- Joined
- Jul 10, 2024
- Messages
- 460
அத்தியாயம் 56
மந்தமான வானிலையில் சுரோத்தமன் ஒளிந்திருந்தான் கறுத்திருந்த மேகங்களுக்குள்.
ஒரே நேரத்தில் இரு உயிர்களை காவு வாங்கியிருந்தது குஞ்சரியின் அவசரமான முட்டாள்தனம்.
காரியங்கள் எல்லாம் நடந்து முடிந்து இரு நாட்கள் கடந்திருந்த வேளையில் கந்தல் கோலமாய் தலைவிரிக் கொண்டு வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தாள் மயிலினி.
குற்றுயிரும் குலையுயிருமாய் வந்தவளின் இதயமோ ஒரு நிமிடம் நின்று போனது அப்பா அம்மா இருவரின் படத்திலும் மாலை தொங்கிட.
உறைந்து நின்றவளின் நடைப்பிணமான உடலோ பொத்தென சரிந்தது தரையில்.
''வந்துட்டியாடி சண்டாளி சனியனே! ஏன்டி வந்தே! ஏன் வந்தே! இன்னும் யார் உயிரே எடுக்கணும் உனக்கு! சொல்லுடி! சொல்லு! உன்னே உயிரா நினைச்சானேடி என் புள்ளே! அவனே போய் இப்படி அநியாயமா கொன்னுட்டியேடி படுபாவி! நல்லாருப்பியா நீ! சொல்லுடி! நல்லாருப்பியா நீ!''
என்ற பாட்டியோ உணர்ச்சி பொங்க பேசி கண்ணீர் வடித்தார், கைகளால் மயிலினியின் தோளில் அடித்தார்.
மானினி அவளோ மௌனியாக வெறித்தாள் பெற்றோர்களின் படத்தை தீமை வென்று நல்லது செத்திருக்க.
''எப்படிடி உனக்கு மனசு வந்துச்சு இப்படியொரு துரோகத்தை உங்கப்பனுக்கு பண்ணே! மார்லையும் தோள்ளையும் போட்டு வளர்த்தானேடி உன்னே! இப்படி பண்ணிட்டியேடி பாவி! மகனோடு சேர்த்து மருமகளுக்கும் ஸ்ரார்த்தம் பண்ண வெச்சிட்டியேடி சண்டாளி!''
கூடியிருந்த சொச்ச கூட்டத்தின் கவனமும் காரிகையின் மீது விழ, ஆவேசம் கொண்டிருந்த பாட்டியை சமாதானம் செய்ய முனைந்தனர் சிலர்.
''விடுங்க என்னே! விடுங்க! என் புள்ளையே போயிட்டான் நீ மட்டும் ஏன்டி இன்னும் உயிரோட இருக்கே! நீயும் உங்கப்பன் கூடவே போ! எங்கப் போனாலும் பின்னாடியே வால் புடிச்சுக்கிட்டு போவியே! இப்பவும் போ! போடி! போ!''
பாட்டியின் அடியும் வசையும் தூரம் போனது. நிலைக்குத்திய கொலுவாய் வீற்றிருந்த யுவதியவளை அண்ணிமார்களோ அறைக்குள் கூட்டிச் சென்றனர்.
எவ்வித விசாரணையும் மேற்கொள்ளாது காயங்கொண்டு வந்திருப்பவளின் நிலையை புரிந்துக் கொண்ட மருத்துவ அண்ணியோ, தங்கையின் பாதிப்பை சகோதரர்களுக்கு தெரியப்படுத்தினாள்.
விஷயம் வெளியில் தெரிந்தால் இருக்கின்ற கொஞ்ச நஞ்ச மானமும் போயிடும் என்றெண்ணிய கௌஷிகோ இரவு வரை பொறுமைக் காத்திட சொன்னான்.
சொந்தங்களோடு சேர்த்து பாட்டியும் நாளை ஊருக்கு கிளம்ப மயிலினியை பின்னர் கிளினிக் மற்றும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றிடலாம் என்று சொல்லி வைத்தான் மனைவியிடத்தில் கணவனவன்.
