- Joined
- Jul 10, 2024
- Messages
- 460
அத்தியாயம் 50
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் மட்டுமல்ல காதலும் நஞ்சுதான்.
ரீசனின் மீது குஞ்சரிக் கொண்ட பைத்தியக்காரத்தனமான அன்பும் அப்படித்தான்
கடிதத்தில் வரிக்கு வரி மயிலினி எழுதி வைத்திருந்த தீனா என்ற மூன்றெழுத்து வார்த்தை, தேவகுஞ்சரியின் தீனரீசன் என்று பெண்டு அவள் தவறாக புரிந்துக் கொண்டாள்.
விஜய் அண்ட் கோஸ் தொடங்கி குஞ்சரிக்கு ஜால்ரா அடிக்கும் கூட்டம் வரை ஜாடிக்கேத்த மூடியாய் பெண்ணவளின் அவசரமான குற்றசாட்டிக்கு ஒத்து ஊதினர்.
நாயகியவள் வில்லியாகி போனாள் மயிலினியின் வாழ்க்கையில். சரி தவறென்று பாராது மனசாட்சியை ஓரம் ஒதுக்கி ஈனச்செயலில் ஈடுப்பட துணிந்தாள். அதற்கான ஏற்பாடுகளையும் விஜயின் உதவியுடன் செய்து முடித்தாள்.
புள்ளத்தாச்சியைக் கொண்டு மதங்கியவள் தீட்டியிருந்த திட்டத்தை செயல்படுத்திடும் முன்பு கூட குஞ்சரிக்கு தோன்றிடவே இல்லை ஒரு வார்த்தைக் இதுப்பற்றி ரீசனிடத்தில் வினவிட.
ஏன், குஞ்சரி அவள் மூச்சு கூட விட்டிடவில்லையே காதலனிடம் அரங்கேறியிருந்த சம்பவத்தை பற்றி.
எப்படி கேட்டிடுவாள் ரீசனின் குஞ்சாயவள் விதிவிலக்கான காதலியாக இருக்கின்ற பட்சத்தில்.
படிக்கின்ற காலக்கட்டத்தில் ஏன் இப்போதுமே கூட கண்ணை மூடிக்கொண்டு காதல் மனைவியவள் கடந்து போக பார்க்கும் விடயம் இதுவொன்றே.
அதாவது, பெதும்பை அவளை பொறுத்தமட்டில் ரீசன் இந்த மயிலினி மட்டுமில்லை எத்தனை பெண்களோடு இருந்தாலுமே சரி அவனின் மூன்று முடிச்சுக்கும் மனசுக்கும் தேவகுஞ்சரி ஒருத்தியே சொந்தமாகிட வேண்டும்.
எக்காரணத்தைக் கொண்டும் உடல் இச்சை இருவரின் காதலுக்கும் முற்றுப்புள்ளி வைத்திடக் கூடாதென்று மிகவும் உறுதியாக இருந்தாள் இயமானியவள்.
ஆண் என்பதால் அதுவும் தான் காதல் கொண்ட தீனரீசன் எப்படி வேண்டுமென்றாலும் வரைமுறையற்று இருக்கலாம், அதைப்பற்றியெல்லாம் அந்திகையவளுக்கு கவலை இல்லை.
ஆனால், எவள் ஒருத்தியும் குஞ்சரியின் உயிரான ரீசனை உறவாடிக்கொண்டு வந்திடக் கூடாது. அத்தடையை தகர்த்திட எந்த எல்லைக்கும் போக தயங்கிட மாட்டாள் குஞ்சரி.
அதற்கு சான்றாய் ரீசனின் கிளாஸ் மேட் பிரேமி ஆணவனின் பிரண்ட்லியான பழகளில் ஒருநாள் குஞ்சரி கேட்க கிண்டலாய் சொன்னாள் ரீசனை கட்டிக்கொள்ள ஆசைத்தான் என்று.
