What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
460
அத்தியாயம் 51

தலைநகரில் குஞ்சரியின் காதல் பேயாட்டம் ஆட, கிராமத்திலோ ரீசன் குடும்பத்தோட குழலை போட்டுக் கொண்டிருந்தான்.

காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பறக்கும் சின்னவனுக்கு விபத்து ஏற்படுவது போல பெற்றவர் கனவு காண, தகவலறிந்த பாட்டியோ குலதெய்வத்துக்கு நேர்த்திடக்கடன் செலுத்திட சொன்னார்.

பொஞ்சாதியவர் வாத்தியிடம் கூற அவரோ அடுத்த மாதம் பார்த்துக் கொள்ளலாம் என்றார். செல்ல மகனின் அம்மாவிற்கோ கோபம் பொத்துக் கொண்டு வர வீட்டு கிச்சனுக்கு மூன்று நாட்கள் லீவு விட்டாச்சு.

வேறு வழியில்லாது வாத்தியார் மனைவியின் வழிக்கு வர குடும்பமாய் கிளம்பினர் பாட்டி வீட்டுக்கு. மகன்களில் மூத்தவன் இதை அறிந்திருக்க சிரியவனோ அம்மாவின் வார்த்தைகளை பெரிதாய் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

ஆகமொத்தம் ஊருக்கும் ரெடியாகும் போதுதான் குதிகுதியென்று குதித்தான் ரீசன். இருந்தாலும், கொஞ்சம் நிம்மதிக் கொண்டான் குஞ்சரியின் லவ் டாச்சரிலிருந்து தப்பித்ததை எண்ணி.

தகவலின்றியே காணாமல் போனான் ரீசன் ரகசியமாய் குறிப்பாய் குஞ்சரி கண்ணில் சிக்கிடாமல் எமர்ஜன்சி லீவு சொல்லி பேராசிரியர்களிடம் மட்டும்.

ஆனால், பெரியவனுக்கோ கதையே வேறு. ஏன் போக வேண்டும் என்றிருந்தது. ஒருநாள் கூட ஜோடி கிளிகள் இருவரும் பார்த்து கொள்ளாமல் இருந்ததே இல்லை.

இருப்பினும், தம்பிக்காக வருகின்ற இரு நாட்களை தானமாக்கிடத்தான் வேண்டும் என்ற கட்டாயத்தின் பேரில் குடும்பத்தோடு பாட்டி வீடு செல்ல சம்மதித்தான் ஆணவன்.

ஆகவே, கிளம்பிடும் முன் காதல் காரிகை மயிலினை சந்தித்து பல கட்டிப்பிடி வைத்தியங்கள் தொடங்கி முத்த ட்ரீட்மெண்ட் வரை கொடுக்கல் வாங்கல்களை சரியாய் நிகழ்த்திய பின்னரே பயணத்தை மேற்கொண்டான்.

அம்மாவின் கூற்றுப்படி இரண்டு நாட்களில் மீண்டும் சிட்டிக்கு திரும்புவதுதான் பேசி வைத்த பிளான். ஆனால். போன இடத்திலோ நடந்ததே வேறு.

சின்னவனுக்கு பெரிதாய் சாமி கும்பிடும் ஆர்வமெல்லாம் இல்லை. அம்மாவிற்காக வந்திருந்தான் என்றே சொல்லிட வேண்டும். அவனின் போதாத காலம், காளையவன் அடித்த கிண்டல் கேலியில் கொதித்த பூவாத்த ஆணவன் உடலில் பொங்கி விட்டாள்.

கிழிஞ்சது போ அவ்வளவுதான் எனும் சூழ்நிலை கைதியாகி போனான் தீனவானன். தம்பிக்கு குணமாகாமல் யாரும் ஊர் எல்லையை தாண்டலாகாது என்று பாட்டி போட்டார் பார் ஒரு போடு, இடிவிழுந்த கணக்காய் ஆடிப்போனான் பெரியவன்.

