What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
327
அத்தியாயம் 16

சாம்பிராணி புகையில் புதையலை கண்ட விரனோ சில நாட்களுக்கு முற்றிலும் நிழலிகாவின் எண்ணத்தில் பித்தேறி கிடந்தான்.

அழகன் தனியே சிரித்து ஸ்தம்பித்து நிற்க வீட்டில் எல்லோரும் அவனுக்கு உடனடியாக கால்கட்டொன்றை போட்டே ஆக வேண்டுமென்ற முடிவுக்கு வந்தனர்.

மனசில் மருதாணி மேடமிருக்க விரனும் அவளைக் காண்பதற்காகவே அஞ்சு மணிக்கெல்லாம் ஜிம் செண்டரை திறக்க ஆரம்பித்திருந்தான். நிழலிகாவும் அதை நோட் செய்யாமல் இல்லை. இருந்தும் பெரிசாய் எதையும் காட்டிக்கொள்ளவில்லை.

இருவரும் அடிக்கடி பார்த்துக் கொண்டாலுமே மிழிகளாலே பேசி கடந்திடுவர் வார்த்தைகளுக்கு விடுப்பு விட்டு. இமை வழி புன்னகையால் உள்ளத்தை நாண வைக்கும் விரனின் வித்தையில் சொக்கித்தான் போயிருந்தாள் சுந்தரியவளுமே.

வருங்காலமவளின் சிற்றிடை பதுங்க இடவலம் ஆடி கள்ளேற்றும் கபடமில்லா குதங்களில் தொலைந்தே போயிருந்தான் விரனவன்.

பெரும்பான்மையான ஆண்களுக்கு மயக்கமென்னவோ பெண்களின் குத்தீட்டியான முன்னழகில்தான். ஆனால், வெகு சிலருக்கே பின்னழகில் மோகம். விரன் அப்படியான ரகம். அதுவும் சின்ன டிக்கியிடத்தில் மட்டுமே.

இப்படியான ஊடலில் ஒரு நாள் விரனை தேடி வந்தாள் மேல் தளத்திற்கு நிழலிகா.

மெதுவாய் கதவை தள்ளி பெண்ணவள் உள்ளே நுழைய வண்ணத்து பூச்சி கணக்காய் பட்டர்ஃபிளாய் செஸ்ட் (butterfly chest workout) மிஷினில் இருக்கைகளையும் அகல விரித்து வொர்க் அவுட் செய்துக் கொண்டிருந்தான் விரன்.

''வர சொன்னிங்கன்னு பையன் சொன்னான்..''

என்றவளோ காரணம் புரியாது முன் மேஜையின் ஓரத்திலேயே நிற்க,

''அந்த மேஜையோட ரெண்டாவது லாச்சிலே ரேப்பிங் பண்ணே ஒரு ஐட்டம் இருக்கும்.. எடுத்துக்கோ.. உனக்குத்தான்..''

''ஏன்.. என்னது..''

என்றவளோ கேள்வி கேட்டாலுமே விரன் சொன்னதற்கிணங்கி மேஜையின் இழுப்பறையை இழுத்து அதிலிருந்த பரிசினை கையிலெடுத்தாள்.

ஆனால், அதை அவள் பிரிக்கும் முன்னரே வஞ்சியின் கண்களில் பல்ப் எரிய விட்டது மேஜையின் மேற்பரப்பிலிருந்த காஜூ கட்லி.

வாயில் எச்சில் ஊற பரபரத்த கைகளை அடக்கிட முடியாது தவித்தவளோ எக்கி ஒரு எட்டு பார்த்தாள் விரனை.

அவனோ பிசியாக போனை நொண்டிக் கொண்டிருக்க, இதுதான் சமயம் என்றுணர்ந்தவளோ சிக்கிய காஜூ கட்லியை காஜியானவள் போல் லபக் லபக்கென்று வாயுக்குள் இறக்கினாள்.

மொத்தத்தையும் காலியாக்கியவள் விக்கலெடுக்க விழிகள் விரித்து வாய் பொத்தி ஓடினாள் விரனின் பரிசோடு திருட்டு பூனை கணக்காய்.

