What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
414
அத்தியாயம் 21

மந்திரங்களும் தந்திரங்களும் நிறைந்திருந்த மணமேடையில் குனிந்த தலை நிமிராது கண்களில் கனல் கொண்டு முன்னிருக்கும் அக்கினியை வெறித்திருந்தாள் நிழலிகா.

பதைக்கும் நெஞ்சமோ இப்போது அப்போது என்று அடித்துக் கொண்டது எங்கிருந்தாவது வந்திட மாட்டானா விரனென்று.

கண்ணீர் முத்துகளோ வஞ்சியவளை கேட்காது நேத்திரங்களில் ஒளிய மறுத்து உருண்டு திரண்டு தெரிவையவள் கன்னங்களை ஈரமாக்கின.

மணப்பெண்ணை சூழ்ந்திருந்த கூட்டமோ ஓமகுண்ட புகையின் கண்ணெரிச்சல் என்று அவர்களுக்குள்ளேயே கும்மியடித்து பாவையவள் ஒத்திக்கொள்ள திசுக்களை வாரி வழங்கினர் வதனியின் விலோசனங்கள் எதிர்பார்த்திருந்த வரவென்னவோ விரனென்று தெரியாது.

நொடிகள் கடக்க காரிகையின் கண்மையோ கொஞ்சங் கொஞ்சமாய் அழுகையில் காணாமல் போனது.

நம்பிக்கையைத் தொலைத்தவளாய் சொல்ல முடியா வேதனையில் அம்பகங்களை அழுத்தமாய் மூடிக்கொண்டு உள்ளங்கைக்குள் புதைத்திருந்த போனை இறுக்கமாய் பற்றிக் கொண்டாள் நிழலிகா அதன் தொடுதிரை விரனின் முகத்தை தாங்கியிருக்க.

ஐயர் தாலியை வந்திருந்தோருக்கு காண்பித்து மாப்பிள்ளையின் கையில் கொடுக்க, நிழலிகாவிற்கோ காதெல்லாம் அடைத்துக் கொண்டு தலை கிர்ரென்று சுற்ற சில வினாடிகளில் நயனங்களோ இருண்டு போனது.

''கெட்டி மேளம்!! கெட்டி மேளம்!!''

என்ற ஐயரின் கரகோஷத்தில்,

''எழுந்திரிடி கொண்டி!! என் வாழ்க்கையே கெடுத்திட்டு உனக்கு கல்யாணம் கேட்குதா!!''

என்ற ஆவேசமான குரலொன்று மணப்பெண்ணவளின் முழங்கையில் அழுத்தம் கொடுத்து முன்னோக்கி இழுக்க தனியொரு மயக்க லோகத்தில் சஞ்சரித்து கிடந்த காந்தாரியோ சடீரென்று திட்டிகள் திறந்தாள்.

கண் முன் விரன் ஆக்ரோஷ அரிமாவாய் கர்ஜித்து நிற்க நடைப்பிணமான நாயகிக்கோ அப்போதுதான் உயிரே வந்தது எனலாம்.

அவனை காதலோடு நோக்கியவளோ ஆத்திரத்தில் ஆணவன் பேசும் எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. மாறாய் இதுநாள் வரை காணாதிருந்தவனை உச்சியிலிருந்து பாதம் வரை ரசித்தாள் போன தடவையை விட இப்போது அவனின் புஜங்கள் இன்னும் அட்டகாசமாய் காட்சியளிக்க, ஏன் அவனுமே அழகு கூடியிருக்க.

டேர்பனில்லா சிங் பையன் கல்யாண மண்டபத்துக்குள் அதிரடியாய் நுழைந்து மணமேடை ஏறினான் மதங்கொண்ட யானையாய். அக்கினி குண்டத்தையும் மதிக்கவில்லை அந்திகையின் கந்தரத்தில் மூன்று முடிச்சுகள் போட முண்டியடித்த முகிலனையும் கண்டுக்கவில்லை.

கும்ப கலசங்களையெல்லாம் பறக்க விட்டவன்,

''எப்படி நடக்குதுன்னு பாக்கறேன்டி உனக்கு கல்யாணம்!!''

என்று உரும்பியப்படி நிழலிகாவை இழுத்துக் கொண்டு மணமேடை படியை நோக்க,

''தம்பி!! வேணாம் தம்பி!! சொன்னா கேளுங்க தம்பி!! என்னே பிரச்சனையா இருந்தாலும் கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்பறம் பேசிக்கலாம் தம்பி!! இப்படி பாதிலே பொண்ணே இழுத்திட்டு போறதெல்லாம் சரியில்லே தம்பி!!''

என்று அவன் முன் வந்து குறுக்கிட்டார் நேசமணியோ பெத்தவர் என்ற முறையில் விரனிடத்தில்.

''ஆமா தம்பி!! உங்க பிரச்சனையை என் பையன் தாலி கட்டினத்துக்கு அப்பறம் பேசி தீர்த்துக்கலாம்.. நல்லே நேரம் முடியறதுக்குள்ளே மாப்பிள்ளை பொண்ணு கழுத்துலே தாலி கட்டியே ஆகணும் தம்பி!! கொஞ்சம் பெரிய மனசு பண்ணி புரிஞ்சு நடந்துக்கோங்க தம்பி!!''

