What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
323
அத்தியாயம் 66

''ப்ரீதன்! ப்ரீதன்!''

விசாவின் குரல் ஓங்கி ஒலித்தது ஆணவனின் அறைக்குள்.

குளியலறைக்குள் பள்ளிக் கொண்டவனோ முகத்திலிருந்த சோப்பை கைகளால் வழித்தெடுத்து செவிகளை கூர்மையாக்கினான் மறுபடியும் அவனின் பெயர் ஏலமிடப்பட.

''பார்ட்னர்! ஹலோ! ப்ரீதன்! என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க நீங்க உள்ளே! ஆன்ட்டி சொன்னாங்க உங்களுக்கு அப்படி அடிப்பட்டிருக்கின்னு! நீங்க என்னான்னா பாத்ரூம்குள்ள நின்னு வேடிக்கை காமிச்சிக்கிட்டு இருக்கீங்க! ஆஹ்!''

குளியலறை கதவு தொடர் வசனங்களோடு தகிடத்தோம் ஆட, விசாவின் குரல் காதுக்குள் தேனாய் பாய்ந்த சம்பவம் கனவா நனவா என்ற சிந்தனையில் இருந்தவனின் முகமோ தாமரையாய் மலர்ந்தது.

ஆண்களும் சிவப்பார்கள். மனசுக்கு பிடிச்ச ஆள் பக்கமிருந்தால்.

''எப்படி ப்ரீதன் உங்களாலே தனியா குளிக்க முடியும்! கைலே அடி! கால்லே அடி! முதுகுல அடி! முகத்துல கூட அடின்னு ஆன்ட்டி சொன்னாங்களே!''

விசாவின் பரிதவிப்பை உணர்ந்தவனோ சத்தமின்றி சிரித்து,

''சரி அதுக்கென்னே இப்போ! நீ வந்து குளிப்பாட்டி விடறியா!''

வம்பிழுத்தான் வழக்கம் போல் காளையவன்.

''இதென்னே பெரிய விஷயமா! கதவே திறங்க பார்ட்னர்! அப்பறம் பாருங் என் கைவரிசையே!''

என்றவளோ ரெடியாகி கழுத்திலிருந்த சால்வையை கட்டிலை நோக்கி பறக்க விட்டாள்.

''ஹலோ பேபி சீட்டர் மேடம் நான் ஒன்னும் நீங்க வழக்கமா குளிப்பாட்டறே சின்ன குழந்தை இல்லே! கட்டுமஸ்தான ஆம்பளே சிங்கம்!''

வேண்டுமென்றே பீலா விட்டான் ப்ரீதன் இடையில் துண்டை இறுக்கி.

''அதான் சிங்கம் விழுந்து வாரிக்கிட்டு வந்திருக்கா!''

''வாழ்க்கையிலே இந்த மாதிரியான சரித்திர அடிகல்லாம் சகஜம்தானே பார்ட்னர்!''

சமாளித்தான் ஆணவன் இதழோரம் புன்னகை பூக்க.

''பார்ட்னர்.. அந்த வீரத்தழும்பையெல்லாம் பார்த்திட்டு சொல்ல வேண்டியதை நான் சொல்றேன் சரியா! சோ.. இப்போதைக்கு முதல்லே நீங்க கொஞ்சம் கதவே திறக்கறீங்களா!''

''என்ன விசா சும்மா சும்மா கதவே திறக்க சொல்றே! நான் வேறே கன்னி கழியாத சிங்கள் பையன்! அறையுங்குறையுமா என்ன பார்த்து அப்பறம் ஆச கீச பட்டுட்டினா!''

என்றவனோ வாக்கியத்தின் முடிவில் கதவை திறக்க,

''எங்க.. எங்க.. அடிபட்டிச்சு! ஒரு கட்டையும் காணோம்!''

என்றவளோ பதறிப்போய் தேடினாள் கரீபியனின், கியூபா நாட்டிலிருந்து ஓடோடி வந்த காரணத்தை ஆணவனின் தேகத்தில்.

''ஏய்! பார்த்து! துண்ட கழட்டிடாதம்மா!''

என்றவனோ சிரிக்க,

''ம்ம்ச்ச்ச்! எப்போதுமே உங்களுக்கு விளையாட்டுத்தான்! காட்டுங்க ப்ரீதன் எங்க அடிப்பட்டிருக்கு!''

என்றவளோ கவலைக் கொண்ட குரலில் வினவ,

''முதல்லே சொல்லு.. யார் உனக்கு சொன்னா எனக்கு அடிப்பட்டிருக்கின்னு..''

என்றவனோ பெண்டு அவளின் இருக்கரங்களையும் ஒருசேர பற்றி நிறுத்தி கேள்வி எழுப்பினான்.

''வேற யாரு ப்ரீதன்.. ஆண்ட்டித்தான்!''

