- Joined
- Jul 10, 2024
- Messages
- 460
அத்தியாயம் பனிரெண்டு
தனியார் மருத்துவமனை
அறுவை சிகிச்சை அறை
''வேணாம்!! எனக்கு ஆப்ரேஷன் வேணாம்!! என்ன விடுங்க!!''
ஆப்ரேஷன் அறையையே அலற விட்டாள் நிறைமாதத்தை தாண்டிய கர்ப்பிணி விசாகா.
தமிழ் அறைக்குள் நுழைய, மற்றவர்கள் சத்தம் அடங்கும் முன் கேட்டது முரண்டு பிடித்தவளின் பாசமான அண்ணா என்றழைப்பு.
''தமிழண்ணா!!!''
நெருங்கியவனின் நெஞ்சில் சாய்ந்தவள் ஓவென்று கதறினாள் வார்த்தைகளை விழுங்கி.
''எனக்கு ரொம்.. ரொம்ப.. பயமா இருக்கு!! பயமா இருக்குண்ணா!!''
ஏதும் பேசாதவனோ அனஸ்தீசியா மருத்துவரை பார்த்து புருவங்களை உயர்த்தினான்.
மலாய் மருத்துவனோ கையிலிருந்த பாரத்தை காண்பித்து கேள்வியாய் உதடு சுளிக்க, இமைகளை இமைத்து தலையை லேசாய் ஆட்டினான் தமிழ் அவன் கவனித்து கொள்வதாய் சைகை புரிந்து.
''பாப்பா.. வாயுத்துக்குள்ளையே செத்து போயிடுவான்னு இவுங்கெல்லாம் சொல்றாங்கண்ணா!! நிஜமாவாண்ணா !! என் பையன் என்னே விட்டு போயிடுவானா!! சொல்லுண்ணா!!''
மூக்கு சளி ஒழுக, அதை துடைக்க கூட நாதியற்றவளாய் அழுகாச்சியில் குளித்தவளை சிரிப்போடு எதிர்கொண்டான் அண்ணனவன்.
''யார் சொன்னா உனக்கு இதெல்லாம்..''
தமிழ் தங்கையவளின் கன்னக் கண்ணீரை அவனின் உள்ளங்கையால் துடைத்து கேட்க, தேம்பியவள் அங்கிருந்த தாதி ஒருத்தியை நோக்கி கையை நீட்டினாள்.
மிசியம்மாவின் மிழிகள் பெரிதாக, போட்டு கொடுத்த அம்மணியோ வயிற்றை தடவிக் கொண்டு விம்மினாள்; நினைவில் ஓடிக்கொண்டிருக்கும் பயத்திற்கு தீனி போடும் சாக்கில்.
மகப்பேறு மருத்துவன் நர்சம்மாவை எரித்திடும் லுக்கு விட, செவிலி அம்மையாரே இடத்தை காலி செய்தார் மன்னிப்பு வைத்து.
''சோரி டாக்டர்..''
''என்கிட்ட இல்லே!! பேஷண்கிட்டே!! எத்தனை தடவை சொல்லிருக்கேன்.. நெகட்டிவா பேசாதீங்கன்னு!!!''
முகத்தை தொங்க போட்ட சோகத்தோடு விசாகவிற்கும் ஒரு மன்னிப்பை வைத்தார் அனுபவசாலியான தாதியவர்.
''சோரி விசாகா..''
''சீனியர் நீங்கதான் ஜூனியர்ஸ்க்கு நல்ல செம்பிளா இருக்கணும்.. பிளீஸ்.. அடுத்த தடவ இதைக் கொஞ்சம் மைண்ட்லே வெச்சுக்கோங்க..''
என்றவனோ சொடக்கிட்டு அனைவரையும் அறையை விட்டு பத்து நிமிடங்களுக்கு டீசண்டாக (decent) துரத்தியடித்தான்.
''பசிக்குதுண்ணா.. காலையிலிருந்து ஒன்னுமே சாப்பிடலே.. நான் மட்டும் இல்லண்ணா.. பாப்பாவும்தான்..''
விசும்பி சொன்னாள் கொலை பட்டினியாய் கிடப்பதை போலுணர்ந்த வஞ்சனியவள், ஏறக்குறைய பனிரெண்டு மணி நேரங்களுக்கு மேலாக பச்சை தண்ணீர் கூட வாயில் படமால் கிடக்க.
