- Joined
- Jul 10, 2024
- Messages
- 412
அத்தியாயம் 85
மருத்துவமனையில் ரீசன் இடிந்து போய் அமர்ந்திருந்தான்.
''ரீசன்.. உங்க சைன் வேணும்..''
மினர்வாவின் குரல் ஆணவனை ஏறெடுக்க வைக்கவில்லை. இருப்பினும், மருத்துவர் நீட்டிய பேனாவை வாங்கியவன் கிறுக்கினான் ஒரு கிறுக்கு ஒப்புக்கு சம்மதம் என்ற அடிப்படையில்.
''நீங்க பார்த்துக்கறீங்களா.. இல்லே இங்கையே பார்த்துக்க சொல்லிடவா..''
என்ற மருத்துவரின் தன்மையில் உதடுகளை ஈரமாக்கிய ரீசனோ கண்களை மூடித்திறக்க கண்ணீர் ஆறோ பெருக்கெடுத்தது காளையவனின் விழிகளில்.
தொண்டை நனையாமல் எச்சில் சிக்கிக் கிடக்க, ரீசனின் திரும்பாத தலையின் பார்வைகளோ லெஃப்ட் ரைட் வாங்கியது.
''ரீசன்.. குடிக்க தண்ணி ஏதும் கொண்டு வரவா..''
என்ற மினர்வாவின் அக்கறைக்கு பதிலளித்தான் ரீசன் வேண்டாமென்ற சைகையால்.
''அப்பறம் சொல்றேன்.. ஆக வேண்டியதை முதல்லே பாருங்க..''
கனத்த இதயத்துடன் அவன் சொல்ல, பெண் டாக்டரோ அவர் வேலையை பார்த்திட கிளம்பினார்.
சத்தமின்றி குலுங்கியவன் அமர்ந்திருந்த இரும்பு நாற்காலியின் கீழ்பக்க விளிம்புகளை அழுத்தமாய் பற்றினான்.
அதேபோல்தான் பாவக்கணக்கின் சாபமும் அவனை கிடுக்கு பிடியாய் பிடித்திருந்தது.
ஆறு மாதங்கள் கூட இன்னும் முழுதாய் முடிந்திடவில்லை குஞ்சரியின் மானம் களவாடப்பட்ட கொடூரம் நடந்து. அதற்குள் மீண்டுமொரு மனசாட்சியற்ற சம்பவம் திருமதி ரீசனவளை பந்தாடியிருந்தது.
நிகழ்ந்திருந்த ஈனச்செயலின் சுவடுகளே ஆறிடாத நேரத்தில் வதனியவள் வாழ்வில் இப்போது நடந்திருக்கும் புதியதோர் கற்பழிப்போ கூட்டு செயலென மருத்துவர் மினர்வா கூற கணவனவனோ செத்தே போய்விட்டான் சங்கதி கேட்டு.
அதுவும் இம்முறை குஞ்சரியை கொடுமையின் உச்சத்தில் பலர் கையாண்டிருக்க ஜனித்திருந்த குட்டி ரீசனோ மரித்திருந்தான் தாயவள் வயிற்றிலேயே.
முதல் முறை சம்பவம் நிகழ்ந்து குஞ்சரியவள் மருத்துவமனையிலிருக்க பெண்ணவளை பரிசோதித்த டாக்டரோ ரீசனின் கையை குலுக்கினார் ஆணவன் தந்தையாகியிருப்பதை உறுதி படுத்தி.
என்னதான் குஞ்சரி உடல் ஊனம் கொண்டவளாகினும் அவளின்பால் என்றைக்குமே ரீசனுக்கு விருப்பம் குறைந்ததில்லை. எப்போது எப்படி வேண்டுமென்றாலும் அவளை பெரும்பாடு பட்டாவது சம்மதிக்க வைத்து முகிரம் கொண்டிடுவான்.
அவளின்றி அவனில்லை என்பதை அந்திகையவளுக்கு புரிய வைக்கவே அவர்களுக்குள் முயங்கலை அதிகப்படுத்தினான் ரீசன்.
