What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
327
அத்தியாயம் 15

மருதாணியம்மாவும் ஜிம் ட்ரெனரும் டூ விட்டு மூன்றை வாரங்கள் கடந்திருந்தன.

சம்பவத்தின் மறுநாளே விரன் வெளியூர் செலிப்ரட்டி ஒருத்தருக்கு பர்சனல் ட்ரெனராக செல்ல வேண்டிய நிர்பந்தம். ஆகவே, ஆணவனோ வந்து சங்கடத்தை சரிக்கட்டிக் கொள்ளலாம் என்றெண்ணி கிளம்பி விட்டான்.

நிழலிகாவும் முதல் ரெண்டு நாளைக்கு கடை பக்கமே போகாது வீட்டிலேயே முடங்கி கிடந்தாள். என்னதான் பணப்பிரச்சனை இருந்தாலுமே இதுவரை கன்னியவள் யாரிடமும் அசிங்கப்பட்டடு நின்றதில்லை.

கடைக்காக அப்பா பணம் வாங்கிய விடயமே விறலியவளுக்கு தெரியாது. வீடு வந்த பிறகே கேட்டறிந்து கொண்டாள் காரிகையவள் தந்தையிடம்.

நெஞ்சு வலி நேரத்தில் கூட பெத்தவருக்காக நிழலிகா அதே சிங் தாத்தாவிடம்தான் கடன் வாங்கியிருந்தாள்.

அப்போது கூட மானினியவள் அப்பாவின் மருத்துவ செலவு என்று குறிப்பிட்டாளே ஒழிய நேசமணியின் பெயரை அவ்விடத்தில் சொல்லிடவேயில்லை. கடன் கொடுத்தவர்களும் அதைக் கேட்டுக்கொள்ளவில்லை.

அதுவும் அந்நேரத்துக்கு நிழலிகா கம்பெனியில் வேலை பார்க்க நல்லவேளையாக ஐந்து பர்சண்ட் வட்டியில்தான் அவளுக்கு கடன் கிடைத்தது. ஆகவே, சிங் தாத்தா பணியாளர்களை பொறுத்த வரை அப்பா மகள் இருவரும் உறவற்ற இரு வெவ்வேறு கடனாளிகளே.

யுவதிவளோ வாங்கிய கடனை அவள் திருமணத்திற்கான நகைகளை கொண்டு செட்டில் செய்து நிம்மதிக் கொண்டாள்.

ஆகவே, அப்பா மூலமாய் இப்போதுதான் தெரிந்துக் கொண்டாள் மலரவள் மளிகை கடை நஷ்டமானதையும் அதன் பொருட்டே தந்தையவர் மிகப்பெரும் தொகையொன்றை அதி வட்டிக்கு சிங் தாத்தாவிடம் கடன் வாங்கியிருந்த தகவலை.

எப்படியாவது அக்கடனை அடைத்திட வேண்டுமென்று உறுதிக் கொண்டாள் அணங்கவள். அதற்காக ஓய்வின்றி உழைக்கவும் முடிவெடுத்தாள் வதினியவள்.

பணத்திற்கான தீர்வை கண்டறிய முடிந்த மயோளவளாள் காயம்பட்ட அவள் நெஞ்சுக்கு ஒரு ஆறுதலை தேடிட முடியவில்லை.

ஏனோ தெரியவில்லை, தெரிவையவளாள் விரனின் வார்த்தைகளை யாரோ ஒரு மூன்றாவது மனிதனை போல் மிக சாதரணமாய் கடந்து போக இயலவில்லை.

குமுறி அழுதவளின் மூளையோ அந்திகையின் கண்கள் ரசித்த அவிரனை மனம் முழுக்க நிறைப்பது தவறென்று நொடிக்கு நூறு முறை அந்திகையவளுக்கு ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தது.

அலைபாயும் மனசை கட்டுப்படுத்திட வேலையில் அவளை பிசியாக்கி கொண்டாள் நிழலிகா. தையல் கற்றுக் கொண்டவள் ரவிக்கைகள் தைக்கவும் ஆரம்பித்தாள். ஒரே ஆளாய் எல்லா வேலையையும் செய்பவளுக்கு நின்று பேச கூட நேரமின்றி போனது.

ரெண்ட் பணம் தொடங்கி வட்டி பணம் முதற்கொண்டு எல்லாவற்றிக்கும் காசை சரி வர பிரித்து வைத்து அதன் பின்னரே வீட்டு செலவுகளை கவனிக்க ஆரம்பித்தாள்.