''சரியா போச்சு போ! இந்த அம்மாக்களே இப்படித்தான்! ஒன்னுன்னா ஒன்பதுண்ணுவாங்க! அதுவும் பையன்னா உலகத்தையே மறந்துடுவாங்க போ! நீயே சொல்லு என்ன பார்த்தா அடிப்பட்ட ஆள் மாதிரியா இருக்கு!''

''ஐயோ! என்னவோ போங்க! ஒருவேளை உள்காயமா இருந்தா! வாங்களேன் நாமே எதுக்கும் போய் டாக்டரே ஒரு எட்டு பார்த்திட்டு வந்திடலாம்!''

''ஐயோ விசா! எனக்கு எந்த அடியும் இல்லே! பைக்தான் கொஞ்சம் ரிப்பர் ஆகிருக்கு! ஹெல்மட் வாங்கியிருந்த முரட்டடியே பார்த்துதான் அம்மா பயந்துட்டாங்க! உண்மையே சொல்ல போனா பைக்கும் ஹெல்மட்டும்தான் இந்த குகப்ரீதனே காப்பாத்திருக்கு!''

என்றவனோ என்னதான் உண்மையை சொன்னாலுமே, மங்கையவளுக்கோ மனசு ஆறவில்லை.

''ப்ரீதன்.. எதுக்கும் நாமே..''

என்றவள் இழுக்க,

''இப்போ எப்படி போவே! இப்போ எப்படி போவே!''

என்றவனோ சிரியாய் சிரித்தான் ஷவரை திறந்து மானினியவளை தொப்பையாக்கி.

''அடப்பாவி! உன்னே!''

என்றவளோ மிக உரிமையாய் ஷவர் நீர் கண்களை மறைத்த கேப்பில் கூட விடாது ப்ரீதனின் மேனியில் கும்மாங்குத்து வைத்தாள்.

''ஐயா மூக்கு சளியம்மா விடு என்னே! இதுக்குதான் வம்படியா வந்து கூப்பிட்டியா டாக்டர் பார்க்க வா.. வான்னு!''

என்றவனோ குளியலறைக்குள் நலுங்கு சுத்து சுத்திட, சுந்தரியவளின் அடியிலிருந்து தப்பித்தவனின் விளைவாய் விறலியவளின் விரல்களோ பைப்பில் படாரென்று அடித்துக் கொண்டது.

''ஆர்ஹ்ஹ்! அம்மா!''

என்றவளோ வலியில் துடிக்க,

''ம்ச்ச்ச்! கையே காமி! கையே காமி!''

என்றவனோ சின்னதாய் சதை கிழிந்து ரத்தம் வந்த நாடிக்கும் பெரு விரலுக்குமான இடைவெளியில் இருக்கின்ற இடத்தினை வாயால் கவ்வி குருதியை நிறுத்தினான்.

அம்மணியோ நெளிந்திட ஆரம்பித்தாள் கையை ப்ரீதனின் வாயிலிருந்து வெளியே இழுத்தப்படி வலி போய் கிறக்கம் பிறக்க.

ஆணவனோ தலையை தூக்கி பெண்ணவளை ஏறெடுக்க,

''ஏன்.. என்னையே பார்க்கறீங்க..''

விசாவின் குரல் சுணங்கியது.

''நீதானே கண் முன்னுக்கு இருக்கே..''

சொன்னவனோ திடமாகவே பதிலளித்தான்.

''என்னே.. இப்படி பார்க்கறீங்க..''

மீண்டும் அருணியவளின் குரல் அடிவாங்கியது.

''ஏன் பார்க்க கூடாதா..''

நக்கல் தொனியிலும் கொஞ்சம் ரகசிய குரல் கொண்டான் ப்ரீதன்.

''இல்.. இல்.. லே.. எப்போதுமே இப்படி பார்க்க மாட்டிங்களே..''

ஆணவனின் பார்வையில் முதல் முறை தடுமாறி போயிருந்தாள் விசா.

''நீ கூடத்தான் இப்படி திக்க மாட்டே.. இப்போ ஏன் திக்கறே..''

''அதானே.. ஏன்.. ஏன் திக்கறேன்..''

என்றவளோ மெதுவாய் அவளின் கையை ப்ரீதனின் இதழ்களை உரசி கீழிறக்கிக் கொண்டாள்.

இருவரின் நெருக்கமும் அனலாய் தகிக்க தலையை லேசாய் சாய்த்த ப்ரீதனின் அதரங்களோ முன்னிருக்கும் அந்திகையின் இதழ்களில் இணை சேர துடித்தது.

குளிர்ந்த நீர் உடல் உஷ்ணத்தை குறைத்திடாமல் ஏற்றி வேடிக்கை காட்டியது. உணர்ச்சிகள் அடங்காமல் திமிற மிழிகள் சொக்கிய ஆயிழையவள் உதிர்த்தாள் மனதில் சிம்மாசனம் கொண்டவனின் பெயரை.

''தீனா..''

லேடி பாஸின் பிக் பாஸ் நான்…

முந்தைய அத்தியாயங்களை படிக்க:

https://amydeepz.com/forums/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.8/
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 66
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top