மன்னிப்பதும் மறப்பதும் அவரவர் சார்ந்த விஷயங்கள். தொடக்கத்தில் என்னதான் பேய் கோபம் ரீசனவன் விருந்தனையவள் மீது கொண்டிருந்தாலும் பின்னாளில் வென்றதென்னவோ குஞ்சரி மேல் அவன் கொண்ட காதலே.
ஆகவே, நடந்ததை கடந்து போக உத்தேசித்தவன் புதியதோர் வாழ்க்கையை வாழவே விரும்பினான் மனம் கவர்ந்த கற்பாளோடு. இப்படியான காலக்கட்டத்தில் உருவாகியவன்தான் சின்ன ரீசன்.
ஆனால், தேகம் சிதைந்த சிங்காரியவளோ அறியவில்லை அவள் கர்பஸ்திரி என்று. கணவனோ அதை மனைவிக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டான் வீடு திரும்பும் வரையில்.
முதலில் அவளை போட்டுத்தள்ளத்தான் நினைத்தான் ரீசன். பின், மனதை மாற்றிக் கொண்டான். ஓடியாடி திரிந்தவளை படுத்த படுக்கையாக பார்த்திட அவனுக்கு விருப்பமில்லை.
அதுவும் நடந்த கற்பழிப்பில் ரொம்பவே நொறுங்கியிருந்தாள் குஞ்சரி. கட்டியவன் கண்கள் பார்த்துகூட பேசிட விரும்பாதவள் மனம் படும் பாடு உணர்ந்தான் புருஷனவன்.
நொந்து போய் கிடந்தவளுக்கு ஒரேடியாய் நிம்மதித் தர நினைத்தான் கணவனவன். ஆனால், கொலை முயற்சியை கைவிட்டான் காதல் பொஞ்சாதியின் அடிவயிற்றில் உயிர் ஒன்று உருவம் கொள்ள காத்திருக்க.
நாட்கள் கழிய வாய் திறந்தான் ரீசன் பொண்டாட்டியிடம் தன்னவள் சுமந்திருக்கும் இரண்டாவது குழந்தையை பற்றி. உண்மை அறிந்தவளோ கடுங்கோபம் கொண்டாள்.
பொருட்கள் பறந்தன. செயல்கள் ஆணவன் மனதை காயப்படுத்தின. அலறலோ காதை செவிடாக்கியது.
மேனி பந்தாடப்பட்ட கசப்பில் குழந்தை வேண்டாமென்றாள் சுமந்தவள். ஆனால், சொந்தமானவனோ பல முயற்சிகளுக்கு பின் முட்டி மோதி சம்மதிக்க வைத்தான் குலியவளை மீண்டுமொருமுறை தாயாக.
என்னதான் பிள்ளை விவகாரத்தில் வல்லபியவள் ரீசனுக்கு ஆமாம் சொன்னாலுமே அவன் கண் பார்த்து பேசும் காதலெல்லாம் எப்போதோ மூடுவிழா கொண்டிருந்தது. ஆப்கம்மிங் டேடியும் அதையெல்லாம் பெரிதுப்படுத்திக் கொள்ளவில்லை.
கற்பழிப்புக்கு பிறகான வாழ்வில் வெறும் வெறுமையே நிரம்பியிருக்க வழமையான ரூட்டின் செக்காப்பின் மூலம் உயிர் கொண்டிருக்கும் கரு சிங்கக்குட்டியென தெரியவர ரீசனை கையில் பிடித்திட முடியவில்லை.
இதுவரை செய்ததெல்லாம் போதும் இனியாவது எல்லா பாவத்தையும் காசியில் போய் முங்கி கழித்திடலாம் என்ற முடிவுக்கு வந்தான் ரீசன்.
தேவகுஞ்சரியின் பிரசவத்தையும் கூட மலை நாடு தாண்டிய குளிர் நாட்டில் செயல்படுத்திட திட்டமிட்டிருந்தான் கணவன் தீனரீசனவன்.
லேடி பாஸின் பிக் பாஸ் நான்…
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.8/

Author: KD
Article Title: அத்தியாயம்: 85
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.