- Joined
- Jul 10, 2024
- Messages
- 460
அத்தியாயம் எட்டு
விசாகா இல்லம்
விசாகா படுக்கையறை
அறை விளக்கு வெளிசத்தில் பிரகாசித்தது.
பட்டும் படாமலும் பேசி சென்றவளின் ரணம் விளங்காமல் இல்லை ரீசனுக்கு. வழக்கமாய் ஒவ்வொரு வாக்கியத்திலும் ரெண்டு தினாவாவது இருந்திடும் என்பதை நன்குணர்ந்த ரீசனோ, புரிந்துக் கொண்டான் மகடூவின் இப்போதைய தினாவை காணாததன் காரணத்தை.
என்ன, அதற்கான விளக்கத்தை வஞ்சியவளிடத்தில் கொடுத்திடத்தான் ரீசனுக்கு விருப்பமில்லை.
சோபாவில் வந்தமர்ந்தவன் போனில் கீத்து குட்டியின் படத்தை பார்த்தான். மனம் என்னவோ மகளை நிந்திக்க, அவன் தாய் அம்பாளுக்கு ஓரழைப்பை போட்டான் பொண்ணை பெத்தவன்.
மணி காலை ஆறாக இன்னும் பத்து நிமிடங்களிருக்க, மகன் அழைத்ததும் மறுமுனையில் தாயவரும் ரெண்டே ரிங்கில் அலைப்பேசியை எடுத்து காதில் வைத்திருந்தார்.
பழைய கட்டைகள் எப்போதும் அதிக நேரம் தூங்குவதில்லையே, இப்போதைய தலைமுறையினரை போல. ஐந்து ஐந்தரைக்கெல்லாம் எழுபவர்கள் மிஞ்சி மிஞ்சி போனால், எட்டு அல்லது பத்து மணிக்குள் எல்லா வேலைகளையும் முடித்து விட்டு ஜம்பமாய் அமர்ந்திடுவார்கள் ஓய்வெடுத்திட.
ரீசனின் பெற்றோர்களும் அப்படித்தான். அதனால்தான், ஹீரோ தயக்கமின்றி அவன் மம்மிக்கு போனை போட்டிருந்தான் அந்த அதிகாலையிலே.
''சொல்லுடா..''
தாய் அம்பாள் வழமையை போலவே பேச்சை ஆரம்பித்தார்.
''கீத்து நல்லாருக்காலாமா..''
குரலில் சிறு ஏக்கம் கொண்டு மகளின் நலம் விசாரித்தான் பார் ஓனர்.
''அவளுக்கு என்னடா.. நல்லாருக்கா..''
உண்மையை பவ்வியமாக சொன்னார் பேத்தியின் பாட்டி.
''சரியா சாப்பிட்டாலாமா..''
மகளை காணாத வருத்தம் குரலில் அப்பட்டமாய் தெரிய, கவலைக் கொண்டே கேட்டான்.
''அடம்தான்.. மம்மி வேணும்.. டேடி வேணும்னு.. ஆனா.. அவுங்க தாத்தாக்கிட்டே வாசிக்க முடியுமா என்னே.. வெழுத்திட மாட்டாரு..''
பாட்டியவர் தாத்தாவின் கண்டிப்பில் பூரிக்க, மகனுக்கோ சங்கடமாய் போனது.
''ஏன்மா ரொம்ப ராங்கி பன்றாளா..''
''டேய்.. என்ன!! கீத்து எங்க பேத்தி.. அடம் பண்ணாலும் சரி.. முரண்டு புடிச்சாலும் சரி.. எங்களுக்குத் தெரியும்.. என்ன பண்ணனும்னு.. நீ ஒன்னும் எங்களுக்கு சொல்லித்தர வேண்டாம்..''
இரண்டு மகன்களை பெற்ற பெற்றோர்கள் இன்றைக்கு தாத்தா பாட்டியாகி நிற்கையில் எல்லாமே வேறு மாதிரியான கையாளுதல்கள்தான்.
