- Joined
- Jul 10, 2024
- Messages
- 414
அத்தியாயம் 17
காயம் பட்ட மண்டையோடு காணாமல் போனவன்தான் விரன். ரெண்டு வாரங்களுக்கு மேலாகியும் ஆணவனின் ஆள் அட்ரஸ் ஏதுமின்றி அம்மணியின் அதிகாலை பூஜை என்னவோ வெறுமையாகவே இருந்தது.
ஜிம்மில் போய் கேட்கவும் நெருடலாய் இருக்க அப்போதுதான் அருணியவளுக்கு ஞாபகமே வந்தது ஆணவன் கொடுத்த அன்றைய பரிசு பொருள்.
ஓடினாள் கடையின் அலமாரியை நோக்கி நங்கையவள். எடுத்தாள் பாக்ஸை கையில் காரிகையவள். பிரித்தாள் பொட்டலத்தை பாவையவள்.
வாய் பொத்தியவளின் கண்களோ அதிர்ச்சியில் ஆச்சரியங்கொண்டு கலங்கியது.
அடமானம் வைத்த திருமண நகைகள் அத்தனையும் பல்லிளித்து ஜொலித்தன சில புதுவகைகளும் அதிலிருக்க.
சொந்தமில்லா இரு அட்டிகைகளை கையிலெடுத்து உற்று நோக்கியவளோ உள்ளம் பூரித்து போனாள் சிறிய விசும்பலோடு.
விளம்பர சிற்றேடு ஒன்றில் அன்றொருநாள் பூமகளவள் ஆசைக்கொண்டு தொட்டு ரசித்த நகையொன்றையே இன்றைக்கு விரன் அதில் சேர்த்திருந்தான்.
கண் முன்னிருந்திருந்தால் இந்நேரம் விரனை கவுத்து போட்டு முத்தத்தாலேயே நன்றி நவிழ்ந்திருப்பாள் சின்ன டிக்கியவள். அவ்வளவு ஆனந்தமாக உணர்ந்தாள் பெண்ணவள்.
ஆணவன் கொடுத்த சந்தோஷத்தை அவனிடத்தில் பெருமை பேசிட எண்ணியவளுக்கு விரனின் அலைபேசி எண் அவளிடத்தில் இல்லாததைக் நினைத்துக் கொஞ்சம் வருத்தமே.
சரி போனால் போகட்டும் அவனின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் வழி அதை பெற்று கொள்ளாமல் என்று நினைத்தவளுக்கு அன்றைய இரவே தலையில் கல் விழுந்தது.
முன்பொரு காலத்தில் தாயை விழுங்கிய தரித்திரியம் என்று யாரால் நிழலிகா முத்திரை குத்தப்பட்டாளோ அச்சொந்தங்களோ உறவை புதுப்பித்து கொள்ள வீடு தேடி வந்திருந்தனர்.
கடையை சாத்திக்கொண்டு சுந்தரியவள் வீடு திரும்ப நேசமணியின் சொந்தங்களோ பழ நாள் பழக்கம் போல் அலரவளிடத்தில் ஒட்டுரசி உறவை வளப்படுத்திட முனைந்தனர்.
அவர்களின் திடீர் அன்பில் போலியின் வாடையை நுகர்ந்தவளோ பொய் புன்னகையை அப்பாவிற்காக உதிர்த்து பட்டும் படாமலும் எட்டி நின்றாள் வந்திருந்த புது சொந்தங்களோடு ஒட்டிடாது.
என்றைக்கோ காணாமல் போயிருந்த பாசம் இன்றைக்கு அதிசயமாய் பூத்திருந்த காரணமென்னவோ என்று வந்தவர்களின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது விரனின் சின்ன டிக்கியவளுக்கு.
நேசமணியின் தந்தை அதாவது நிழலிகாவின் கொள்ளு தாத்தாவோ போய் சேரும் முன் பேத்தி அவளுக்குமே சில சொத்துகளை எழுதி வைக்க, அதையெல்லாம் முறைப்படி மங்கையவளிடம் சேர்த்திடவே அவரின் தங்கை குடும்பம் இவர்களின் வீடு நோக்கி படையெடுத்திருந்தனர்.
வருடங்கள் கடந்து குடும்பம் ஒன்று சேர நெஞ்சுவலிக்கார நேசமணிக்கோ பத்து வயது குறைந்த புத்துணர்ச்சி மேலோங்கியது.
அப்பாவின் மகிழ்ச்சியை மகளவளோ கெடுக்க நினைத்திடாத போதிலும் ஜாக்கிரதையாகவே இருந்தாள் வந்திருந்த புதியவர்களிடம் நேசமணி அவரையும் பார்த்து நடத்துக்கக்கோரி எச்சரித்து.
சொந்தங்கள் வீட்டை குழுமிக்கிடக்க அத்தை மகன் என்ற பெயரில் வந்து சேர்ந்திருந்த பேர்வழியோ ஓவராய் வழிந்து கடுப்பேற்றினான் விரனின் சின்ன டிக்கியை.
