What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

நீ நெருங்க நான் நொறுங்க! : 3

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
498
WhatsApp Image 2024-10-12 at 5.40.25 PM.jpeg

அத்தியாயம் 3

நிகழ்காலம்

காவல் நிலையம்


இரு மாநிலங்களுக்கு இடையிலான நகரம் அது.

போலீஸ் ஸ்டேஷன் ஒன்று பொதுவாய் இருந்தது மிகமிக குறைவான குற்றங்களை மட்டுமே பதிவில் கொண்டு.

டாக்டர் துவரினி கைகளை பிசைந்தவாறு காத்திருந்தாள் இன்ஸ்பெக்ட்டர் அன்பின் வருகைக்காக.

நேற்றைய இரவே வந்து கேஸ் கொடுத்தாயிற்று டாக்டர் அவள். ஆனால், ராவெல்லாம் உறக்கம் கொள்ளாதவள் மீண்டும் காலையிலேயே என்னானது என்று விசாரிக்க ஸ்டேஷன் வந்திருந்தாள்.

''சொல்லுங்க மேடம்?! என்ன விஷயம்?!''

என்றுக் கேட்டப்படி இன்ஸ்பெக்ட்டர் அன்போ நாற்காலியில் வந்தமர,

''சார், நேத்து நைட் என்னோட பேஷண்ட் (patient), ஒரு பொண்ணே காணோம்னு கேஸ் கொடுத்திருந்தேன்! அந்த கேஸோட விசாரணை எந்தளவுக்கு இருக்கின்னு தெரிஞ்சுக்கணும்!''

''இருங்க, இதோ பார்க்கறேன்!''

என்ற போலீஸ்காரனோ,

''ராகேஷ், இவுங்க கேஸ் ஃபையில் (fail) எடுத்திட்டு வாங்க!''

என்றுக்கூறி,

''பேஷண்ட் கூட நைட் (night) டைம் (time) டிராவல் (travel) பண்ணிருக்கீங்க! அதுவும் தனியா! ஏன், எதுக்குன்னு தெரிஞ்சிக்கலாமா?!''

''என் வயசு பொண்ணு சார்! தலையிலே பலமா காயம் பட்டு எல்லாம் மறந்துப்போச்சு! ஞாபத்துலே இருந்தது எல்லாம் 'ரஞ்சகன்' அப்படிங்கிற பேர் மட்டும்தான்!''

டாக்டர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அட்சரா என்ற பெயர் கொண்ட கோப்பை எடுத்து வந்து நீட்டினான் சப் இன்ஸ்பெக்ட்டர் ராகேஷ்.

ஃபயிலை திறந்து காணாது போயிருக்கும் அலரின் பிரிண்ட் (print) செய்யப்பட்டிருக்கும் படத்தை அன்பு நோட்டமிட,

''சார், எப்படியாவது கண்டுப்புடிச்சிடலாம்லே?!''

''ஹ்ம்ம்! நீங்க மேலே சொல்லுங்க!''
''நானும் மத்த டாக்டர்ஸும் எவ்வளவோ முயற்சி பண்ணோம் சார், அட்சராவே குணப்படுத்த! ஆனா, முடியலே! நாளுக்கு நாள் அவளோட நிலைமை மோசமானதுதான் மிச்சம்! அதான், கொஞ்ச நாளைக்கு ஒரு சின்ன மாற்றமா இருக்கட்டும்னு, மலைக்கோவில் சாமியார் நந்தமூரி ஆசிரமத்துக்கு அவளை கூட்டிக்கிட்டு போக நினைச்சேன்! சோ (so), நேத்து ஈவனீங் (evening) ஷிஃப்ட் (shift) முடிச்சிட்டு அட்சராவோட ஹோஸ்ப்பிட்டலிருந்து வெளியாகி டிராவல் பண்ணேன்!''

டாக்டர் துவரினி மறைக்காது எல்லாவற்றையும் கடகடவென கொட்ட,

''ஏன், ஹைவேய் (highway) யூஸ் (use) பண்ணாமே பழைய பாதை யூஸ் பண்ணீங்க?!''

