What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
460
அத்தியாயம் அறுபது

குளித்து முடித்த தினாவோ உணவருந்தி விட்டு ஃபோனை சார்ஜரிலிருந்து எடுக்க ஆன் செய்திருந்த ஸ்விட்ச்சோ ஆஃபிலிருந்தது. அப்போதே தெரிந்தது ஆணவனுக்கு கண்டிப்பாய் இது தம்பியின் வேலையாகத்தான் இருக்குமென்று.

சார்ஜ் போடும் சமயத்தில் மட்டுமல்ல டிவி தொடங்கி கழுவி வைத்த உணவு தட்டை மீண்டும் அழுக்காக்குவது வரை இருவரும் ஏட்டிக்கு போட்டியாய் ஏதாவது செய்து கொண்டேதான் இருப்பார்கள்.

ரீசனின் சேட்டையை நினைத்து சிரித்த அண்ணனோ மறுபடியும் சார்ஜை ஆன் செய்து கிளம்பினான் தெருமுனையிலிருக்கும் கடைக்கு.

ரெண்டு வாரத்தில் தண்ணி பில், கரண்ட் பில் எல்லாம் வந்து சேர்ந்தாயிற்று. அவைகளைத் தூக்கிக் கொண்டு கிளம்பி விட்டான் தீனா பில்ஸ் கட்டிட.

காதலைச் சொல்லிய குஷியில் காதலி குஞ்சரியை அமெரிக்காவிற்கு வழியனுப்பிய ரீசனோ ஆனந்தமாக வீடு வந்து சேர்ந்திருந்தான்.

வந்த வேகத்தோடு நொடியும் தாமதிக்காது அண்ணனின் பைக்கை பார்க் செய்து விட்டு அவனின் பைக்கை எடுத்தான் ரீசன்.

மெக்கானிக்கை வரும் வழியிலேயே சந்தித்து விட்டான். இப்போது நேராய் போய் அவனை கூட்டிக்கொண்டு வர வேண்டும் அவ்வளவே.

ஆகவே, ரிப்பேர் செய்ய வேண்டிய அண்ணனின் பைக்கை வாசலிலேயே விட்டு விட்டு அவனின் பைக்கில் பறந்தான் தீனரீசன்.

கட்டணங்களைக் கட்டி முடித்து வீடு திரும்பிய தீனவானனோ அவனின் மயிலினியைப் பார்த்திட ஆவல் கொண்டான். போகையில் ஒரு வார்த்தை கூட அவளிடத்தில் சொல்லிடவில்லை தீனா. இல்லை, அவனால் இயலவில்லை.

சும்மாவே கண்ணீர் கிணற்றை கண்ணில் வைத்துக் கொண்டு திரிபவள் என்ன கதியாய் கிடக்கிறாளோ என்று நினைத்தவனோ மனசுக்குள் சிரித்துக் கொண்டான்.

அன்றைக்கும் அப்படித்தான்.

இருவரின் கேலி கிண்டலான பேச்சு கடைசியில் எமோஷனல் சீனில் வந்து நின்றது.

அளகவள் அழுதாள், ஆணவன் அணைத்தான். பெண்ணவள் சிலிர்த்தாள், ஆண்மகன் லயித்தான்.

மஞ்சம் வரவேற்க, இயற்கை தோதாக, உயிர்கள் ரெண்டு கலவரம் கொண்டன அதீத அன்பில்.

அன்றைய ஒரு நாள் கூத்துதான் மயிலினியின் மடியில் கனமாய் வந்து இன்று காணாமல் போயிருக்கும் கருவென்ற பாரம்.

தீனவோடு பைக்கில் அமர்ந்து நெடுந்தூரம் பயணிக்க வதனியவளுக்கு மிகவும் பிடிக்கும். தீனாவிற்கு அடுத்து மயிலினிக்கு அவனிடத்தில் பிடிக்கும் என்றால் அது அவனின் பைக்தான்.

தீனவானனுக்கோ பேசாத மயிலினியின் மௌனம் மிக பிடிக்கும். சும்மாவே அவளை வெறுமனே பார்த்திருப்பான் நெடுநேரம்.

அவர்கள் பேசிக் கொண்டதை விட பேசாத நினைவுகளே அதிகம். அவன் பார்ப்பதிலேயே பாவையவளுக்கு வெட்கம் வந்து முகம் சிவந்திடும்.

தீனாவிற்கோ கழுத்து காதெல்லாம் சிவந்திடும். சில வேளைகளில் அவனறியாது மார்பும் சிவந்திடும் மயிலினியின் நெருக்கத்தில். நெஞ்சம் படபடத்து பிபி எகிறி நிற்பதெல்லாம் வழமையாய் வஞ்சியவளைப் பார்த்தாலே அவனுக்கு ஏற்படும் எரர்ஸ்தான்.

வாசலில் நிறுத்தியிருந்த பைக்கை ஆசையாய் வருடிய தீனாவோ காதலியைப் பார்க்கின்ற ஆர்வம் தாளாது டக்கென்று அறைக்குள் நுழைந்து ஃபோனை எடுத்து ஆன் செய்தான்.

ஸ்விட்சைக் கூட அடைத்திடாது நடையில் ஓட்டம் கொண்டான் ஆணவன் வாசல் பைக்கை நோக்கி.

வந்து விழுந்தன வரிசையாய் இத்தனை நாட்களில் டவர் கிடைக்காத காரணத்தால் தவறிப் போயிருந்த அத்தனை லொட்டு லொசுக்குகளும். ஆனால், தீனா தேடியதென்னவோ மயிலினியின் குறுஞ்செய்திகளைத்தான்.

படித்தவனோ பதைத்தான். கண்கள் குளமாக ஃபோனை கையிலிறுக்கியவனோ பைக்கை ஸ்டார்ட் செய்தான்.

உணர்ந்தான் பைக் சரியில்லையென்று. இருந்தும் அவன் மனம் படும் பாடு யார் அறிவார். நம்பினான் அவன் பைக் அறியும் அவன் வலியென்று.

அதுவும் அதை மிக பிடித்த மயிலினிக்கு பிரச்சனை எனும் போது கண்டிப்பாய் அவனின் பைக் அவனை கைவிடாதென்று நம்பிக்கை கொண்டான் தீனா.

தந்தையானதுக்கு சந்தோசப்படுவதா இல்லை செத்திடுவேன் என்றவளுக்காய் வருந்துவதா என்றறியாது வேகங்கொண்ட தீனவானின் பைக்கை மோதியது கனரக வாகனமொன்று.

லேடி பாஸின் பிக் பாஸ் நான்...
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 60
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top