசை நோக்கி.

அந்திகையவள் பின்முதுகில் கைத்துப்பாக்கி அதை சொருகியும், மாலையோ, கழண்டிக் கொள்ளாமலே இருந்தது ரிவால்வரிலிருந்து.

அம்மணியவள் கோபங்கொண்டு இரு ஆண்களையும் மிரட்டிடும் நேரத்தில் கூட ருத்ராட்ச மாலையது, அக்கன்னைத்தான் சுற்றியிருந்தது.

மிருகமான படாஸின் வால் பட்டு கீத்து ஒருப்பக்கம் போக, ஆயிழையின் கையிலிருந்த கைத்துப்பாக்கியோ மறுப்புறம் பறந்து போனது.

காற்றில் தவழ்ந்த எழுகதிமேனியனின் (சிவன்) ஆசி பெற்ற ருத்ராட்ச மாலையோ, மாயோளின் கழுத்தில் வந்துச் சேர்ந்தது.

பயணத்தின் போது நாகமணியை தொலைத்தவளோ, அதை மீண்டும் தேடிடவே இல்லை.

அதுப்போல், காருக்குள் ஔகத்தின் ரத்த கோலமான காட்சியின் போது, பெதும்பையின் கை நழுவிய பனிலிங்கத்தையும் அதற்கு பின்னரான நாட்களில் மறந்தே போயிருந்தாள் கீத்து.

கந்தரங்கொண்ட ருத்ராட்ச மாலையோடு கீத்து, மரித்து போன டாக்டரின் நெஞ்சில் துஞ்ச, உள்ளம் முழுக்க நல்லெண்ணமும் அன்பும் மட்டுமே குடிக்கொண்டவனின் குருதியில் உழன்ற ருத்ராட்ச மாலையோ, போனவனின் உயிரை திரும்பக் கொண்டு வந்தது.

கீத்து அன்றைக்கு ஷிவா குஃபாவிலிருந்து கொண்டு வந்திருந்த கங்கா நீரை பூஜை அறையில் சொம்போன்றில் ஊற்றி வைத்திருக்க, அதுவோ சொட்டு சொட்டாய் அடியிலிருந்து வெளியாகி பக்கமிருந்த பனி லிங்கம் ஈர்த்துக்கொள்ள அதோடு கலந்து போனது.

பின்னாளில், அதைத் தூக்கி கரணின் மகள் வெண்ணிலா, கீத்துவின் ஹேண்ட் பேக்கில் போட, அதுவே இன்றைக்கு ருத்ராட்ச மாலையாய் உருக்கொண்டு நின்றது.

கீத்து அன்றைக்கு கொண்டு வந்தது வெறும் கங்கா நீர் மட்டுமல்ல, 'எமனை வென்றான்' என்ற இலையின் சாறு கொண்ட கனரசமாகும்.

எந்த குகைக்குள், ஹனுமானின் கதாவிற்கு கீழ் அவ்வளவு நேரம் நங்கையவள் நின்றுக் கிடந்தாளோ, அக்குளத்துக்கு அடியில்தான் 'எமனை வென்றான்' மூலிகை வேர்கள் ஏராளமாய் கிடந்தன.

இதுவரைக்கும் அக்குளத்துக்குள் யாரும் இறங்கியதும் இல்லை, அவ்வேர்களை கண்ணால் கண்டதும் இல்லை, சித்தர்களை தவிர்த்து. ஆனால், படாஸோ விதிவிலக்கு.

கீத்துவும் அறியவில்லை. ஏன், ஔகத் கூட தெரிந்திருக்கவில்லை, அதுவே அவன் இத்தனை நாள் தேடியலைந்த மருந்தென்று.

ஆகவே, இடையாற்றீசனின் (சிவன்) திருவிளையாடலின் படி, கீத்துவின் கை சேர்ந்தது தேவாமிர்தம் அது.

அதுவே, ஔகத்தின் உயிரை காப்பாற்றி அவன் உடல் கொண்ட பிணி அத்தனையையும் காணாது ஆக்கியது.

இருந்தப்போதும், உயிர் பிழைத்தவன் பழைய ஔகத்தாய் திரும்பிடவே இல்லை, வைரக் கோட்டையின் சம்பவங்களுக்கு பிறகு.

தாயாகியவள் பாப்பாவை தூக்கி போய் கோமாவில் கிடந்தவனிடம் காண்பிக்க, மகளை தொட்டுரண முடியாதவனின் விழிகளோ ஆனந்த கண்ணீர் கொண்டன அசைவுகள் ஏதுமின்றி.

முற்றிலுமாய் குணமடைந்த சுரஜேஷ், இத்தனை நாள் வரை டாக்டரை கண்ணில் வைத்து காத்த ஹோலிக்கு லீவு விட்டு பொறுப்பை கையிலெடுத்தான்.

கேடியின் ஆழ்கடல் ராஜாங்கத்தில் மூத்தவனுக்கான வசதிகளை உருவாக்கி, எவ்வித தொந்தரவும் இன்றி அவனை தனியொருத்தனாகவே பார்த்துக் கொண்டான்.

அவனின் செயலானது, சுஜி இரட்டையர்களை சுமந்திருக்கையில் எப்படி நிர்மலன் இம்மியும் அவளை விட்டு நகராது, உட்கார்ந்த இடத்திலிருந்தே எல்லா வேலைகளையும் பார்த்திடுவானோ, அதை ஒத்தியிருந்தது.

தினமும் டியூட்டி முடிந்து நடைப்பிணமாய் இருக்கும் புருஷனை ஒரு எட்டு வந்து பார்த்த பிறகே, மனை திரும்பிடுவாள் பொஞ்சாதியவள்.

ஒரு மணி நேர விசிட்டிங்கில், ரெண்டரை ஆண்டுகள் கடந்த பின்னான நாட்களில் ஔகத்தை இமைக்காது பார்ப்பதை மட்டுமே கடமையாக வைத்திருந்தாள் வதனியவள்.

பல வேளைகளில் கண்ணீர் ததும்பி நிற்க, மரக்கட்டையைப் போல் படுத்து கிடப்பவனின் உதடுகளை ஈரமாக்கி அங்கிருந்து நகர்ந்திடுவாள்.

குழந்தை பேருக்கு முன்னாடி, தினம் ஒப்பாரி கொண்டு, மூச்சு மட்டுமே கொண்டிருப்பவனை அடித்து அடித்தே ஓய்ந்து போனாள் பேதையவள்.

மேடான வயிறோடு பலமுறை அவன் நெஞ்சில் துஞ்சி தூங்கியும் போயிருந்தாள் கீத்து. இச்சைகள் இம்சையாகி போக, அவனை முத்தமிட்டு காமம் தீர்த்துக் கொண்டாள் பாவப்பட்ட ஜீவனவள்.

இன்றைக்கும் டாக்டரை மறவாது போய் பார்த்திருந்தாள் கீத்து. ஆனால், மாலை அல்ல, மாறாக காலை.

ராத்திரி ஒரு கல்யாணத்துக்கு போக வேண்டிய சூழ்நிலை என்பதால் கணவனை பகலில் பார்த்து வந்திருந்தாள் பாரியாள் அவள்.

ஆகவே, சுரஜேஷ் சொல்வதை வைத்து பார்த்தால், ஔகத் மனைவியின் விசிட்டிங்கிற்கு பின்னாடித்தான் கண் விழித்திருக்க வேண்டும் என்று யூகித்துக் கொண்டாள் கோமகளவள்.

ஆனால், இப்போதோ நாசி இதுவரைக்கும் நுகராத நறுமணத்தை வாசம் பிடிக்க, நெஞ்சமோ வெலவெலத்து போனது மிரண்டு.

வெறுங்காற்றை கனலாய் உணர்ந்தவள், அதில் இப்போது எலுமிச்சை மற்றும் வெண்ணிலாவின் வாசம் வீசிட, மூளைக்குள் கலவரமொன்றுக் கொண்டாள் மானினியவள்.

வல்வியவளின் இருக்கரங்களையும் அவளின் முதுகுக்கு பின்னால் சிறைப் பிடித்திருந்த பலமான கரமோ, சனிகையின் பூவுடலை சுவற்றோடு சேர்த்து அழுத்தமாய் நசுக்கியது.

மாயோளின் மேனியை இறுக்கியிருந்த கட்டுடலின் வதனமோ, தெரியிழையின் கந்தரத்தில் புதைய, மூன்றாண்டுகளாய் ஏங்கிய தவம் இன்றுக் கலையக் கண்டாள் கிருத்திகா.

சற்று முன் கொண்ட பயம், நடுக்கம், குழப்பமெல்லாம் நொடியில் காணாது போனது ஒளியிழையின் சிந்தையிலிருந்து.

அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகள் அத்தனையும் அரும்பி நின்றன, எல்லை மீறி தொடுகின்றவனின் முரட்டுத்தனத்தை எதிர்பார்த்து.

திமிறியவளின் உடலும், தப்பித்திட முனைந்த விரல்களும் தளர்ந்து அடங்கி போயின, உடும்பு பிடியாய் கட்டியிருந்தவனின் இதழ்கள், இளம்பிடியாளின் பின்னங்கழுத்தில் நாக்கோலம் கொள்ள.

