What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
414
அத்தியாயம் 20

தாய்லாந்திலிருந்து தாய் நாட்டிற்கு வெற்றியோடு திரும்பியிருந்த விரனோ ஏர்போட்டில் யாருக்குமே முகங்கொடுக்கவில்லை.

குனிந்த தலையை நிமிராது நடையில் வேகங்கொண்டவனை புயலாய் மீடியாவும் மக்களும் சூழ அக்கூட்டத்திலிருந்து ஆணவன் வெளிவர அவனுக்கு உதவினர் ஏர்போட் போலீஸ்.

மீடியாவை விரன் கண்டுக்காது போக கடுப்பாகிய ரிப்போர்ட்டர் ஒருவனோ,

''நிஜமாவே எழுந்திருக்காது போல சார்!! அதான் அந்த பொண்ணோட காண்ட்ரவர்ஷியல் கமெண்டுக்கு நீங்க எந்த ஆப்ஜெக்ஷனும் சொல்லலையா!! ஒரு பிரஸ் மீட் இல்லே.. உங்க் தரப்புலருந்து ஒரு ஸ்டேட்மெண்ட் இல்லே!! ஏன் இப்போ கூட எங்களே அவொய்ட் பண்ணிட்டுத்தானே போறிங்க!! சோ இதுக்கெல்லாம் என்னே அர்த்தம் சார்!! உண்மையிலே அந்த பொண்ணு சொன்னதுதான் உண்மையா சார்!!''

என்றவனோ விடுக்விடுக்கென்று இடம் பொருள் ஏவல் பாராது வார்த்தையை விட தலையை மேல் தூக்கிய விரனோ பல்லை கடித்தான் கைக்கெட்டும் தூரத்திலிருப்பவனை விலாசியெடுக்கும் அறிகுறியாய்.

நல்லவேளை அதற்குள் அட்சரன் வந்து இழுத்துக் கொண்டு போய் விட்டான் கொலை காண்டிலிருந்த அண்ணனை.

''அண்ணே அந்த பொண்ணு..''

என்று ஆரம்பித்த சரன் முடிக்கும் முன்னரே குறுக்கிட்டான் விரன்.

''விடு நான் பார்த்துக்கறேன்..''

''ஸ்போர்ட்ஸ் கவுன்சல் ஆளுங்க வேறே அந்த ஐடியே..''

''விடு அவுங்கக்கிட்டே நான் பேசிக்கறேன்..''

என்றவனோ உண்மையிலேயே நெஞ்சம் நொறுங்கிய போயிருந்தான்.

வெற்றி கோப்பையோடு வந்தவளை வாரியணைத்து காதல் சொல்ல காத்திருந்தவனை ஒரே நாளில் அம்மணியவள் இப்படி அசிங்கப்படுத்திடுவாள் என்று ஆணவன் கனவிலும் நினைக்கவில்லை.

ஆசை ஆசையாய் காதலை பட்டும் படாமலும் வெளிப்படுத்தியவன் பின் போனை தூரப்போட்டு போட்டியில் களமிறங்க நடந்த சோஷியல் மீடியா கூத்தெதையும் அவன் அறிந்திருக்கவில்லை.

ஒரு நாள் பொழுது இதிலேயே கழிய வாகை சூடியவன் பின்னிரவில் போனை கையிலெடுக்க வாழ்க்கையே தலைகீழாய் போயிருந்தது.

போட்டி நடக்கையிலேயே சம்பவத்தின் வீரியங்களை அறிந்திருந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டு குழுவினர்களோ கோழி முட்டையை அடைகாப்பது போல் சங்கதியை விரன் அறியாது பார்த்துக் கொண்டனர், எங்கே மேட்டரறிந்தால் ஆணவன் போட்டியில் கவனம் சிதறி கோட்டை விட்டிடுவானோ என்ற முன்னெச்சரிக்கையில்.

அதே சமயம் நிழலிகாவின் இன்ஸ்டா கணக்கின் மீது புகார் கொடுத்து அதன் உரிமையாளரை தேடும் பணியும் முடக்கி விடப்பட்டது ஸ்போர்ட்ஸ் குழுவால்.

ஆங்கிலம் புரியவில்லை என்றால் பரவாயில்லை. சூட்சமமான வார்த்தைகளின் காதலே புரியாத தத்தியாய் அவளிருக்க கோபத்தோடு கூடிய வெறுப்பே அதீதமாய் விரனின் உள்ளத்தை வாட்டியிருந்தது.

மனைக்குள் நுழைந்து சரன் காரை நிறுத்த,

''லக்கேஜே என் ரூம்லே வெச்சிடு.. தேங்ஸ்..''

என்ற விரனோ காரிலிருந்து இறங்கிய வேகத்தில் அவனின் பைக்கை ஸ்டார்ட் செய்து பறந்தான் ஜிம் செண்டருக்கு.

மருதாணி கடை சாத்திக்கிடக்க நேராய் வண்டியை சின்ன டிக்கியின் வீட்டை நோக்கி செலுத்தினான் விரன்.

அதுவும் பூட்டிக்கிடக்க பைக்கை முறுக்கிக் கொண்டு நின்றவனை நோக்கி வந்த பக்கத்து வீட்டு சின்ன வாண்டோ,

''நீங்கதான் ஜிம்கார மாமாவா..''