''அட!! ஏய்!! சின்ன டிக்கி!! எங்கே போறே!!''

என்றவனோ அவசரப்பட்டு அவன் டாவின் செல்லப்பெயரை சத்தம் போட்டு சொல்லி நா கடித்துக் கொண்டான்.

நல்லவேளை அந்நேரமென்று பார்த்து ஜிம்மில் அவனை தவிர வேறுயாருமில்லை. தலையை சிறு புன்னகையோடு ஆட்டிக்கொண்டவன் பின் அவன் வேலைகளில் மூழ்கி இரவை கடத்தினான்.

மறுநாள் வழக்கம் போல் மேடம் காலங்காத்தாலையே சாம்பிராணி தட்டோடு கடைக்குள் உலா வர தீபாராதனையை தொட்டு கும்பிட விரனோ கோலிங் பெல்லை அழுத்திடாமலேயே அந்திகையவள் வியாபாரம் செய்யுமிடம் நுழைந்தான்.

திருநீறை எடுக்க போனவனை வார்த்தையில்லா ஓசைக்கொண்டு அடிகளை பின்னோக்கி வைத்து தடுத்தவளோ நேத்திரங்களால் சைகை செய்தாள் அவளே வைத்து விடுவதாய் மொழிந்து.

இதழ் பிரியா முகிழ்நகையோடு தலையை லைட்டாய் கீழே குனித்துக் கொண்டான் மானினியவளுக்கு வசதியாய் விரன். வெட்க புன்னகை உதட்டில் நர்த்தனம் கொள்ள திருநீறை விரல்களால் எடுத்து விரனின் நெற்றியில் இட்டவளோ கூடவே அவனுக்கு சேர்த்து ஆப்பும் வைத்தாள்.

''ஆர்ர்ஹ்ஹ்!!''

என்றவனின் அலறலில் முழியை பிதுக்கியவளோ கையிலிருந்த மணியை தவற விட்டாள் பயந்து.

''ஆர்ர்ஹ்ஹ்ஹ!! அம்மா!!''

என்றவனோ இன்னொரு முறை அலற மணி விழுந்த பாதத்தை தூக்கிக் கொண்டு கோலாட்டமாடி, அதிர்ந்து பின்வாங்கியவளோ நொடிகள் கடக்க விரனின் வலியில் அவன் கொண்ட களோபரத்தில் சிரித்தாள்; சிரித்தாள் அப்படி சிரித்தாள் நிறுத்தாது.

முறைத்தவனோ பல்லை கடித்தவாக்கில் அடங்கி ஓரிடத்தில் அமர,

''சோரி! சோரி! நிஜமாவே சோரி! நீங்க அங்கையும் இங்கையும் காலே தூக்கிக்கிட்டு திரிஞ்சதே பார்க்கும் போது எனக்கு வடிவேலு ஞாபகம் வந்துருச்சா! அதான்..''

என்றவளோ அப்போதும் அடங்காது சிரித்து வாயை பொத்தினாள்.

''இந்த புடி!! வேறெங்கே விட்டடிக்கணும்!! அடி!!''

என்றவனோ கடுப்போடு சொல்லி யுவதியவளை நோக்கி நீட்டினான் கீழிருந்து குனிந்தெடுத்த மணியை.

''இல்லே.. பரவாலே வேண்டாம்.. நான் போய் மருந்தெடுத்திட்டு வறேன்.. சதை பெத்துக்குச்சு.. மணியோட ஏட்ஜ் ரொம்ப ஷார்ப்பா இருந்திருக்கு போலே..''

என்றவளோ அப்போதும் அடக்கிட இயலாது குபீர் சிரிப்பை கடை முழுதும் ஒலிக்க விட்டே ஓடினாள் அங்கிருந்து.

தலையை உள்ளங்கையால் ஓரடி அடித்துக் கொண்டவனோ,

''ஆர்ர்ஹ்ஹ்!!''

என்றலறினான் மீண்டும் மேஜையை முஷ்டி மடக்கி ஒரு குத்து குத்தி கை வலிக்க.