''ஆப்ரேஷன் பண்ணறதுக்கு முன்னாடி ஏறக்குறைய ஆறு ஹவர்ஸ்க்கு (hours) சாப்பிட கூடாதுடா.. அதான்.. குளுக்கோஸ் தண்ணி ஏத்துறாங்கள்ளே.. பாப்பாக்கும் சரி உனக்கும் சரி அதுதான் சாப்பாடு..''
என்றவனோ ஸ்ட்ரெச்சரின் மீது அமர்ந்திருந்தவளின் தலையை வருடிக் கொடுத்தான்.
''அண்ணா.. நீயாவது உண்மையே சொல்லு.. பாப்பா நல்லாருக்கான் தானே.. அவனுக்கு ஒன்னுமில்லையே..''
தமிழ் தங்கையவளின் கரத்தை பற்றியிழுத்து வைத்தான் அவளின் வயிற்றின் மீது.
''பேசு..''
அண்ணன் அவன் சொல்லிட, விசாகாவோ வீங்கிய விழிப்படலங்களோடு தமிழை நோக்கினாள் கதறி.
''பேசு விசா.. உன் பையன்கிட்டே நீயே கேளு..''
அவன் மருத்துவமனையில் வேலை பார்க்கும் நர்ஸ் கூட நேர்மறையாக பேசுவதை விரும்பிடாதவன் தமிழ். அப்படியிருக்க அவன் விட்டிடுவானா தங்கையவள் பேசிட. விசாகாவின் பயத்தை போக்கிட நினைத்தான் மகப்பேறு மருத்துவனவன், அவன் பாணியில்.
''நான் என்..''
முடிக்காத வாக்கியம் பாதியில் தொங்கிட, தெரிவையவளோ மீண்டுமொருமுறை மூக்கு சளி சிந்திடும் கேப்பில் தமிழ் பேசினான் பேச வேண்டியதை.
''இங்கப்பாரு விசா.. இப்போ உன் பையனுக்கு சரியா முப்பத்தி ஏழு வாரம்.. ஆனா.. உனக்கே தெரியும் பையன் கொஞ்சம் சின்ன சைஸ்லே இருக்கான்.. பழைய கிளினிக் ஃபோலோ ஆப்லே (follow up) கூட இதை மேலோட்டமா சொல்லிருந்தாங்கே தானே..''
என்றப்படி தமிழ் கைகளை நெஞ்சுக்கு குறுக்கே கட்டியவாறு, ஸ்ட்ரெச்சரின் விளிம்பில் சாய்ந்து நின்று சொல்ல; தலையை கீழே குனிந்தாற்படி ஆட்டினாள் விசாகா ஆமோதித்து.
''பையனோட கண்டிஷன் (condition) பிளஸ் (plus) உன்னோட பாதுகாப்பு.. ரெண்டுத்துக்குமே இண்டியூஸ்தான் (induce) பெஸ்ட் சாய்ஸ்ன்னு (best choice) எனக்கு தோணுச்சு விசா.. அதைத்தான் நான் ரீசன்கிட்டே கூட சொன்னேன்..''
அவ்வளவு நேரம் மனம் ஒடுங்கி கதறியவள், ரீசனின் பெயர் கேட்க வெகுண்டெழுந்தாள்.
''ஏன்!! ஏன் அவர்கிட்டே சொன்னீங்க!!''
''அவன்தானே அப்பா..''
சாதாரணமாக தமிழ் சொல்ல, அண்ணன் ஸ்தானம் கொண்டவனையே வெறித்தாள் அருணியவள்.
''குழந்தையோட அம்மா நீ விசா.. எப்போதுமே உன் மைண்ட் நல்லதை மட்டுமே நினைக்கணும்.. புரியுதா.. உன்னோட எண்ணங்களே குழந்தையின் பிரதிபலிப்பு.. நீ சோகமா இருந்தா உன் பையனும் சோகமாயிடுவான்.. அதே மாதிரி அவன் சார்ந்த விஷயங்கள் எதுவா இருந்தாலும்.. யார் என்ன சொன்னாலும்.. ஏன்.. நானே சொன்னாலும்.. நீ நம்பணும் விசா.. உன் பையன் நல்லப்படியா பொறந்திடுவான்னு.. உன் நம்பிக்கைதான் அவன் நம்பிக்கை.. புரிஞ்சுதா..''
விசும்பியவளின் மிழிகள் மூடி திறந்தன.
