- Joined
- Jul 10, 2024
- Messages
- 414
அத்தியாயம் 18
காலை எட்டு மணிக்கு விழிப்பு வர லேட்டாகிய பதற்றத்தில் போனை பறக்க விட்டவள் அவசர அவசரமாய் குளித்து பூஜை போட்டு தொழிலை கவனிக்க ஆரம்பித்தாள்.
பம்பரமாய் சுழன்றவள் அசதியில் அன்றைக்கு குக்கிங்கிற்கு லீவு விட்டு மதிய உணவை கடையில் வாங்கிக் கொண்டாள்.
இன்ஸ்டாவை திறந்து ஸ்க்ரோல் செய்தவள் சோற்றை கரண்டியால் வாயிக்குள் தள்ளிய நேரத்தில் விறலியவள் விலோசனங்கள் அகல விரிந்தன கண்ட பதிவினில்.
''வீணாப்போனா மயிராண்டி!! எதை போய் போஸ்ட் பண்ணிருக்கான் பாரு!!''
என்றலறியவளோ கோபத்தில் நெகிழி டப்பாவை கையால் பறக்க விட்டாள் தமிழ்ப்பட வில்லன்களை போல் சோறெல்லாம் காற்றில் விட்டம் போக.
சின்ன டிக்கியவளை ரொம்பவே ஏங்கியிருந்த விரனோ அன்றைக்கு திருட்டு பூனைப்போல் காஜூ கட்லியை நிழலிகா அலைந்துக் கொண்டு திருடி தின்ற அழகை ரசித்தவனாய் வீடியோ எடுத்து வைத்திருந்தான் வஞ்சியவளே அறிந்திடாதப்படி.
ஆகவே, எடுத்திருந்த அக்காணொளியை இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தான் ஆணவன் ஆங்கில வார்த்தைகளை கொண்டு காதலை பூடகமாக வெளிப்படுத்தி இப்படி.
''at last found a little rat who successfully snatch meows heart shaped Kaju Katli.. miss you little buttocks!!''
(மியாவ்வின் இதய வடிவிலான காஜூ கட்டிலியை வெற்றிகரமாக திருடிய எலிக்குட்டியைக் கண்டறிந்தாயிற்று.. மிஸ் யூ சின்ன டிக்கி!!)
விரன் காதலோடு எழுதிய வசனங்கள் ஏதும் சுந்தரியவளை சாந்தப்படுத்திடவில்லை. மாறாய், ஆணவன் பதிவேற்றியிருந்த காணொளியை அவமானமாக பார்த்தாள் அணங்கவள். பிஸ்னஸ் பாதிக்கும் என்று பெரிய லெவலில் கதங்கொண்டாள்.
விரனின் வீடியோ போஸ்ட்டை விட அதற்கு வந்திருந்த சில நக்கல் நையாண்டி கருத்துகள்தான் காரிகையவளை அதீதமாய் சினங்கொள்ள வைத்தது.
விரன் சோஷியல் மீடியா செலிபிரிட்டி என்பதால் அவனுக்கான கூட்டம் அதிகம். ஒரு பதிவு போட்டால் போதும் அடுத்த பத்து நிமிடங்களில் ஆயிரங்களை தொட்டிடும் ஹார்டின்களும் கமெண்ட்ஸுகளும்.
பிரபலம் அவனின் பர்சனலை சிலர் நாயை விட அதிவேகமாய் மோப்பம் பிடித்து வேடிக்கையாக்கினர் சின்ன டிக்கியின் அக்கவுண்டை அவ்வீடியோ போஸ்ட்டில் டேக் செய்து.
விரனின் வார்த்தை கையாடல்களை புரிந்தவர்கள் வாழ்த்து சொல்ல படிப்பை கூட ஏனோ தானோவென்று படித்த அம்மையாருக்கோ அதையெல்லாம் பொறுமையாய் படித்துணர்ந்துக் கொள்ள புத்தியோ சுவாதீனத்தில் இல்லை.