நயனங்கள் சொருகியவளின் நெஞ்சமோ தாபத்தின் விதி மீறல்களை உடைத்தெறிய எத்தனிக்க,

''என் அகம்பாவ கள்ளியே,

கணவனானவன் வேண்டுமா?!

கனவானவன் வேண்டுமா?!

சொல்லடி என் கிருத்தி?!''

என்ற குரலுக்கு சொந்தக்காரனோ பிடியைத் தளர்த்த, பொற்றொடியின் பொற்கரங்களோ தன்னிச்சையாய் அவன் விரல்களோடு கோர்த்துக் கொண்டன.

''உனக்கானவன் வேண்டுமா?!

உனதானவன் வேண்டுமா?!

என் ஆங்கார வள்ளியே, சொல்லடி?!''

என்றவனின் நாசி தீண்டிய ஆயிழையின் அங்கங்கள் அத்தனையும் இளமை காய்ச்சல் கொள்ள, சத்தமில்லாது சுவர் இறங்கி, தெரிவையவள் மார்புக்குழியை நனைத்தது நாயகியின் கண்ணீர்.

''கீத்துவின் ஜீனியஸா?!

கிருத்தியின் படாசா?!''

என்றவன் திருப்பிய வேகத்தில், மூச்சு வாங்கிய மங்கையின் நெஞ்சமோ முன்னிருப்பவனின் திடமான மார்பில் முட்டி நின்றது.

சரிந்து விழுந்தது முந்தானை முற்றிழையின் முன்னழகிலிருந்து. இருள் தின்ன கயவனோ, உரிமையோடு கோதையின் இடையை வளைத்துக் கட்டிக் கொண்டான்.

உதடு கடித்த மலரோ, மூன்றாண்டுகளின் பத்திய சுவர் உடையக் கண்டாள். கள்வனின் அதரங்களோ அளகவளின் உதடுகளை கடித்திழுத்து சுவைக்க ஆரம்பித்தது.

அட்டைப்போல் அவன் உறுஞ்ச, கன்றி வீங்கும் இதழ்கள் கொண்ட இனம் புரிய சுகம் இன்னும் வேண்டும், வேண்டுமென்று அலைந்தது மொய்குழலின் தலைவிரித்தாடிய ஆசை.

சொந்தகொண்டாடியவனின் விரல்களோ விறலியின் ரவிக்கை கயிறை கழட்டி விட, பின்முதுகில் உரசிய அக்கயிறுகளின் உரசல்களில் சிலிர்த்தவளோ கால்களை குறுக்கிக் கொண்டாள் பசியை அடக்கிட முடியாது.

தெரியிழை அவளின் பின்னந்தலை குழலுக்குள் விரல்கள் நுழைத்தவனோ, மென்மையான வருடல் கொள்ள, இன்பம் அனுபவித்தவளோ உதடுகளை பிரித்தாள் மூச்சோ நாசியை மறந்து வாய் வழி வெளிவர.

வந்திருந்தவனோ பெண்ணின் பின்னழகை உடும்பாய் பிடிக்க, வலியில் சுகங்கொண்ட பெதும்பையோ கரைந்தொழுக ஆரம்பித்தாள் உள்ளுக்குள்.

அகம்பாவ கள்ளியின் வாயோரத்து தாடையை பல் படாது கடித்தவனோ, மெல்லிய முனகல் கொள்ள வைத்தான் பைந்தொடியவளை.

திட்டிகள் மூடிக்கிடந்த புனைகுழலோ, நெருங்கியிருந்தவனின் சுவாசம் தனம் தீண்ட, தொட்டாச்சிணுங்கியாய் உதறல் கொண்டாள்.

கன்னக்குழி கொண்டவனின் கரமோ, வாசுரையின் இடையை பெருவிரல் கொண்டு அழுத்தி, பின், ஒவ்வொரு விரல்களால் அவளிடையில் பதிய, வீணையாய் மீட்டல் கொண்டவனின் ஸ்பரிசத்தில் சுந்தரியின் சிரமோ நிலைகொள்ளாது அசைந்தது.

ஔகத் என்று சொல்ல வந்தவளின் வாயோ அப்படியே பிளந்து நின்றது, ஆணவன் அதரங்கள் விட்டம் நோக்கியிருந்த மதங்கியின் தொண்டைக்குழிக்குள் சப்புப்கொட்டும் தேடல்கள் கொள்ள, படாஸை போல்.

எங்கும் படாஸ், எதிலும் படாஸ்.

உண்மையில் யாரிந்த படாஸ்.

இக்கேள்விக்கான விடையைக் காண பத்தாண்டுகளுக்கும் முன்னாள் பின்னோக்கி போக வேண்டும்.

ஔகத் கண்டதும் காதல் கொண்டான் கிருத்திகாவின் மீது. அதை பறைசாற்றும் விதமாக அவன் அன்பை இடம், பொருள், ஏவல் பார்க்காது வெளிக்காட்டினான்.

ஆனால், அப்போதைய கீத்துவோ, எங்கே அவளின் சுயம் ஔகத்தை கரம் பிடித்தால் காணாமல் போயிடுமோ என்ற பயத்தில் அவனை வேண்டாமென்றால்.

கீத்துவின் நிராகரிப்பை பொதுவில் ஏற்றுக்கொண்ட ஔகத்தால், மனதால் அவளை மறக்க முடியவில்லை.

தரைக்குறைவாய் பேசி அவனை பலர் முன்னிலையில் அசிங்கப்படுத்திய பின்னும், கீத்துவை வெறுத்து ஒதுக்கிட முடியாது தவித்தான் கேடி மகன்.

அனுதினமும் கீத்து அவனை ரிஜெக் செய்ததற்கான காரணத்தை தேடி அலைந்தான். படிப்பு, பணமென்று எல்லாம் இருந்தும் வேண்டுகின்ற அன்பு மட்டும் கிடைக்காது போவதேன் என்ற விரக்தியில் பித்து பிடித்தவன் போலானான் ஔகத்.

தம்பிக்கான புது மருந்து கண்டுப்பிடிப்பு , கூடவே படிப்பென்று எதிலுமே அவன் நாட்டம் போகவில்லை.

சின்னவன் வேறு கீத்துவின் படத்தை வரைந்து இவள்தான் அண்ணியாக வேண்டுமென்று கேட்டிட, வாக்கு கொடுத்தது போல எப்படி அவளை காதலிக்க வைப்பதென்று தெரியாமல் விழி பிதுங்கினான் ஔகத்.

உதாசீனப்படுத்திய மதங்கியிடம் ஒருமுறை கூட சண்டைப் போட்டிடவில்லை ஔகத். ஆனால், கீத்துவோ அதை அவளுக்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டாள்.

நொந்துக் கிடந்தவனுக்கு வாட்ஸ் ஆப் வைஸ் நோட்டுகளை அனுப்பி வைத்தாள் வதனியவள், ஏகத்துக்கு ஔகத்தை தரந்தாழ்த்தி.

ஏற்கனவே, அவளை மறக்க முடியாது திண்டாடிக்கொண்டிருந்தவனுக்கோ கீத்துவின் வைஸ் நோட்ஸ் மேலும் வேதனையைத் தந்தது.

ஆய்வகத்தை தும்சமாக்கினான் ஔகத் கடுங்கோபங் கொண்டு.

ஒருப்பக்கம் அவனை கேவலப்படுத்திய கீத்துவை எப்படியாவது திருமணம் முடித்திட வேண்டுமென்ற வேட்கை.

மறுபுறமோ, அதுவெல்லாம் கனவில் கூட நடக்காதென்ற தாழ்வு மனப்பான்மை என்று அவன் எண்ணங்களே ஔகத்தை பைத்தியமாக்கின.

டாக்டருக்கு நோ சொன்னதோடு சரி, கீத்து அவளின் வாழ்க்கையில் பிசியாகி போனாள்.

ஆனால், ஔகத்தோ கைக்கூடா காதலிலேயே தேங்கி நின்றான். நாள் தவறாது கண்ணீர் கொண்டான் பரமேஸ்வரனிடம் அவனுக்கு மட்டும் ஏன் இப்படியான சாபமன்று.

இப்படியான ஒரு நாளில், லேப்பில் இருந்தப்படி கீத்து அவனோடு கதைத்த பழைய வைஸ் நோட்ஸ்களை கேட்டிட ஆசைக்கொண்டான் ஔகத்.

தலையை டேபிளின் மீது சாய்த்து முகத்தை மூடிக்கொண்டவன், அவர்களின் பழைய காதலான ஊடல் கொண்ட ஆடியோக்களை ஓட விட்டு அவைகளில் லயித்திட ஆரம்பித்தான்.

அந்நேரம் பார்த்து, எதர்ச்சையாய் நங்கையவள் ஆணவனை கொச்சைப்படுத்திய ஆடியோ கிளிப் ஒன்று ஒலிபரப்பாகிட, யாரோ அவனை கைத்தட்டி சிரித்து வேடிக்கை கொள்வதை போலுணர்ந்தான் ஔகத்.

