What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
327
அத்தியாயம் 14

மணி இரவு ஒன்பதாக இன்னும் பத்து நிமிடங்களே இருக்க முன் வாசல் கதவு, ஷட்டர் என்று எல்லாவற்றையும் இழுத்து சாத்திய மருதாணி மங்கையோ தனக்குத்தானே பெருமை பீத்திக் கொண்டாள் விரனுக்கு டிமிக்கி கொடுக்க போகும் அவளின் திட்டத்தை எண்ணி.

மூடிக்கிடக்கும் கடையை காண்பவன் நிச்சயம் ஏமாந்து போவான் என்று உள்ளூர சிரிப்பாய் சிரித்தவளோ ராத்திரி பத்து வரைக்கும் பூட்டிய கடைக்குள்ளாரயே தஞ்சம் கொண்டாள் அவன் கிளம்பிய பிறகே வீடு திரும்பிடும் எண்ணங்கொண்டு.

படி வழி அலைபேசியில் கதைத்தப்படி மேல் மாடியிலிருந்து கீழ் தளம் நோக்கிய விரனின் குரலை சுவற்றில் காது வைத்து ஒட்டுக்கேட்டவளோ குடுகுடுவென ஓடிப்போய் கடையின் விளக்கை அணைத்தாள்.

தேடி வந்தவன் கடை சாத்திருப்பதைக் கண்டு காண்டாகி பைக்கை பேய் முறுக்கு முறுக்கி பறந்ததை அதன் பேரிரைச்சல் மூலம் உணர்ந்துக் கொண்டாள் பூமகளவள் முகம் பூரித்து போக.

நிம்மதி கொண்டவளோ ஏற்கனவே ஆர்டர் செய்து வைத்திருந்த பிரியாணியை ஒரு புடி புடித்து மணி பத்தறையாக பின் வாசல் வழி கடையிலிருந்து வெளியேறினாள் வீடு திரும்பிட.

''இன்னிக்கி இப்படி தப்பிச்சாச்சு.. நாளைக்கு எப்படி தப்பிக்கறது..''

என்று தனக்குத்தானே கேள்வியெழுப்பிக் கொண்டவளோ பேக் டோரை லாக் செய்த சாவியை கைப்பைக்குள் போட்டப்படி அடிகளை முன்னோக்கி வைத்து முட்டி ஏறெடுத்தாள் தலையை திண்ணிய மார்புகள் கொண்ட அவிரன் சிங்கின் முகத்தை.

கைகளை நெஞ்சுக்கு குறுக்கே கட்டியவனை கண்டவளுக்கோ தூக்கி வாரி போட்டது. அம்பகங்கள் அகல விரிய கண்களை பட்டாம் பூச்சியாய் சிமிட்டியவளோ மெல்ல பாதங்களை பின்னோக்கி வைத்தாள் மனதில் பயம் சஞ்சரித்து உடலில் நடுக்கம் குடிக்கொள்ள.

விரனோ அவளின் செயலை வேடிக்கை மட்டுமே பார்த்தான் ஏதும் செய்யாது சொல்லாது முன்னோடி அடிகளை வைத்து மடவரலவள் நோக்கி.

''நீங்க இன்னும் கிளம்பலையா..''

என்றவளோ ரகசிய குரல் கொள்ள,

''கொடு..''

என்றவனோ கையை நீட்டினான் நிழலிகாவின் முன் கேட்க வேண்டியதை கண கச்சிதமாய் கேட்டு மெது நடை கொண்டு.

''கொடு கொடுன்னா.. என்னே இருக்கு கொடுக்க.. என்னைத்தவிர!!''

என்றவளோ குனிந்த தலை நிமிராது சத்தமாய் முனக, நங்கையவள் பதிலில் இதழோரம் துளிர்த்த நாணத்தை ஒளித்தவனோ பெருமூச்சொன்று கொண்டு வாய் மலர்ந்தான்.

''சட்டை..''

''ஹான்.. அதுவா.''

என்று முதலில் அதிர்ச்சிக் கொண்டாலும் பின் சமாளித்தாள் சிங்காரியவள்.

''அது.. அது வந்து.. துவைச்சு காய போட்டிருக்கேன்.. இன்னும் காயலே.. நாளைக்கு காஞ்சிடும்.. அயர்ன் போட்டு மடிச்சு கொண்டு வந்து கொடுத்துடறேன்..''

இப்போதும் கண்களை சிமிட்டினாள் அழகியவள் இமைக்காது விரன் பார்க்க.