''காய்ச்சல் எப்படி இருக்குமா.. உடம்புலே இருந்த காயமெல்லாம்..''
மகள் கீத்து குட்டி, ரீசனின் உயிர். மீண்டும் அவளின் மூச்சற்ற நிலை கண் முன் வந்து போக ஆணவனின் பேச்சு தடைப்பட்டு போனது.
''டேய்.. அதெல்லாம் உடும்பு எண்ணெய் போட்டு சரி பண்ணியாச்சுடா.. இன்னும் ரெண்டு மூனு நாளு விடாமே போட்டுக்கிட்டே இருந்தா.. ஒரு வாரத்துல எல்லாம் காணாமே போயிடும்.. நீ கண்டதையும் யோசிச்சு மண்டையே போட்டு குழப்பிக்காதே.. சரியா..''
பேத்தி மீது கொண்ட அதே அக்கறையை இரண்டாவது மகன் மீதும் கொண்டார் அம்பாள்.
''சரிமா.. நான் வெச்சிடறேன்..''
அழைப்பைத் துண்டித்திட போனவனை, பாதியிலேயே தடுத்தார் அம்பாள்.
''சரி.. நீ சாப்பிட்டியா.. ஏன் வீட்டுக்கு வரலே.. எங்க இருக்கே.. பார்லையா..''
''இல்லம்மா.. விசா வீட்டுலே..''
''ஏன்டா அங்கே..''
அம்பாளுக்கு தெரியும் மகன் காரணமில்லாமல் கண்ட இடம் சென்றிட மாட்டான் என்று. சந்தேகத்தை ஓரந்தள்ளி காரணத்தை மட்டும் அறியும் பொருட்டு வினவினார்.
''அவளுக்கு கொஞ்சம் உடம்பு முடியலம்மா.. வேலைக்காரவங்க ஆறு மணியோட கிளம்பிடறாங்க.. இன்னைக்கு ஒருநாள் மட்டும் நான் துணைக்கு வந்தேன்.. நாளைக்கு நைட்லருந்து ஆள் வந்திடுவாங்கம்மா..''
மகன் ஒப்புவிப்பது மெய்தான் என்று தாயுள்ளம் உணர்ந்தது. அதனால், மேற்கொண்ட கேள்விகள் ஏதுமில்லை அவரிடத்திலிருந்து மகனுக்கு.
''சரி.. சரி.. அவளே கொஞ்சம் பார்த்துக்கோடா.. வாயும் வயிறுமா வேற இருக்கா.. ரொம்ப படியெல்லாம் ஏற விடாதே.. முடிஞ்சா.. கீழே ஏதாவது ரூமிருந்தா அவளை அங்கே ஷிஃப்ட் (shift) பண்ணிக்க சொல்லு.. வசதியா இருக்கும்.. கஷ்டமாவும் இருக்காது.. டுயூ வேறே நெருங்குது..''
''சரிம்மா.. சொல்றேன்..''
கோபம் இல்லாமல் இல்லை மகனின் காரியத்தால் அம்பாளுக்கு. ஆனால், அதனால் யாருக்கு இப்போது என்ன லாபம். விசாகாவின் வயிற்றில் வளருவது ரீசனின் வாரிசுதான். சந்தேகமே இல்லை.
அதற்கான மருத்துவ பரிசோதனையையும் மேற்கொண்டாயிற்று. இன்னும் என்ன இருக்கிறது சண்டை போட்டு சந்தி சிரித்திட. தவறு யார்தான் செய்யவில்லை என்ற எண்ணத்தில் அம்பாள் மகனை மன்னித்து பேரனுக்காக மனதை திடப்படுத்திக் கொண்டார்.
ஆனால், எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லையே. அம்பாள் அப்படியென்றால் தாண்டவன் வேறே மாதிரி. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே எனும் ஆளவர்.