பட்டென தலையை தூக்கி திரும்பி பார்த்தவன் கண்களிலோ அங்கு எவரும் தென்படவில்லை. ஆய்வகம் முழுக்க அலசியவன் தனியொருவனாய் மட்டுமே அங்கிருப்பதை உறுதிப்படுத்தினான்.

ஆனால், ஔகத்தை நக்கலடித்து சிரிக்கும் சத்தம் மட்டும் குறையவேயில்லை. வெறிகொண்டவனாய் அலறிய ஔகத்தோ, செவியை இருக்கரங்களால் இறுக்கமாய் மூடிக்கொண்டான்.

அப்போதும் கேட்டது அக்குரலின் கொக்களிப்பு. கடுப்பில் லேப்பிலிருந்த பொருட்களையெல்லாம் அடித்து உடைத்தவன், அடங்கா ஆவேசத்தோடு கத்தி அங்கிருந்து வெளியேறினான்.

ஒரு வாரம் கிலி பிடித்தவன் கணக்காய் தனக்குத்தானே தண்டனைகள் கொடுத்துக் கொண்டான் ஔகத். கண்ணாடி முன் நின்று அவனுகென்னே குறைச்சல் என்று கண்டறிய முற்பட்டான்.

எந்த விதத்தில் கீத்துவிற்கு அவன் தகுதியற்றவனாக போனான் என்று பதில் தேடிட ஆரம்பித்தான்.

அவர்களின் பழைய செட்ஸ் எல்லாவற்றையும் பிரிண்ட் போட்டு படித்து காரணங்கள் கண்டறிய முற்பட்டான்.

கடவுள் அவனை வேண்டா வெறுப்பாக படைத்து விட்டான் என்று அவனாகவே நினைத்துக் கொண்டு தெய்வகாரியங்களுக்கு கும்பிடு போட்டான்.

ஓரவஞ்சனை கொண்ட வாழ்வில் அவனுக்கு மட்டும் ஏன் அன்பென்ற ஒன்று கிடைக்க இவ்வளவு அரிதாக இருக்கிறதென்று மஹிஹியிடம் முறையிட்டு ஆதங்கம் கொண்டான்.

ஒரு மாதம் வெறுமனே ஓடிப்போக, கீத்துவோ மாநில அளவில் ஹாக்கி விளையாட்டில் ஜெயித்த படத்தை அவளின் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் பதிவிட்டுருந்தாள், ஔகத்தை அன்ப்லோக் செய்து.

படத்தை பார்த்தவனுக்கோ சொல்ல முடியா கோபம் பொத்துக் கொண்டு வந்தது. ஆணவனோ இங்கு அவளின்றி ஒவ்வொரு நொடியையும் நரகமாய் கழிக்க, அவளோ ஜாலியாய் வாழ்க்கையை நகர்த்துவது எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றும் கதையாகி போனது.

எந்த வாயால் கீத்து, டாக்டரை வேண்டாமென்றாளோ, அதே வாயால் அவன்தான் வேண்டுமென்று கெஞ்சி கதறிட வேண்டுமென்று முடிவெடுத்தான் ஔகத்.

ஆனால், அதை சாத்தியப்படுத்துவதற்கு என்ன செய்வதென்ற குழப்பம் தான் பின்னாளில் அவனை பல நாட்கள் துயில் கொள்ள விடாது செய்தது.

ரொம்ப நாட்கள் கழித்து ஆய்வகம் சென்றவன், அங்கு கடைசியாய் அரங்கேறிய சம்பவத்தை அசைப்போட்டு சிரித்தான்.

சுரஜேஷ் வீட்டு பணியாளர்களை அனுப்பி லேப்பை சுத்தப்படுத்தியே வைத்திருந்தான். இம்முறையாவது எதையும் உடைத்திடக் கூடாதென்று உறுதி எடுத்துக் கொண்டான் ஔகத்.

குளிர் பெட்டிகளின் ஓரத்தினில் நடக்கையில் டக்கென தோன்றியது ஒரு விவகாரமான யோசனை ஔகத்திற்கு.

இதை விட சிறப்பானதொரு சரித்திரத்தை யாராலும் படைத்திட முடியாதென்று நம்பினான் ஔகத்.

அதே வேளையில், கீத்துவிற்கு இதற்கு மேலானதொரு தரமான தண்டனையை அவனால் கொடுத்திடவும் முடியாதென்று வஞ்சங் கொண்டான் ஔகத்.

அவளுக்காகவே இத்திட்டத்தை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு வேகத்தில் செய்து முடித்தாக வேண்டுமென்று உறுதிக் கொண்டான்.

எந்தளவுக்கு கீத்து அவனை காயப்படுத்தினாளோ, அதைவிட பன்மடங்கான வலியை அவளுக்கு கொடுத்திட துடித்தான் ஔகத்.

இதே வன்மத்தோடு ஆராய்ச்சியில் மூழ்கினால், கண்டிப்பாய் கீத்துவை அவனால் மறக்க முடியும் என்று நம்பினான் ஆணவன்.

ஆகவே, காலந்தாழ்த்தாது மூளைக்குள் உதித்த எண்ணத்தை சின்னவனிடம் சொன்னான் மூத்தவன் அவன்.

திட்டத்தை பற்றி மட்டுமே சின்னவனிடம் சொன்னவன், அதற்கு பின்னாலிருக்கும் பேரழகனின் வன்மத்தை பற்றி மூச்சுக்கூட விட்டிடவில்லை தம்பியிடத்தில்.

எங்கே சுரஜேஷ் ஏதாவது சொல்லி வஞ்சத்தை கலைத்திடுவானோ என்ற அச்சத்திலேயே நிஜத்தை மறைத்தான் அண்ணனவன், தம்பியிடமிருந்து.

பெரும்திறமைகளின் கடவுள் என்ற அர்த்தமுள்ள பெயரான தியூடிதரா என்ற வார்த்தையை தொடக்கமாய் கொண்டிருக்கும், தியூடிதரா ஔகத் சர்வேஷ் குமார் ஆரம்பித்தான் அவனின் புது முயற்சியை, புள்ளையார் சுழி கொள்ளாதே.

யாக்கையிலிருந்து நிழலை தனியே பிரித்தெடுத்து, அதற்கோர் உயிர் கொடுப்பதுதான், தியூடிதரா ஔகத் சர்வேஷ் குமாரின் புதிய ஆராய்ச்சியாகும்.

அன்றைக்கு ஆய்வகத்துக்குள் ஔகத்தை கைத்தட்டி சிரித்து மண்டைக்கு ஏற்றியது அவனின் பிரதிபிம்பமான நிழலே.

''என் நிழல், நீ கூட என்ன பார்த்து சிரிக்கறல்லே?!''

என்ற சினம் தாளாதே லேப்பை அலங்கோலப்படுத்தி அங்கிருந்து வெளியேறினான் ஔகத் அன்றைக்கு.

அதையே இன்றைக்கு நிதர்சனமாக்க முடிவெடுத்து விட்டான் ஜீனியஸ் அவன்.

தொடக்கம் என்று பொருள்கொண்ட அவனின் அறிவியல் ஆராய்ச்சிக்கு, 'ததர்முகம்' என்று பெயர் சூட்டினான் ஔகத்.

அப்புதிய தொழில்நுட்ப பரிசோதனைக்கு அவனையே பணையமாக்கினான் டாக்டர்.

உடலளவிலும் மனதளவிலும் ஔகத் அவனை முதலில் தயார்ப்படுத்திக் கொண்டான். ஏறக்குறைய, ஆறு மாதங்களுக்கு மிகவும் கட்டுக்கோப்பான வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்தான் டாக்டர்.

குறிப்பாக, ஆரோக்கியமான உணவு முறைகள் மட்டுமின்றி உள்ளம் மற்றும் சிந்தையைக் கூட பாஸிட்டிவ் மைண்ட் செட்டிலேயே நிலைப்படுத்திக் கொண்டான்.

அதே வேளையில், உடம்பிலிருந்து நிழலை வெளியே கொண்டு வருவதற்காகவே பிரத்தியேகமான கருவி ஒன்றை ரோபோவின் உருவில் உருவாக்கினான் ஔகத்.

அதை குவாண்டம் இயங்கியல் (quantum physics) மற்றும் நானோ தொழில்நுட்பம் (nano technology) மூலம் வெற்றிக்கான வைத்தான் டாக்டர்.

அதற்கு 'விம்பா' என்று பெயர் வைத்தான் ஔகத். விம்பத்தின் பொருள் நிழல் என்பதாகும். ஆகவே, கருவிக்கும் ஆராய்ச்சிக்கு தோதான பெயரையே சூட்டினான் டாக்டர்.

நிழலுக்கான சரீரத்தை சுயமாகவே உருவாக்கிட முனைந்தான் ஔகத்.

ஆகவே, மனிதனுக்கு சமமான அளவில் உறுப்புகள் கொண்ட அத்தனை மிருகங்களையும் பட்டியலிட்டு சின்னவனிடம் நீட்டினான் மூத்தவன்.