ஆத்திரம் கண்ணை மறைத்திருக்க இன்ஸ்டாவில் பலமுறை அவனுக்கு அழைக்க முயற்சித்து மேலும் கடுப்பாகிப் போனாள் நிழலிகா ஜிம்காரனவன் போனை எடுக்காதிருக்க.
''பண்றதையெல்லாம் பண்ணிட்டு போனே வேறே எடுத்து தொலைக்க மாட்டறானே பண்ணாடே பையன்!!''
என்றவளோ வெறியோடு அவனை திட்டி அவைகளை வார்த்தைகளில் வடித்து இன்ஸ்டாவில் குறுஞ்செய்திகளாக அனுப்பினாள்.
மேடம் அப்படிக்கா விரனுக்கு தந்தியனுப்ப இப்படிக்கா வந்து சேர்ந்தது நிழலிகாவின் ஸ்கூல் குரூப்பில் அவள் முகங்கொண்ட காமெடியான மீம்ஸ் வீடியோ.
இன்ஸ்டா சம்பவம் காட்டுத்தீயாய் பரவி வாட்ஸ் ஆப் வரைக்கும் வர கொதித்து போன சின்ன டிக்கியோ விரனுக்கு அனுப்பிய செய்திகளையெல்லாம் மொத்தமாய் அழித்து அக்கவுண்டையே முடக்கி போட்டாள்.
என்னதான் இன்ஸ்டா கணக்கை நாயகியவள் அழித்திருந்தாலுமே மனம் என்னவோ அதை மீண்டும் திறந்து பார்த்திட சொல்லித்தான் கேட்டது.
காயங்கொண்ட புண்ணை சொரிகையில் உணர்கின்ற சுகம் போல் எரியும் நெருப்பில் தன்னிச்சையாகவே எண்ணையை குடோன் கணக்கில் அள்ளி ஊற்றிக் கொண்டாள் மாதங்கியவள்.
ஐநூறுக்கும் மேற்பட்ட கமெண்ட்ஸுகளில் சிலதை படித்து மூளை வெடிக்க, விரனுக்கு பதிலடி கொடுத்தே ஆக வேண்டுமென்று தோன்றியது தெரிவையவளுக்கு.
ஆகவே, போனின் கேலரியை அலசியெடுத்தாள் அந்திகையவள் முன்பொருநாள் விரன் விதண்டாவாதமாக அரிவையவள் போனை பிடிங்கி வலுட்டாயமாக சிரிக்க சொல்லி அவளோடு சேர்ந்தெடுத்துக் கொண்ட செல்ஃபீ படத்தை.
அதில் கூட காந்தாரியின் முகம் என்னவோ முறைப்போடுதான் இருந்தது. ஆனால், விரனின் பற்களெல்லாமோ பளிச்சென்று கோல்கெட் விளம்பரக்காரனைப் போலிருந்தது.
''செத்தடா மவனே!!''
என்றவளோ சிக்கியவனின் படத்தை விரனின் காணொளி பதிவின் கமெண்ட் செக்ஷனில் பதிவேற்றி கூடவே தங்கிலீஷில் எழுதி தொலைத்தாள் இப்படி.
''romba jimmadikaravangaluku moolai mattum ille kunjum kuddiyaathan irukumam!! elunji nikkave mukkumaam!! kutti kunjanuku oru swaha!!''
(ரொம்ப ஜிம்மடிக்கறவங்களுக்கு மூளை மட்டுமில்லே குஞ்சும் குட்டியாத்தான் இருக்குமாம்!! எழுஞ்சி நிக்கவே முக்குமாம்!! குட்டி குஞ்சனுக்கு ஒரு ஸ்வாஹா!!)
பழிதீர்த்ததாய் எண்ணிக் கொண்ட அவசரக்குடுக்கை நிழலிகாவோ நிம்மதி பெருமூச்சோடு உறங்கச் சென்றாள் மறுநாள் விடியல் அவளுக்கு ஸ்வாஹா என்றறியாது.
உயிர் துஞ்சிடுவான் விரன்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 18
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.