- Joined
- Jul 10, 2024
- Messages
- 460
அத்தியாயம் 55
இருள்வலி வந்தான்.
ஐயர் ஜெகநாதன் வீடோ விரிச்சோடி கிடந்தது. பெண்ணை காணாது அண்ணன்மார்கள் இருவரும் தீனவானன் மனை நோக்க, அங்கோ பக்கத்து வீட்டுக்காரர்கள் சொல்லி அனுப்பினர் குடும்பமே ஊருக்கு போய் பத்து நாட்களுக்கு மேலாகி விட்டதென்று தகவலை.
மகளை பெற்றவரே நெஞ்சை பிடித்துக் கொண்டு நாற்காலியில் சாய, அடிமடியில் நெருப்பு கொண்ட தாயோ பூஜை அறையில் சத்தமில்லா ஒப்பாரி கொண்டார். அண்ணிகள் இருவரும் அக்கம் பக்கம் விசாரித்து பலனின்றி புகுந்து வீடு திரும்பினர்.
பெத்தவரோ இனி எக்காரணத்தைக் கொண்டும் அம்மனையில் மயிலினி காலெடுத்து வைத்திடக் கூடாதென்று மனதில் உறுதிக் கொண்டு அதை செயலிலும் காட்டிட முடிவெடுத்தார்.
தாயுள்ளம் பதைக்க, வெற்றிலை கொண்ட வாயை குதப்பிய மாமியாரோ புளிச்சென்ற துப்பலுக்கு பின்னால் தேளாய் தெளித்தார் வார்த்தைகளை ஏற்கனவே காயங்கொண்டிருந்த ஐயர் மகன் ஜெகனின் காதுகளில்.
''அப்பவே சொன்னேன்டா! கேட்டியா நீ! அடுத்தவா வீட்டு புள்ளே நமக்கெதுக்கு வேண்டாம்ணு சொன்னேனேடா! இப்போ பார்த்தியா என்ன காரியம் பண்ணிட்டு போயிட்டா அந்த சண்டாளின்னு!
போக வேண்டிய வயசிலிருந்த பாட்டிமாவோ இதான் சாக்கென்று பிடிக்காத மயிலினியை கரித்துக் கொட்டினார். இப்போது மட்டுமல்ல எப்போதுமே அவருக்கு அந்திகையவளை பிடிக்காது.
''பிறவி ஊமையா இருக்காளே ஊரே கெடுப்பாளேன்னு படிச்சு படிச்சு சொன்னேனேடா! பொத்தி பொத்தி வளர்த்தியேடா ஜெகா! நாலு பேரு சிரிக்க முகத்துல கரிய பூசிட்டு போயிட்டாளே ஜெகா!''
என்ற மடிசார் பாட்டியோ எரிகின்ற சூழ்நிலையில் வார்த்தைகளான எண்ணையே எண்ணையை ஊற்றினார்.
''தப்பெல்லாம் நம்ப மேலதான்! நாமே மட்டும் மயிலினி விரும்பறே அந்த பையனையே அவளுக்கு விவாகம் பண்ண சரின்னு சொல்லிருந்தா என் பொண்ணு இப்படி வீட்ட விட்டு வெளியே போயிருப்பாளா!''
குறுக்கிட்டு அழுத மாமியோ மகளுக்காய் பேசினார்.
''சத்து சும்மா இருக்கியாடி நீ! நோக்கு ஒன்னும் தெரியாது! நாய் வாலே நிமித்த முடியாதுடி! அந்த மாதிரித்தான் இவளும்! ஜெகனோட ரத்தமா இருந்திருந்தா இப்படி பண்ணிருப்பாளா! என்னதான் இருந்தாலும் அவே நம்பாளு இல்லல்லே! நம்ப கோத்திரத்துலே பிறந்திருந்தா இப்படி ஒரு எண்ணம் முதலாவது அவளுக்கு வந்திருக்குமா!''
சும்மாவே பாட்டிக்கு உறவற்ற பேத்தியை பிடிக்காது, இப்போது சொல்லவா வேண்டும். ஊர் வாயிக்கு அவல் கிடைத்தாற்போல பாட்டிக்கு மயிலினியின் இல்லாமை வெற்றிலை கணக்காய் துவர்த்தது.
''என் பொண்ணோட மனசுலே இருக்கற காதலுக்கும் உங்களோட கலாச்சாரத்துக்கும் முடிச்சு போடாதீங்க அத்தை! என் பொண்ணே நான் ஒன்னும் அப்படி தப்பாலாம் வளர்களே!''
என்று மாமியாரோடு மல்லுக் கட்டினார் மாமியவர் மகள் மயிலினிக்காய்.
''வாய மூடுடி பிரியா! நீ வளர்த்து கிழிச்ச லட்சணந்தான் தெரியுதே! நீ மட்டும் சரியா வளர்த்திருந்தா இந்த காதல் கத்திரிக்காயெல்லாம் பண்ணாமே என் பையன் ஜெகா யாரே கை காட்டறான்னோ அவனுக்குள்ளே கழுத்தே நீட்டிருப்பா! பொண்ணே ஒழுக்கமா வளர்க்க துப்பில்லே வந்துட்டா பெருசா பேச!''
''ஐயோ பாட்டி விடுங்க! நீங்களும் அம்மாவும் இப்படி மாறி மாறி பேசறதாலே ஒன்னும் ஆக போறதில்லே! முதல்லே போலீஸ்லே கம்பளைண்ட் கொடுப்போம்! அவுங்களோட அந்த பையன் ஊருக்கு நான் போயிட்டு வறேன்! ஒருக்கால் மயிலினி அதுக்குள்ளாரே வீட்டுக்கு வந்திட்டா எனக்கு தகவல் சொல்லுங்க.. நான் கேஸ் வாப்பஸ் வாங்கிட்டு வந்துடறேன்!''
ஜலத்தில் தொப்பையாகிய ஜெகனோ நடு வீட்டில் உக்ரமாய் வந்து நின்றார் பற்றி எரியும் உள்ளத்தோடு.
''இழவுக்கு எதுக்கு தேடல்! ஸ்ரார்த்தம் கொடுக்கணும்! ஏற்பாடு பண்ணுடா கௌஷிக்!''
என்ற ஜெகனோ மூத்தவனுக்கு கட்டளையிட்டார்.
''ஏன்ண்ணா! என்ன வார்த்தே சொல்லிட்டிங்க! மயிலினி நம்ப பொண்ணுண்ணா! கண்டிப்பா திரும்பி வந்திடுவாண்ணா!''
என்ற மாமியோ ஓடிச்சென்று பற்றிக் கொண்டார் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த ஆத்துக்காரர் ஜெகனின் கால்களை.
''எப்போ கல்யாணத்துக்கு முன்னாடியே அம்மாவானாலோ அப்பவே செத்தாச்சுடி இந்த ஜெகநாதன் ஐயர்! தர்ப்பணம் அவளுக்கில்லே எனக்கு!''
என்றவரின் இதயமோ மகள் கொடுத்த அடிகளை தாங்கிட முடியாது ஓட்டத்தை மெதுவாக்கியது. ஐயரின் கண்களோ அவரின் உண்மையறியா நிலைக்கு ஆதரவாய் மூடிக்கொண்டது.
''ஐயோ! பகவானே! ஏன்ண்ணா!''
என்ற மாமியின் நெஞ்சமிறுக்கிய அலறலில் மொத்த குடும்பமும் நிலைக்குத்தி நின்றது.
லேடி பாஸின் பிக் பாஸ் நான்…
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.8/

Author: KD
Article Title: அத்தியாயம்: 55
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.