சுரஜேஷோ, அண்ணன் வேண்டிய விலங்குகளின் பாகங்களை ஒரே வாரத்தில் கொண்டு வந்து கொடுத்தான்.

டால்பினின் மூளை, பன்றியின் இதயம், சிம்பன்சியின் டி.என்.ஏ. மற்றும் தோல்கள் என்று மிக முக்கியமான விஷயங்களை கொண்டு நிழலுக்கான உடம்பொன்றை உருவாக்கினான் ஔகத்.

பின், எலும்புகள் மற்றும் வெவ்வேறான உடல் பகுதிகளை அறிவியலுடன் கூடிய மருத்துவத்தின் மூலம் தோற்றுவித்தான் டாக்டரவன்.

உயிரில்லா ஜடமான சரீரத்திற்கு டாக்டர் அவனின் ஸ்டெம் செல்களின் மூலம் புதிய மரிமாற்றத்தினை கொடுத்தான்.

அரைகுறையான அனைத்தும் டாக்டரின் செல் மூலம் அபரீதமான வளர்ச்சிக் கொண்டன.

கர்ப்பப்பைக்கு பதில் ஆய்வகத்தின் தனித்துவமிக்க குளிர் பெட்டியில் ஒரு வருடம் கொஞ்சங் கொஞ்சமாய் உருவாக்கப்பட்டது, நிழலுக்கான ஆக்கம்.

சுமார் ரெண்டு வருடங்கள் கடக்க, ஔகத்தின் தேகத்திலிருந்து அவனின் நிழலை பிரித்திட வேண்டிய நாளும் வந்தது.

என்ன நடந்தாலும் சுரஜேஷ் மனம் தளராது இருந்திட வேண்டுமென்ற மூத்தவனோ தம்பிக்கு பல புத்திமதிகளை சொன்னான்.

மூத்தவன் அவன் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சின்னவன் எப்படி இருக்க வேண்டும், எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்று எல்லாவற்றையும் சொல்லி கொடுத்தான் ஔகத்.

அதற்கு முன்னதாகவே, தாயின் மடியில் படுத்துறங்கி கழித்திருந்தான் முதல் நாள் இரவை.

கெய்டனின் கையால், அவன் ஊட்டிட போதுமென்று சொல்ல மனமில்லாது கேட்டு வாங்கி உண்டிருந்தான்.

ஆகக்கடைசியாய், என்னதான் பழிதீர்க்கும் எண்ணங்கொண்டிருந்தாலும் இந்த ஆராய்ச்சியே அவனின் அகம்பாவ கள்ளிக்காகத்தான் என்பதால், ஆசை காதலி கிருத்திகாவிற்கு கைப்பட ஒரு கடிதத்தையும் எழுதி பத்திரப்படுத்தினான் ஔகத்.

விம்பத்தைக் கொண்டு நிகழ்த்தப்பட்ட ஒரு மணி நேர செயல்முறையில், தியூடிதரா ஔகத் சர்வேஷ் குமாரின் மேனியிலிருந்து அவனின் நிழல் தனியாக பிரித்தெடுக்கப்பட்டது.

உருவமில்லா அருவம் அதை அப்படியே கொண்டு போய் ஜடமான யாக்கைக்குள் செலுத்தியது 'விம்பா' என்ற அதி நவீன ரோபோ.

நாற்பத்தி ஐந்து நிமிடங்களுக்கு மேற்பட்டும் எவ்வித அசைவும் இல்லை வெறுமனே கிடந்த உடம்பில். ஔகத்தோ ஒரு மணி நேரம் கழிய கண்கள் விழித்தான்.

சுரஜேஷோ ஓடிப்போய் அண்ணனை அணைத்துக் கொண்டான். நிம்மதி பெருமூச்சு கொண்டான் சின்னவன் அவன், மூத்தவன் நல்லப்படியாய் திரும்பி வந்திருக்க.

தம்பியின் தலைகோதிய ஔகத்தோ ஆர்வமாய் தேடல் கொள்ள, சுரஜேஷோ தலை குனிந்து தோல்வியைத் தெரியப்படுத்தினான்.

அதிர்ச்சிக் கொண்ட டாக்டரோ, நம்ப மறுத்தான் சின்னவனின் பேச்சை. எழுந்தோடினான் கட்டையைப் போல் படுத்துக் கிடந்தவனின் அருகில்.

கணினியில் எல்லாம் சரி வர இருக்க, எங்கே எதை விட்டான் என்று சிந்தித்திட ஆரம்பித்தவன் செவியிலோ திடீரென கேட்டது மூச்சு விடும் சத்தம்.

சுரஜேஷோ விழிகள் அகல விரிய, மூத்தவனின் தோளை பற்றினான்.

டாக்டரோ திரும்பி குளிர் பெட்டியிலான படுக்கையைப் பார்க்க, ஔகத்தின் முகமோ கோடான கோடி பெளர்ணமிகளின் பிரகாசம் கொண்டது.

நடைப்பிணம் போல் படுத்து கிடந்தவனின் நெஞ்சோ ஏறி இறங்கியது.

''பேர்?''

என்றவனோ தம்பியிடம் சாய்ஸ் கேட்க,

''பிரபஞ்ச பட்சிகளின் கடவுள்! சர்வேஷ்! தியூடிதரா ஔகத் சர்வேஷ் குமாரின், சர்வேஷ்!''

என்ற சுரஜேஷோ, அண்ணனின் வெற்றியில் பங்கெடுத்தவனாய் ஆனந்தம் கொண்டான்.

ஒரு வாரம் வெறும் ஆப்சர்வேஷன் மட்டுமே நடக்க, சர்வேஷ் என்று பெயர் கொண்ட உடம்பிலான நிழலோ, அடுத்த கட்ட சோதனைக்கு தயாராகியது.

ஔகத் அவன் மூளையின் எண்ண ஓட்டங்களை சிப்பொன்றில் தனியாய் எடுத்து சேகரித்துக் கொண்டான்.

அதை, மூளைக்குள் எவ்வித ஞாபகங்களும் இல்லாதிருந்த சர்வேஷின் எண்ணங்களுக்குள் செலுத்தினான்.

மூன்று மணி நேரங்கள் கடக்க, குளிர் பெட்டியில் நிர்வாணமாய் கிடந்த பேரழகனோ கண் விழித்தான் மயூர கண்ணழகனாய்.

மென்முறுவலோடு அவன் உதிர்த்த முதல் வார்த்தை,

''கிருத்தி!''

என்பதுதான்.

அந்த வயதில் ஔகத்தின் மண்டை மூளையெல்லாம் கிருத்தி ஒருத்தியே. அதுவே சர்வேஷின் நினைவுகளிலும் முதன்மையான இடத்தை பிடித்தது.

கூடவே, சுஜி தொடங்கி கேடி, கெய்டன் வரையிலான பல சுவாரசியமான கதைகள் தன்னிச்சையாகவே சர்வேஷின் சிரசுக்குள் பத்திரமாய் அடைக்கப்பட்டன, ஔகத்தின் எண்ண அலைகளின் பரிமாற்றத்தின் போது.

மேலும் இரண்டு வாரங்கள் ஓடிப்போக, இறுதியாய் செயல்பாட்டிற்கு தயாராகினான், தியூடிதரா ஔகத் சர்வேஷ் குமாரின் நிழலான சர்வேஷ் தனியொருத்தனாய், அவனுக்கென்று ஓருடல் கொண்டு.

டாக்டரின் புத்திக்கூர்மையைப் போலவே சர்வேஷுக்கும் எல்லாமே அதீதமாய் இருந்தது.

ஆனால், ஔகத் ரொம்பவே தெளிவாய் இருந்தான், இன்றைய படாஸான அன்றைய சர்வேஷ், அவனின் நகல் இல்லையென்று.

காரணம், குளோனை (clone) உருவாக்க டாக்டரை அப்படியே செல்களின் மூலம் அசல் தரம் மாறாது அச்சடித்திட வேண்டும்.

ஆனால், இங்கோ சர்வேஷ் அப்படி ஒன்றும் உருவாக்கப்படவில்லை. அவனுக்கான பேரெண்ட் ஜீன் (parent gene) டாக்டரிடமிருந்து எடுக்கப்படவில்லை.

மனித ரோபோக்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவன்தான் இன்றைய படாஸ். சுவிட்ச் போட்டு ஆன், ஆஃப் செய்ய வேண்டிய அவசியமில்லை. கரண்ட் மூலம் அவனுக்கு உயிரை ரீசார்ஜ் செய்ய வேண்டியதும் இல்லை.

விந்தணுவின்றி, கருவறையின்றி, மிருகங்களின் டி.என்.ஏ. கலவைகளை கொண்டு, அவைகளின் உள்ளுறுப்புகளை தாங்கி, டாக்டரின் எண்ண அலைகளில் புதியதாய் பிறப்பெடுத்தவனோ படாஸ்.

அசல் மனிதனின் நிழலை கொண்டு தனியொரு மனிதனாய் உருவாக்கப்பட்டவன்தான் படாஸ்.

