What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
460
அத்தியாயம் 61

கன்றியிருந்த விலோசனங்கள் கண்ணீரை ஓரமாய் வழிய விட மயிலினியோ செத்தவளாட்டம் மெத்தையில் மல்லாக்க படுத்துக் கிடந்தாள்.

நடந்த கொடூரம் கண் முன் வர வாய்விட்டு கதறிட கூட இயலா ஜடமாய் தெய்வம் தன்னை படைத்ததை எண்ணி வெம்பிட விருப்பமற்றவளாய் வெறுமனே கிடந்தாள் கோதையவள்.

சிதைப்பட்டு போனது நெருப்பில் போகும் சதைக்கொண்ட பூமகள் மலருடல் மட்டுமல்ல தமனிகள் கொண்ட கோமகளின் இதயமும்தான்.

விரும்பிய ஒருவனுக்கே ஒருத்தியாய் வாழ்ந்த பாவத்தின் பரிசாய் வயிறு பெருக்க அதன் ஆனந்தம் முழுதாய் மானினியவளை ஆட்கொள்ளும் முன்னரே காதல் கோட்டையதை கயவர்களால் அழிக்க தெய்வம் நின்று கொள்ளும் என்ற பேச்செல்லாம் வெறும் பம்மாத்தே என்று வகைப்படுத்திக் கொண்டாள் இழந்தவள்.

சின்னவள் அவளை ஜெகநாதன் ஐயர் வீடடிற்கு கூட்டி வந்த போது மொத்த குடும்பமும் அவருக்கு எதிராய் நின்றது. அதாவது கூட்டு குடும்பமான சொந்தங்கள்.

பிரியா மாமியோ ஏதும் பேசாது அமைதியே காத்தார் கணவன் சொல் மிக்க மந்திரமில்லை என்று. அன்றைய சின்ன பையன்களான இரு அண்ணன்களும் கூட அப்பா பக்கமே நின்றனர்.

ஜெகநாதனை பெற்ற தாயோ அன்றைக்கும் வெற்றிலை எச்சியாய் இரக்கமற்ற வார்த்தைகளை உமிழ்ந்து புதிதாய் அக்குடும்பத்தில் இணைய வந்த அச்சிறு பிஞ்சை நஞ்சாய் உதறி தள்ளிடவே எத்தனித்தார்.

கோபங்கொண்டாலும் அடக்கிக் கொண்ட ஜெகநாதனோ எடுத்தார் தடாலடியான முடிவொன்றை. மயிலினிக்கு இடமில்லாத வீட்டில் அவரும் அவர் சார்ந்த உறவுகளும் உரிமைக்கொண்டாடிட விரும்பவில்லை என்பதை செயலில் வெளிப்படுத்தினார்.

வெளியேறினார் ஜெகநாதன் ஐயரவர் அவரின் இல்லத்திலிருந்து வாய் பேசா மடந்தை மயிலினிக்காக குடும்பத்தோடு சொந்த பந்தங்களை விட்டு.

கால் போன போக்கில் பயணித்து இறுதியாக வந்து சேர்ந்தார் தற்போதைய நகரத்திற்கு ஐயர் அவரின் குடும்பத்தோடு. கிடைத்த வேலையை செய்தவர் பகுதி நேரமாக அவரின் குலத்தொழிலையும் செய்திட ஆரம்பித்தார்.

நாட்கள் கடந்தும் மயிலினி பேசாதிருக்க சந்தேகங்கொண்ட தம்பதிகளாய் ஐயரும் மாமியும் சின்ன குட்டியவளை மருத்துவரை பார்த்திட தூக்கி போயினர்.

அங்கோ மருத்துவர் வைத்தியம் பார்ப்பார் என்று நம்பி போனவர்களுக்கு வியாதியை கொடுத்தனுப்பினார் திருப்பி.

மயிலினி இப்போது மட்டுமல்ல எப்போதுமே பேசிட மாட்டாள் என்ற உண்மையை மகன்களிடம் பக்குவமாக எடுத்துரைத்தார் தாயாகிய மாமி பிரியா மனம் கனக்க.

புரியாது போனாலும் உணர்ந்த அண்ணகளோ தங்கை மயிலினியை அஞ்சலி பாப்பா கணக்காய் பார்த்துக் கொண்டனர்.



வளர்ந்துக்கெட்ட மனிதனுக்குத்தானே எத்தனை எத்தனையான ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ். குழந்தைகளுக்கு அப்படியான வேற்றுமைகள் ஏதும் இல்லையே. அன்பென்ற ஒன்றுதானே அவர்களின் பிரதானம்.