அந்த அழுக்கு மூஞ்சி முகிலனிடமிருந்து தப்பித்து கடையில் கஸ்ட்டமர் அதிகம் என்று பொய்யுரைத்த நல்லவளோ வெறும் துயில் கொள்ள மட்டுமே மனையை எட்டி பார்த்திட ஆரம்பித்தாள்.
வந்திருந்த உறவுக்கார உத்தமர்களோ மருந்தும் விருந்தும் மூன்று நாட்கள் மட்டுமே என்பதை மறந்து மூன்று வாரங்களுக்கு மேல் தங்கி நிழலிகாவின் வீட்டை சத்திரமாக்கினர்.
இதில் வந்திருந்த கூட்டத்திற்கோ சமைத்து தின்னால் செரிக்காது என்பது போல் தினமும் வெளிச்சாப்பாடுதான். இதனாலேயே நாயகியவள் கடையிலேயே சிறிய அடுப்பொன்று கொண்டு சமைத்து சாப்பிட ஆரம்பித்தாள்.
வந்தவர்களை கிளம்புங்கள் என்று சொல்லிட முடியாது தவித்தார் நேசமணி தங்கை குடும்பத்தின் அலைப்பாறையில் அவருமே கொஞ்சம் காண்டாகி.
விரன் எப்போது வருவான் என்றிருந்தது சின்ன டிக்கிக்கு மாமன் என்ற பெயரில் முகிலனவன் காதல் வசனங்கள் பேசி மலரவள் பின்னால் சுற்றி திரிய.
விரன் புஜத்தால் இடித்தாலே போதும் முகிலன் மூச்சு பேச்சின்றி போயிடுவான் அப்படியான ஒல்லிக்குச்சி உடல் வாகு அவனுக்கு. ஆனால், எட்டித்தொட நினைப்பதோ ஜிம்காரனான அவிரன் சிங்கின் காதலியை,
ஒன்றை மாதங்கள் கடக்க அனுதினமும் விரனின் இன்ஸ்டாடிவில் குடியிருக்கும் யுவதிக்கோ நோட்டிபிகேஷன் வந்தது ஆணவன் வீடியோ பதிவு செய்திருப்பதாய் ரொம்ப நாட்கள் கழித்து இதுநாள் வரை எவ்வித ஆப்டேட்ஸ்சும் இல்லாதிருந்த வேளையில்.
நம்பர் வாங்கத்தான் நினைத்திருந்தாள் நிழலிகா இன்ஸ்டா மெசேஜ் வழி இருந்தும் இப்படியான காத்தல் பிடித்திருக்க எண்களின் பரிமாற்றங்களுக்கு மொத்தமாய் முழுக்கு போட்டாள் அளகவள்.
விரன் பதிவிட்டிருந்தான் அவனின் சில கேண்டிட் வெர்க் அவுட்களை உடனிருக்கும் நண்பர்கள் காணொளியாக்கியிருக்க இன்ஸ்டாவில்.
ஆசிய உடற்கட்டமைப்பு சாம்பியன்ஷிப் போட்டிக்கான தயார் நிலையில் ஆணவன் தாய்லாந்தில் இருப்பதாக சில வரிகளை ஆங்கிலத்தில் எழுதியிருந்தான்.
மனசுக்குள் ஒளிந்து கண்ணாம் பூச்சியாடும் மன்மதனின் அழகில் சில நிமிடங்கள் சொக்கி போனவள் ராவெல்லாம் அக்காணொளியை படையப்பா நீலாம்பரியை போல் திரும்ப திரும்ப ஓட விட்டு தொடுதிரையை விரலாலும், இதழாலும் நெஞ்சுக் குழியாலும் சூடேற்றினாள்.
இவள் இங்கு அடித்த கூத்தில் அங்கே கடல் தாண்டியிருப்பவனுக்கோ தேகத்தில் உளவியல் மாற்றங்கள் நிகழ நனைந்து போயிருந்தவனோ அசடு வழிய குப்பிறப்படுத்து இன்ஸ்டாவில் புதியதொரு விடியோவை பதிவேற்றம் செய்தான் மனசெல்லாம் சின்ன டிக்கியவளையே நிந்திக்க.
நெஞ்சம் நிறைந்து கிடப்பவளை நினைத்துக் கொண்டே சிறு முறுவலோடு கண்களை மூடினான் விரன் நித்திரா தேவியை சின்ன டிக்கியாய் நினைத்து தழுவியப்படி.
எண்ணங் கொண்டிருந்தான் விரன் நாளைக்கு போட்டி முடிந்து கிளம்பி மலேசியா சென்ற அடுத்த நாளே நிழலிகாவிடம் ப்ரொபோஸ் செய்திட.
ஆனால், ஆணவன் கனவிலும் நினைக்கவில்லை அப்படியானதொரு வாய்ப்பு அவனுக்கு கிடைக்காது போக போகின்ற சோகத்தை.
உயிர் துஞ்சிடுவான் விரன்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 17
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.