தவுசண்ட் வாட்ஸ் பால்பாட்டம் நின்றவள் முகத்தில் மட்டும்தான் தேஜஸையெல்லாம். உள்ளுக்குள்ளோ கதிகலங்கி போயிருந்தது அலரவளின் பிஞ்சு நெஞ்சு.

இருக்காதா பின்னே, கை நீட்டி கடன் வாங்கிய ரோஷக்காரியோ காலையில் விரன் மீது கொண்ட கோபத்தை வேறெப்படி காண்பிப்பது என்று தெரியாத பட்சத்தில் வாஷ் பண்ண வேண்டியவனின் டி-ஷேர்ட்டை த்ரோவ் பண்ணி பழி தீர்த்துக் கொண்டாள்.

ஆகவே, இப்போதவன் ஆடையை பற்றி கேட்க பூசி முழுகினாள் பேடையவள் நாளை முதல் வேலையாய் எதிரிலிருக்கும் ஷாப்பிங் மாலுக்கு சென்று அவனுக்கு புதியதோர் ரவுண்ட் நெக் டி - ஷெர்டை வாங்கிட வேண்டுமென்ற எண்ணத்தில்.

''அப்போ இதென்னே..''

என்றவனோ விழிகளால் ஆணவன் அணிந்திருந்த டி-ஷெர்டை ஜாடை காண்பிக்க,

''ஓஹ்.. காஞ்சிடுச்சா.. அப்போ கொடுங்களேன் அயர்ன் போட்டு கொடுக்கறேன்..''

என்றவளோ கொஞ்சங்கொஞ்சமாய் ரிவர்ஸ் நடையிலேயே கடை வீதியின் முற்று வரைக்கும் வந்துச் சேர்ந்தாள் மனமோ கிடந்து தவிக்க, எங்கே விரன் கண்டறிந்திடுவானோ மேடம் அவனின் சட்டையை துவைக்கவும் இல்லை காய வைக்கவும் இல்லை மாறாக கடையின் பின் குப்பைத்தொட்டியில் கடாசிய சங்கதியை.

அல்லு விட்டி கிடந்தவளோ ஊமை பாஷை கொண்டு விட்டம் வெறித்தாள் கடவுளை நிந்தித்து கடுகளவும் விரனுக்கு சந்தேகம் வந்து அவனிடத்தில் சிக்கிட கூடாதென்று.

அவளை வெறித்து ரசித்த விரனோ ஒரு வார்த்தை கூட பேசாது அவளையே பார்க்க, ஆணவனின் குறுகுறு பார்வையில் அடி வயிறு கலக்கியது வஞ்சியவளுக்கு எங்கே மெய்யறிந்து வெறுமனே சீண்டி பார்க்கிறானோ என்றுக்கூடத் தோன்றியது.

என்னதான் அச்சத்தில் விலோசனங்கள் அங்கும் இங்கும் ஓடினாலும் வதனியவளாள் ஆணவனின் புஜங்களை ரசித்திடாமல் இருக்க முடியவில்லை.

''ஐயோ இந்த கண்ணு வேறு சும்மா சும்மா போய் அங்கையே செக் போஸ்ட் போடுதே!! கடவுளே நானேபோய் வாலண்டியரா மாட்டிப்பேன் போலிருக்கே!! இந்த பத்மசூரன் வேறே உண்மை தெரிஞ்சா ரசிக்கறே அதாலேயே முட்டி சாவடிச்சிடுவான் போலிருக்கே!!''

என்றவளோ வெற்று புன்னகை ஒன்றை உதிர்த்து பவ்வியமான மழலையைப் போல் உதடுகளுக்குள்ளேயே முனகிக் கொண்டாள் அழகனின் ரசிப்பை.

விரனும் சும்மா இல்லை. அவளை நடக்க விட்டு ரசித்தான் என்றே சொல்ல வேண்டும்.

''ஹான்.. கால் வலிக்குது.. ரொம்ப நேரமா பின்னாடியே நடக்கறது.. நீங்க வேணுன்னா என் முன்னாடி வந்து நின்னு ரிவர்ஸ்லே நடங்களேன்.. எனக்கு கொஞ்சம் வசதியா இருக்கும்..''

என்றவளின் சிரித்த முகமோ சூம்பி போனது விரனின் முறைப்பில்.

''ஆர்ர்ஹ்ஹ்.. டைம் ஆச்சு.. நாமே நாளைக்கு பேசலாமே.. மேய் மீ.. மோர்னிங் இதே மெத்தட் ஃபோலே பண்ணி ஜாகிங் கூட பண்ணலாமே.. ஏன் தண்டமா இந்த ஜிம்கெல்லாம் காசே கட்டி வெஸ்ட்..''