படாஸ் படைக்கப்பட்டதும் சரி, உருவாக்கப்பட்டதும் சரி, கிருத்தி என்ற ஒருத்திக்காக மட்டுமே.

ஒரு வருட கால அவகாசத்துக்குள் படாஸ், ஜெர்மனியின் ஆழ்கடல் மாளிகையில் தனியொருவனாய் அவனை பற்பல விஷயங்களில் மெருகேற்றிக் கொண்டான்.

என்னதான் ஔகத் அவன் நிழலையே தனியாய் பிரித்து, அவனை தனி மனிதனாய் பார்த்தாலும், காரியக்காரனவன் சில விஷயங்களில் ரொம்பவே கண்ணுங் கருத்துமாய் இருந்தான்.

படாஸ் என்ன செய்தாலும் ஔகத்திற்கு தெரியும். ஆனால், டாக்டரின் மூச்சு காற்று படரும் திசைக்கூட படாஸ் அறிந்திட முடியாது.

அதனால்தான், கீத்துவோடு ஔகத்திற்கு நடந்த கல்யாணத்தை பற்றிக்கூட படாஸுக்கு எதுவுமே தெரியாது.

அறிவானவனையே அகத்தில் நிறுத்தி பூஜிக்க விரும்பும் ஆங்கார வள்ளியை, நிழலுக்கு உயிர் கொடுத்த சாகசன் என்ற இறுமாப்போடு வெற்றிகொண்டிட நினைத்தான் ஔகத்.

ஆனால், அவனாக நேரடியாய் களத்தில் இறங்கிட ஆணவனின் தன்மானம் இடங்கொடுக்கவில்லை.

மாயோள் அவள் வரமாட்டாள் என்று அவனுக்குத் தெரியும். இவனும் போய் கெஞ்சிட மாட்டானென்றும்எ அவனுக்குத் தெரியும்.

அப்படி இருந்தும், ஔகத்திற்கு எப்படியாவது கீத்து வேண்டும். அதுவும் டாக்டரை தேடி கீத்துவாகவே வந்திட வேண்டும்.

ஆகவே, கீத்துவை இம்ப்ரெஸ் செய்து அவளைக் காதல் கொள்ள வைத்திட வேண்டிய வேலையை ஔகத்திற்கு பதில் படாஸ் செய்திட வேண்டுமென்ற முடிவிற்கு வந்தான் டாக்டர்.

அதற்காகவே, ஒரு வருடத்திற்கும் மேற்பட்டு ஆழ்கடல் மனையில் கீத்துவை பற்றி முழுதாய் படித்திட ஆரம்பித்திருந்தான் படாஸ்.

ஆனால், அதற்கு இடையிலோ ஔகத் அவன் கவனத்தை தம்பிக்கு மருந்து கண்டுப்பிடிக்கும் விஷயத்தில் செலுத்த, அவனுக்கு உதவியாய் படாஸை பயன்படுத்திக் கொண்டான்.

ஔகத் பயணிக்க முடியா இடங்களில் படாசை அனுப்பி தேவையான மூலிகைகளை கொண்டு வர வைத்தான்.

மாதங்கள் உருண்டோட, படாஸ் கூட கீத்துவின் எண்ணங்களுக்கு விடைக் கொடுத்து மனித குலத்துக்கு நன்மை பயக்கும் பல ஆராய்ச்சிகளில் ஈடுப்படத் தொடங்கினான்.

காதலித்த கீத்து ரிஜக் செய்து விட்டாள் என்ற கோபத்திலும் ஆதங்கத்தில் ஔகத் அறிவியலே வியக்கும் புதியதோர் சகாப்தத்தை படைத்திடுவானென்று கனவிலும் நினைக்கவில்லை.

ஆனால், அப்பெரும் சாதனைக்கு கூட கீத்துவின் மீது அவன் கொண்ட காதலே காரணமென ஆணித்தரமாக நம்பினான் ஔகத்.

அவள்பால் அதீத நேசம் இல்லாதிருந்தால் ஆணவனுக்கு இப்படியொரு கோபமும் வந்திருக்காது, அதன் விரக்தியில் இப்படியான அற்புதத்தையும் அவன் உருவாக்கியிருக்க மாட்டான் என்று ஔகத்தே அவனை சமாதானம் செய்துக் கொண்டான்.

வயது ஏற பக்குவம் கொண்டான் ஔகத். அதுவே, வேண்டாம் என்ற கீத்துவின் மீது அவன் கொண்ட வெறுப்பை தளர்த்தியது. அவளின் முடிவை மதிப்பவனாகவும் அவனை மாற்றியது.

ஆனால், அதுவெல்லாம் ஔகத் வரை மட்டுமே சாத்தியமானது.

அது வரைக்கும் ஔகத்திற்கு தெரியவே இல்லை, அவன் கண்டுபிடிப்பு என்ற பெயரில் சொந்த காசில் சூனியம் வைத்துக் கொண்டிருக்கிறான் என்று.

படாஸ் எவ்விதத்திலும் கீத்துவை விடுவதாய் இல்லை. காரணம், அவன் பிறப்பின் அஸ்திவாரமே அவள்தான்.

ஆனால், அவனால் ஔகத்தை மீறி எதையும் செய்திட முடியாது. ஆகவே, பொறுமையான நிலையில் அமைதி காத்தான் படாஸ் அவனுக்கான நேரம் வரும் வரை.

டாக்டரின் அனுமதியின்றி படாஸ் வெளியில் செல்லக்கூட தடையே. காரணம், அவன் நிழல் மனிதன் மட்டுமல்ல, மாறாக ஹைபிரிட் கலவையான மிருக மனிதனும் கூட.

படாஸை அப்படியான நிலைக்கு உருமாற்றிய ஔகத் நிஜமாலுமே ஒரு தந்திரமான சுயநலவாதியே.

சில வகை மூலிகைகள் சாமானிய மனிதர்களால் சென்று பறித்து வர முடியாத நிலையில், இப்படி உருமாற்றங்கொண்ட விலங்குகளால் பல மையில் தூரம் எப்பிரச்சனையுமின்றி பயணிக்க முடியும் என்பதைக் கருத்தில் கொண்டே படாஸை அப்படி மாற்றி அமைத்திருந்தான் ஔகத்.

அப்படியான ஒருநாளில் தான், மலேசியாவிற்கு வைரக்கல் பிஸ்னஸ் விடயமாய் வந்திருந்தவன், இரவில் காட்டுக்குள் அலைகையில் கீத்துவை முதல் முறை காப்பற்றி இதழ் கோர்த்தான்.

அதைத் தொடர்ந்து, மீண்டும் அவளை வனத்துக்குள் காப்பாற்றியவன், அஃறிணையின் உருவத்தில் அவளை நெருங்கி உயர்திணையாய் பிரிந்து போனான்.

அதுவே, படாஸ் கீத்துவை சந்தித்த முதலும் கடைசியுமாகும்.

அதற்கு பின்னரான வருடங்களில் மீண்டும் ஜெர்மனியின் ஆழ்கடலில் பிசியாகி போனான் படாஸ் ஆராய்ச்சிகளில் மூழ்கி.

இடைப்பட்ட அக்காலத்தில்தான் ஔகத்தின் வாழ்வில் பல பிரளயங்கள் நடந்து முடிந்தன.

வெறிக்கொண்டவனுக்கு பதில் களத்தில் இறங்கினான் படாஸ் கயவர்களை பழிதீர்த்திட.

நிழலாகினும், அதுவும் ஔகத்தின் நிழல்தானே. ஆகவே, அவனை போலவே சிந்தித்தான் படாஸ்.

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடித்திட முடிவெடுத்தான். அதுதான், ஔகத்திற்கு ஏற்பட்ட துரோகத்திற்கு வஞ்சம் தீர்ப்பது, அப்படியே, அதன் மூலம் கிருத்தியின் கவனத்தை ஈர்ப்பதாகும்.

அதற்காகவே, ஒவ்வொரு கொலையையும் மலேசியாவில் நிகழ்த்தினான் படாஸ். கீத்து கிடைக்கவில்லை என்ற விரக்தியில் சாமி கும்பிடுவதையே தவிர்த்திருந்தான் ஔகத்.

ஆனால், உண்மையாலுமே அவனுக்கு கடவுள் பக்தி அதிகம். அதனாலேயே, நிழலான படாஸ் பயங்கரமான சிவ பக்தனாக வளம் வந்தான்.

ஔகத் மறந்திருக்கலாம் படாஸ் உருவாக்கப்பட்ட காரணத்தை. ஆனால், உருவாகி நின்றவன் மறக்கவில்லை அவனுக்கான கடமையை.

ஆகவே, விதவிதமாய் கயவர்களை கொன்று குவித்த படாஸ் வியப்பில் ஆழ்த்தினான் காதலி கிருத்தியை.

பல விஷயங்களை அழகாய் கோர்த்து விடையாய் கொடுத்தான் படாஸ். அவனுக்கான தமிழ் ஆர்வத்தையும் கவிதைகளாய் வடித்தான் படாஸ்.