எறும்பாய் சுறுசுறுப்பு கொண்ட அரிவையவளோ அதிகாலை ஐந்துக்கெல்லாம் கடையை திறந்திடுவாள்.

அன்றைக்கும் அப்படித்தான் மணியடித்து அம்மணி சாம்பிராணி போட்டப்படி பூஜையிலிருந்தாள் கடைக்குள்.

அந்நேரம் பார்த்து வெளியூர் பயணம் முடித்து நேராய் ஜிம் நோக்கி வந்த விரனோ கீழ் தள கடையில் புகையை கண்டு ஆடிப்போனான் நெருப்பு பிடித்து கொண்டதென தவறாக எண்ணி.

பதறியடித்த விரனோ கடைக்குள் நுழைய மனம் கவிழும் நறுமண புகை மறைய மணியடித்தவாறே தீபாராதனை தட்டோடு அழகே திருவுருவாக முன்னோக்கி வந்தாள் நிழலிகா. பதுமையின் அதிகாலை தரிசனத்தில் ஸ்தம்பித்து போனான் விரன்.

ஒரு கையில் தீபாராதனை தட்டும் மறுக்கையில் மணியையும் இறுக்கியிருந்தவள் கண்ணெதிரே விரனை காண அவளறியாது இழைந்தது இளம்பிடியாளின் இதழ்கள் ரெண்டும் உள்ளம் நாண.

நிழலிகாவின் ஈரக்குழல் கொண்ட டவல் ஸ்டைலோடு சேர்த்து கதிரவன் வரும் முன்னரே புத்துணர்ச்சியைக் கொடுக்கும் அவளின் இன்னட்டு முகத்தையும் ரசித்தவனாய் மெதுவாய் அடிகளை முன்னோக்கி வைத்தான் விரன்.

எச்சில் விழுங்கி அவனையே இமைக்காது பார்த்தாள் வஞ்சியவள் ஏசியிலும் சுந்தரியவள் தேகம் வெக்கையை உணர.

நாயகியை நெருங்கிய விரனோ காந்தையவள் கையிலிருந் தீபாராதனையை கண்ணில் ஒற்றி திருநீறை நெற்றியில் இட்டுக் கொண்டான்.

''ஒரு நிமிஷம் வெச்சுட்டு வந்துடறேன்..''

என்றவளோ பின் பக்கம் போக விரனோ காத்திராது அங்கிருந்து வெளியேறினான் ஒற்றை சோரியை மட்டும் டேபிளின் மீது எழுதி வைத்து.

பூஜையை முடித்து வந்தவளோ விரனை காணாது முன் வாசல் வரை போக அவனின் பைக்கும் அங்கில்லை காருக்கான தடயமும் இல்லை.

யோசனையோடு கையிலிருந்த பணத்தை கொண்டு வந்து மேஜையின் மீது வைக்க கண்டாள் மடவரலவள் விரன் மருதாணியில் எழுதியிருந்த சோரியை. அதுவும் அவனின் சோரி பக்கத்திலேயே சோக எமோஜி ஒன்று இருப்பதையும் கண்டு சிரித்துக் கொண்டாள்.

நிழலிகாவை பொறுத்த வரை இப்போதுதான் விரனென்ற வேதாளம் முருங்கை மரத்திலிருந்து கீழிறங்கி இருக்கிறது. ஆனால், உண்மையிலேயே அவன் எப்போதோ சரணடைந்து விட்டான் சின்ன டிக்கியவளின் அழுகைக்கு.

நடு ரோட்டில் குமாரி ஒருத்தியின் கையை பிடித்து நாராசமாய் பேசியதை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை. அவன்தான் பேசினான் இல்லையென்றிட முடியாது. இருப்பினும், அசல் வட்டிக்காரனாகவே மாறிப்போனதில்தான் விரனுக்கு வருத்தமே.

அவனின் டயலாக்ஸேல்லாம் வெறும் சாம்பிள்கள் மட்டுமே. இதே அவனிடத்தில் சிங் தாத்தாவோ அல்லது சரனோ இருந்திருந்தால் கதையே வேறு.

வாய் தவறி பேசியதை எண்ணி கவலைக் கொண்ட விரனுக்கோ அன்றைய இரவு துயிலின்றியே போனது. ஆணவன் மிழிகள் மூட வந்து நின்றது என்னவோ நிழலிகாவின் வலி நிறைந்த பார்வைகளே.

புரியவில்லை விரனுக்கு முதல் முறை பெண்ணொருத்தி நேரெதிரே அவன் கண்களை நோக்கி அவளின் அழுகைக்கு அவனே காரணமென்பது போல் வெறிக்க மனசுக்குள் சிறு கலக்கம் பிறக்க.

