What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
460
அத்தியாயம் 45

விசா வீட்டை விட்டு வெளியேறிடும் முன் விஷத்தை கக்கியிருந்தாள் வார்த்தைகளால்.

செருப்பால் அடிக்காத குறையாய் குமரியவள் ரீசனை கோழை என்று முத்திரைக் குத்தி ஆணவனுக்கு சவால் விடும் கணக்காய் அவர்களுக்கிடையே நடந்த இரண்டாவது முயங்கலே பெண்ணவளின் இப்போதைய குழந்தைக்கு காரணமென்பதை ஆணவனால் நேரடியாக குஞ்சரியிடத்தில் சொல்லிட முடியுமா என்று பல்லு மேல் நாக்கு போட்டு அவனை அசிங்கப்படுத்த, அதை பொருத்திட முடியாதவனோ யானையாட்டம் அவன் தலையிலேயே மண்ணை வாரி போட்டுக்கொண்டான் அவசரப்பட்டு.

மனதாலும் உடலாலும் நொந்து போயிருந்த குஞ்சாயிடம் கணவன் ரீசனோ வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது மதம் பிடித்த யானையாய் புத்தியற்று நடந்த உண்மைகளை போட்டுடைத்தான்.

வருங்காலத்தில் இவ்விடயம் மற்றவர்கள் மூலமாய் குஞ்சரியவள் அறிந்திடும் முன் ரீசனே முந்திக் கொண்டான் நடப்பதை பார்த்துக் கொள்ள ரெடி எனும் மைண்ட் செட்டுக்கு தயாராகி.

விஷயம் அறிந்த அரிவையோ ஆடிப்போனாள். அன்பு அலைக்கழிக்கப்பட்டதாய் உணர்ந்தாள். சில நாட்களுக்கு அவனிடத்தில் பேசிடாமலே இருந்தாள். கண்ணீரும் கடவுளும் மட்டுமே கோதையவளுக்கு துணையாய் இருக்க டிசோடார் மேலும் முத்தி போனது.

இனி வாழ்வதில் அர்த்தமில்லை என்றுணர்ந்தவளோ மீண்டுமொரு தற்கொலைக்கு துணிந்தாள்.

குளியலறை செம்பூவை வாயில் கொட்டி பரலோகம் போக பார்த்தாள். தலையை சுவற்றில் இடித்துக் கொண்டாள். ஒற்றைக் கைக்கொண்டு நாடியை அறுத்துக்கொள்ள பார்த்தாள். மெத்தையிலிருந்து தரையில் விழுந்தாள்.

இடைக்கு கீழ் ஏற்கனவே செயலற்று கிடக்க வலியேதும் வதனியவள் உணரவில்லை அவளின் செயல்களால். மனதின் ரணங்களை விட மேல் உடல் கொண்ட வலி ஒன்றும் வஞ்சனிக்கு பெரிதாய் இருக்கவில்லை.

வேதனை தாளாது பலமுறை தற்கொலைக்கு முயற்சித்த இயமானியவள் ஒவ்வொரு முறையும் எமனால் காப்பாற்றப்பட்டாள்.

ரீசன் விட்டு போயிடுவான் என்ற அதீத அவநம்பிக்கையே கணவன் அவன் மீது குஞ்சரிக்கு மேலோங்கி இருந்தது, அதுவும் விசாவுடன் அவனுக்கு குழந்தை ஒன்று இருப்பது தெரிந்த பின்னாடி அதன் வீரியம் அதிகமாகி போனது.

அதற்கு பின்னான நாட்களில் வாழ்க்கை இப்படித்தான் என்று புரிந்துக் கொள்ள ஆரம்பித்தாள் குஞ்சரி தோழி அமராவதி மூலமாய்.

அமராவதி பார்ட் டைம் பிஸியோதெரபிஸ்ட், பகல் நேரத்து சாரீ ட்ராபிஸ்ட். கல்யாணம் ஆகாத முதிர்கன்னி. இருப்பதைக் கொண்டு வாழ பழகிக் கொள்ளணும் என்று அடிக்கடி குஞ்சரிக்கு கிளாஸ் எடுப்பவள்.