பல அதிசயமான விஷயங்களை கிருத்திக்காக கொண்டு வந்து சேர்த்தான் படாஸ்.

எல்லாவற்றையும் போலீஸ் கண்ணோடு பார்க்க ஆரம்பித்த தெரிவையவள், பின்னாளில் படாஸின் அபரீதமான மதியில் மயங்கி போனாள்.

அவளின் காதலை பல இடங்களில் ஒளிந்திருந்து கண்டுக்கொண்ட படாஸ், அவளை பக்கத்தில் வைத்து அன்பை பொழிய ஆசைக்கொண்டான்.

சிஜனோடான அவளின் கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திட வேண்டி திட்டம் தீட்டினான். ஆனால், சூழ்நிலையை புரிந்தவனாய் அவளை விட்டுக்கொடுத்திட முடிவெடுத்தான்.

காரணம், கொல்ல வேண்டியவர்கள் பலர் இன்னும் வரிசையில் இருக்க, கீத்துவை கட்டிக்கொண்டு அவளோடு குடும்பம் நடத்திட அவனுக்கு நேரமில்லை.

ஆகவே, கடமையை முடித்த பின், கீத்துவை அழைத்து போகலாம் என்றொரு கணக்கு கொண்டான்.

அவர்களின் திருமணத்திற்கு ஔகத் வர, படாஸ் அங்கு வருவதை தவிர்த்தான்.

இருந்தும் மனசு கேட்காது, ஒரு ஓரமாய் நின்று விட்டு அடுத்த ஐந்தாவது நிமிடத்திலேயே அங்கிருந்து கிளம்பி போனான்.

அதே வேளையில், துரோகமிழைத்த ஒருவனை கடத்த வந்த இடத்தில், சிஜனுக்கு சூடு படுமென்று படாஸ் நினைக்கவில்லை.

ஆகவே, அவன் உயிரை காப்பாற்றி, ஔகத் மூலம் சிஜனை அவனுக்கான ஜோடி ஞாழலிடம் சேர்த்தான்.

ஆனால், அதற்குள்ளோ வெளி உலகத்தில் ஜூனியருக்கு கருமாதியே நடந்து முடிந்திருந்தது.

கீத்துவோ உடம்பு சரியில்லாமல் போய் கடைசியில் விபத்துக்குள்ளாகி போனாள்.

கண் ஆப்ரேஷன் கொண்ட கீத்துவை மருத்துவமனையிலிருந்த தூக்கி வந்தான் படாஸ். கேடியின் ஆழ்கடல் மனையில் படுக்க போட்டு விதவிதமாய் காதல் செய்தான்.

எல்லாம் அறிந்த ஔகத்தோ பெரிதாய் ரீயாக் செய்துக் கொள்ளவில்லை. காரணம், படாஸின் உடம்பை கோமாவாக்கி, நிழலை பிரித்தெடுத்து மீண்டும் தன்னுடலில் செலுத்திக் கொண்டான் ஔகத்.

படாஸின் நினைவுகளை தனியாய் பதிவிறக்கம் செய்தவன், அவைகளை டாக்டரின் மூளையை தற்சமயத்திற்கு ஆட்கொள்ள அனுமதி அளித்தான்.

காதல் ஏந்திழை கிருத்தியோடு சுகபோகமாய் பத்து நாட்களுக்கு படாஸாகவே ஆழ்கடல் மனையில் அவளோடு குடும்பம் நடத்தினான், தியூடிதரா ஔகத் சர்வேஷ் குமார்.

பலமுறை முகத்தை பார்க்க சொல்லி ஔகத் கேட்டும், கிருத்தியோ அதற்கு சம்மதிக்கவே இல்லை.

ஒருக்கால், அப்போதே பார்த்திருந்தால் படாஸ் யாரென்று அவளுக்குத் தெரிந்திருக்கும்.

ஆனால், சாமானியத்தில் முகத்தை காட்டிட ஔகத் ஒன்றும் மூளையில்லாதவன் இல்லை, வித்தகன். எதை எப்போது செய்ய வேண்டுமென்று அவனுக்கு நன்றாகவே தெரியும்.

சிங்கத்திற்கு பிறந்தது சுண்டெலியாகுமா.

ஔகத் பார்க்கத்தான் அமைதி. ஆனால், அவன் கேடிக்கெல்லாம் கேடி மற்றும் கேடியின் கலவையிலானவன்.

விஷமும் அவனே, நஞ்சு முறிக்கும் மருந்தும் அவனே.

அன்பை ஏங்குவதில் நிர்மலனையும், கோபம் வந்தால் நிமலனையும் பிரதிபலித்திடுவான் ஔகத்.

அதே வேளையில், விரும்பியதை அடைய எந்த எல்லைக்கும் போவான் ஔகத்.

யாரை பற்றியும் எதை பற்றியும் கவலைக் கொள்ளாது, லெஃப்ட் மூளைக்காரனான சாணக்கியனை போலவே காரியம் சாதித்திடுவான் ஔகத்.

எப்படி கேடிக்கெல்லாம் கேடி, நிமலனை பற்றி கொஞ்சமும் கவலையின்றி அவனுடலை கொண்டு சுஜியை சொந்தமாக்கிக் கொண்டானோ, அதேப்போல், படாஸை கொண்டு கீத்துவை அவனை தேடி ஓடோடி வர வைத்தவன்தான் தியூடிதரா ஔகத் சர்வேஷ் குமார்.

படாஸாக, காதலி கீத்துவோடு கும்மாளம் அடித்து முடித்த ஔகத், மீண்டும் அவளைக் கொண்டு போய் பத்திரமாய் வீட்டில் சேர்த்தான்.

ஜடமான படாஸின் உடலுக்குள் மீண்டும் அவன் நிழலை செலுத்தினான் ஔகத்.

அதேப்போல், அவன் சிந்தையிலிருந்து கீத்துவோடு அவனிருந்த அந்த பத்து நாள் நினைவுகளையும் தனியாய் பிரித்தெடுத்து படாஸின் மூளைக்குள் நினைவுகளாய் பாத்திரப்படுத்தினான் ஔகத்.

இது எதுவுமே தெரியாத படாஸோ, மூளைக்குள் இருக்கும் எண்ண ஓட்டங்களின் காட்சிப்படி அவன்தான் கீத்துவோடு கலவி கொண்டான் என்று தவறாக நினைத்துக் கொண்டான்.

வெறுமனே இருந்த காதல் அதற்கு பிறகு வெறிக்கொண்ட காதலாகி போனது.

கேடி மற்றும் கேடிக்கெல்லாம் கேடியின் மிக்சிங் என்பதால் எப்போதுமே ஔகத்திற்கு இரண்டு வகையான குணங்கள் உண்டு.

பொதுவெளியில் தமிழ் மொழிக்கு பெரிய வரவேற்பு இல்லையென்பதால், ஆங்கிலத்தையே முதன்மை படுத்திக் கொள்வான்.

ஆனால், உள்ளுக்குள்ளோ அவனுக்கு தமிழேன்றால் உயிர் எனும் அளவுக்கு வெறிகொண்டவன் எனலாம்.

மென்மையாய் காதல் சொல்ல அவனுக்கு ரொம்பவே விருப்பம்.

ஆனால், அகம்பாவ கள்ளியவளுக்கு, கண்ணே மணியே சீனெல்லாம் செட்டாகாது என்பதாலேயே எப்போதுமே கேடியை போன்ற முரட்டுத்தனத்தை கொண்டிருக்கிறான் ஔகத்.

ஆகவே, அவனின் குணம் தேவைக்கு ஏற்ப வெளிப்படும்.

உதாரணத்திற்கு, சிஜனோடு வாக்குவாதம் கொண்டு கீத்து கொச்சையாய் வாயாட, அவளை வீட்டுக்கு கூட்டி வந்த ஔகத்தோ, பொஞ்சாதியை போலீஸ்காரி என்றும் பாராது, முருங்கைக்காய் கொண்டே அடி வெளுத்தெடுத்து விட்டான்.

கேடியின் முரட்டுத்தனத்தை அந்நேரத்தில் வெளிக்காட்டிய ஔகத், அடுத்த அரை மணி நேரத்திலேயே, பொண்டாட்டிக்கு சோறுட்டி தாலாட்டி நெஞ்சில் போட்டு தூங்க வைத்தான், சாணக்கியனின் குணத்தை வெளிக்காட்டி.

படாஸாக காதல் முற்றிழையை தொட்ட ஔகத், முதல் முறை அவனாகவே அவளோடு கூடினான், விடுதிக்கு வெளியில் கடத்தி போக பார்த்தவளை, ரேவ் காப்பாற்றி தூக்கி வந்து டாக்டரின் வீட்டு வாசலில் கிடத்தி போக.

படாஸ்தான் டாக்டர் என்று இருவரின் கையிலிருந்த டாட்டூ, முதுகிலிருந்து டாட்டூ மற்றும் அவர்களின் வாய்வழி புணர்ச்சியிலான வித்தையைக் கொண்டு நூறு சதவிகிதம் நம்பினாள் கிருத்திகா.