ஒருவழியாய் மனசை சமாதானப்படுத்தி விரன் குப்பிற படுக்க பெதும்பையின் பின்னழகோ டக்கென்று வந்து நின்றது ஆணவனின் மூடிய விழிகளுக்குள்.

சிரித்துக் கொண்டவனோ அவளின் போதையேற்றும் குட்டியான பிருஷ்டத்திற்கு சின்ன டிக்கியென்று செல்லமாய் பெயர் வைத்துக் கொண்டான் உள்ளுக்குள்ளேயே.

வெளியூர் போனாலும் சின்ன டிக்கியின் எண்ண அலைகள் விரனை துரத்தோ துரத்தென்று துரத்தின. ஆகவே, இதை வேறு மாதிரியாக டீல் செய்திட நினைத்தான் விரன்.

தம்பி சரனுக்கு போனை போட்டான் சிங்கப்பூரிலிருந்து விரன்.

''சொல்லுண்ணா.. எப்படியிருக்கே..''

''நான் நல்லாருக்கேன்டா.. நீ.. அம்மா எல்லாம்..''

''எல்லாரும் நல்லாருக்கோம்.. நீ எப்போ வருவே..''

''இன்னும் ஒரு பத்து பதினைஞ்சு நாளாகும்.. ஏன்..''

''வேறென்னே பொண்ணு பாக்கறே மேட்டர்தான்.. தாத்தா ரெண்டு மூனு இடத்துலே சொல்லி வெச்சிருக்காறாம்.. நீ வந்த உடனே வந்து பாக்கறதா சொல்லிருக்காங்க அம்மா..''

''இந்த கிழவனுக்கு வேறே வேலையே இல்லே!! எப்போ பாரு பொண்ணு பாக்கறேன் பன்னு பாக்கறேன்னு!!''

என்றவனோ சளித்துக் கொள்ள,

''விடு.. விடு.. இது தெரிஞ்ச கதைதானே..''

என்ற சரனே அண்ணனை சமாதானப்படுத்தினான்.

''ஹான்.. சரன் நான் எதுக்கு கோல் பண்ணேன்னா.. அன்னைக்கு வட்டி கலெக்ட் பண்ணிட்டு வர சொல்லிருந்தலே.. அதுலே ஒரே ஒரு கலெக்ஷனை மட்டும் நைட்தான் செட்டில் பண்ணாங்க.. அதை நான் அப்போதைக்கு என்னோட அக்கவுண்ட்லே இன் பண்ணிட்டேன்.. இப்போ கம்பெனிக்கு ட்ரன்ஸ்பர் பண்ணிடறேன் நீ அவுங்க லோன் அக்கவுண்டே க்ளோஸ் பண்ணிடு..''

''ஓகேண்ணா.. ஆனா.. செட்டில்மன்னு சொல்றே.. அப்போ அவுங்க ஆபிஸ்க்கு வரணுமே.. சில டாகுமெண்ட்ஸ்லே சைன்லாம் வைக்கணுமே..''

''அதென்னே பெரிய போர்ம்ஸ்.. இனி நமக்கும் அவுங்களுக்கு ஒன்னுமில்லே.. நாமே அவுங்க டீட்டியல்ஸ் மிஸ் யூஸ் பண்ண மாட்டோம்.. இப்படித்தானே.. அதை நான் அன்னைக்கே சொல்லிட்டேன் அவுங்கக்கிட்டே.. நீ எல்லாத்தையும் எனக்கு மெயில் பண்ணிடு நான் டீல் பண்ணிக்கறேன்..''

''எதுக்குன்னா உனக்கு சிரமம்.. விடு விடு நான் பார்த்துக்கறேன்..''

சின்னவன் தன்மையாய் பேச.

''இல்லே.. இல்லே.. அதெல்லாம் ஒன்னுமில்லே.. எத்தனை நாளைக்குத்தான் நீ ஒருத்தனே இதெல்லாம் பார்த்துப்பே.. திடிர்னு உனக்கு எக்ஸாம்ஸ்.. இல்லே நாளைக்கு நீயே கூட கல்யாணம் பண்ணலாம்.. அந்த நேரத்துலே உன்னே தொந்தரவா பண்ண முடியும்.. அதான்.. நானும் கத்துக்கறேன்.. கொஞ்சம் உதவியா இருக்கும்லே..''

''வட்டின்னாலே பத்தடி தள்ளி நிப்பே.. இப்போ என்னான்னா ஏதேதோ பேசறே.. என்னவோ போ!! இது எதுவும் நம்பறே மாதிரி தெரியலே!! சரி யாரு பேர் சொல்லுண்ணா அப்போதான் அக்கவுண்ட் க்ளோஸ் பண்ணே முடியும்..''

