- Joined
- Jul 10, 2024
- Messages
- 460
அத்தியாயம் 48
கொண்டாட்டம் இல்லா கல்லூரி ஏது. ரீசனின் காலேஜிலும் அப்படியான கோலாகலம் ஒன்று அரங்கேறியது பட்டமளிப்பு விழா என்ற பெயரில்.
அதுவும் வெவ்வேறு மாநிலங்களில் இயங்கும் அக்கல்லூரியின் கீழ்நிலை கல்வி கூடங்களில் பயில்கின்ற மாணவர்களுக்கும் தலைமை கல்லூரியில்தான் கான்வகேஷன்.
ஆகையால், ரீசனின் கல்லூரி கடந்த மூன்று நாட்களாகவே செம்ம ஹெப்பனிங்காக இருந்தது.
இருப்பினும், அச்சந்தோஷம் என்னவோ கல்லூரியிலிருந்த மற்றவர்களுக்கு மட்டுமே என்பது போல ஓடோடி வந்தாள் மயிலினி லேடிஸ் வாஷ்ரூமின் பின் பக்கத்திலிருந்து.
மாணவ சிப்பிகள் அலைமோதிய கூட்டத்துக்குள் நுழைந்த பெண்டு அவளோ தேடி அலைந்தாள் ரீசனை. கண்ணில் சிக்கிடவில்லை காதலனின் தம்பியவன்.
மனதிலிருந்த பயம் காலின் நுனி விரல் வரை பரவியிருக்க ஒளிந்து மறைந்து தேடினாள் அளகவள் ரீசனை. ஆணவனோ வழக்கம் போல் அவன் குடிக்கொள்ளும் பைக் பார்க் தொடங்கி காண்டீன் வரை எங்குமில்லை.
தேடியவன் கிடைக்காத பட்சத்தில் அவனின் உரிமைக்காரியான குஞ்சரி தென்பட்டாள் ரீசனின் வருங்கால அண்ணி மயிலினியின் கண்களில். நிம்மதி பெருமூச்சுக் கொண்ட கோதையோ அம்பகங்களில் நம்பிக்கைக் கொண்டு ஓடினாள் சீனியர் தேவகுஞ்சரியை நோக்கி.
ரேகிங் குழுவோடு கொட்டம் அடித்தாற்படி கொரிடோரில் நடந்து வந்து கொண்டிருந்த குஞ்சரியை வழி மறைத்தாள் மயிலினி. திணித்தாள் மடல் ஒன்றை முன்னிருந்த காரிகையின் உள்ளங்கையில் அபலையவள்.
ஜால்ரா கூட்டமோ நடந்த சம்பவத்தில் மயிலினி பக்கம் எகிற, பேதையவளோ கண்களில் கண்ணீர் தாரையாய் வழிய இருக்கரங்களையும் கூப்பி கதறினாள் குஞ்சரியிடத்தில்.
புரியாதவளோ அழுகைக் கொண்டவளை எச்சில் இலையாய் நோக்க, வாய் பேசா பூச்சு மயிலினியோ சுற்றி முற்றி ஒருமுறை பயத்தோடு சுற்றத்தை நோட்டமிட்டு மீண்டும் திரும்பி சைகை கொண்டாள் குஞ்சரியிடத்தில் கரங்கொண்டிருக்கும் கடிதத்தை சேர வேண்டியவனிடம் சேர்த்திட சொல்லி.
மௌன மொழி விளங்காது குஞ்சாரி சலிப்பு மிக்க முக இறுக்கம் கொள்ள, கண்ணீர் ஆர்ப்பரித்த இயமானியின் விலோசனங்களோ அகல விரிந்தன. இமைகள் இமைக்காதவளின் நயனங்களோ காண்பித்துக் கொடுத்தது விறலியவளை துரத்துகின்ற ஆபத்தை.
ஓடினாள் மயிலினி அங்கிருந்து மேற்கொண்டு ஏதும் விவரிக்க முடியாது குஞ்சரியிடம்.
நடந்தவைகள் அனைத்தும் மின்னலாட்டம் இருக்க,
''யார் இவே! என்ன லெட்டர் இது! இதை எதுக்கு என்கிட்ட கொடுத்திட்டு போறா! அதுவும் அழுது சீன் போட்டு!''
குஞ்சரி அவளின் ஜிங்ஜாச்சா குரூப்பிடம் கேள்விக் கேட்டப்படி மயிலினி தந்து போன மடலை கையிலெடுக்க, லெட்டரின் முகப்பே கன்னியவளை கண்ணகியாக்கியது.
லேடி பாஸின் பிக் பாஸ் நான்…
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.8/

Author: KD
Article Title: அத்தியாயம்: 48
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.