*
அறுவை சிகிச்சை அறை
மணி விடியற்காலை இரண்டை தாண்டியிருந்தது.
குழந்தைகள் மருத்துவரான பாப்பு அறை நுழைய, அரிவையின் கணவன் தமிழ் கண்ணை காட்டினான் பொஞ்சாதியிடத்தில் மேஜை மீதிருந்த கோப்பை பார்த்திட சொல்லி.
பாவம் மருத்துவனை கட்டிய பத்தினியவள். இப்போதுதான் பினாங்கிலிருந்து வந்திருந்தாள், முக்கியமான மருத்துவ கருத்தரங்கு ஒன்றை முடித்துக் கொண்டு.
காதல் மனைவி கார் ஓட்டிக் கொண்டு பினாங்கிலிருந்து கோலாலும்பூர் வரை வந்திட, அதுவும் தனியே; விடாமல் ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை போனை போட்டு விசாரித்து கொண்டான் கட்டிய தமிழ் விருந்தனை அவளை.
அந்த கேப்பில் தமிழ் அவன் துணைவியிடத்தில் விசாகா மேட்டரை ஓபன் செய்திட, மகப்பேறு மருத்துவன் அவன் பார்த்திட போகும் பிரசவத்திற்கு பீடியாட்ரிக் (pediatric) மருத்துவர் என்ற முறையில் பாப்புவே ஆஜராகியிருந்தாள்.
அலுமினிய கட்டிலின் மீது, மருத்துவமனை கவுனில் தலையை கவிழ்த்து அமர்ந்திருந்தாள் விசாகா.
இனி அவளுக்கென்று இப்புவியில் அவள் சுமந்திருக்கும் குழந்தை மட்டுமே. இருந்த எல்லாம் போயாயிற்று, அப்பாவையும் சேர்த்து. ஒன்றுமில்லாதவளுக்கு இனி வரும் காலத்தின் நம்பிக்கை பிறக்க போகும் குழந்தை மட்டுமே.
''just hold the pillow.. take a deep breath and relax.. Visa.. now I'm going to inject you the general anesthesia..''
(தலையணையை நல்லா பிடிச்சிக்கோங்க.. மூச்சே நல்லா இழுத்து விடுங்க.. விசா.. இப்போ நான் உங்களுக்கு ஜெனரல் அனஸ்தீசியா கொடுக்க போறேன்..)
விசாகாவின் முதுகுத்தண்டில் ஏற்றப்போகும் மயக்க மருந்திற்கான விளக்கத்தினை வழங்கினான் அனஸ்தீசியா மருத்துவன்.
''ok done with the general anesthesia and now I'm going to inject the epidural.. just keep calm continually..''
(ஜெனரல் அனஸ்தீசியா போட்டாச்சு.. விசா.. இப்போ நான் உங்களுக்கு எபிடுரல் இன்ஜெக்ஷன் போட போறேன்.. முதல்லே மாதிரியே அமைதியா இருங்க..)
பிறப்புறுப்பு மற்றும் அறுவைசிகிச்சை பிரசவங்களின் போது பயன்படுத்தப்படும் எபிடுரல் (epidural) ஊசியானது விசாகாவின் கீழ் முதுகில் செலுத்தப்பட்டது மருத்துவனால்.
தமிழ் சர்ஜரிக்கு முன்னர் அவனை தயார் செய்துக் கொண்டிருக்கையில், ஆப்ரேஷன் அறைக்குள் நுழைந்த சிறுவயது சீன நர்ஸ் குட்டி ஒருத்தி ரகசியமாய் அவனின் காது கடித்தாள்.
''வரேன்டா உங்கொப்பன் மவனே!!!''
என்று முனகி அதரங்களை பல்லுக்குள் அடக்கிய தமிழோ, வேகமாக வெளியேறினான் முகத்தை ஏழு முழத்திற்கு இறுக்கி; சீனத்தியோடு.
விசாகாவோ ஆப்ரேஷன் ஸ்ட்ரெச்சரில் படுத்திருந்தாள். அனஸ்தீசியா மருத்துவனோ சிறு கத்தி ஒன்றால் அவளின் கழுத்துக்கு கீழான நெஞ்சில் குத்தி பார்த்து பரிசோதனை நடத்தினான்.
சீ - செக்ஷனுக்கு தயாராகிய மலரவளோ சொரணையில்லை என்பதை தலையசைத்து உறுதிப்படுத்தினாள்.