இப்படியானதொரு சின்னஞ்சிறிய நேசக்கூட்டில்தான் மயிலினி வளர்ந்தாள், பூப்பெய்தாள், படித்தாள் மற்றும் வாழ்ந்துக் கொண்டிருந்தாள் தாரகையவள் வாழ்வில் தீனவானன் என்றொருவன் வரும் வரையில்.

தலையணையும் காரிகையின் சோகத்தில் தொப்பையாய் நனைந்து போயிருந்தது.

குடும்பத்தையே தூக்கியெறிந்து வந்த அப்பா இன்று இல்லாது போனதிற்கும் உயிராய் விறலியவளை பேணி காத்த அம்மா உடன் கட்டையேறாது உயிர் விட்டதுக்கும் தானொருத்தியே காரணமென்று வருந்தினாள் மங்கையவள்.

வருவான் என்று நம்பியவனோ தடையாமே இல்லாதிருக்க, உதவிடுவாள் என்று நினைத்தவளோ கழுத்தறுக்க; கடவுளே தனக்கு துரோகம் இழைத்ததாய் உறுதிக் கொண்டாள் அபலையவள்.

இனியும் பூமாதேவிக்கு பாரமாய் இருக்க விரும்பிடாதவளோ பலர் தும்சமாக்கிய வெற்றுடலை பூத உடலாக்க எப்போது தீர்மானித்து விட்டாள்.

ஜனித்திருந்த கருவாவது உயிரோடு இருந்திருந்தால் தற்கொலை எண்ணத்திற்கு விடை கொடுத்திருப்பாள் பாவையவள்.

என்செய்ய அதற்கும் வஞ்சியவளுக்கு கொடுத்து வைக்கவில்லையே. எமக்குத்தான் பம்பர் லாட்டரி எனலாம்.



போய் சேர்ந்த வரிசையும் சேர்த்து ஒரே குடும்பத்தின் நான்காவது உயிரையும் இப்போது எடுத்திட தயாராகி விட்டான்.

மல்லாக்க படுத்திருந்தவளும் ஆயத்தமாகி விட்டாள் கிளம்பிட.

மனித மிருகங்கள் பந்தாடிய நடைப்பிணமான உடலை பற்றிக் கூட ஆயிழையவள் கவலைக் கொள்ளவில்லை. அவளின் வீம்பெல்லாம் கடவுள் எவ்விதத்திலும் அவளை காப்பாற்றிடவே இல்லையே என்ற வேதனைதான்.

வாய் பேசிடாது போனாலும் மந்திரங்களை மனதுக்குள் ஒப்புவித்து பூஜை செய்யும் குணம் கொண்டவளுக்கு ஏன் கடவுள் கருணை காட்டிடவில்லை என்று பெரிதும் ஆதங்கம் கொண்டாள் நங்கையவள்.

சரி, சுமப்பவளை புறந்தள்ளி வயிற்றிலிருந்த உயிரையாவது தெய்வம் அழியாது காத்திருக்கலாமே என்ற ஆத்திரம் வேறு ஒருபக்கம் சுந்தரியவளின் மூளையை மழுங்க வைத்திருந்தது.

தீமை தலைவிரித்தாடிய போதிலும் எதுவுமே செய்யாது வேடிக்கை மட்டுமே பார்த்த மனசாட்சியற்ற கல்லை ஏன் சாமியென்றிட வேண்டும் என்ற உணர்ச்சிக் குவியலில் டக்கென்று முடிவெடுத்தாயிற்று அம்மணி.

நீண்டதொரு பெருமூச்சை இழுத்து விட்டாள் மயிலினி.

மரித்து போன இதயத்தோடு தீனவானனின் நினைவுகளை மனதிலும் இல்லா குழந்தையின் ஸ்பரிசத்தை அடிவயிற்றிலும் போய் விட்ட பெற்றோர்களின் நன்றிக்கடனை மூளையிலும் நிறுத்தி மிழிகள் திறந்தாற்படியே உயிர் துறந்தாள்.

வதனியவளின் வாயோரத்தில் வழிந்திறங்கிய விசங்கொண்ட பாலோ தரையில் மெது மெதுவாய் சொட்டியது.

லேடி பாஸின் பிக் பாஸ் நான்…
முந்தைய அத்தியாயங்களை படிக்க:

https://amydeepz.com/forums/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.8/

 

Author: KD
Article Title: அத்தியாயம்: 61
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

tamilselvi

Member
Joined
Oct 5, 2024
Messages
33
Ada pavame..... mayilini illana dheena?
Dheena ku accident ah
Kunjari crime rate adhigamaguthe
 
Top