- Joined
- Jul 10, 2024
- Messages
- 460
அத்தியாயம் 62
கடவுள் கூட கைவிட்டிடுவார் பைக் விட்டிடாது இதுவே பெரும்பாலான இளைஞர்களின் மைண்ட் செட். இது இப்போது மட்டுமல்ல எப்போதுமே மாறாத ஒன்று ஆண்களிடத்தில்.
பைக்கோ காரோதான் அவர்களின் முதல் மனைவி, காதலி எல்லாமே அவர்களுக்கு.
தீனவானனுக்கும் அவனின் பைக் அப்படித்தான். இருந்தும் தலையெழுத்தை யார் மாற்றிட முடியும். பழுதாகிய பைக்காகினும் மக்கர் செய்யாமல்தான் ஆணவனை தாங்கி வந்தது ராக்கெட்டாய் மயிலினியை சந்தித்திட.
இருப்பினும், எமனவன் குறி வைத்து விட்டானே தீனவானனவன் அல்பாசியில்தான் போக வேண்டுமென்று. அப்படியென்னே ரத்த வெறியோ அக்காலதேவனுக்கு சகட்டு மேனிக்கு கொத்தாய் எல்லாரையும் அள்ளிக் கொண்டு போயிட ஒரே நேரத்தில்.
பிரேக் சரியில்லாது காரணத்தால் தறிக்கெட்டு வந்த கனரக வாகனமனோ என்னதான் தீனவானன் கவனமாக வந்த போதிலும் அவனின் பைக்கை முட்டி மோதியது.
அப்பயங்கரமான இடியில் ஆணவனின் பைக்கோ சரிந்தவாக்கில் தூரம் போனது தரையில். மயிலினியின் காதலனோ வாகனம் அடித்த வேகத்துக்கு தூக்கி வீசப்பட்டான்.
படாரென்ற சத்தத்தோடு தீனவானனின் தலையோ சாலையில் சைரன் சத்தத்தோடு அதிவேகமாய் பயணித்துக் கொண்டிருந்த ஆம்புலன்ஸ் வண்டியின் பின் கதவு கண்ணாடியில் முட்டியது.
ஏற்கனவே, கனரக வாகனம் சரமாரியாய் இடித்து தள்ளிய அசுர தனத்திற்கு பல உயிர்கள் அடிப்பட்டும் உயிர் விட்டும் ரோடே செம்புனல் களோபரம் கொண்டிருந்தது.
சிலர் உதவ பலர் படமெடுக்க இடிப்பட்டதில் தீனவானன் பறந்து போய் மோதிய ஆம்புலன்சோ முன் பக்கத்தில் பல வேறு வண்டிகளை முட்டித் தள்ளியது.
ஆணவன் உடல் இடித்த வேகமான அதிர்வினில் ஆம்புலன்ஸின் கண்ணாடிகளோ நொறுங்க விழுந்தன. உள்ளிருந்த இரு தாதியர்களோ ஆளுக்கொரு மூலையில் விழுந்து கிடக்க இரும்பு ஸ்ட்ரெச்சரை மூடிக்கிடந்த வெள்ளை துணியோ விலகி சரிந்தது கீழே.
தீனாவின் குருதி கொண்ட கரமோ கதவை தழுவி கீழிறங்க உயிரற்ற உடலாய் மயிலினியே மல்லாக்க கிடந்தாள் ஆம்புலன்ஸின் இரும்பு ஸ்ட்ரெச்சரில்.
விழிகள் மூடாது உயிர் துறந்திருந்தவளின் மரித்த சடத்தை கண்டவனின் இழுத்துக் கொண்டிருந்த உயிரோ கத்திடவும் முடியாது கதறிடவும் இயலாது மனதுக்குள்ளேயே வெம்பி ஜடமாய் பொத்தென்றது சாலையில் ஆன்மா தனியே பிரிய.
பிரிந்திருந்த நாட்களிலெல்லாம் காளையவனின் எண்ணம் முழுக்க பட்டா போட்டிருந்த பாவையவள் இன்று பாடையில் போவாள் என்றறிந்திருந்தால் பாவப்பட்டவன் ஊரிலிருந்து வந்திருக்கவே மாட்டானே.
ஆறிடுமா பெத்தவர்களின் மனசு இருபது வருடங்களுக்கு மேலாக வளர்த்து ஆளாக்கிய மகன் தீனவானன் இன்றைக்கு இல்லை எனும் சங்கதி.
தேகத்துக்குத்தானே இறப்பு பிறப்பெல்லாம் ஆத்மாவிற்கு இல்லையே. ஓடியது தீனவானின் உடலற்ற உயிர் உசுரற்று கிடந்த அவன் மயிலினியின் சவத்தை நாடி.
கவிழ்ந்த ஊர்தியிலிருந்த மயிலினியின் மேனியை கையிலேந்த முடியாது தலையில் அடித்துக் கொண்டு கதறினான் தீனவானன்.
அன்றைக்கு ஆணவனின் மூச்சுக் காற்றால் நெருப்பாய் கொதித்திருந்த காரிகையவளை தீயாய் சூழ்ந்துக் கொண்டான் ஆண்மகனவன்.
புகைச்சலில் குளிர் காய்ந்த ஜோடிகளின் உணர்ச்சியில் உருவான புது உயிரதை காண கொடுத்து வைத்திடாத துரதிஷ்டசாலியவனோ ஜனித்த கருவின் இடத்தையாவது தொட்டுணர விரும்பினான்.
ஆவியான போதிலும் செத்து கிடப்பவளின் வயிற்றை உள்ளங்கை கொண்டு வருடியவனோ சத்தம் போட்டு கதறினான். இருந்தும் அவன் குரல் அங்கு யாருக்கும் கேட்கவில்லை.
முதன் முதலாய் அலரவளின் பூவிழி கண்டு சொக்கிய தீனவானன் வருங்காலத்தில் தலை சாய்க்க விரும்பிய தாய்மடி இன்று கோடி துணி போர்த்திடும் அவலத்தில் கிடக்க அழுகை என்ற ஒன்று ஆணவனுக்கு கண்ணீரற்றே வந்தது.
ஆசை காதலியின் முகத்தை ஒருமுறை தொட்டு பார்த்தவன் அன்பாய் பதித்தான் இதழ் முத்தமொன்று அவன் ஆன்மா என்பதை மறந்து அந்திகையவளின் இதழில்.
''மன்னிசிரும்மா.. கண்டிப்பா இதுக்கெல்லாம் காரணமானவங்களே கடவுள் சும்மா விட மாட்டாரு.. அப்படியே அவர் மறந்தாலும் கர்மா அவுங்களே சும்மா விடாது!''
என்ற தீனவானனோ ஆயிழையவளின் உச்சியில் இதழ் ஒத்திய முத்தி ஒன்றை வைத்து மனதார சொன்னான்.
குஞ்சரி ஒருத்தியின் அவசரம் ஐந்து உயிர்களை மொத்தமாய் காவு வாங்கியிருந்தது.
தெரியாமல் செய்யும் செயலுக்கே தவறென்று பெயர்.
தெரிந்தே மற்ற உயிர்களை துச்சமாய் நினைத்து காயப்படுத்துவதின் பெயரோ தப்பு.
தவறுக்கு மன்னிப்பு உண்டு ஏன் பரிகாரங்களும் உண்டு.
ஆனால், தப்புக்கு கர்மா என்ற ஒன்றே பதில் சொல்லிடும்.
லேடி பாஸின் பிக் பாஸ் நான்…
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.8/

Author: KD
Article Title: அத்தியாயம்: 62
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.