சந்தோஷத்தை கொடுக்க முடியாது போனாலும் துன்பத்தை யாருக்கும் கொடுத்திட கூடாது என்று கூட பல வேளைகளில் வலியுறுத்தியிடுவாள் சக்கர நாற்காலி நங்கையவளுக்கு கன்னி கழியாத மங்கை.

ரீசன் துணைவியவளை கண்ணில் வைத்து பார்க்கின்ற அழகை கண் கூடாய் பார்த்த அமராவதியோ ஆணவன் ஊனமுற்ற கிடப்பவளின்பால் எத்துணை அன்பு வைத்திருக்கிறான் என்று புராணம் பாடிட ஆரம்பித்தாள்.

யாரோ ஒருத்தியாய் அறிமுகமாகி பின்னாளில் தோழியாகி போனாள் அமராவதி குஞ்சரிக்கு. முதலில் ரீசனை பற்றி பிஸியோ மேடம் வாய் வலிக்காமல் பேச குஞ்சரிக்கு வழக்கம் போலவே பொறாமை பின் சந்தேகம் பிறகு சண்டைதான் கல்யாணம் கட்டிடாத பெண்ணவளிடத்தில்.

பிறகு, போக போக மனநல மருத்துவரின் கவுன்சலிங் செஷன்ஸ் கூடவே மருந்து மாத்திரைகள் என்பதை தாண்டி ரீசனின் கவனிப்பு பின் அவள் இழுத்த இழுப்பிற்கு அவனின் சாய்வு என்று குலியவளின் மனம் நோகாது நடந்துக் கொண்டான் ரீசன்.

எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருந்தாலும் அவ்வப்போது அந்திகையின் பார்டர்லைன் டிசோர்டர் எட்டிப்பார்த்திடாமல் இல்லை.

நோயின் தீவிரம் கூடிப்போக மனைவியவள் கணவனுக்கு இட்ட முதல் கட்டளையே கீத்துவை மாமியார் மாமனார் பொறுப்பில் விடுவதாகும்.

மம்மி கிம்மி பேச்செல்லாம் ஏதுமில்லை மகளிடத்தில் தாயவளுக்கு. ரீசனிடத்தில் கீத்து போன் பேச ஒப்புக்கு ஆமாம் சாமி போட்டிடுவாள் குஞ்சரி அவ்வளவே.

அடுத்தது அமராவதியை பணியிலிருந்து நிறுத்தி வயதான பாட்டியை ஆயுர்வேத சிகிச்சை செய்ய பிக்ஸ் செய்தாள். வேடிக்கை யாதெனில், பாட்டி வீட்டுக்கு ரீசனும் குஞ்சரியும் சென்றிடுவர்.

வயசான பாட்டியாகினும் வீட்டுக்கு வந்து சிகிச்சை செய்திட குஞ்சரி ஒப்புக்கொள்ளவில்லை. மாறாக, பாட்டிக்கு பெண் பிள்ளைகள் யாருமில்லை என்றறிந்த பின்னரே அவரையே புக் செய்தாள் குஞ்சரி.

இதுவெல்லாம் போக வீட்டை சுத்தம் செய்து சமையல் செய்ய வயதான வேற்று மதத்து பெண்ணை நியமித்தாள். அதுவும் ரீசன் குளிக்கின்ற கேப்பில் அவர்களின் அறையை வேலைக்காரியவள் சுத்தப்படுத்திட வேண்டும்.

ஆகமொத்தம் புருஷனை யார் கண்ணிலும் காட்டிடாது பத்திரமாக கைக்குள்ளேயே வைத்துக்கொள்ள முனைந்தாள் குஞ்சரி. ரீசன் வேலை சம்பந்தமாய் எங்கு சென்றாலும் அங்கு குஞ்சரி இருப்பாள்.

ரீசன் பத்து நிமிடம் பெட்ரோல் நிலையத்தில் வாஷ் ரூம் சென்று வர தாமதித்தாலும் கூட எங்கே விட்டு சென்று விட்டானோ என்ற பயம் அவளை தொத்திக் கொள்ளும். கூடவே, அவள் அழைத்து அவன் எடுத்திடாவிட்டாலும் எங்கே விலகுகிறானோ என்று கற்பனை அவளுக்குள் ஊற்றெடுக்கும்.

