What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
416

அத்தியாயம் 44

ஏசி அறையில் குளித்திருந்தாள் குஞ்சரி. டைரியின் முதல் பக்கமோ அச்சங்கொண்ட ஆயிழையை ஏளனமாய் பார்த்து சிரித்தது.

''கொலைகாரி! செத்திடு! பொய்க்காரி! செத்திடு! ரீசன் உனக்கில்லே! செத்திடு! வா! வந்து தூக்கு போட்டுக்கோ! வா! வா! சீக்கிரம் வா!''

அசரீரியாய் குரலொன்று கேட்டது கோமகளின் காதுக்குள்.

''இல்லே! இல்லே!!''

என்றவளோ காதை பொத்திக் கொண்டாள் இருக்கைகளால் கண்களை மூடி.

''ரீசனுக்கு உன்னே பிடிக்காது! ரீசன் உன்னே வெறுத்துட்டான்! நீ உயிரோட இருக்காதே குஞ்சரி! செத்திடு! செத்திடு குஞ்சரி செத்திடு! தூக்கு போட்டுக்கோ! வா! வா! வந்து செத்திடு! வா!''

யாரோ அவளின் செவிப்பாறைகள் கிழியும் அளவுக்கு கூச்சல் கொண்டனர் கோதையவளை தற்கொலைக்கு தூண்டி.

''இல்லே!!''

என்றவளின் பெரும் அலறலில் தெரித்தெழுந்தான் ரீசன்.

''குஞ்சாய்! குஞ்சாய் என்னாச்சுமா!''

என்றவனோ பொண்டாட்டியை இழுத்தணைத்துக் கொண்டான் காரிகையின் நிலைக்கண்டு.

தலையணையில் முகம் புதைத்து ஒளிந்திருந்தவளோ கணவனின் நெஞ்சம் சேர்ந்த நேரத்தில் ஆணவனின் முகத்தை ஏறெடுத்து பார்த்து சந்தேகம் தீர்த்து கொண்டாள்.

''ரீசன்! ரீசன்! உனக்கென்னே பிடிக்கலையாடா! நீ என்ன லவ் பண்ணலையா! என்ன வெறுத்திட்டியா நீ! சொல்லுடா! சொல்லு!''

கணவனின் முகத்தை வலுவற்ற ஒற்றை கரத்தால் தொட்டு தடவியவளோ கதறினாள் ஆணவனின் வெறுப்பின் உட்சத்தை முன்னமே உணர்ந்தவள்.

''நீதாண்டா குஞ்சாய் என் உலகம்! நீதான் என் உயிர்! நீ இல்லாமே நான் இல்லடா செல்லம்! ஐ லவ் யூ டா! ஐ லவ் யூ!''

சொன்னவனின் உதடுகளோ அதோடு நில்லாது நித்திலப்பூ அவளின் முகம் முழுதும் காதலை உணர்த்தி உல்லியவளை சமாதானப்படுத்தியது.

தற்கொலைக்கு முயன்று உயிர் பிழைத்த குஞ்சரிக்கோ அன்றைக்கு பிடித்தது ஜென்ம சனி நோயென்ற பெயரில் பார்டர்லைன் பார்சினாலிட்டி டிசோடர் மூலமாய்.

இந்நோயை ஆளுமைக் கோளாறு என்பர் தமிழில். சுருக்கமாக மனநலக் கோளாறில் இதுவும் ஒன்று அவ்வளவே.

குஞ்சரி மற்றவர்களை பற்றி என்ன நினைக்கிறாள், ஏன் அவளைப் பற்றியே கூட அவள் என்ன சிந்திக்கிறாள் எனும் விதத்தை பாதிப்பதுதான் இந்த பி.பி.டி. டிசோரடரின் மெயின் வேலை.

இதனால் பாதிக்கப்பட்ட குஞ்சரியின் அன்றாட வாழ்க்கையோ நாளொன்றுக்கு ஆயிரம் பிரச்சனைகளை ஏற்படுத்தி வேடிக்கை காட்டியது.

அவளின் இயலாத நிலையை நினைத்தும், விளங்காத கைகால்களை பார்த்தும், உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் கட்டுப்படுத்திட முடியாது வாழ்வதற்கே வெறுப்பு கொண்டாள் ரீசனின் குஞ்சாய்.

பயம் அதிகரித்து உளறினாள் குஞ்சாய். தனிமையையே பெரிதும் விரும்பினாள் குஞ்சாய். கீத்துவை துரத்தியடித்தாள் குஞ்சாய். ரீசன் மட்டுமே போதுமென்றாள் குஞ்சாய்.

