- Joined
- Jul 10, 2024
- Messages
- 412
அத்தியாயம் 87
ரீசன் செய்யாத குற்றத்திற்காய் சிறைவாசம் கொள்ள, மனையில் கிடந்த மணவாட்டியோ கணவனவன் எப்போது வருவான் என்று காத்திருந்தாள்.
பாவம் குஞ்சரியவள் கனவிலும் நினைக்கவில்லை அந்திகையவளின் காத்திருப்பிற்கு பதிலாய் வரப்போறவன் மனம் விரும்பி தொட்டவனல்ல மானத்தை கூறுப்போட்ட கெட்டவனென்று.
வழக்கு விடயமாய் வேறு மாநிலம் பயணிக்கவிருந்த ரீசனோ முதலில் மனைவியை அவனுடேயே அழைத்து போகத்தான் நினைத்திருந்தான்.
பின்னர், அது சரிவராது என்றெண்ணி அவன் மம்மிக்கு போனை போட அவர்களோ பேத்தியோடு கோவில் பயணம் மேற்கொண்டிருப்பதாய் தெரிவித்தனர் முடியாமல் கிடக்கும் மருமகளின் நலன் வேண்டி பரிகாரம் செய்ய போயிருக்கும் தகவலை.
எல்லா பக்கமும் முட்டிக்கொண்டு நிற்க, வேறு வழியில்லாதவனோ அழைத்தான் அமராவை. அவளோ கையெடுத்து கும்பிட்டு விட்டாள் முடியவே முடியாதென்று.
கெஞ்சினான் ரீசன். ஆனால், பெதும்பையவள் மனமோ இறங்கவில்லை. இருந்தும் ரீசனோ விடாது பேசி அவளின் மண்டையைக் கழுவினான்.
குஞ்சரியை கூட்டி போய் மானினி அவள் வீட்டிலேயே வேண்டுமென்றாலும் கூட இரண்டு நாட்களுக்கு தங்க
வைத்துக்கொள்ள சொன்னான். அதற்கான கூடுதல் தொகையையும் தருவதாய் வாக்குறுதி கொடுத்தான்.
இருப்பினும், என்னதான் ரீசன் தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்தாலும் எதுவுமே அமராவிடத்தில் வேலைக்கு ஆகவில்லை. கறாராய் முடியாதென்றவளோ போனை வைத்தாள் உதவ முடியா நிலைக்கு ஒரு சோரி கூட சொல்லாது.
வஞ்சியவளை பொறுத்த வரைக்கும் குஞ்சரியும் சரி ரீசனும் சரி மன்னிப்பென்ற வார்த்தைக்கு தகுதியற்றவர்களே.
அதற்கும் மேல் விசா வீட்டிலிருக்க குஞ்சரியை கொண்டு வந்து அங்கே தங்க வைத்து சேவை செய்வதெல்லாம் சுத்தமாய் செட்டாகாத விடயமென்பதை அறிவாள் ஆயிழையவள்.
என்னதான் விசாவின் முழுக்கதை ஏதும் அமரா அறிந்திருக்கவில்லையென்றாலும் ப்ரீதன் ஒற்றை வார்த்தையில் சொல்லியிருந்தான் நெஞ்சம் விரும்பும் மங்கையவள் ஒரு குழந்தைக்கு தாயான டிவோர்சி என்று மட்டுமே.
அது என்னவோ அக்காவிடம் எதையும் மறைத்திடாத தம்பியவன் முதல் முறை விசாவின் விஷயத்தில் அவளின் மீது யாருக்கும் அவமதிப்பு ஏற்பட்டிட கூடாதென்பதில் ரொம்பவே கவனமாக இருந்தான்.
ஆகவே, மாயோள் அவளை பற்றி உதிர்த்திடும் வார்த்தைகள் அத்தனையும் ஜலித்தெடுத்த முத்துகளே.
ஆனால், ஏன் இப்படியான ஸ்பெஷல் கவனிப்பு விசாவிற்கு மட்டுமென்ற காரணம்தான் யாருக்கும் புரியவில்லை. ஏன் பேபி சீட்டருக்குமே கூட.
முதன் முதலாக விசாவை வீடியோ அழைப்பில் தம்பியோடு பார்த்த அமராவிற்கு அளவில்லா வியப்பே.
பேஷண்ட்ஸ் பற்றியெல்லாம் கலந்துரையாடுவது ப்ரோபோசனல் அல்ல என்பதை நன்கறிந்த சேவகியோ எதையும் வெளிப்படையாய் காட்டிக்கொள்ளவில்லை விசா அழைப்பிலிருந்து ஒதுங்கி போகும் வரை.
அதே வேளையில் ப்ரீதன் கைக்கு வராத எவ்வித பேஷண்டின் கோப்பையும் நேரடியாக அக்காளவள் சேவைக்கு எடுத்துக் கொள்வதும் இல்லை.
ஆகவே, சிறியதொரு பிஸியோதெரப்பி செண்டர் வைத்து ஐந்தாறு ஆட்களோடு இயங்கி வரும் ப்ரீதனோ முன்னமே அறிவான் குஞ்சரி யாரென்று. எல்லாம் விசா அவ்வப்போது ஒப்பாரி வைக்கையில் உளறியிருந்த தகவல்கள்தான்.
இருந்தும் அக்காவின் சேவையையும் அவனின் பர்சனலையும் மிக்ஸ் ஆப் செய்து எமோஷனல் இடியட்டாக விரும்பவில்லை ப்ரீதன்.
ஆகவே, அமைதியாகவே இருந்தான் பேபி சீட்டரவன் அக்கா உடல் ஊனமுற்ற குஞ்சரியின் கேஸை கையிலெடுக்க.
ஆனால், எப்போது அக்கா விசாவை பார்த்த நொடி செக் போஸ்ட் போட்டாளோ அப்போதே சொல்லிவிட்டான் தம்பியவன் அக்காவிடத்தில் பட்டும் படாமலும் குஞ்சரி மற்றும் விசா இருவருக்கும் பர்சனலான சலசலப்பென்று.
அதைப்பற்றி விசா எப்போதுமே பேச விரும்பவில்லை என்ற ப்ரீதனோ அப்படியே அக்கா அமராவையும் இதைப்பற்றி வதனியவளிடம் கேட்டிட வேண்டாமென்று கேட்டு கொண்டான்.
லேடி பாஸின் பிக் பாஸ் நான்…
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.8/

Author: KD
Article Title: அத்தியாயம்: 87
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.