சில வேளைகளில் அவள் இப்படி ஆவதற்கு ரீசனே காரணமென்று சொல்லி அவனை வேண்டாம் என்பாள் குஞ்சரி. அவனை பெரிதும் அலட்சியப்படுத்திடுவாள்.

ஆணவன் சோறு ஊட்டினால் முகத்தில் துப்பிடுவாள். காஃபி கிளாஸை தட்டி விட்டிடுவாள். சும்மாவே காரி உமிழ்ந்திடுவாள். அவனின் முகம் உடல் என்று உடல் அங்கங்களில் கையால் அடித்து சிவக்க வைத்திடுவாள். முத்தி போக நகத்தால் கீறி ரத்தங்கூட வர வைத்திடுவாள்.

எல்லாம் முடிய தூங்கி எழுந்தவளாட்டம் கத்தி கதறிடுவாள் பக்கத்தில் அவனில்லாமல் போனாள் சடீரென்று. இத்தனைக்கும் ரீசன் பால்கனியில் நின்று சிகரெட்தான் குடித்துக் கொண்டிருப்பான்.

சுயமாகவே ஒற்றை கைக்கொண்டு குழலை கோணல் மாணலாக வெட்டிக் கொள்வாள். மேக் ஆப் சாதனங்கள் கொண்டு முகத்தை அலங்கோலப்படுத்திக் கொள்வாள். லிப்ஸ்ட்டிக் கொண்டு சுவர்களை கிறுக்கிடுவாள்.

ரீசன் விருந்தினை அவளை சுத்தம் செய்ய, விடாது தடுத்து கணவனை உறவுக்கு அழைத்திடுவாள். கிளீன் ஃபர்ஸ்ட் என்பவனையோ வார்த்தைகளால் வேதனை படுத்திடுவாள்.

அழகு பார்க்கிறாய் என்று அவனை விரட்டி அலறிடுவாள். பின், வீல் சேரிலிருந்து கீழே விழுந்து ரீசனின் கால் பிடித்து கதறிடுவாள்.

தேவையற்றது என்றறிந்தும் அழகழகான ஆடைகளை வாங்கி குமிப்பாள் வதுகையவள். ரீசனை உடுத்தி விட சொல்லி கேட்பாள். பிறகு, செல்ஃபீ பிடித்து படங்களை கழுவி சுவற்றில் மாட்டிடுவாள்.

கற்பாள் அவளின் மன அழுத்தம் அதிகமாக சாப்பிட வைத்தது வதூ அவளை. உடல் எடை கொஞ்சங் கூடினாலும் அடுத்த நாளே உணவுக்கு கட் சொல்லி வெறும் தண்ணீர் மட்டுமே குடித்திடுவாள் ஊடையவள். ரீசன் எடுத்துரைத்தால் போதும் எரிச்சல் கொண்டு கடுப்பாகிடுவாள்.

சண்டை சச்சரவெல்லாம் போக சில சமயங்களில் அதீத மகிழ்ச்சியாய் இருப்பாள் அகமுடையாளவாள். குறிப்பாய், தீனரீசனோடு முகிரம் கொண்டு திளைத்த பின்னாடி. அன்றைய நாள் தொடங்கி மறுநாள் வரை அவனுடனேயே கழிப்பாள் கள்ளி, குளிப்பது உண்பது என்று எல்லாவற்றையும்.

இப்படி நிலையற்ற மனநிலை கொண்ட காதல் மனைவி குஞ்சாயோடு கணவன் ரீசன் அடுத்த நாள் என்ன நடக்கும் என்றறியா சஸ்பென்ஸ்சான வாழ்க்கையையே வாழ்ந்து வந்தான்.

லேடி பாஸின் பிக் பாஸ் நான்…

முந்தைய அத்தியாயங்களை படிக்க:


https://amydeepz.com/forums/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.8/
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 45
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top