வைத்தாள் அவளுக்கொரு செக் நக்கலாய் சிரித்த குஞ்சரி. பாவம் சொன்னவள். பேதையவள் அறியவில்லை வினவியவள் வராகியம்மன்னென்று.
மறுநாளே பிரேமி கல்லூரிக்கு டாட்டா காட்டினாள், குறிப்பாய் ரீசன் அறிந்திடாமலேயே. எல்லாம் முந்தைய நாள் குஞ்சரி தனியே கூட்டிப்போய் காட்டு காட்டென்று அன்பை காட்டிய திகட்டலில்தான் உடனடி வெளிநடப்பே.
நன்றாய் பழகிய தோழி காரணமின்றி கிளம்பிட, அப்போது கூட ரீசனுக்கு தெரியவில்லை அதற்கு காரணம் அவன்பால் காதல் கொண்டு திரியும் குஞ்சரிதான் என்று.
அப்படியென்ன செய்து விட்டாள் காதல் பித்து கொண்ட தேவகுஞ்சரியவள் என்று கேட்டாள், என்ன செய்யவில்லை மவராசியவள் என்றுதான் மறுக்கேள்வி கேட்டிட வேண்டும்.
அத்தனை அழிச்சாட்டியங்களையும் பட்டியல் போட்டால் எல்லாவற்றிக்கும் பதில் தீனரீசனே.
விஜயின் உதவியோடு அவன் கோஷ்டி ஆட்களால் கடத்தி வரப்பட்டாள் பிரேமி வகுப்புக்கு வரும் நேரம் பார்த்து. சிறை வைக்கப்பட்டாள் பெண்ணவள் கிடப்பில் போடப்பட்ட குஞ்சரியின் டேடிக்கு சொந்தமான ஆளில்லா பழைய தொழிற்சலை ஒன்றில்.
மயக்கத்தில் கிடந்தவள் மீதோ ஆசிட்டை ஊற்றுவதை போல் குளிர்ந்த நீரை ஊற்றி அவளை பயங்காட்டினாள் குஞ்சரி. பைத்தியம் முத்திய குஞ்சரியோடு சேர்ந்து கொட்டம் அடித்தனர் விஜயின் கூட்டமும் ஆயிழையவளின் குழுவும்.
மனசாட்சியற்ற கொடூர செயலால் நடுங்கி அலறிய பிரேமியோ கெஞ்சி கதறினாள் குஞ்சரியிடம் விடுதலை கோரி. காதல் முத்திய குஞ்சரியோ எட்டு மணி நேரம் அபலை பிரேமியை ஐஸ் தண்ணீரில் குளிப்பாட்டி எடுத்து பின் விடுவித்தாள் முக்கியமான இரு கண்டிஷன்களோடு.
வாக்குறுதி அளித்தாள் வதைப்பட்டவள் வஞ்சினியவள் ரீசனை இனி வாழ்நாளில் பார்த்திடாவே மாட்டேன் என்று. அப்படியே குஞ்சரியின் கட்டளைப்படி மறுநாளே ஊரை விட்டு போவதற்கும் ஆமோதித்தாள்.
சத்தியங்கள் மீறப்பட்டால் கன்னியவளின் கலைந்த ஆடைகள் கொண்ட அந்தரங்க காணொளியோ உலக பதிவாகிடும் என்று மிரட்டலுடன் கூடிய எச்சரிக்கையை விடுத்தாள் குஞ்சரி.
வாயடைத்து போன பிரேமியோ நெஞ்சை கல்லாக்கி கொண்டாள் சம்பவங்களை அவளுக்குள்ளேயே பூட்டி வைத்து. ரீசனுக்காய் பரிதாபப்பட்டவளோ சொல்லிக் கொள்ளாமலே போனாள் ஊரை விட்டு.
லேடி பாஸின் பிக் பாஸ் நான்…
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.8/

Author: KD
Article Title: அத்தியாயம்: 50
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.