என்ற அன்போ கோப்பை மூடி, அழுத்தமாய் ஏறெடுத்தான் டாக்டரை.

''எனக்கு பழைய பாதையிலே போறது ரொம்ப புடிக்கும் சார்! எப்போதுமே பழைய ரோட்ஸைத்தான் (roads) நான் அதிகமா ஃப்ரீபர் (prefer) பண்ணுவேன்!''

''கொஞ்சங்கூட பொறுப்பில்லாமே, ஒரு அம்னீஷியா பேஷண்டோட (amnesia patient) நைட் டிராவல் பண்ணிருக்கீங்க! அதுவும் பிளாக் அண்ட் வைட் (black and white) எதுவும் இல்லாமே! இப்போ, அந்த பொண்ணே தொலைச்சிட்டு வந்து, இங்க கதை வேறே சொல்லிக்கிட்டு இருக்கீங்களா?!''

''பிளீஸ் இன்ஸ்பெக்ட்டர்! நீங்க என்ன வேணும்னாலும், எப்படி வேணும்னாலும் என்னே திட்டிக்கோங்க! ஆனா, அட்சராவே மட்டும் எப்படியாவது கண்டுபுடிச்சு கொடுத்திடுங்க! அந்த பொண்ணு மட்டும் கிடைக்கலன்னா, என் வேலையே போயிடும்! ரொம்ப கஷ்டப்பட்டு படிச்சு டாக்டர் ஆகியிருக்கேன் சார்!''

திட்டிகள் குளமாக கோரிக்கை வைத்தாள் பெண்டு அவள்.

''இப்போ வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்?! நடந்தது நடந்திருச்சு! எங்களாலே என்ன முடியுமோ அதை நாங்க பண்ண பார்க்கறோம்! வெளியூர் எங்கையும் போகாமே இங்கையே இருங்க! அடிக்கடி விசாரணைக்காக ஸ்டேஷன் வரவேண்டியது இருக்கும்!''

என்ற அன்போ இருக்கையிலிருந்து எழ,

''நீங்க எப்போ கூப்பிட்டாலும் நான் ஓடோடி வந்திடுவேன் சார்! ஆனா, அந்த பொண்ண மட்டும் தயவு செஞ்சு கண்டுபுடிச்சு கொடுத்திடுங்க சார்!''

என்ற டாக்டரம்மாவும் எழுந்து நின்று மீண்டும் வேண்டுதல் கொள்ள,

''அட்சரா மிஸ்ஸிங் (missing) பத்தி ஹோஸ்ப்பிட்டல் மேனேஜ்மெண்டுக்கு (management) இன்போர்ம் (inform) பண்ணிட்டிங்களா?!''

''ஐயோ! இல்லே சார்! வேணாம்! நானும் பண்ணலே! நீங்களும் பண்ணிடாதீங்க! என் எதிர்காலமே அழிஞ்சிடும் சார்!''

பயத்தில் மருத்துவ மேடமின் சக்குகள் கண்ணீரை கொட்ட, வயசு பெண்ணை காலங்காத்தாலையே ஸ்டேஷனில் அழ வைப்பது என்னவோ அபசகுணமாகவே தோன்றியது அன்புக்கு.

உடனே, திசு பாக்ஸ் ஒன்றை தூக்கி அவள் முன் வைத்தவனோ,

''நீங்க பண்றதையெல்லாம் பண்ணிட்டு, இப்போ போலீசையும் உங்ககூட சேர்த்து கூட்டுகளவாணி ஆக்கிட பார்கறீங்களா?!''

என்று கடுப்பில் ஒற்றை கரத்தால் இடை இறுக்கி, நீலிக்கண்ணீர்காரியை போலீஸ் அவன் முறைக்க,

''சார், அப்படியெல்லாம் எதுவும் இல்லே சார்! அட்சரா இந்த ஏரியாவுலதானே காணாமே போனா?! அப்போ, அவளே இங்கதானே தேடணும்?! எதுக்கு ஹோஸ்ப்பிட்டல் வரைக்கும் போய் டைம் (time) வேஸ்ட் (waste) பண்ணணும்னுதான் கேட்கறேன்?!