ஆகவே, ஔகத்தை கல்யாணம் செய்தாவது கேசில் ஜெயித்திட வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டாள், உள்ளுக்குள் அளவில்லா காதல் கொண்டாலும்.

தெளிந்த நீரோடையாய் போனவர்களின் வாழ்வில் பேரிடி விழுந்தது, படாஸ் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நொடி.

ஔகத்தின் திரவத்தில் கோளாறு செய்தவன், கீத்துவை கேடி வீடு வரைக்கும் தேடி வந்து தூக்கி போனான் டாக்டரை சுவற்றை நோக்கி பறக்க விட்டு.

படாஸை பொறுத்த மட்டில் அவன் ஜனித்ததே கிருத்திக்காகத்தான். அவளை யாருக்காகவும் அவனால் விட்டுக் கொடுத்திட முடியாது, அது ஔகத்தாக இருந்தாலுமே.

ஓரளவு அரங்கேறிய சம்பவங்களை பற்றி அறிந்த சுரஜேஷோ, மூத்தவனுக்கு உதவும் வண்ணம் படாஸை அடக்கிட பார்த்தான். ஆனால், இருவருக்கும் வாய் சண்டை வந்து பேசிக்கொள்ளாமல் போனதுதான் மிச்சம்.

இதற்கிடையில், காவல்காரியின் கர்ப்பம் வேறு கலைந்து போக, நிஜத்தை சொல்ல முடியாது உள்ளுக்குள்ளேயே புழுங்கிய ஔகத், குழந்தை அவனுடையது என்பதை மட்டும் அடித்து சொன்னான் கீத்துவிடத்தில்.

காரணம், மிருங்கங்களின் மூலம் உடல் கொண்ட படாஸுக்கு அவனது என்று சொல்லிக் கொள்ள அங்கு ஒன்றுமே இல்லை.

படாஸ் கொண்ட விந்தணுக்கள் கூட ஔகத்தின் உயிரணுக்களே.

கிருத்தியை அடிக்கடி படாஸ் தூக்கி போவதும், அவளோடு ஒன்றாக இருப்பதும் ஔகத்திற்கு ஒரு பெரிய விஷயமேயில்லை.

காரணம், அவனை பொறுத்த வரைக்கும் இவனே அவன். ஆகவே, நிழலாயினும் நிஜமாகினும் ரெண்டுமே அவன்தான்.

பேய் பிடித்தால் எப்படியோ, அப்படி. உடம்பு மட்டுமே ரெண்டு, ஆன்மாவோ ஒன்று.

படாஸ் செய்த குளறுபடி நாளுக்கு நாள் வேலையைக் காட்டிட ஆரம்பித்தது டாக்டரின் உடம்புக்குள். பரிசோதனைகளின் முடிவில் இடிந்து போனான் ஔகத். சுரஜேஷோ பேசாத போதும், கெஞ்சினான் படாஸிடம் மூத்தவனுக்கான மாற்று மருந்தை கோரி.

சாதாரண மனிதனை தாண்டி பற்பல விடயங்களில் கைதேர்ந்திருக்கும் படாஸோ, மருந்துக்கு பதில் கிருத்தியைக் கேட்டான் ஈனமாக.

அது நடக்காத காரியம் என்பதால், சகோதரர்கள் இருவரும் மருந்தை தேடி அலைய ஆரம்பித்தனர்.

படாசின் நிழலை புடிங்கி அவனை வெறுங்கட்டையாய் படுக்க போட்டிட ரொம்ப நேரம் பிடித்திடாது ஔகத்திற்கு. ஆனால், அவனோ படைத்தவனுக்கே டஃப் கொடுத்தான்.

ரகசியமாய் வைத்துக் கொண்டான் படாஸ் அவனின் அன்றாட செயல்பாடுகளை. ஔகத்தால் அவனை ட்ரேக் செய்ய முடியாதப்படி சிஸ்ட்டமை மாற்றி அமைத்துக் கொண்டான் படாஸ்.

அதனால், அண்ணன் தம்பி இருவராலும் படாஸ் எங்கிருக்கிறான் என்பதை கண்டறிய முடியவில்லை.

அதே வேளையில், அவனை தேடி அலையும் நேரத்தில், வியாதிக்கு மருந்தாவது கண்டுப்பிடித்திடலாம் என்றெண்ணிய ஔகத்தோ அடிக்கடி ஜெர்மனி ஓடினான்.

அவனுக்குத் தெரியும் எப்படியும் எலி ஒரு நாள் அதன் பொந்தை தேடி வந்திடுமென்று. ஆகவே, விட்டு பிடித்திட நினைத்தான் ஔகத்.

உடம்பு மோசமாகி போனதன் விளைவாய் குளியலறையில் குப்பிற கிடந்தவனுக்கு தன்னால் இயன்ற சிகிச்சைகளை வழங்கிய சின்னவனோ, அவன் கண்டுப்பிடிப்பில் உருவாகிய திரவத்தைக் கொண்டு மூத்தவனின் உயிர் காத்தான்.

தேறி வந்த டாக்டரோ மீண்டும் ஜெர்மன் பறந்தான் இதற்கு மேலும் அவனால் தாக்கு பிடித்திட முடியாதென்று கருதி.

படாஸுக்கு கடிதமொன்று எழுதினான் ஔகத்.

கிருத்தியை அவன் தாராளமாக சொந்தமாக்கி கொள்ளலாம். ஆனால். அதற்கு முன்பு அவளுக்கு உண்மை தெரிய வேண்டும். அதை ஔகத்தான் சொல்லிட வேண்டும்.

பின்குறிப்பாய், வெளிச்சத்தில் நடமாடிடும் யுக்தியை படாஸ் கண்டறிந்தால் மட்டுமே அவனால் கிருத்தியோடு சாமானியனாய் வாழ்க்கையை வாழ்ந்திட முடியுமென்று நக்கல் எமோஜி ஒன்றையும் சேர்த்து வரைந்திருந்தான்.

இதைப்பற்றி தம்பியிடம் சொன்னவன், மலேசியா கிளம்பி போக, அங்கோ கீத்து கர்ப்பம் என்ற செய்தி சொல்லி, அணையப்போகின்றவனின் வாழ்க்கையில் விளக்கேற்றினாள்.

நெகிழ்ந்தவன் முடிவெடுத்தான், படாசிடமிருந்து எப்படியாவது மாற்று மருந்தைக் கைப்பற்றிட வேண்டுமென்று.

ஔகத் நினைத்தால் படாஸின் மூளையை படித்திட முடியும், ஆனால், அங்குதான் சிக்கலே.

ஔகத்தின் நிழல்தானே படாஸ். ஆகவே, மருந்திற்கான அத்தனை தடயங்களையும் சிந்தையிலிருந்து அழித்திருந்தான் படாஸ்.

உயிர் துறக்க போவதை அறிந்த டாக்டரோ, வேறு வழியில்லாது கீத்துவிடம் உண்மையை சொல்ல எத்தனித்து தயங்கினான்.

கர்ப்பிணியால் மெய்யை தாங்கிட முடியுமோ என்று சிந்தித்தவன், அவளோடு முகிரத்தில் திளைக்கையில் வரிக்கு வரி, படாஸுக்கு சப்போர்ட் செய்து பேசினான்.

கடைசியிலோ மனிதர்கள் ஒன்று நினைக்க, ஆதிகுருவோ வேறொன்றை நிகழ்த்தியிருந்தான்.

அவன் நானில்லை, என்று ஔகத் ஒவ்வொரு முறையும் சொல்லக் காரணம், படாஸ் நிழல்தானே தவிர உடல் அல்ல.

அதாவது, உடல் இல்லையேல் நிழல் இல்லை.

ஆகவே, படாஸ் ஔகத் இல்லை. ஔகத்தான் படாஸ்.

அதே சமயம், படாஸ் செய்த கொலைகளில் சிறிதளவும் குற்ற உணர்ச்சி கொள்ளவில்லை ஔகத்.

காரணம், அவனை பொறுத்த மட்டில் ஔகத் சாலையில் நடந்து போகையில் திடிரென்று விபத்து ஏற்பட்டு கை முறிந்துவிட்டால், எப்படி எல்லோரும் ஔகத்தின் கரம் உடைந்து விட்டதென்று சொல்வார்களோ, அப்படித்தான் உடல் வேறாக இருந்தாலும், அதற்கும் உயிராக இருப்பது ஔகத்தின் நிழல்தான்.

ஆகவே, படாஸ் என்ன சாகசங்கள் செய்தாலும் அது அனைத்திற்கும் டாக்டரே பொறுப்பாகி பெயர் வாங்கிடுவான்.

ஆனால், ரோட்டில் துண்டாகி போன கரமோ நடந்துப்போவோரின் காலை பிடித்திழுத்தால், யாரும் ஔகத்தின் கை சாலையில் நடந்தவர்களின் பாதத்தை இழுத்ததென்று சொல்லிட மாட்டார்கள்.

