What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
327
அத்தியாயம் 13

நான்கு அரை வேக்காடு முட்டைகளை விழுங்கிய விரனோ அவனின் ஜிம் பேக்கை தோளில் மாட்டி பைக் சாவியை கையிலெடுத்தான் வீட்டிலிருந்து வெளியேறிட.

''அண்ணா.. என்னே கொஞ்சம் இந்த அட்ரஸ்லே இறக்கி விட முடியுமா..''

கையின் காயம் ஆறாத அட்சரனோ மூத்தவனிடம் உதவி கேட்க,

''டேய்.. டாக்டர் உன்னே கொஞ்ச நாளைக்கு கைக்காலே வெச்சுக்கிட்டு சும்மா இருக்க சொன்னாருதானே!! கேட்கே மாட்டியா நீ!!''

என்ற விரனோ புருவங்கள் குறுக்கினான் அதட்டல் தொனி கொண்டு,

''சரி.. அப்போ நான் வீட்டுலையே ரெஸ்ட் எடுக்கறேன்.. நீ போய் இந்த லிஸ்ட்லே இருக்கற வீட்டுலெலாம் போய் வட்டி காசே கலெக்ட் பண்ணிட்டு வந்திடு.. ஓகேவா..''

என்றவனோ அண்ணனின் ஜிம் பேக்கின் மீது ஒரு கோப்பை வைத்து பின் நேராய் நடையை கட்டினான் சோபாவை நோக்கி தாங்கியப்படி நடந்து.

''எதெய்!! நானா!! அதுவும் வட்டியா!! நோ வேய்!! அதுக்கு வேறாளே பாரு!!''

என்றவனோ கோப்பை கொண்டு போய் காஃபி டேபிளின் மீது வைக்க,

''உன்னாலே முடியதுலே.. அப்போ பேசாமே என்னே நான் சொல்றே இடத்துலே இறக்கி விடு.. என் வேலையே நானே பார்த்துக்கறேன்..''

பொறுமையாய் சொன்னான் தம்பியவன் அண்ணனின் குணம் அறிந்து.

''நட்டுக்கிட்டு கழண்டிடுச்சாடா உனக்கு!! நீயே ஏற்கனவே விழுந்து வாரி கையே உடைச்சிக்கிட்டு வந்து உட்கார்ந்திருக்கே.. இதுலே இப்போ இந்த கலெக்ஷன்தான் ரொம்ப முக்கியம் பாரு!!''

இடை இறுக்கியன் குரல் மாறியது முகம் இறுக,

''என்னண்ணா உன் பிரச்சனை.. நீயும் பண்ண மாட்டே.. என்னையும் போக விட மாட்டறே.. அப்பறம் தாத்தாக்கு யார் பதில் சொல்றது..''

என்ற சரனோ கடந்த வாரம் பைக்கில் அவனுக்கு ஏற்பட்ட சின்ன விபத்தால் இன்றைய வட்டி கலெக்ஷன் டியூட்டி பாதிக்குமென்று நினைக்கவில்லை.

''அந்த கிழவனுக்கு வேறே வேலை இல்லே!! ஊருலே வேறே ஆளா இல்லே!! போயும் போயும் படிக்கறே பையன் உன்னே போய் இந்த சாக்கடைக்குள்ளே இழுத்து விட்டுக்கிட்டு!!''

என்றவனோ பல்லை கடிக்க,

''அண்ணா.. நீ கிளம்புணா.. நான் பார்த்துக்கறேன்..''

என்ற சரனோ பெருமூச்சொன்று கொண்டு அவனின் அலைபேசியை கையிலெடுக்க,

''ஒரு மண்ணும் வேணாம்!! நானே போறேன்!!''

என்றவனோ கடுப்போடு கிளம்பினான் அங்கிருந்த கோப்பை தூக்கிக் கொண்டு.

விரனுக்கு பிடித்திடா போதும் சரனுக்காக இன்றைக்கு வட்டி வசூல் மன்னன் தொழிலை கையிலெடுத்தான் ஆணவன்.

கோப்பை திறந்து முகவரிகளை அலசியவன் அதில் நேசமணியின் வீட்டு விலாசம் இருக்க கண்டான். சரி வேலையை அங்கிருந்து தொடங்க நினைத்தவன் ஏமாந்து போனான் பெரியவரின் வீடு பூட்டிக் கிடக்க.

அப்படியே ஒரு யூ டர்ன் போட்டவன் மருதாணி கடை திறந்திருப்பதை கண்டான். பெல்லடித்து சென்சர் வெர்க்காக முன் வாசற்கதவை தள்ளி உள்ளே நுழைந்தான் ஆணவன்.

''நிகலிகா.. நிகலிகா..''

என்றவனோ மேடமின் பெயரை தப்பாய் ஏலம் போட்டு விழிகளால் விறலியின் உருவத்தை தேட அக்கடைக்குள்,

''ஹான்.. வறேன்.. வறேன்..''

என்ற இன்னாட்டி அழகியோ வந்தாள் ஒரு கையில் மருதாணி இழுப்பியிருந்த கையுறையும் மறுகையில் மருதாணி கூம்பு கொண்ட புறங்கையால் நெற்றி வேர்வையை ஒத்தியப்படி.