படித்தவர்கள் என்பதால் காரியங்களை காதும் காதும் வைத்தாற்போல முடித்துக் கொள்ள விரும்பினர். அதுவும் கௌஷிக் ரொம்பவே ஸ்டேட்டஸ் பார்க்கும் ரகம். முன்பில்லாத பணம் இப்போதிருக்க காசே அதிகமாய் பல இடங்களில் அவனை கண்டத்தனமாய் பேச வைக்கிறது.
கௌஷிக்கின் வார்த்தைகளுக்கு இணங்கி தற்சமயத்திற்கு அண்ணியே வைத்தியம் பார்த்திருந்தாள் கற்பழிப்பிற்கு பலியானவளை.
நாசமாக்கப்பட்டவளோ அண்ணியின் வார்த்தைகளில்லா பார்வையை புரிந்துக் கொண்டு பதிலளித்தாள் பந்தாடிய மிருகங்கள் எத்தனையென்று அறியவில்லை என்பதை சைகையால்.
பதைத்த நெஞ்சோடு அண்ணியவள் பெண்ணவளின் அடிவயிற்றில் கரம் பதிக்க, மௌன மொழியில் ஓவென்று கதறிய மயிலினியோ அண்ணியின் மடியினில் முகம் புதைத்தாள்.
அதிர்ந்த சின்ன அண்ணியோவாய் பொத்தி கரம் பதித்தாள், மடியினில் மயிலினியை தாங்கியிருந்த மூத்தவளின் தோளில்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். தங்கையின் வயிற்றில் வளரும் குழந்தையை கலைத்திட மருந்து கொடுத்திட சொல்லியதென்னவோ கௌஷிக்தான். பின்னர் அவனோடு சேர்ந்துக் கொண்டான் சின்னவனும்.
கௌஷிக்கின் மருத்துவ மனைவி முடியாதென்றிட, அண்ணன்மார்கள் இருவரும் சில நெருங்கிய பெருசுகளை இவ்விடயத்தில் கூட்டு சேர்த்துக் கொண்டு சாதி மதம், குலம் கோத்திரம் என்று குட்டையை குழம்பினர்.
மகளின் வயிற்றில் உருவான கருவை அழிக்க கொஞ்சமும் விருப்பமில்லாத ஜெகநாதன் ஐயரோ மயிலினியின் செயல் தந்த வலியில் மூத்தவனின் பேச்சுக்கு வெறும் பொம்மையாகவே தலையை ஆட்டி வைத்தார்.
தந்தையுள்ளம் ரணங்கொண்டாலும் செக்கு மாடுப் போல் மற்றவர்கள் முன்னிலையில் தலையாட்டிய தாயுள்ளமோ மகளின் மீது கொண்ட கோபத்தை பிறக்காத குழந்தையின் மேல் காட்டிட விரும்பவில்லை.
எப்படியாவது தீனவானனுக்கு தகவலை தெரியப்படுத்தி அவன் வந்து குடும்பத்தோடு வயிற்று புள்ளைக்காரியை அழைத்து போகணும் என்று அனுதினமும் பிராத்தித்தார் பிரியா மாமி.
அதற்காக அவன் வீடு வரை சின்ன மருமகளோடு சென்று வந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது இல்லம் பூட்டு போட்டிருக்க.
ஆகவே, மாமியாரவர் மருமகள்களோடு கூட்டு சேர மகள் மயிலினிக்கு மாற்று மாத்திரையே கொடுக்கப்பட்டது குழந்தை நலமாய் வாழ.
இருந்தும், சொந்த வீட்டுக்குள் தகிடு தத்தம் செய்து குழந்தையைக் காப்பாற்றியவர்களால் பிரமன் எழுதிய தலையெழுத்தை மாற்றிட முடியவில்லை.
மயிலினியோ பெற்றோர்களுக்கு என்னானது ஏன் அவளுக்குமே ஏதானது என்றுணர்ந்த பாவையாய், பாவப்பட்ட இவ்வாழ்க்கை இனி தேவைத்தானா என்ற கேள்வியோடு மஞ்சம் சாய்ந்தாள் ஒரு கிளாஸ் பாலை மட்டும் அருந்தி.
லேடி பாஸின் பிக் பாஸ் நான்…
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/லேடி-பீஸ்ட்டின்-பிக்-பாஸ்-நான்.8/

Author: KD
Article Title: அத்தியாயம்: 56
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.