''நிழலிகா நேசமணி..''

''நிழலிகாவா..''

கொஞ்சம் அதிர்ச்சிக் கொண்டான் சரன்.

''ஏன்டா.. உனக்கு அந்த பொண்ணே முன்னாடியே தெரியுமா..''

லைட்டாய் போட்டு வாங்கினான் விரன்.

''இல்லே இந்த பொண்ணா முழு கடனையும் அடைச்சிச்சின்னு யோசிக்கிறேன்..''

''இதுலே யோசிக்க என்னே இருக்கு.. சேவிங்ஸ் காச இருந்திருக்கலாம் இல்லே நகைகளே வெச்சு பணம் கொடுத்திருக்கலாம்..''

சமாளித்தான் நல்லவனவன் தம்பிக்கு டவுட் வராதவாறு.

''அதுக்கு வாய்ப்பே இல்லே.. சேவிங்ஸ் இருந்திருந்தா நம்மக்கிட்டே வர வேண்டிய அவசியமே இருந்திருக்காது.. அதுவும் அந்த பொண்ணுக்கிட்டே இருந்த நகைகளை கொண்டு வந்து நம்மக்கிட்டுதான் கொடுத்து அவுங்க அப்பாக்காக வாங்கினே கடனே அடைச்சா.. அதான் இப்போ இவ்ளோ பணம் எப்படின்னு டவுட்டா இருக்கு..''

என்று விடாது படுத்தும் சரனின் சில்லி மூக்கை உடைக்க தோன்றியது விரனுக்கு சின்னதாய் ஒரு குத்து விட்டு.

''பிரண்ட்ஸ் இல்லே சொந்தக்காரவங்க யாராவது கொடுத்திருப்பாங்கே.. விடேண்டா!! நமக்கு பணம் வந்தா போதுந்தானே!!''

''அண்ணா.. ஒரு வேலே.. இந்த சுகர்..''

சரன் முடிக்கும் முன்னரே குறுக்கிட்டான் விரன்.

''டேய்!! அதெல்லாம் ஒன்னுமில்லே!! அப்படியெல்லாம் எதுவும் இருக்காது!!''

உணர்ச்சி வசப்பட்டவனை சந்தேகங்கொண்டான் சரன்.

''அவளே சொன்னா நீ ஏன் பதறே!! என்னே கதை..''

நக்கலாய் வினவினான் சின்னவன்.

''ஒரு கதையும் இல்லே.. அந்த பொண்ணே பார்த்தாலே தெரியுதுடா.. அதான் நீ நினைக்கறே மாதிரியெல்லாம் எதுவும் இருக்காதுன்னு சொல்றேன்..''

''நீ சொன்னா சரிதான்!! விடு பார்த்துக்கலாம்.. நான் போர்ம்ஸ் உனக்கு மெயில் பண்றேன்.. எல்லாம் முடிச்சிட்டு இன்போர்ம் பண்ணிடு..''

என்றவனோ ரிசீவரை வைக்க போக,

''சரன்.. அந்த பொண்ணோட நகையெல்லாம் எங்கே..''

''ஏன் கேட்கறே..''

''இல்லே.. எதுக்கு ஒரு பொண்ணோடே கல்யாண நகையே பணத்துக்கு ஈக்குவலா வாங்கி அவளுக்கு நடக்க போறே நல்லதுக்கு நாமே குறுக்கே நிக்கணும்..''

''அண்ணா.. நல்லவனா இருக்கலாம்.. அதுக்காக இந்தளவுக்கு இல்லே.. தயவு பண்ணி தாத்தாக்கிட்டே போய் இப்படி நின்னுடாதே.. தடியாலையே மண்டையே பொழந்திடுவாரு!!''

''சரன்.. நான் என்னே..''

''அண்ணா.. உனக்கும் வேணா எனக்கும் வேணா.. எவன் அந்த பொண்ணே கட்டிக்க போறானோ அவனையே வந்து பணத்தை கொடுத்திட்டு நகையே எடுத்திட்டு போக சொல்லு..''

என்றவனோ இம்முறை கொஞ்சமும் தாமதிக்காது பட்டென துண்டித்தான் விரனின் அழைப்பை.

காதல் கொண்ட கன்னிகைக்காக இவ்வளவு செய்தவன் நகையை மீட்டிட மாட்டானா என்னே.

உயிர் துஞ்சிடுவான் விரன்...

முந்தைய அத்தியாயங்களை படிக்க:


https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/
 

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 15
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top