வர மாட்டேன் என்றவனை ரெண்டு நாள்தானே வாடா என்று சாக்கு போக்கு சொல்லி இழுத்து வந்த அம்மாவின் மண்டையில்தான் அப்போதைக்கு பெரிய பாராங்கல்லை இறக்கிட தோன்றியது மயிலினியின் காதலனுக்கு.

கிராமத்தில் ஏசியில்லை என்றால் பரவாயில்லை, கிரகம் போன் லைன் கூட ஒரு பார் காட்டிடவில்லை.

தீனவானனாவது ஓரளவுக்கு காடு மேடென்று சுற்றி திரிந்து சமாளித்தான். ஆனால், எலும்பனுக்குத்தான் ஒன்றும் முடியவில்லை. கிளம்புவதில்லையே குறியாய் இருந்தான்.

பாட்டியோ தினம் நூறு வசைகளை அவனுக்காகவே ரிசர்வ் செய்து வைத்திருந்தார். பேரனவன் அடிக்கின்ற கூத்திற்கு நேரம் பார்த்து டோஸ் விட.

முதல் மூன்று நாட்கள் கடக்க அண்ணன் தம்பி இருவரும் டொங்கி கார்ட் விளையாடியதுதான் மிச்சம்.

இந்நாட்களில்தான் ரீசன் அவன் பின்னாடியே சுற்றி திரியும் சீனியர் குஞ்சரியை பற்றி அதிகமாக நினைக்கலானான். அப்படி என்ன இருக்கிறது அவனிடத்தி இவள் குட்டி போட்ட பூனையாய் சுற்றி வர என்று யோசித்து குழம்பியவன் அப்படியே தூங்கிப் போனான்.

தம்பி இப்படியென்றால் அண்ணனோ லைன் இல்லா ஊருக்குள் சிக்குண்டு தவியாய் தவித்தான் எப்போது கிளம்பிடுவான் என்று நாட்களை எண்ணிக் கொண்டு.

அரைமணி நேரம் லோட்டானாலும் பதறிடுவாள் பாவையவள் சந்திக்கின்ற பொழுதுகளில். இப்போதோ மூன்று நாட்கள் கடந்தாயிற்று மயிலினுக்கு காதலனிடமிருந்து ஒரு தகவலும் இல்லை.

என்ன செய்கிறாளோ, சாப்பிட்டாளோ இல்லையோ, எப்படி துடித்து போயிருக்கிறாளோ என்று அவனின் காதலி நினைப்பாகவே கவலைக் கொண்டான் தீனவானன்.

ரீசனோ இடைப்பட்ட நாட்களில் குஞ்சரி அவனுக்கு அனுப்பிய குறுஞ்செய்திககளை மிண்டுமொருமுறை வாசித்திட ஆரம்பித்தான். அவசரத்தில் அப்போது அவதியாய் போதியாய் படித்து கடுப்போடு பதிலளித்தவன் இப்போதோ அவைகளோடு ஆர்வத்தோடு உலா கொண்டான்.

கொஞ்சங் கொஞ்சமாய் ரீசனுக்காக அந்திகையவள் கொண்ட மாற்றங்களை எண்ணி பார்த்து சிரித்துக் கொண்டான் ஆணவன். இரவுகளிலோ குஞ்சரி முன்னாளில் அனுப்பிய அவளின் பல புகைப்படங்களை மெது மெதுவாய் உரிமையோடு ரசித்திட ஆரம்பித்தான்.

அன்றைக்கு பிரேமிக்கான அசம்பாவிதம் நடக்கையிலும் சரி இன்றைக்கு மயிலினி லெட்டர் கொடுக்கையிலும் சரி தீனரீசன் குடும்பத்தோடு பாட்டி வீட்டிற்கு சென்றதுதான் பலர் வாழ்வு தடம் மாறி போக காரணமானது.

லேடி பாஸின் பிக் பாஸ் நான்…
முந்தைய அத்தியாயங்களை படிக்க:


https://amydeepz.com/forums/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.8/
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 51
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top