தளிரவள் திருநீறு வைக்கையில் அதே கரத்தின் சுண்டு விரல் கொண்டு இறுக்கியிருந்தாள் மணியை. விரனோ குனிந்த தலையை மேல் தூக்க ஆணவனின் நிதலிலோ லொட்டென்று ஒரு அடி விழுந்து உராய்ந்து.

நச்சென்ற வலியில் அலறியவனை கண்ட அம்மணியோ பதறிப்போய் போட்டாள் அதே மணியை விரனின் காலில்.

பாவம் விரன். மூடிக்கொண்டு பத்து மணிக்கு பின்னாடியே மருதாணியம்மாவின் கடை பக்கம் வந்திருக்கலாம். அஞ்சு மணிக்கே தரிசனம் காண வந்து காலில் அடி வாங்கியதுதான் மிச்சம். எல்லாம் ஒரு ஆர்வகோளாறதுதான். என்செய்ய.

முந்தையா நாள் இரவு வரை காத்திருந்தான் விரன் சின்ன டிக்கியவள் ஆணவன் கொடுத்த பரிசை பற்றி ஏதேனும் சொல்லிடுவாளோ என்று.

ஆனால், குட்டி குஞ்சனவன் ஏமாந்துதான் போனான் மருதாணிக்காரம்மா வழக்கத்தை தாண்டி சீக்கிரமாய் கடையை இழுத்து சாத்தி கிளம்பியிருந்ததால்.

போனை போட்டு விசாரிக்கவோ இல்லை பைக்கில் போய் வீட்டு முன் நிற்கவோ விரனுக்கு துணிவிருந்தாலும் அது நாகரீகமல்ல என்றுணர்ந்தவனோ அத்திட்டத்தை செயல்படுத்திடவில்லை.

''ஆர்ஹ்ஹ்.. மெதுவா!!''

என்றவனோ நொடிகளில் கட்டியாகி ஒட்டிக்கொண்ட நெற்றி ரத்தை அழுத்தமாய் துடைத்தவளின் கையை பற்றி நிறுத்தினான்.

''அப்போ ஆமையே கூட்டிட்டு வந்துதான் மருந்து போட சொல்லணும்!!''

என்றவளோ விரல்களில் இறுக்கியிருந்த பஞ்சை தூர வீசினாள் சட்டென கோபங்கொண்டு.

''சரி!! சரி!! அதுக்கின்னு இப்படி கோச்சிக்கிட்டு தள்ளி நின்னா எப்படி.. அப்பறம் யாரு காயத்துக்கு மருந்து போடுவா.. கொஞ்சம் அழுத்தாமே மெதுவா பக்கம் வந்து போடு..''

என்றவனோ முகத்தை கோணலாக்கி சுருக்க,

''எட்டி நின்னு போட்டாத்தானே உங்களுக்கு குத்துது குடையுது! இனி பிரச்சனையே இல்லே!!''

என்றவளோ பட்டென அவிரனின் மடியில் ஏறியமர்ந்து தொடர்ந்தாள் வார்த்தைகளை.

''இப்போ ஆற அமரே பொறுமையா காயத்துக்கு மருந்து போடலாம் சரியா..''

என்றவளோ விரனின் நுதலோரம் ஏற்பட்டிருந்த சதை கிழியலுக்கு பஞ்சால் நனைத்த மருந்தை ஒத்தடமாய் கொடுத்தாள்.

சின்ன டிக்கியின் தடாலடியான செயலில் ஆடிப்போனது ஆணவனின் மனது. குப்பென்று வியர்க்க ஆரம்பித்தது ஜிம்காரனுக்கு அடித்தளம் ஆட்டங்காண.

''என்னே இப்படி வேர்க்குது!! ஏசி கூலிங் கம்மியாவா இருக்கு..''

என்றவளோ விரனின் மாரிடிக்க முழங்கையை உரசி திரும்பி எக்கினாள் ஏசியின் ரிமோட்டை கைப்பற்ற.

மங்கையவள் அசைவில் காட்டுத்தனமாய் கரகோஷம் கொண்டது அதிகாலை நேரத்து நங்கூரம் துள்ளியெழுந்து.

''ஆஹ்ஹ்.. இன்கிரிஸ் பண்ணியாச்சு ஏசியே.. இனி வேர்க்காது..''

