What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
414
அத்தியாயம் 19

தலையை இருக்கரங்களுக்குள் அடக்கியப்படி அமர்ந்திருந்த நிழலிகாவின் தோளில் கரம் பதித்தார் பெத்தவர்.

''என்னமா முடிவு பண்ணிருக்கே..''

முடிவோடு வந்திருந்தாலுமே, எங்கே மகளவள் காலை வாரி விட்டிடுவாளோ என்றொரு பயம் நேசமணிக்கு இல்லாமல் இல்லை.

''என்னப்பா.. நீங்களுமா..''

சலித்துக் கொண்டாள் சின்ன டிக்கியவள்.

''எனக்கு இந்த சூழ்நிலையிலே யார் பக்கம் நிக்கறதுன்னே புரியலமா.. உயிருக்கு போராட்டிக்கிட்டிருக்கறே தங்கச்சியே பாக்கறதா.. இல்லே பெத்த மகே உன்னே பார்க்கறதான்னு ஒரே குழப்பமா இருக்கு..''

கைகளை பிசைந்தார் அண்ணன் மற்றும் அப்பா என்ற இரு ஸ்தானங்களுக்கு மத்தியில் மாட்டிக்கொண்டவர், அவசர முடிவொன்றை எடுக்க வேண்டிய நிர்பந்தித்தில் சிக்குண்டு; சூழ்நிலை கைதியாகி.

கனவிலும் அவர் நினைக்கவில்லை விருந்துக்கு வந்த தங்கை நெஞ்சை பிடித்துக் கொண்டு விழுவாள் பின் நிழலிகாவை மகனுக்கு மணமுடிக்க கேட்பாளென்று.

நொடிகளில் எல்லாம் நடந்து முடிய மருத்துவரோ தங்கச்சி உயிர் ஊசல் என்று சொல்லி பீதியை வேறு கிளப்பி விட்டு அவர் கிளம்பிட செய்தியறிந்த சொந்தங்களோ தங்கச்சி ஆசையை நிறைவேற்ற துடித்தனர்.

போதாக்குறைக்கு தங்கச்சி புருஷனோ மனைவியின் கடைசி ஆசை அண்ணன் மகளை மகனுக்கு முடித்து மறுவீடு அழைத்து போவதென்று நேசமணியின் கைகளை பிடித்துக் கொண்டு கதற செய்வதறியாது துடித்தார் நிழலிகாவை பெற்றவர்.

''அந்த முகிலனே பாருங்கப்பா தூளடிக்கறவன் மாதிரி இருக்கான்!! அவனே போய் எப்படிப்பா..''

என்ற சின்ன டிக்கியோ அடுத்த வார்த்தையை சொல்லக் கூட விரும்பாது கவலையிலான எரிச்சல் முகத்தை திரும்பிக் கொண்டாள் கடுப்பு அவளோடு இருக்கட்டுமென்று.

''புற அழகுலே என்னமா இருக்கு.. மனசுலத்தானே எல்லா இருக்கு..''

என்ற அப்பாவின் வாக்கியத்தில் இடி இறங்கியது விரனின் சின்ன டிக்கியின் இதயத்தில்.

வெளிறிய முகத்தோடு வாடிய பார்வைகள் கண்ணீர் குளங்கொள்ள மெதுவாய் அடியானப்படியை திருப்பி ஏறெடுத்தாள் தகப்பனாரவரை நிழலிகா.

புரிந்து விட்டது விறலியவளுக்கு அப்பா நேசமணி ஒரு முடிவோடுதான் மருத்துவமனையிலிருந்து வந்திருக்கிறார் என்று.

ஒப்புக்கு அவளிடத்தில் விருப்பம் கேட்டு பின் அவள் மசியவில்லையெனில் ஒப்புக்கொள்ள வைக்கவே நேசமணி கடை வரைக்கும் வந்திருக்கிறார் என்ற கசப்பை ஜீரணிக்க முடியாது திணறினாள் மகளவள்.

''உங்களுக்கு சம்மதமாப்பா..''