ஆகவே, இப்படியான சம்பவத்திற்கு மகன் காரணம் என்றறிந்த நொடியே, மகனை நடு வீட்டில் நிக்க வைத்து நாக்கை பிடுங்கும் அளவில் கேள்வியைக் கேட்டவர்; கூடவே குடங் குடமாய் தலையில் தண்ணீர் ஊற்றி அவனை தலையும் முழுகி விட்டார்.
ரீசனிடத்தில் பேசுவதும் இல்லை தாண்டவன். அது மாதங்கள் பல கடந்தாயிற்று. அவனின் மற்ற விடயங்களிலும் அவர் தலையிட்டுக் கொள்வதில்லை. ஆனால், பேத்தி மட்டும் வேண்டும். இதுதான் முறுக்கிக் கொண்டிருக்கும் தாத்தாவின் ஓரவஞ்சனையான பேத்தி பாசம்.
''சரி.. குஞ்சரிக்கு போன் பண்ணியா.. வீட்டுக்கு போனியா.. எங்கருக்கா.. உங்க வீட்டுலையா.. இல்லே.. அவுங்க அப்பா வீட்டுலையா..''
சுர்ரென்றது ரீசனுக்கு. வந்த கொட்டாவியும் பாதியில் ஓடிப்போனது. எரிச்சலோடு தாயின் வினாவிற்கு பதிலளித்தான் ஆறாத மனக்காயம் கொண்டவன்.
''எனக்கு எதுவும் தெரியதுமா!! பிளீஸ்!! அவளே பத்தி என்கிட்டே எதுவும் கேட்காதீங்க!! உங்களுக்கு வேணும்னா நீங்களே போன் பண்ணி கேட்டுக்கோங்க!!''
''டேய் ரீசா.. கொச்சிக்காதடா.. எந்த அம்மாவும் பண்ணாததையா இப்போ குஞ்சரி பண்ணிட்டா.. நான் கூடத்தான் உன்னே சின்ன வயசுலே ஹேங்கர்.. மோப்.. பைப் கித்தான்னு.. எவ்ளோ அடி அடிச்சிருக்கேன்..''
''ம்ம்ச்ச்ச்..''
உச்சுக் கொட்டினான் ரீசன் கடுப்போடு, தாயவர் நிஜம் அறியாமல் மருமகளுக்கு பரிந்து பேசிட.
''ஏன் உங்கப்பா உன்னே பெல்டாலே அடிச்சதில்லையா.. அதுக்குன்னு எங்களுக்கு உன் மேலே பாசமில்லன்னு அர்த்தமா.. இல்லே உன்னே பிடிக்கலன்னு அர்த்தமா.. நீ நல்லா பையனா இருக்கணும்னுதானே அப்படியெல்லாம் அடிச்சு வளர்த்தோம்..''
மற்றவர்களை பொறுத்த வரைக்கும் தேவகுஞ்சரிக்கும் ரீசனுக்கும் நடுவினில் இருக்கின்ற பிரச்சனையானது, பெத்தவள் மகளை மூச்சு பேச்சின்றி போகும் அளவிற்கு அடித்து விட்டாள் என்பதே ஆகும்.
பிள்ளையை அடித்த பொண்டாட்டியோடு புருஷனுக்கு சண்டை. அவள் கோபித்துக் கொண்டு அவள் அப்பாவின் வீட்டிலும், பேத்தி தாத்தா பாட்டி வீட்டிலும் ஹீரோ அவன் வீட்டிலும் இருப்பதாகவே அனைவரும் நம்பினர்.
ஆனால், யாரும் அறிந்திருக்கவில்லை அங்கு கதையே வேறென்று. கீத்துவை மம்மி குஞ்சரி சாத்து சாத்தென்று சாத்திட மூலக்காரணமே வேறு.
