- Joined
- Jul 10, 2024
- Messages
- 414
அத்தியாயம் 62
வந்தவர்கள் அனைவரும் கிளம்ப நிழலிகாவோ சுவர் கடிகாரத்தில் மணியை பார்த்தப்படி மேல் மாடி நோக்கினாள்.
இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது, மணி சரியாய் பனிரெண்டாக. ஒரு எட்டு படுக்கைறைக்கு சென்று வர தோன்றியது அந்திகையவளுக்கு.
சாத்தியிருந்த கதவை சத்தமில்லாது திறந்தவளோ, மகனவன் இருக்க வேண்டியவனின் நெஞ்சில் கிடக்க கண்டு சிவந்து போனாள் பூரிப்பில்.
முகிழ்நகை கொண்டவளோ அவர்களை தொந்தரவு செய்ய விரும்பாது அங்கிருந்து நகர்ந்தாள் பக்கத்து அறைக்கு.
இன்ஸ்டாகிராமில் லைஃவ் போக ஏற்கனவே திட்டமிட்டிருந்த ஆயிழையோ போனை கொஞ்சம் சரிப்பார்த்துக் கொண்டாள்.
முதலில் பதிவு செய்திருந்த பிறந்தநாள் விழா படங்களுக்கு வந்திருந்த கமெண்ட்ஸ் மற்றும் லைக்குகளுக்கு நன்றி தெரிவித்த தெரிவையவளோ, மகனின் முகத்தை விரல்களால் தொட்டுரசி போனை நெஞ்சில் பதுக்கினாள்.
மோவியன் அப்படியே அவன் அப்பா அவிரன் சிங்கின் ஜாடை.
லேசாய் கண்களை மூடினாள் நிழலிகா. பெண்ணவளின் எண்ணம் பின்னோக்கி போனது இரு வருடங்களுக்கு பின்னாலான அன்றைய இரவை நோக்கி.
விரன், அவனொரு பைசெக்ஸுவல் என்ற உண்மையை போட்டுடைக்க நிழலிகாவோ அதிர்ச்சியில் உறைந்து போனாள்.
மனையின் படுக்கையறையில் அவனின் ஆதங்கத்தை பல வகைகளில் கொட்டித் தீர்த்த விரனும் மௌனத்தையே அவனின் அத்தனை உணர்வுகளுக்கும் பதிலாக்கிய சின்ன டிக்கியும் இறுதியில் சங்கடத்தை பஞ்சணையில் பேசி முடித்துக் கொண்டனர்.
அதுவும் கூட அவர்களின் பேச்சற்ற கூடலே. எல்லாம் முடிய மறுநாள் விடிய, சின்ன டிக்கியவள் பக்கமில்லாததைக் கண்டு பதறிப்போனான் குட்டி குஞ்சனவன்.
நல்லவேளை அவன் பொஞ்சாதியின் பெயரை கூப்பாடு போடும் முன் கண்டான் நிழலிகா படுக்குமிடத்தில் இருந்த காகிதம் ஒன்றை. அதை கையிலெடுத்தவனோ மிக சீரியஸாய் சின்ன டிக்கியின் கையெழுத்திலான வார்த்தைகளை படித்திட ஆரம்பித்தான்.
சின்ன டிக்கியவள் கிறுக்கிய அக்கடிதம் இப்படித்தான் இருந்தது.
மிஸ்ட்டர் அவிரன் சிங் உங்களுக்கு ரெண்டே சொய்ஸ்தான்.
1. உங்களுக்கு சாதகம் - எனக்கு பாதகம்.
- டிவோர்ஸ் உங்க விருப்பம். எந்த முடிவா இருந்தாலும் எனக்கு ஓகே.
- சோ, இந்த வீட்டுலதான் இருப்பேன்.
- குழந்தை நம்ப குழந்தையா வளருவான்.
- ஆனா, நான் உங்கக்கூட பேச மாட்டேன். எந்த விதத்திலும்.
- எங்க போறேன், வறேன்னு கேட்கக்கூடாது.