அறிவாளித்தனமாய் டாக்டர் கேள்வி கேட்க,

''போலீஸ் என்ன பண்ணணும்னு நீங்க எங்களுக்கு சொல்லித்தர வேண்டாம் மிஸ் துவரினி! கேட்கற கேள்விக்கு பதில் சொல்லி, உங்க அலட்சியத்தாலே நீங்க தொலைச்ச பொண்ணே தேட, எங்களோடு சேர்ந்து ஒத்துழைச்சாலே போதும்! மத்ததெல்லாம் நாங்க பார்த்துப்போம்! இப்போ கிளம்புங்க!''

என்ற அன்போ காட்டமாய் பேசி டாக்டரை அங்கிருந்து விரட்டி விட்டான்.

**********************************

நிகழ்காலம்

வேதாவின் படுக்கையறை


அம்பிகா அழைத்து போய் அட்சராவை சாப்பிட வைக்க, பசியில் தட்டை காலி செய்தவள் மீண்டும் வேதாவின் அறைக்கு விரைந்தாள் கீழ் தளத்தில் வேலை முடிய.

''இது யார் ரூம்?! நான் ஏன் இங்க இருக்கேன்?!''

என்றவளோ அறைக்குள் நுழைந்த ஐந்தாவது நிமிடத்திலேயே சுய கேள்வி எழுப்பி அறையை சுற்றி வட்டமடித்தாள்.

திறந்திறந்த ஜன்னல் வழி வெளிக்காட்சிகளை பார்த்த பாவையோ அரை மணி நேரம் கழிய,

''மருந்து சாப்பிடணுமே! வேதா சொன்னாரே!''

என்ற வாக்கியதோடு டேப்லட்ஸ் இருந்த இடம் நோக்கி பயணித்தாள்.

அவைகளை எடுத்து வாயுக்குள் போட்டு நீரை குடித்துக் கொண்ட கோதையோ,

''நான் யாரு?! எனக்கு என்னாச்சு?!''

என்ற வினாவோடு அவளை வெறித்த ட்ரஸிங் டேபிள் கண்ணாடியை இமைக்காது பார்த்தாள்.

''என் பேர்.. என்னவோ சொன்னாரே வேதா.. என்ன சொன்னாரு?!''

என்ற மங்கையோ கோதிடா குழல் முகம் மறைக்க, அதை தூக்கி பின்னால் போட்டிட கையை மேலேத்த, முழங்கையில் கண்டாள் குத்தியிருந்த பச்சையை.

''அட்சரா! ஹான்! இதான்! இதுதான் என் பேர்! என் பேர் அட்சரா!''

என்று சந்தோஷம் கொண்டாள் பொற்றொடியவள், முகம் பார்க்கும் கண்ணாடியில் தெரிந்த சேயிழையின் பிம்பத்திடம் சொல்லி.

தலையில் அடிப்பட்டிருக்கும் அந்திகைக்கு தற்போது ஆன்டிரோகிரேட் அம்னீசியா (Anterograde amnesia) ஏற்பட்டிருக்கிறது.

பழசேதும் சுந்தரியின் மூளையில் இப்போதைக்கு இல்லை எனலாம்.

தற்போது நடக்கின்ற சம்பவங்கள் கூட உடனுக்குடன் மறந்து போய், பின் மீண்டும் ஞாபகத்துக்கு வரும் அவ்வப்போது.

சில வேளைகளில் நடந்த விஷயங்கள் ரொம்ப நேரத்திற்கு நினைவில் இருந்து, பிறகு கொஞ்சங்கொஞ்சமாய் மறந்து போகும்.

ஆகமொத்தம் அம்மணியின் மேல் மாடியில் என்ன இருக்கும், அது எப்போது வரை இருக்கும் என்று யாருக்குமே தெரியாது, அவள் உட்பட.

யார் நெருங்க யார் நொறுங்க...
 

Author: KD
Article Title: நீ நெருங்க நான் நொறுங்க! : 3
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top