உள்ளம் குமுறிட பொய்யாய் முறுவலித்து வினவினாள் நிழலிகா மனசென்னவோ விரனை எண்ணி தேம்ப.

''ஆட்சேபனைக்கு இடமில்லமா.. என் சொந்த தங்கச்சி பையன்.. வேறென்னே வேணும் பிரிஞ்ச குடும்பம் ஒன்னு சேர்றதுக்கு..''

என்று நம்பிக்கையாய் சொல்லி வாஞ்சையாய் மகளின் உச்சி தடவினார் நிழலிகா மறுத்து பேசிட மாட்டாள் என்ற எண்ணத்தோடு பெத்தவர்.

''உங்க விருப்பப்படியே பண்ணிடலாம்ப்பா..''

என்றவளோ விசும்பிய நெஞ்சை தகனம் செய்திட ஆரம்பித்தாள்.

''உனக்கு இந்த கல்யாணத்துலே விருப்பந்தானே நிழலிகா.. எனக்காக உன்னே வருத்திக்கே வேணாம்மா.. மனசுலே படறதே மறைக்காமே சொல்லு..''

ஒரு பேச்சுக்கு அவர் கேட்க, சொல்லத்தான் தோன்றியது தெரிவையவளுக்கு ஓவென்று கதறியப்படி மனசில் ஜிம்காரன்தான் இருக்கிறான் என்று.

இருந்தும், கொடுத்த வாக்கை காப்பாற்றிட மகளை நம்பி வந்திருக்கும் அப்பாவிற்கு இன்னொரு ஹார்ட் அட்டாக் கொடுத்திட நிழலிகா விரும்பவில்லை. ஆகவே, உண்மையை மறைத்து பொய்யுரைத்தாள் பாவையவள்.

''என் மனசுலே என் அப்பாவும் அவரோட ஆசையும்தான் இருக்கு..''

மெய்யற்ற கூற்றை வெளிப்படுத்தி கண்களை சிமிட்டி பல் கொண்ட புன்னகையை அப்பாவின் கலகத்திற்கு பரிசாக்கிய மலரவளோ அவரின் கரம் பற்றி தொடர்ந்தாள்.

''கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்கப்பா..''

மகளவள் சிரித்த முகமாய் சொல்ல அதுவரையிலும் சுணங்கி போயிருந்த நேசமணியின் முகமோ நிலவை விட பன்மடங்கு பிரகாசித்தது.

என்னதான் அப்பாவிடம் வாய் சவடாலாய் திருமணத்துக்கு சம்மதம் சொல்லிருந்தாலும் சின்ன டிக்கியவளாள் நிம்மதியாய் கண்களை சிமிட்டி மூச்சு கூட விட முடியவில்லை.

சித்தம் விரனையே நிந்திக்க அவசரப்பட்டு அப்பாவிற்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசி கல்யாண ஏற்பாடுகளை செய்ய சொன்னது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பது நேரங்கடக்கவே புரிந்தது மங்கையவளுக்கு.

சொந்தங்கள் எல்லாம் ஒன்றுக்கூடி நாளைய முகூர்த்தத்திலேயே முகிலனுக்கும் நிழலிகாவிற்கும் திருமணத்தை நடத்திட முடிவு செய்து அதற்கான பணியில் மிக துரிதமாய் இறங்கியிருந்தனர்.

இந்நேரத்தில் எப்படி போய் அப்பாவிடம் விரன் என்ற நிஜத்தை ஒப்புக்கொண்டு நடக்கவிருக்கும் அசம்பாவிதத்தை தடுப்பதென்று தெரியாது விழித்தாள் நங்கையவள்.

யோசித்து சோர்ந்தவள் வேறு வழியே இல்லாது விரனையே இதில் களமிறக்க முடிவு செய்தாள். அவனிடத்தில் பேசிட முடியாத பட்சத்தில் மூடுவிழா செய்த சுந்தரியின் இன்ஸ்டாவிற்கு மீண்டும் புது வாழ்வளித்தாள் சின்ன டிக்கியவள்.