''மா.. பிளீஸ்!! அது வேறே!! இது வேறே!! ஆனா.. இந்த குஞ்சாய்!! என் மேலே உள்ளே கோபத்தத்தான் கீத்து மேலே காட்டிருக்கா!!''
பொறுத்திருந்த அம்பாள் பொங்கி விட்டார் மகனிடத்தில், ரீசன் தொடர்ந்து குஞ்சரியை பற்றி அவதூறு சொல்ல.
''அப்பறம் நீ பண்ணே காரியத்துக்கு உன்னே இடுப்புல வெச்சு கொஞ்சுவாங்களா!!''
மகனின் மம்மியோ சம்பந்தமின்றி முடிச்சு போட, தலையில் அடித்துக் கொண்டான் ரீசன்.
''எல்லாத்துக்கும் ஒரு எல்லே இருக்கு ரீசன்!! இதே குஞ்சரி இடத்துலே வேறே பொண்ணு இருந்திருந்தா உன்னே தூக்கி போட்டுட்டு போயிருப்பா!! இல்லே உன்னே கம்பி எண்ண வெச்சிருப்பா!! ஆனா.. அவே இது எதையுமே பண்ணலே.. ஏன் தெரியுமா.. குஞ்சரி உன் மேலே உயிரையே வெச்சிருக்காடா!! நீ என்னான்னா பைத்தியக்காரன் மாதிரி புள்ளையே போட்டு அடிச்சதுக்கெல்லாம் அவக்கிட்டே வம்பு பண்ணிக்கிட்டு இருக்கே!!''
''சரிம்மா.. நான் பைத்தியக்காரந்தான்!! சரியா!! நான் நாளைக்கு வீட்டுக்கு வந்து பேசறேன்.. ஓகே.. வெச்சிடறேன்..''
என்றவன் அம்பாளின் டாட்டாவிற்கு கூட காத்திராமல் அழைப்பைத் துண்டித்தான்.
எப்படி சொல்லிடுவான் தீனரீசன் அவன் குடும்பத்தாரிடம் மனைவி தேவகுஞ்சரியை விவாகரத்து செய்ய போகும் சங்கதியை.
*
கழிவறையிலிருந்து வெளியே வந்தாள் விசாகா குட்டி. அன்னமாய் நடைப்போட்டவள் மெதுவாய் வந்தமர்ந்தாள் மஞ்சத்தில்.
கால்களை வசதியாய் அகட்டி அமர்ந்தவள், கைக்கெட்டிய டவலை கைப்பற்றி எடுத்தாள். மெல்லமாய் வலது கால் நோக்கி கீழே குனிந்தாள் யுவதியவள். ஈரங்கொண்ட முழங்காலை துடைத்துக் கொள்ள எத்தனித்தாள் வயிறு வீங்கிய பாவையவள்.
கண்களை இறுக்கமாய் மூடி தலையோரம் இடக்கையால் செக் போஸ்ட் போட்டிருந்தவன் காதில் கேட்டது சிறிய வலியான சிணுங்கலொன்று. பட்டென விழிகள் விரித் ரீசனோ, விறலியவளின் சாகசத்தை சலிப்போடு உச்சுக் கொட்டி முறைத்து பார்த்தான்.
''எதுக்கு விசா உனக்கு இந்த தேவையில்லாத வேலே.. நான்தான் இருக்கேன்லே.. கூப்பிட்டா வந்து ஹெல்ப் (help) பண்ணே போறேன்..''
என்றவன் பேரிளம்பெண்ணின் கையிலிருந்த டவலை வாங்கி மானினியின் ஈரப்பாதங்களை துடைத்து விட, தடுத்தவளோ நறுக்கென்று சொல்லி விட்டாள் மனதில் எவ்வித ஒளிவு மறைவின்றி தோன்றியதை.