''எஸ்..''

என்றவளின் குரலில் கடையை சுற்றி நோட்டமிட்டுக் கொண்டிருந்த விரனோ திரும்பினான் தாரகையவள் புறம்.

''நிக.. லிகா..''

என்றவனோ இழுத்தான் மஞ்சள் வர்ண டாப்ஸ்சில் கண்ணுக்கு லட்சனமாய் கருப்பு வர்ண லெகிங்ஸ் போட்டு, முன் நெஞ்சு பாதி மறைய குழல் கொண்டு, அதில் மணக்கும் மல்லி வைத்து, பிறை நுதலில் குட்டி பொட்டிட்டு; செவியில் ஜிமிக்கி கொண்டிருப்பவளை மனசோ மறுவார்த்தை பேசாது ரசிக்க சொல்ல.

''நிழலிகா..''

என்றவளோ திருத்தினாள் சொக்கிய கண்களோடு வெள்ளை வர்ண ரவுண்ட் நெக் ஷேர்ட் மற்றும் அதே வர்ணத்தில் ட்ரேக் கொண்டு முன்னிருந்த விரனின் அழகு ப்ராவுன் ரைஸ்க்காரியை வியக்க வைக்க.

''நான் ஆளான தாமரை
ரொம்ப நாளாக தூங்கல

அம்மி மிதிச்சும் நேக்கு எதுவுமில்ல
அந்த கவல நோக்கு புரியவில்ல

நான் தொட்டா என்ன சுட்டா விடும்
வாங்கோ அட கிட்டே
வந்து முத்தம் ஒன்னு தாங்கோ''

என்றலறியது பாடல் திடிரென்று.

பாடலின் வரிகளில் விரனின் விழிகள் பிதுங்க, தொண்டைக்குழியிலோ எச்சில் இறங்க மறுத்தது.

''சோரி.. ஒன் மினிட்..''

என்று பல்லிளித்தவளோ தொடர்ந்தாள் திட்டிகளால் போனை அலசி அருகிலிருந்த மேஜையில்.

''கொஞ்சம் இந்த போனை சைலண்ட்லே போடறீங்களா.. தேங்க்ஸ்..''

என்றவளோ கையுறை கை முட்டியை இடையில் குத்த வைக்க, முறுவல் கொண்டவனாய் விரனோ வார்த்தைகள் ஏதுமின்றி அவளின் போனை சைலண்டில் போட்டிட கையிலெடுத்தான்.

''அழக பார்த்தா
ஜவுளி கட
அளந்து பார்த்தா
ரேஷன் கட
அடகு வச்சா
வட்டி கட
அல்வா தந்தா
இருட்டு கட..''

என்றவள் போன் மீண்டும் அலற,

''இட்ஸ் ஓகே.. அது ஜஸ்ட் மெசேஜ்தான்..''

என்றவளோ மொத்த பற்களையும் காட்ட, விரனோ இதழோரம் ரகசிய புன்னகை ஒன்று இழைந்தோட அவளை இமைக்காது பார்த்து பாவையவள் வேண்டிய உதவியை செய்துக் கொடுத்தான்.

''ஆமா.. நீங்க யாரு..''

என்ற யுவதிக்கோ அப்போதுதான் ஞானயோதயமே பிறக்க வேள்வி கொண்டாள் மூன்றடியில் நெருங்கியிருந்தவனை.

''வட்டி காசு வாங்கிட்டு போக வந்தேன்..''

என்றவனோ கொஞ்சம் சீரியஸ் தொனி கொள்ள, மேடம் நிழலிகாவோ கைகளை பிசைந்திட ஆரம்பித்தாள்.

உடல் தன்னிச்சையாக வியர்த்திட உதடுகளை ஈரமாக்கிக் கொண்டு நிற்பவளை கவனித்தவனோ,

''நான் வேணும்னா அப்பறம் வரவா..''

கடை திறந்த காலையிலேயே வட்டி பணம் வாங்கிட வந்ததால் சங்கடம் கொள்கிறாளோ பெண்ணவள் என்று விரன் நினைக்க,

''நீங்க எப்போ வந்தாலும்.. என்கிட்டே பணம் இல்லே..''

என்றவளோ முதலில் முகத்திலிருந்த சிரிப்பு மறைய தலையை தொங்கப் போட்டு சொன்னாள் சின்ன குரலில்.

''என்னே.. பணம் இல்லையா!!''

என்றவனின் சத்தத்தில் பக்கென்றது பூமகளவளுக்கு நெஞ்சு.

''ஆமா.. இல்லே.. இப்போ..''

என்றவளின் வார்த்தைகளோ ஒத்தையில் வந்தன ஏறெடுத்தவனின் முகத்தை ஞொள் கொண்டு நங்கையவள் நோக்கியதில்.

''அப்போ எப்போ!!''

என்றவனின் கணீரென்ற குரலில் ஈரக்குலை நடுங்கிப் போனது நாயகியவளுக்கு.