''Good.. it's working..''
(குட்.. மருந்து வேலை செய்யுது..)
என்ற மருத்துவனோ சிரித்த முகத்தோடு இருக்கையை இழுத்து பிட்டத்தை அதில் பார்க் செய்தான்.
கர்ப்பிணி விசாகாவின் குழந்தை அளவில் சின்னதாயிருக்க, குழந்தையின் நலன் கருதி; யுவதியவளுக்கு செயற்கையாகவே இடுப்பு வலியை வர வைத்திட இண்டியூஸ் முறையை கையாண்டிட நினைத்திருந்தான் மகப்பேறு மருத்துவன் தமிழ்.
ஆனால், காலையில் செய்த ஸ்கேன் மூலம் இண்டியூஸ் வரை போவது தாயிக்கும் சேயிக்கும் பாதுகாப்பல்ல என்றுணர்ந்தவன் உடனடியாக விறலியவளுக்கு சிசிரியன் செய்திட முடிவெடுத்தான்.
இண்டியூஸ்கள் பலவிதம். அது எப்போதுமே சுகப்பிரசவத்தை காட்டிலும் அதீத வலியை கொடுக்கும்.
சவ்வுகளை அகற்றி கர்ப்பிணிகளுக்கு இடுப்பு வலியை வர வைத்திடுவது ஒரு முறையாகும். குழந்தை மற்றும் அம்னோடிக் திரவம் கொண்ட கருப்பையின் சுவரை அம்னோடிக் சாக் (amniotic sac) என்றழைப்பர்.
கர்ப்பிணியின் யோனிக்குள் விரலை சொருகி, மருத்துவர் விரலை முன்னும் பின்னும் நகர்த்தி அச்சுவருடன் இணைந்திருக்கும் மெல்லிய சவ்வை அகற்றிடுவர்.
சவ்வு அகல, தாயின் உடல் ப்ரோஸ்டாக்லாண்டின்கள் (prostaglandins) எனப்படும் ஹார்மோன்களை (hormone) வெளியிடும். இது கருப்பை வாயை பிரசவத்திற்கு தயார்படுத்திடும்.
இருப்பினும், இம்முறை எல்லா கர்ப்பிணிகளுக்கும் செட்டாகும் என்று சொல்லிட இயலாது.
ஹார்மோன் கிளர்ச்சியை ஏற்படுத்திடும் ஜெல் அல்லது மாத்திரை வடிவத்திலிருக்கும் ப்ரோஸ்டாக்லாண்டின் மருந்தை தாய்மார்களுக்கு வாய் அல்லது யோனி வழியாக கொடுத்திடுவார்கள் மருத்துவர்கள்.
இது கருப்பை வாயை முதிர்ச்சி மற்றும் மென்மையாக்கி கர்ப்பிணிகளை பிரசவத்திற்கு தயாராக்கிடும்.
அடுத்ததாய், அம்னோடோமி (Amniotomy) எனும் மெத்தட்டாகும் (method). இதை பனிக்குடம் உடைத்தல் எனலாம். ஒரு சிறிய பிளாஸ்டிக் கொக்கியைப் பயன்படுத்தி யோனி பரிசோதனையின் போது மருத்துவர் நீர் கொண்ட பனிக்குடத்தை உடைத்து பிரசவ வலியை வரவழைத்திடுவர்.
பிட்டோசின் (Pitocin) மருந்தானது இடுப்பு வலியை தூண்டுவதற்கு ஐ.வி. (IV) மூலம் கர்ப்பிணிகளுக்கு கொடுக்கப்படும். இதன் மூலம் ஆக்ஸிடாஸின் (oxytocin) என்ற ஹார்மோன் செயற்கை பிரசவத்திற்கு அவர்களின் உடலை தயார்படுத்திடும்.
தமிழ் இதில் விசாகாவிற்காக தேர்ந்தெடுத்திருந்தது என்னவோ பிட்டோசின் மருந்து வழி
யே. ஆனால், குழந்தையின் நிலை மோசம் கொள்ள தமிழ் சிசிரியேன் ஆப்ஷனை கையிலெடுத்திருந்தான்; தாயையும் சேயையும் காப்பாத்திட.
லேடி பீஸ்ட்டின் பிக் பாஸ் நான்..
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.8/

Author: KD
Article Title: அத்தியாயம்: 12
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.