என்றவளோ திரும்பிய வாக்கில் வஞ்சியவள் புறங்கையால் ஆணவனின் வியர்வை துளிகளுக்கு விடைக் கொடுக்க. விரனுக்கோ தாரகையவளின் குட்டி இதழ்களை கூப்பி வாயில் குதப்பிக் கொள்ளத் தோன்றியது.

நிழலிகாவோ செயல்களில் கவர்ச்சிக் காட்டி விரனை மொத்தமாய் ஏற்றி விட்டாள் என்றே சொல்லிடலாம்.

உதடு கடித்து மென்மையாய் தலையசைத்து குழல் விரனின் முகம் முட்ட,

''கோழி ரெண்டும்
முழிச்சிருக்கு
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு

உள் நாடிதான்
நெருப்பா கொதிக்க
நடு சாம வேளையில் வாடையடிக்க..''

என்றவளோ அனல் மூச்சில் விரனை குளிப்பாட்டியெடுத்தாள் பாடலின் வரிகளில்.

அம்மணி ஒன்றும் ஸ்வர்ணலதா ரேஞ் பாடகியெல்லாம் இல்லை. இருந்தாலும், அப்பனிக்கொட்டும் வேளையில் நிழலிகாவின் குரலென்னவனோ ஜானகி போல கிறக்கத்தையே ஏற்படுத்தியது அவ்விரனுக்கு.

''உனக்கு வேறே பாட்டே கிடைக்கலையா..''

என்றவனோ அடங்காது திமிரும் ஆண்மையை தடுக்க முடியாது தவித்து பாவமாய் கேட்க,

''ஏன் இந்த பாட்டுக்கு என்னே..''

என்றவளோ விரனின் நெற்றியில் பிளாஸ்ட்ரை ஒட்டிட,

''இப்படி கொஞ்சம் தள்ளி உட்காரு..''

என்றவனோ நுண்ணிடையாளின் கொடியிடையை கரங்களால் பற்றி நகர்த்த அதிர்ச்சிக் கொண்ட மூச்சோடு அவனை ஏறெடுத்தவளோ முகத்தோரம் நெருங்கிக்கிடப்பவனை வெறித்தாள் உடல் உலையாய் கொதிக்க.

''இல்லே.. ஐ மீன்.. சோரி..''

என்றவனோ விரல்களை விறலியின் இடையிலிருந்து மெதுவாய் விலக்கியவாறே தொடர்ந்தான் உதடுகளை ஈரமாக்கிக் கொண்டு.

''என்.. எனக்.. எனக்கு கொஞ்சம் அன்கம்ஃபர்ட்டபிலா இருக்கு..''

என்றவனின் குளறிய வாயோடு சேர்ந்து விழிகளும் தந்தியடித்து நின்றன.

''நான் வேணும்னா கீழே இறங்கிக்கவா..''

என்றவளின் மயக்கும் குரலிலான வேள்விக்கு வேண்டாமென்று தலையாட்டியவனோ,

''அந்த பேக்கே கொஞ்சம் எடேன்..''

என்றவனோ சின்ன டிக்கியவள் நீட்டிய பேக்கை திறந்து உள்ளிருந்த ருத்ராக்ஷ மாலையை எடுத்து கந்தரத்தில் மாட்டிக் கொண்டான்.

''எதுக்கு இப்போ மாலை..''

''ஹ்ம்ம்.. அதெல்லாம் அப்படித்தான்..''

என்றவனின் சட்டைக்குள் கிடந்த மாலையை விரல்கள் நெஞ்சுரச நங்கையவள் வெளியில் எடுக்க,

''நான் கிளம்பறேன்.. வேலை இருக்க..''

என்றவனோ அதற்கு மேல் பொறுமை காத்திட முடியாதென்று விருட்டென நகர்ந்தான் அங்கிருந்து விட்டால் எங்கே அவளை மேஜையிலேயே படுக்க போட்டு போட்டிடுவானே என்ற பயத்தில்.

உயிர் துஞ்சிடுவான் விரன்...

முந்தைய அத்தியாயங்களை படிக்க:

https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/
 

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 16
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: Jai
Top