''அதெல்லாம் எனக்கு தெரியாது!! வந்ததும் கொடுக்கறேன்!! முதல்லே நீங்க இங்கிருந்து கிளம்புங்க!!''

என்றவளோ அவனை துரத்திட பார்க்க நடுக்கத்தை மறைத்து,

''என்னே போகணுமா!! அதுவும் காசு வாங்காமையா!! நோ வேய்!! பணத்தோடுத்தான் நான் இங்கிருந்து போவேன்!!''

என்றவனோ கராறாய் சொல்ல,

''யோவ்!! என்னையா நீ!! நாந்தான் சொல்றேன்லே காசு வந்த உடனே கொடுக்கறேன்னு!! அப்பறம் என்னே நோ வேய் ஹை வேய்ன்னுக்கிட்டு!! கிளம்புயா!! முதல்லே வெளிய போயா இங்கிருந்து!!''

என்றவளோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு துணிச்சலோடு விரனை விரட்ட,

''ஏய் என்னே குரல் ஓங்குது!! முதல்லே பூனை மாறி சீன் போட்டே!! இப்போ என்னான்னா இந்த போடு போடறே!! அதுவும் நான் போகணுமா இங்கிருந்து!! முடியாது!! வட்டி காசே வசூல் பண்ணாமே நான் இங்கிருந்து ஒரு இன்ச் கூட நகர மாட்டேன்!!''

என்றவனோ கதங்கொண்டு அவனின் பைக் சாவியை பக்கமிருந்த மேஜையில் ஓங்கி ஒரு அடி அடித்தாற்படி வைத்தான்.

வெலவெலத்து போனாள் பெதும்பையவள். இருந்தும் வெளியில் காட்டிக் கொள்ளவில்லையே மானினியவள்.

''யோவ்!! என்னையா உன்னோட காலங்காத்தாலையே ரோதணையா போச்சு!! வெளிய போயா என் கடையே விட்டு!! போயாங்கறேன்!!''

என்றவளோ மேஜையின் மீது ஏறி அமர்ந்தவனின் தோளை அவளின் தோள் கொண்டு தள்ளினாள் கீழே.

''எது உன் கடையா!!''

என்றவனோ இடை இறுக்கி சிரித்தான்.

''ஆமா!! என் கடைதான்!!''

என்றவளோ வெறுப்போடு அவனை முறைத்து மல்லுக்கட்டினாள் கட்டுமஸ்தான ஆணவனை தள்ளிட.

''ஓஹ்!! ஓனருக்கு தெரியுமா!!''

என்றவனோ நக்கல் கொள்ள,

''அதெல்லாம் உனக்கெதுக்கு!! முதல்லே இங்கிருந்து கிளம்பு நீ!!''

என்றவளோ விரனை எப்படியாவது அங்கிருந்து துரத்திடவே முனைந்தாள்.

''சொல்லுங்க கடைக்காரம்மா ஓனரே பார்த்துருக்கிங்களா.. பேசிருக்கிங்களா..''

''ஹான்.. பார்த்து பேசி படுத்திருக்கேன்!! போதுமா!! பிளீஸ்!! கொஞ்சம் கிளம்பறிங்களா!!''

என்றவளோ கையெடுத்து அவனை கும்பிட,

''சரி.. வா..''

என்றவனோ மேஜையிலிருந்து கீழிறங்கி இளம்பிடியாளின் கரம் பற்றியிழுக்க,

''ஏய்!! என்னே பண்றே!! விடு!!''

என்றவளோ திமிறினாள் அதிர்ந்து ஒரு நொடியில்.

''பின்னே.. நீதானே சொன்னே குடும்பம் நடத்திருக்கன்னு.. அதான் என் பொண்டாட்டி எவ்ளோ அழகுன்னு பார்க்க வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போக போறேன்!!''

என்றவனோ கிண்டல் கொள்ள நகைப்போடு,

''சீ!! வெளிய போடா!!''

என்றவளோ மருதாணி கவர் கொண்ட கையை விரனின் சட்டையில் பதித்தாள் அவன் பேச்சில் சினங்கொண்டு.

மலரவள் கை விரனின் நெஞ்சிலிருக்க கோபப்பார்வைகளை சிரந்தாழ்த்தி அவனாடை கறையை பார்த்து அப்படியே அம்பகங்களை மேலேத்தி முறைத்தான் நெஞ்சிடிக்கும் நெருக்கத்தில் நின்றிருந்த நிழலிகாவை ஆணவன்.

''சட்டையே துவைச்சு காயப்போட்டு அயர்ன் பண்ணி மடிச்சு திரும்ப கொடுக்கறே.. வாங்கின பணத்தோடு சேர்த்து!! இந்த சட்டத்தான் உனக்கான கெடு!!''

என்றவனோ அடிகளை அச்சங்கொண்டு பின்னோக்கி வைத்தவளின் முகத்தில் அவனின் ஷேர்ட்டை விட்டடித்து நகர்ந்தான் அங்கிருந்து ஆத்திரங்குறையாது.

உயிர் துஞ்சிடுவான் விரன்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:

https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/
 

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 13
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top