- Joined
- Jul 10, 2024
- Messages
- 460
அத்தியாயம் 65
செல்வ செழிப்போடு பிறந்திருந்தாலும் போய் சேர்கையில் என்னவோ சர்வ நாசமாய் சீரழிந்தே செத்திருந்தாள் மயிலினி.
சொந்தமில்லா உறவுகளோடு இதுநாள் வரை சொந்தங்கொண்டாடி வந்த நங்கையவளை தேடி வந்தன இரு ஜீவன்கள் அவள் இறந்த நாளன்று.
பெண்டு அவளை பெற்ற பொறுப்பில்லா அப்பனோ திருந்திடாமலேயே சாகும் வரைக்கும் நாட்களை கடத்தியிருந்தான்.
அனாதை பிணமாய் மருத்துவமனைக்கு வந்தவனை அடையாளங் கண்டுக்கொண்ட அங்கிருந்த பணியாளன் ஒருவனோ போட்டான் அழைப்பொன்றை வெளிநாட்டிற்கு.
நன்றாய் இருப்பான் என்ற நம்பிக்கையில் கடல் கடந்து போயிருந்த அண்ணனோ பதறியடுத்துக் கொண்டு ஓடி வந்தார் தகவல் கேட்டு.
ஆக வேண்டிய காரியங்களை செய்து முடித்த மூத்தவரோ மலைச்செல்வனின் குடும்பம் சின்னாபின்னமாகியதை ஆட்களின் மூலம் தெரிந்துக் கொண்டார்.
வாழ்ந்துக் கெட்ட குடும்பதின் அவல நிலை ஊருக்கே தெரிந்த கதையாகியிருந்தது. ஓடிப்போன தம்பி பொண்டாட்டியை தேடல் பட்டியலிலிருந்து கைகழுவிய மலையின் அண்ணனோ கடன்காரனிடம் போய் நின்றார்.
மயிலினியவள் ஐயர் குடும்பத்தோடு ஜூட்டடித்த செய்தியை சொன்னவனோ கையை விரித்தான் அவர்கள் போன இடம் தெரியாதென்று. தம்பி மகளை முழுமூச்சாக தேடிட ஆரம்பித்தார் பெரியப்பா அவர்.
என்செய்வார் அவர், இல்லாது போன தம்பியின் ஒரே வாரிசு மயிலினி ஒருத்திதானே.
வருடங்கள் கடகடவென கடக்க தம்பி மகளை தேடிய பெரியப்பாவின் தேடலோ ரெஸட்டின்றி ஓடிக்கொண்டே இருந்தது. தனியார் துப்பறிவாளர் வைத்து தேடும் அளவிற்கு தம்பி மகள் மீது உயிரையே வைத்திருந்தார் மலைச்செல்வனை இழந்த அண்ணனவர்.
கடவுளின் கருணையை எதிர்ப்பார்த்து காத்திருந்தவருக்கு நல்ல செய்தி வந்தது தனியார் துப்பறிவாளரிடமிருந்து. உடனே புறப்பட்டார் தலைமகனவர் அவரின் செல்வத்தோடு தம்பியின் வளர்ந்த மகளை அழைத்து வர.
நம்பிக்கையும் மகிழ்ச்சியும் ஆர்ப்பரிக்க வந்திறங்கிய தொழிலதிபர் கண்ட காட்சியோ ஆணவரை நிலைகுலை வைத்தது. பாடையில் கிடந்தாள் தேடி வந்த வதனி.
பாழாய் போன காதல்தான் காரணமென்றார்கள் பலர், கர்ப்பமோ என்று வேள்வி கொண்டார்கள் சிலர், ஏமாற்றி விட்டான் வாத்தியார் மகன் என்றார்கள் பார்த்தவர்கள்.
ஐயர் ஜெகநாதனின் இரு புதல்வர்களும் மெடிக்கல் ரிப்போர்டை மறைத்து வைத்து காரியத்தை பட்டென முடிக்க பார்த்தனர். போலீசோ வீடு வரைக்கும் வந்து அனுதாபம் சொல்லி போனது.
நடந்திருக்கும் கற்பழிபோ மிகவும் கொடூரமானதென்று அவர்கள் விவரிக்க, கேட்க தாளாத அண்ணகளோ தங்கையே இல்லையென்றானப்பின் வழக்குக்கு அவசியமென்னே என்று காவல்துறையின் நீதியை நிலைநாட்டிடும் ஐடியாவிற்கு கும்பிடு போட்டனர்.
தம்பி மகளை கூட்டி போக வந்த பெரியப்பாவோ சுந்தரியவளை அனுப்பி வைத்தார் சுடுகாட்டிற்கு கோடி துணி போர்த்தி.
பெரியப்பாவான தந்தையின் கையை இறுக்கமாய் பற்றிக் கொண்டு நின்ற சிறுமிக்கோ நடப்பதெதும் முழுதாய் புரியா விட்டாலும் காட்சிகள் எல்லாம் ஆழமாகவே பதிந்து போனது சின்னவளின் மனதுக்குள்.
சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் முடிய மூன்று இழப்புகளை சந்தித்த ஜெகநாதன் மற்றும் பிரியா குடும்பத்தின் மிச்சமிருந்த கிளைகளோ ஒரேடியாய் வெளிநாட்டிற்கு கிளம்ப உத்தேசித்தனர் குடும்ப குட்டிகளோடு.
இந்த நாடே வேண்டாமென்று முடிவெடுத்தவர்கள் அங்கிருந்த சொத்துகளை மயிலினியின் பெரியப்பாவிடமே விற்று கணிசமான தொகையோடு போக வேண்டிய நாட்டிற்கு பயணம் மேற்கொண்டனர்.
சிறு துரும்பு கூட அசைந்திடாது மயிலினி ஓடியாடி விளையாடி வாழ்ந்த இல்லமோ ஆளில்லாமல் பூட்டு போடப்பட்டது.
''அப்பா.. அக்கா..''
என்ற மகளோ செத்து மடிந்தவளின் பருவ மங்கையிலான புகைப்படத்தை கையில் பற்றியப்படி பக்கமிருந்த பெற்றவரிடம் காண்பித்தாள்.
''பத்திரமா வெச்சிக்கோ விசா.. நமக்கின்னு இருக்கிறது இப்போதைக்கு மயிலினியோட நினைவுகள் மட்டும்தாண்டா..''
என்ற தேவேந்திரனோ கார் பயணிக்க மகளின் தலையை மெதுவாய் வருடினார்.
அக்கா மயிலினியின் புகைப்படம் தாங்கிய ஃபிரமை நெஞ்சோடு இறுக்கிக் கொண்ட விசாகாவிற்கோ அப்போது வெறும் பத்து பனிரெண்டு வயதே ஆகியிருந்தது.
லேடி பாஸின் பிக் பாஸ் நான்…
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.8/

Author: KD
Article Title: அத்தியாயம்: 65
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.