என்றவளின் வார்த்தையோ அப்படியே நின்றது விரனின் முகம் சிவக்க ஆரம்பிக்க.

''லேட்டாகுது.. நான் வறேன்.. பாய்..''

என்றவளோ பட்டென சொல்லி விருட்டென்று ஓட,

''என்னே வாங்கின காசே கொடுக்காமே அப்படியே ஓடிடலான்னு பார்க்கறியா..''

என்றவனோ அவளை துரத்தி வந்த வேகத்தில் பற்றியிருந்தான் பாவையவள் கரத்தை இழுத்து நிறுத்தி.

விரனின் பேச்சிலும் அவன் செயலிலும் கூசிப்போனாள் இளம்பிடியாளவள் ஆட்கள் நடமாடும் வீதியில் வாஞ்சினியின் மானம் கப்பலேற.

''வாங்கும் போது கரைட்டா கொடுக்கறதா சொல்லித்தானே வாங்கறிங்க!! இப்போ மட்டும் கொடுக்க வலிக்குதா என்னே!!''

என்றவனின் சென்சாரல்லா சடன் வார்த்தைகளால் கலங்கி விட்டது நிழலிகாவின் நேத்திரங்கள்.

சம்பவத்தையோ மானிட ஜந்துகள் வேடிக்கை பார்க்க அவமானம் கொண்டவளாய் சுற்றி முற்றி பார்வைகளை சுழல விட்டாள் யுவதியவள் யாராவது பஞ்சாயித்து பண்ண வருவார்களா என்று.

''காசென்னெ மரத்திலிருந்தா கொட்டுது!! நீ பாட்டுக்கு ஆட்டையே போட்டுட்டு போக!! இதென்னே உங்கப்பன் வீட்டு சொத்தா நீ ஆடி அழிக்கறதுக்கு!!''

என்றவனின் கோபத்தில் அசிங்கப்பட்டவளோ,

''எல்லாரும் பார்க்கறாங்க.. பிளீஸ்.. கையே விடுங்க..''

என்று மல்லுக் கட்டினாள் அருணியவள் மற்றவர்களின் பார்வை அவளின்பால் ஏளனம் கொள்ள.

''பார்க்கட்டும் அப்பத்தான் புத்தி வரும்!! ஏற்கனவே கடைக்கு ரெண்ட் கொடுக்காமே ஓசியிலே ஏசி போட்டு வாழறிங்க!! இந்த லட்சனத்துலே வட்டி குட்டி போட்டு டபுளா நிக்குது இதெல்லாம் நீங்க எந்த காலத்துலே செட்டில் பண்ணி கடனே அடைச்சு.. எனக்கு நம்பிக்கையில்லே.. கடைசியா எங்க பணத்துக்கு நாமந்தான் போலே!! இந்த புழப்புக்கு நாலு பேர்கிட்டே கையேந்தி..''

என்ற விரனின் நஞ்சான வாக்கியம் ஒரு முடிவுக்கு வரும் முன்னரே மாயோள் அவள் கரத்தை பற்றியிருந்தவனோடு கைப்போர் கொண்டவளின் செயல் நிறுத்தம் கொண்டது.

கண்ணீர் வழிந்திறங்க அவனை ஏறெடுத்த நிழலிகாவோ அழுத்தமாய் பற்றி தளர்த்த பார்த்தவனின் கையிலிருந்து மெதுவாய் பிரித்தெடுத்துக் கொண்டாள் அவளின் கரத்தை.

அதீதமாய் வார்த்தைகளை விட்டு விட்டதை எண்ணி விரனும் நொடியில் சங்கடம் கொள்ள தானாகவே தளர்ந்தது அவன் பிடி விறலியின் மணிக்கட்டிலிருந்து.

மகடூ அவளின் நயனங்கள் துளிர்த்த உப்பு நீரில் ஏனோ எரிச்சல் கொண்டது விரனின் மனமே. காயங்கொண்டவளின் விலோசனங்கள் விரனின் இமைகளை வலி கொண்டு நோக்க ஆணவன் மன்னிப்பு கேட்கும் முன்னரே அங்கிருந்து ஓடி விட்டாள் மதங்கியவள்.

''ஏய்..''

என்றழைத்தவனோ பின் தலையை அடித்துக் கொண்டான் குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்க.

உயிர் துஞ்சிடுவான் விரன்...

முந்தைய அத்தியாயங்களை படிக்க:


https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/
 

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 14
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top