- ஒருக்கால், நான் ஏதாவது செய்ய சொன்னா கண்டிப்பா மறுக்காமே நீங்க அதை செய்யணும். இல்லே, டாட்டாத்தான் உங்களுக்கு.
2. எனக்கு சாதகம் - உங்களுக்கு பாதகம்
- நமக்குள்ளே பேச்சு வார்த்தை எப்போதும் போலிருக்கும்.
- டிவோர்ஸ் கிடைச்சாலும் கிடைக்காட்டியும் நான் தனியா போயிடுவேன்.
- என்னே பத்தின எந்த தகவலையும் நான் உங்கக்கிட்டே ஷேர் பண்ணே மாட்டேன்.
- என் குழந்தை. எனக்கு மட்டுமே குழந்தை. சொந்தங்கொண்டாட முடியாது. குறிப்பா, நீங்க.
அவ்வளவுதான், முடிஞ்சது. நன்றி. வணக்கம்.
பதிலை வாட்ஸ் ஆப்பில் அனுப்புங்க.
இப்படி இரத்தின சுருக்கமாய் புருஷனுக்கு தந்தி போட்டவள் கிளம்பி போய் விட்டாள் பிழைப்பை பார்த்திட.
மொத்தத்தையும் படித்தவன் சிறிதும் தாமதிக்காது போனை கையிலெடுத்து வாட்ஸ் ஆப் அனுப்பினான் சின்ன டிக்கியவளுக்கு.
கரும்பு தின்ன கூலியா என்பது போல், சின்ன டிக்கியவள் பக்கமிருந்தாளோ போதும் என்றெண்ணியவனோ போக போக அவளை எப்படியாவது கரைட் பண்ணிக்கலாம் என்று நினைத்தான்.
ஆகவே, தன்னவள் தன்னுடன் இருக்க விரும்பிய விரனோ ஒன்றாவது ஆப்ஷனின் பக்கத்தில் சிறு ஹார்ட் ஸ்டிக்கர் ஒன்றை சேர்த்து நிழலிகாவின் கைப்பட எழுதிய அக்கடிதத்தை படம் பிடித்து அனுப்பினான் அவளுக்கு.
கணவனின் பதிலை பார்த்தவளோ நாசூக்காய் சிரித்துக் கொண்டாள். அடுத்த பத்தாவது நிமிடத்தில் வீர் அழைத்தான். விவாகரத்து கேன்சல் என்று சொன்னான்.
குட்டி குஞ்சனின் பத்தினியோ புருஷனுக்கு நன்றியென்று தகவல் அனுப்ப, புரியாதவன் குரல் பதில் வினவ; சொன்னாள் சீமாட்டியவள் இனிமேல் எல்லாம் இப்படித்தானென்று பதிலை டைப்பிங்கில்.
பெருமூச்சுக் கொண்டவனோ நிம்மதியாய் உணர்ந்தான் சின்ன டிக்கி அவன் கைவிட்டு போகாததை எண்ணி.
இருப்பினும், சிறு குழப்பம் கொண்டான் ஆணவன் அவனின் பைசெக்ஸுவல் வாழ்க்கையை பற்றி நிழலிகா எதுவுமே சொல்லிடாமலிருக்க.
தீவிரமாய் யோசித்த விரனோ இறுதியாய் ஒரு முடிவுக்கு வந்தான். அதாவது, இனி தெரியாமல் கூட எவனையும் பார்த்து மூடாகி மேட்டர் செய்திடக்கூடாதென்று.
ஏற்கனவே, நடந்திருக்கும் கூத்திற்கு எப்போது மன்னிப்பு கிடைக்கும் என்று தெரியாத பட்சத்தில் புதிதாய் எதிலும் சிக்கிட கூடாதென்பதில் இனி ரொம்பவே கவனமாக இருக்க வேண்டுமென்று உறுதிமொழி எடுத்துக் கொண்டான் அவிரன் சிங்.
உயிர் துஞ்சிடுவான் விரன்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/உயிர்-துஞ்சும்-விரனா.6/

Author: KD
Article Title: உயிர் உயிர் துஞ்சும் விரனா: 62
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.