என்றுக் கேட்டப்படி கையசைத்து விரனை கீழே குனிய சொல்லியவளோ பதித்தாள் ஆணவனின் நிடலத்தில் சின்னதாய் ஒரு முத்தம்.

''அட.. எனக்கெதுக்கு பாப்பா முத்தங்கொடுத்தே..''

என்றவனின் சிங்க முகமோ சிங்கார முகமாய் மலர்ந்தது குட்டியின் மேஜிக்கால்.

''சோரி.. மருதாணி அக்காதான் அழுதுக்கிட்டே உங்களுக்கு இப்படி முத்தங்கொடுக்க சொல்லி சோரியும் சேர்த்து சொல்ல சொன்னாங்க மாமா.. ''

என்ற ஐந்து வயது மழலையோ கியூட்டாய் உடலை அங்கும் இங்கும் அசைக்க,

''உள்ளே ஒளிஞ்சிக்கிட்டு உன்னே தூதனுப்பினாளா உங்கக்கா!! எங்கே அவே!! இன்னைக்கு அவளே என்னே பண்றேன்னு பாரு!!''

ஆவேசங்கொண்ட விரனோ பைக்கிலிருந்து இறங்கிய வேகத்திற்கு குட்டி பாப்பாவை கையிலேந்திக் கொண்டு விரைந்தான் குட்டியின் வீடு நோக்கி.

''ஏய்!! நிழலிகா!! எங்கடி இருக்கே!! ஏய்!! வெளிய வாடி!! நீ இப்போ வரலே!''

என்ற விரனோ மூன்றாவது மனிதர்கள் வீட்டில் நின்றுக் கொண்டு கல்யாண பெண்ணின் பெயரை ஏலம் போட,

''நிழலிகா இங்கில்லே தம்பி.. கோவில்லே இருப்பா.. அவளுக்கு இன்னைக்கு கல்யாணம்..''

என்ற பெண்ணோ கைக்குழந்தையோடு காலில் சாக்ஸ் கொண்டு சொல்லி நிற்க,

''கல்யாணமா!!''

என்றவனோ அதிர்ச்சிக் கொள்ள,

''ஆமா தம்பி.. திடுதிப்புன்னு பேசி முடிவு பண்ணிட்டாங்க போலே.. அவுங்க மாமா பையன்தான் மாப்பிள்ளே.. தீட்டுலே இருக்கேன்.. அதான் என்னாலே போக முடியிலே.. இங்க பக்கத்துலே இருக்கறே விநாயகர் கோவில்லதான் கல்யாணம்..''

என்றவளோ அழுக ஆரம்பித்த குழந்தையை சமாதானம் செய்ய அதற்கு மேலும் அங்கு நில்லாது புயலாய் பறந்தான் விரன் கணபதி டெம்பிளை நோக்கி.

கல்யாண பெண்ணோ நிலைக்கண்ணாடியில் வாடிய அவளின் வதனத்தை வெறிக்க தெரிவையவளுக்கு தெரிந்ததெல்லாம் என்னவோ ரனின் முகம் மட்டுமே.

முதல் முறை அவனை கண்டது தொடங்கி கடை ஓனர் அவன்தானென்று உணராது கண்டதையும் பேசி ஆணவன் கரமிருக்க, மிரண்டு பின் அவன் நெஞ்சில் மருதாணி கரத்தை பதித்து பின்கதவு வழி ஓட பார்த்து சிக்கி நடு ரோட்டில் அவன் வார்த்தைகளில் கலங்கியது என்று ஆரம்பித்த உறவது அப்படியே கொஞ்சம் அட்வான்சாய் போய் அழகனவன் மடியிலேறி அமர்ந்த வரைக்கும் வந்து நிற்க; இன்றைக்கோ எல்லாமுமாக இருப்பான் என்றெண்ணியவனை ஊர் கேலி பேச காரணமாகி தொலைத்து நிற்கும் முட்டாள்தனத்திற்கான பரிசே மனம் விரும்பா இக்கல்யாண வாழ்க்கையென்று நினைத்தவளோ கண்களை இறுக்கமாய் மூடித்திறந்தாள்.

நாடு விட்டு நாடு வந்தவன் கண்டிப்பாய் சண்டை போட்டிடவாவது அவளை தேடி வந்திடுவான் என்ற நம்பிக்கையில்தான் பக்கத்து வீட்டு குட்டியின் நுதலில் இதழ் ஒத்தியவளாய் சேர்த்தே கோரியிருந்தாள் ஆங்கில சோரியை எங்கே அவன் வருவதற்குள் விரனை சுமந்த நெஞ்சு வேறொருத்தனின் தாலியை சுமந்திருக்குமோ என்ற அச்சத்தில்.

''பொண்ணே கூட்டிட்டு வாங்க..''

என்ற குரல்களில் அறைக்குள்ளோ எல்லோரும் மணப்பெண்ணான நிழலிகாவை வெளியில் கூட்டிப்போக ஆயத்தமாக, குயிலவளோ இறுதியாய் ஒருமுறை திறந்து பார்த்தாள் இன்ஸ்டாவை விரன் அவளை மன்னித்திருக்கிறானா என்று.

உயிர் துஞ்சிடுவான் விரன்...

முந்தைய அத்தியாயங்களை படிக்க:


https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/
 

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 20
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top