மாறாக அடிப்பட்டு நடுவீதியில் கிடந்த கை, போவோர் வருவோரை பிடித்திழுத்தது என்றுதான் சொல்லிடுவார்கள்.

ஆகவே, கொலைகள் செய்வது படாஸின் கரங்கள் என்பதால், அதில் ஔகத்தின் கரங்களுக்கு எவ்வித ஒவ்வாமையும் இல்லை.

அவனுக்கு இக்கொலைகளால் நிம்மதியே ஒழியே, பழியை ஏற்றுக்கொள்ளும் பெருந்தன்மையெல்லாம் ஏதும் கிடையாது.

அதனால்தான், படாசை கைரேகைகள் இல்லாதவனாய் உருவாக்கியிருந்தான் ஔகத்.

டாக்டரின் மீது தனிப்பாசம் கொண்ட படாஸ், வஞ்சகர்களைக் கொன்று தீர்க்கையில் கூட அவனின் வியர்வை தொடங்கி குருதி வரை எதையும் எங்கும் சிந்திடாமலே பார்த்துக் கொண்டான்.

பின்னாளில், ஔகத்தை போலீசில் மாட்டி விட நிறைய வாய்ப்புகள் படாஸ் கொண்டாலும், அது எதையுமே அவன் கண்டுக்கவில்லை.

படாஸுக்கு சண்டை போட்டு வென்றிட வேண்டும் அவன் கிருத்தியை, ஔகத்திடமிருந்து.

அதேப்போல், காதல் போர் கொண்டனர் உடல் கொண்ட ஔகத்தும், நிழல் கொண்ட படாஸும்.

ஆனால், படாஸ் எதிர்பாராத ஒன்று ஔகத் சிங்க முகங்கொண்ட அவனை அடித்து வீழ்த்திடுவான் என்று.

ஔகத் காரணமாகவே, அப்படியான மாறுதலை உள்வாங்கிக்கொண்டு உருமாறும் தேர்வினை படாஸின் உடலுக்குள் ஆக்டிவேட் செய்திடாமலே வைத்திருந்தான்.

எங்கே அதனால் கீத்துவிற்கு ஏதாவது பிரச்சனை வந்துடுமோ என்று பயந்தே படாஸை அந்த விஷயத்தில் முடக்கி வைத்தான்.

அதே வேளையில், அவனுமே அதிலிருந்து வெளிவரத்தான் புது இன்ஜெக்ஷனை பயன்படுத்தினான். அப்படியிருக்க, இதைக்கொண்டு படாஸை வீணடிக்க ஔகத் விரும்பவில்லை.

இது தெரியா படாஸோ, துரோகத்துக்கு மேல் துரோகம் இழைத்து விட்டான் டாக்டர் என்றே நினைத்தான்.

கிருத்திகா என்ற ஒருத்தியின் மீது கொண்ட அளவுக் கடந்த காதலால், ஒளியிழை அவளுக்காகவே தியூடிதரா ஔகத் சர்வேஷ் குமாரால், அவனின் நிழல் கொண்டு உருவாக்கப்பட்டவன்தான் படாஸ்.

சொன்னதை போல், படாஸ் அவனின் இறுதி மூச்சை அவன் காதலி கிருத்தியின் மடியிலேயே துறந்தான்.

புருஷன் என்றவள் நினைக்க, கடைசி வரைக்கும் படாஸின் முகத்தை அவள் பார்த்திடவே இல்லை.

கண் விழித்த போதும் சரி, கண்ணெதிரில் பார்த்த போதும் சரி, கிருத்திக்கு எப்போதுமே ஔகத்தான், படாஸ்.

அதை யாராலும் மாற்ற முடியாது.

நிஜமும் அதுதானே. அவனின் நிழல்தானே படாஸ்.

மரித்தவனை கொண்டு போய் கதிர்வீச்சுகள் நிரம்பிய தனித்துவமிக்க பெட்டியில் அடைத்தான் ஔகத்.

சரீரம் பயங்கரமான கதிர்வீச்சுகளால் சிதைந்து போக, ரோபோ கருவியான விம்பமோ, தனித்திருக்கும் நிழலை வேறொரு குளிர் பெட்டிக்குள் பத்திரப்படுத்தியது.

ஆகமொத்தம், காதலித்த கீத்துவிற்காக படாஸ் என்றொருவனை உருவாக்கி, அரிய மூலிகைகளை கைப்பற்றி, துரோகமிழைத்தவர்களை காணா பிணமாக்கி, இறுதியில் அவனோடே போட்டி போட்டு காதல் பொஞ்சாதியை கைப்பிடித்தான் தியூடிதரா ஔகத் சர்வேஷ் குமார்.

இது அனைத்தையும் கீத்து அவளாகவே தெரிந்துக் கொண்டாள், ஔகத் கைப்பட எழுதிய இரு கடிதங்களின் மூலமாய்.

ஒன்று கீத்துக்கு எழுதியது. மற்றொன்று படாஸுக்கு எழுதியதாகும். ரெண்டையும் ஒருசேர கொண்டு வந்த கொடுத்திருந்தான் சுரஜேஷ் அண்ணியிடம்.

அதை படித்த பின், ஔகத் அவளின் மீது கொண்ட காதலுக்கு இவ்வுலகத்தில் ஈடே இல்லையென்று புரிந்துக் கொண்டாள் கீத்து.

நேற்றுவரை அவள்தான் ஔகத்தின் மீது அளவுக் கடந்த காதல் கொண்டுள்ளதாய் நினைத்திருந்தாள்.

ஆனால், இப்போதோ அவளின் அன்பு டாக்டரின் நேசத்திற்கு முன்பு தலைவணங்கி நிற்க கண்டாள்.

அந்தகாரத்து நாயகனின் இதழ்களோ, ஆரணங்கின் மலர்க்குவியல்களில் படர அவன் புஜங்களை அழுத்தி பற்றினாள் கீத்து.

வெளியிலோ கனமழை கொட்ட, அறையின் ஏசியில் ஜன்னல்களோ பனிப்போர்வை கொண்டிருந்தன.

''சொல்லடி

என் அகம்பாவ கள்ளியே

காஜி மன்னனா?!

காதல் கண்ணனா?!''

என்று நுதல் ஒட்டிய பேரழகானவனின் கவியான வேள்விக்கு அவன் முகத்தை இருக்கரங்களால் பற்றிய பெதும்பையோ,

''நிஜங்கொண்டு நிழல் வென்ற, என் தியூடிதரா ஔகத் சர்வேஷ் குமார்!''

என்றுச் சொல்லி, வந்தவன் எவனாகினும் வேண்டுபவன் யாரென்று தெரிவித்து, அவனிதழ்களை பைந்தொடியின் அதரங்களில் பதுக்கினாள் கிருத்தி.

அறையோ எலுமிச்சையிலான வெண்ணிலா வாசங்கொள்ள,

''கிருத்தி!''

என்றவனோ ஒண்டொடியின் கழுத்தோரம் புதைய,

''ஔகத்!''

என்றவளோ உதடு கடித்து சிணுங்க, விழிகள் விரித்தவனின் மிழிகளோ மயூர வர்ணங்கள் கொண்ட மரகத பச்சையில் மின்னியது.

தீண்டல்களில் உச்சம் தொட்ட கீத்துவோ, புருஷனின் பெயர் அனத்தி ஜன்னலில் கரம் பதிக்க, அடிதூற்றிய மழையில், இடி இடிக்க, பளிச்சென்ற மின்னல் கீற்றின் ஊடே, ஜன்னலுக்கு வெளியிலோ, கிருத்தியின் கையொட்டி பதிந்தது கரத்தின் அச்சொன்று.

சுபம்!

வாசகர்கள் டுவிஸ்டை உடைக்காதவாறு கருத்திடவும்!

நன்றி! வணக்கம்!
முந்தைய அத்தியாயங்களை படிக்க:

https://amydeepz.com/forums/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D.14/
 
Author: KD
Article Title: படாஸ்: 127 (ததர்முகம்)
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

tamilselvi

New member
Joined
Oct 5, 2024
Messages
27
Appadaa ....finally badas yarunu sollitinga....but last line la marubadiyum twist iruke indha story oda second part ah irukkumo....
Ethu epdiyo na again story first la irundhu padikanum so please story remove pannathinga... thank you
 
Evaemimal

New member
Joined
Jul 30, 2024
Messages
4

Super ji but ithu subham mathiri illaiye continuous mathiri theriuthu....ithula nee ga vera twist audaikakathavaaru comment panna solringa ???enna twist a irukum....intha padas kathaiye twist athaan iruku ithula entha twist a naanga udaikkakudathu sagi....illa innum epi irukka....
 
  • Like
Reactions: KD

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
414
Super ji but ithu subham mathiri illaiye continuous mathiri theriuthu....ithula nee ga vera twist audaikakathavaaru comment panna solringa ???enna twist a irukum....intha padas kathaiye twist athaan iruku ithula entha twist a naanga udaikkakudathu sagi....illa innum epi irukka....
Hi dear. Ithan last episode. Ithuku mele ethuvum ille. Thanks for reading ✌️😁
 
Top