''வேணா தினா விட்டுடுங்க!! பிளீஸ்!! இன்னைக்கு ஒருநாள் நீங்க இப்படி பழகிட்டா.. அப்பறம் எனக்குத்தான் கஷ்டம்.. தினம் இப்படி வேணும்னு என் மனசு ஏங்கும்.. என்னாலே தாங்கிக்க முடியாது தினா!! பிளீஸ்..''
என்றவள் கண்ணீர் ததும்ப சொல்லி, அவன் பிடி கொண்ட பூந்துவாலையை ரீசனின் கரத்திலிருந்து வாங்கிக் கொண்டாள்.
''தப்பா நினைச்சிக்காதீங்க தினா.. என்னடா இப்படி பட்டுனு மூஞ்சுலே அடிச்சாப்பிடி சொல்லிட்டான்னு..''
சொன்னவள், கால்களில் கருப்பு வர்ண காலுறைகளை அணிந்திட ஆரம்பித்தாள். ரீசனோ இமைக்காது அவளை வெறித்து சொன்னான்.
''விசா.. நான் பண்றேன்..''
ரீசன் மீண்டும் உதவிக்கரம் நீட்டிட, அவனை ஏறெடுத்தவளோ கன்னம் நனைத்த கண்ணீரோடு சொன்னாள்.
''வேண்டாம் தினா.. தெரியாமே ஒருதடவ ஏமாந்த வலியே இன்னும் என் மனசே விட்டு போகலே.. இப்போ தெரிஞ்சே ஏமாறே எனக்கு விருப்பமில்லே.. என்ன விட்டுடுங்க.. பிளீஸ்..''
ஒருவழியாய் சுயமாகவே உடலை பின்னோக்கி சாய்த்து காலை தூக்கி மடியில் வைத்த வாக்கில் காலுறைகளை அணிந்து முடித்தாள் வஞ்சியவள்.
''யாரோட புருஷனும் எனக்கு வேண்டாம்!! நான் யார் வாழ்க்கையையும் கெடுக்க நினைக்கலே!! எனக்காக நீங்க இவ்ளோ தூரம் வந்து இதுவரைக்கும் பண்ணதே போதும் தினா!! உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ண மாட்டேன் நான்!! இனிமேல நீங்க இங்க வராதீங்க தினா!! அதுதான் நம்பே ரெண்டு பேருக்கும் நல்லது..''
கண்களை துடைத்துக் கொண்ட வதனியவள் ஒருக்களித்து படுத்துக் கொள்ள, ரீசனின் போனிலோ வந்து சேர்ந்தது வாட்ஸ் ஆப் மெசேஜ் இப்படி.
''Reesan please don't hate me!! I'm sorry!! I didn't mean it!! It's just happened!! I'm swear I don't know it will be end up like that!! I just want you to be mine!! I can't live without you!! I'm sorry!! Please come back to me Reesan!! Kunjai love you so much da Junior!! I'm sorry!! I love you!!''
(ரீசன் தயவு செஞ்சு என்னே வெறுத்துடாதடா!! என்னே மன்னிச்சிடு!! நான் அப்படி நடக்கும்னு எதிர்பார்க்கலே!! ஆனா.. நடந்துருச்சு!! அப்படி நடக்கும்னு சத்தியமா எனக்கு தெரியாதுடா!! நீ எனக்கு மட்டுமே சொந்தமா இருக்கனும்னு நான் நினைச்சேன்டா!! நீ இல்லாமே என்னாலே வாழ முடியாதுடா!! என்னே தயவு செஞ்சு மன்னிச்சிருடா!! என்கிட்ட திரும்பி வந்திடுடா ரீசன்!! குஞ்சாய் உன்னே ரொம்ப லவ் பண்றாடா ஜூனியர்!! பிளீஸ்டா.. என்னே மன்னிச்சிருடா!! நான் உன்னே ரொம்ப லவ் பண்றேண்டா!!)
லேடி பீஸ்ட்டின் பிக் பாஸ் நான்..
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.8/

Author: KD
Article Title: அத்தியாயம்: 8
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.