ஆணவனுக்கு மெசேஜ் அனுப்ப அதுவோ போய் சேராது பாதியிலேயே தொங்கியது. ஜிம்காரன் அவளை ப்ளோக் செய்தாயிற்று. தலையில் அடித்துக் கொண்டாள் காரிகையவள் அதற்கான காரணம் அவளே என்றறிந்து.

சொந்த காசில் சூனியம் வைத்துக் கொண்டவளோ புதிய அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கி அவன் கணக்கை பின் தொடர்ந்து மெசேஜ் போட அப்போதும் அவனிடமிருந்து பதிலேதும் வரவில்லை ஆணவன் ஆன்லைனில் இருந்தாலுமே.

அவனின் கோபம் நியாயமானதே என்றெண்ணியவளோ அவனை பின்னாடி கவனித்துக் கொள்ளலாம் என்று டீலில் விட்டு ஓடினாள் விரனின் வீடு தேடி.

நம்பிக்கை கொண்டாள் மாதவள் அங்கிருப்போரை சந்தித்தது நிலவரத்தை சொல்லி எப்படியாவது குட்டி குஞ்சனின் அலைபேசி எண்ணை வாங்கிடலாம் என்று.

ஆனால், பாவம் விரனின் சின்ன டிக்கியவள். கால் கடுக்க ஓடி வந்தவளை ஆளில்லா மாளிகையின் பூட்டே வரவேற்றது.

ஏமாந்தவளின் அம்பகங்களோ அருவியாய் கொட்டின கண்ணீரை அணங்கவள் அதிர்ந்து நிற்க.

நோட்டிபிகேஷன் சத்தம் கேட்க, பட்டென அலைபேசி தொடுதிரையில் இன்ஸ்டாவின் ஹாம் பேஜை ஸ்க்ரோல் செய்த ஆர்வக்கோளாறோ வாய் பொத்திக் கொண்டாள் கண்ட காட்சிகளில் நொடி கோபம் நரக வேதனையை தந்திருக்க.

முகத்தை இருக்கரங்களால் மூடிக்கொண்டு பெண்டுவோ நடு ரோடு என்றும் பாராது அங்கேயே குத்த வைத்து கதறினாள்.

மாயோளின் கொச்சையான கமெண்ட்டும் விரனின் படமும் ஒன்றாக்கப்பட்ட மீம்ஸ்கள் வைரலாகி நாடே கைக்கொட்டி சிரித்தது விரும்பியவனாய் பேசும் பொருளாக்கி.

ஆசிய போட்டியில் தங்கம் வென்றவனை பாராட்டியவர்களை விட அவனின் ஆண்மையை கிண்டலடித்தவர்களே சோஷியல் மீடியாவில் அதிகமாய் வளம் வந்தனர்.

இதில் இந்த மீடியா வேறு சும்மாவே அவனை போட்டு வாட்டியெடுத்திருந்தனர். ஒரே நாளில் விரன் காமெடி பீஸாகி போனான் நாட்டிற்கான வெற்றி பேசப்படாது அவனின் ஆண்மையே டாப்பிக்காகி போக எல்லா தளங்களிலும்.

கொஞ்சமும் யோசிக்காது சமுதாயத்தில் விரனின் அந்தஸ்து புரியாது சகட்டு மேனிக்கு வார்த்தைகளை தெறிக்க விட்ட அம்மணியின் கருவிழிகளிலோ சற்று முன் இன்ஸ்டாவில் கண்ட செய்தி பதிவொன்றிலிருந்த விரனின் இறுகி போயிருந்த முகமே வந்து நின்றது.

குற்ற உணர்ச்சிக் கொண்ட சின்ன டிக்கியவளோ செய்வதறியாது தவித்தாள் இனி விரன் அவளுக்கில்லையென்று நிந்தித்து.

உயிர் துஞ்சிடுவான் விரன்...

முந்தைய அத்தியாயங்களை படிக்க:


https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/
 

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 19
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top