What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
332
அத்தியாயம் 69

''குஞ்சரி கொஞ்சம் ஸ்னேக்ஸ்.. குடிக்க தண்ணி.. அப்பறம் ஜூஸ் எல்லாமே இந்த டேபிள் மேலையேதான் இருக்கு..''

என்ற அமராவதியோ மெதுவாய் மங்கையவளை கைத்தாங்கலாய் பற்றி மஞ்சத்தில் அமர வைத்தாள்.

''போகாத அமரா..''

என்றவளோ குழந்தையாய் உதடு பிதுக்கினாள் அமராவின் கைகளை பிடித்துக் கொண்டு.

''ஜஸ்ட் வெறும் ஒரு மூணு ஹவர்ஸ்தான் குஞ்சரி.. ஓடிட்டு ஒடியாந்திடுவேன்.. நீ சமத்து பிள்ளையா இந்த டேப்லட்ஸ்செல்லாம் போட்டுக்கிட்டு கண்ணே மூடி நிம்மதியா துங்குவியாம்.. அதுக்குள்ளே நான் ஃபங்சனுக்கு போயிட்டு வந்திடுவேனாம்..''

என்ற அமராவோ இரவு உணவிற்கு பின்னான மருந்துகளை ஒன்றன் பின் ஒன்றாக குஞ்சரியின் கையில் கொடுக்க அதை வாயில் வாங்கிப் போட்டுக் கொண்டவளோ நீரை குடித்து தொண்டையை நிரப்பினாள்.

''கண்டிப்பா நீ போயி ஆகணுமா.. நீ சொன்னா யாரும் கேட்க மாட்டாங்களா..''

மறுபடியும் மருந்து குடித்த ஏப்பம் வெளிவந்த அடுத்த நொடியே இக்கேள்வியும் வந்தது வஞ்சியவளின் வாயிலிருந்து.

''இங்கப்பாரு குஞ்சரி.. நான் அன்னைக்கே சொன்னேன் தானே.. பர்டிக்குலரா இந்த நாள் நான் வழக்கத்தே விட கொஞ்சம் சீக்கிரமா கிளம்பிடுவேன்னு.. நீ கூட ஓகேன்னுதான் சொன்னே..''

முன்கூட்டியே நேரத்தை ஒதுக்கியிருந்தாள் அமராவதி மனையில் நடக்கவிருந்த குட்டிப்பையனின் பிறந்தநாள் விழாவிற்காக.

விசாவின் மகனை சொந்த உயிர் போல தாங்கு தாங்கென்று தாங்கிடும் தம்பி ப்ரீதன் ஏற்பாடு செய்திருக்கும் விழாவில் அத்தைக்காரியவள் இல்லாமல் எப்படி. முதலில் மொத்தமாக விடுப்பைத்தான் கேட்டிருந்தாள் அமரா.

ஆனால், ரீசனோ அரிவையவளின் டியூட்டியை ஒரு வாரத்திற்கு சேர்த்தே பிஸ்னஸ் பேசியிருந்தான்.

போவதென்றாகிய பின் ஆணவன் ஒரேடியாய் பினாங்கு மதுக்கூடத்தையும் ஒரு எட்டு பார்த்து செய்ய வேண்டிய விடயங்கள் அனைத்தையும் சரிவர பார்த்திட நினைத்தான்.

வழக்கு முடிந்த அன்றைக்கே குஞ்சரிக்கு போனை போட்டு தகவலை சொல்லி ஓரளவுக்கு அவளை சமாதானம் செய்தவன் நிம்மதியாய் அவனின் வேலைகளை பார்த்திட ஆரம்பித்தான் குலியவளை நம்பிக்கையான அமராவின் கையில் ஒப்படைத்த நிம்மதியில்.

''நான் ஓகே சொன்னேன்தான்.. இல்லன்னு சொல்லலையே.. ஆனா.. ரீசன் இன்னும் வரலையே.. அவன் வந்த பிறகாவது நீ போகலாம்லே..''

விடாது இறுக்கிப் பற்றிக் கொண்டாள் கோமகளவள் முன்னிருப்பவளின் கையை.

''புரிஞ்சுக்கோ குஞ்சரி.. ரீசன் இன்னைக்கு ஆறு மணிக்கெல்லாம் வந்திடுவேன்னு சொன்னாரு.. அதை நம்பி நான் வேறே கண்டிப்பா பர்த்டேய்க்கு வந்திடுவேன்னு ப்ரோமிஸ் பண்ணிட்டேன் குஞ்சரி.. ஆனா.. பாரு ரீசன் வர நேரம் பார்த்து அவர் கார் சடனா (sudden) ரிப்பேர்.. அதுவும் நடு ஹைவேய்லே.. இப்போ நான் உன்னே அம்போன்னு அப்படியேவா விட்டுட்டு கிளம்ப முடியுமா சொல்லு.. அவர் வர வரைக்கும் நைட் முழுக்க நான்தானே இங்கிருந்து பார்த்துக்கணும்..''

என்று வாஞ்சையாக தடவிக் கொடுத்தாள் தெரபிஸ்ட் மேடம் வாஞ்சையாக அவளின் தோளில் தலை சாய்த்திருந்தவளின் தலையை.

''போயிட்டு எப்போ வருவே..''

''கொஞ்ச நேரத்துலே வந்திடுவேன் குஞ்சரி.. அதுக்குத்தான் உனக்கு இப்பவே மருந்தெல்லாம் கொடுத்திட்டேன்.. எப்படியும் இன்னும் ஒரு பத்து பதினைஞ்சு நிமிஷத்துலே உனக்கு தூக்கம் வந்திடும்.. நீ நல்லா தூங்கிடுவியாம்.. நான் பர்த்டேய்க்கு போயிட்டு வந்திடுவேனாம்.. சரியா..''

என்றவளோ போர்வையை போர்த்தி விட்டு கிளம்பிட தயாராகினாள்.

''அமரா..''

அழைத்தாள் ரீசனின் வல்லபியவள் கைப்பையை மாணிக்கட்டில் தொங்க விட்டவளை,

''என்ன குஞ்சரி.. யூரின் பேக் ஏதும் நிறைஞ்சிடுச்சா.. புதுசு மாத்திடவா..''

அக்கறைக் கொண்டு வினவினாள் அமராவதி. அவளுக்கு தெரியும் குஞ்சரியால் ஓரடி கூட எடுத்து வைத்திட முடியாது தனியாளை என்று.

அதனால்தான், முன்னேற்பாடாய் நங்கையவளுக்கு அடால்ட் பேம்பர்ஸ் மற்றும் சிறுநீரக பையையும் அதன் குழாயில் பொறுத்தியிருந்தாள் தெரபிஸ்ட் அம்மணி.

''இல்லே.. அதெல்லாம் ஒன்னும் இல்லே.. வரும் போது எனக்கு கேக் கொஞ்சம் எடுத்து வறியா.. ஆசையா இருக்கு சாப்பிடணும் போல..''

''கொஞ்சம் என்னே கொஞ்சம் நிறையவே எடுத்து வர்றேன் சரியா..''

என்றவளோ சிரித்த முகமாய் விடைப்பெற்றாள் குஞ்சரியிடமிருந்து.

சனீஸ்வரனோ சுவர் கடிகாரத்தில் கர்மாவிற்கான அறிகுறியை மணியடித்துக் காட்டினான்.

லேடி பாஸின் பிக் பாஸ் நான்…

முந்தைய அத்தியாயங்களை படிக்க:

https://amydeepz.com/forums/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.8/
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 69
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top