நேரங்கெட்ட நேரத்தில் காரணமேயின்றி கோபங்கொண்டாள் காரிகையவள். மனக்கிளர்ச்சியில் ரீசனை தகாத வார்த்தைகளால் கொச்சைப்படுத்தினாள். பல வேளைகளில் பிஸிக்கல் அபியூஸ் கூட செய்தாள் கைக்கு எட்டியதை தூக்கியடித்து.

பல காயங்களை அவனுக்கு தந்த போதும் எங்கே விட்டு போயிடுவானோ என்ற இனம் புரியா உணர்வில் அடிக்கடி அவனோடு உணர்ச்சியற்ற உறவில் ஈடுப்பட்டாள். பொய்யாய் உச்சம் ஏய்தாள்.

காதலித்து கரம் பிடித்தவனை தக்க வைத்திட குஞ்சரியால் செய்ய முடிந்த ஒரே விடயம் யாதெனில் இருக்கின்ற உடலை தாரை வார்ப்பதுதான் என்று குஞ்சாய் நினைத்தாள், அது தவறென்றும் புரியாது; ரீசன் அவள் மனதை விரும்பினானே ஒழிய உடலை அல்ல என்பதை மறந்து.

காரணம் நங்கையவள் நன்றாக இருந்திருந்தால் ரீசனுக்கு வாய்க்கு ருசியாக சமைத்து போட்டிருப்பாள், அவனுக்கு என்ன வேண்டுமோ எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்திருப்பாள்.

ஆனால், இப்போதோ ஒன்றுக்கும் உதவாத வெறும் கழுதையாய் பாரமான உடலை சுமந்து வெறுமனே கிடக்க வேறென்னே சிந்திக்க தோன்றிடும் அபலையவளுக்கு.

பொண்டாட்டி கிளியாட்டம் இருந்தாலே குரங்காட்டம் வப்பாட்டியை தேடி ஓடும் ஆண்கள் சூழ் உலகில் இப்படி பாதி உடம்பு சும்மாவே கிடப்பவளை ரீசன் சீண்டிடாமலே போயிடுவானோ என்ற வில்லங்கமான யோசனையெல்லாம் சுந்தரியவள் மூளையை நாராசம் செய்தது.

எங்கே கணவனவன் கை நழுவி போயிடுவானோ என்ற அச்சத்தில் வலுக்கட்டாயமாக ரீசனை ஓரல் உறவில் உட்படுத்தினாள் குஞ்சரி. அவன்பால் கொண்ட காதலையே அதற்கு காரணமாய் காட்டினாள் மடச்சி. அதுவெல்லாம் வேண்டாம் அவசியமில்லை என்றவனோடு வாக்கு வாதம் புரிந்தாள் கோணிய வாயோடு நாச்சி.

அப்படியான உறவில் விருப்பமில்லை என்றவனோ மனைவியை பேசி சமாளிக்க பார்க்க மோகமும் ஆசையும் ஊனமுற்றவளின் மீது எப்படி வரும் என்ற வேட்டாளோ காரணமேயற்ற விதண்டாவாதத்தை ஆரம்பித்து கோபங்கொண்டாள்.

அதன் விளைவாக சண்டை சமாதானமாகும் முன்னரே சக்கர நாற்காலியிருந்து கீழே விழுந்து மேலும் அடிப்பட்டு போனாள் கோமகளவள்.

சிகிச்சையும் மருந்தும் அவ்வப்போது கைக்கொடுத்து வந்தாலும் அதற்கு துளியும் முயற்சிக்காத குஞ்சரியை இந்நோயிலிருந்து வெளிக்கொண்டு வருவது மிகவும் கடினம் என்று மருத்துவர்கள் கையை விரித்து விட்டனர்.

சுற்றி இருப்போர் மட்டுமே ஆடவள் அவளின் குணத்திற்காக பாடுபட்டால் பத்தாது அவளும் அதற்கு கொஞ்சமேனும் விருப்பம் கொண்டிட வேண்டுமென்பது மருத்துவர்களின் வாதம்.

ரீசனும் எவ்வளவோ பேசி பார்த்து விட்டான் அவன் ஆசை மனைவியிடத்தில். இருந்தும் ஒரு புரோஜனம் இல்லை.

அம்மணியவள் தீனரீசனின் மீது கொண்ட கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் உடைந்து நொறுங்கியது ஆணவன் உரைத்த மெய்யால்.

லேடி பாஸின் பிக் பாஸ் நான்…

முந்தைய அத்தியாயங்களை படிக்க:

https://amydeepz.com/forums/லேடி-பீஸ்ட்டின்-பிக்-பாஸ்-நான்.8/
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 44
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top