தங்கச்சி புருஷன் அதாவது முகிலனின் அப்பாவும் அவர் பங்கிற்கு பையனின் வாழ்க்கையை காப்பற்ற துடிக்க,

''என்னே பார்த்தா உங்களுக்கெல்லாம் எப்படியிருக்கு!! என் நெத்தியிலே என்னே இளிச்சவாயின்னு எழுதி ஒட்டிருக்கா!! என்னே சந்தி சிரிக்க வெச்சவளுக்கு கருணை காட்டுறே அளவுக்கு ஒன்னும் நான் நல்லவனில்லே!!''

என்றவனோ மணமேடை படியை கடந்து தரதரவென்று இழுத்துக் கொண்டு போனான் நிழலிகாவை.

''அப்பா..''

என்ற முகிலனோ தரையில் விழுந்த தாலியை கைகளில் மீண்டும் மாலையாக்கி கொண்டு போகின்றவளை பார்த்து சிணுங்கினான் உட்கார்ந்த இடத்திலேயே கோழையாக.

அவன்தான், அவன் ஒருவன்தான் என்று மனசுக்குள் கோட்டை கட்டியிருப்பவளுக்கோ நடக்கின்ற களோபரத்திற்கு எப்படி ரீயாக் செய்ய வேண்டுமென்று கூட தெரியவில்லை.

இருப்பினும், அவனின் முரட்டுத்தனத்தில் மணிக்கட்டு கடுக்கும் வலியை உணர்ந்தவளோ,

''வலிக்குது விரன்!! விடுங்க!! விடுங்க பிளீஸ்!!''

''அடங்குடி!! ஊரே என்னே பார்த்து சிரிக்கறே மாதிரி செஞ்ச உன் வலி ஒன்னும் என் வலியே விட பெருசில்லே!! ஜெயிச்சிட்டு வந்தவனே மீடியாக்காரன் கேட்கறாண்டி நான் ஆம்பளையா இல்லையான்னு!!''

என்றவனின் கோபம் நிறைந்த வார்த்தைகளின் ஊடே தெரிந்த ரணத்தை வஞ்சியவளால் நன்றாகவே உணர முடிந்தது.

விரனின் விழிகள் திரும்பி பார்த்தவளை வெறிக்க அம்மணியின் கைவலியோ அவன் வேதனைக்கு முன் தோற்றுப் போய்த்தான் நின்றது அவன் குத்திக் காட்டியது போல்.

''என் மானம் மரியாதை எல்லாத்தையும் கெடுத்த உன்னே எப்படிடி நான் இன்னொருத்தனே கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழ விடுவேன்!! ஒருக்காலும் அவன் கையாலே உனக்கு தாலியேறாதுடி!!''

என்றவனின் உக்ரமான வார்த்தையில் மொத்த அரங்கமும் ஆடிப்போயிருக்க,

''தம்பி!! தம்பி!! வேணாம் தம்பி!! தயவு செஞ்சு என் பொண்ணே விட்டுடுங்க தம்பி!! உங்க கால்லே கூட நான் விழறேன் தம்பி!! சாக கிடக்கறே என் தங்கச்சிக்கு உயிர் பிச்சை கொடுங்க தம்பி!!''

என்ற நேசமணியோ மகளை இழுத்து போகும் விரனின் பின்னாலேயே ஓடி வந்து வசனம் பேசி சொன்ன சொல்லை காப்பாற்ற எண்ணியவராய் பொத்தென்று விழுந்து பிடித்தார் சின்னவனின் கால்களை அவரை கண்டுக்காது நடைப்போட்டவனை நிறுத்த வேறு வழி தெரியாது.

''அப்பா!!''

என்றலறிய நிழலிகாவோ கதறினாள் மங்கையவள் மனதின் மன்மதனோ ஆணவனின் பாதம் இறுக்கிய வயதானவரை சட்டை செய்யாது உதறி தள்ளிப்போக.

''விடுங்க விரன்!! விடுங்க!! என் கையே விடுங்க!! அவிரன் சிங்!! பிரச்சனையே பேசி தீர்க்க முடியாதா உனக்கெல்லாம் எதுக்குடா முறுக்கு மீசை!! மொத்தமா வழிச்சு பூ பொட்டு வெச்சிக்கோ!!''

என்றவளின் சென்சாரற்ற வாய் பேச்சில் வெறி கொண்ட வேங்கையானான் விரன்.

''என்னடி சொன்னே!!''

என்றவன் கையை ஓங்க,

''என்னடா!! ஹான் என்னே!! அடிச்சிருவியா என்னே நீ!! அடி!! அடிடா!! அடிங்கறேன்லே!!''

என்றவளோ நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சண்டைக்கு நின்றாள் சின்ன டிக்கியின் கன்னத்தை பழுக்க வைக்க கையோங்கியிருந்தவன் அதிர்ந்து நிற்க,

''அப்படி என்னடா உனக்கு அவ்ளோ கோபம்!! எங்கப்பா கால்லே விழுந்ததே கூட மதிக்காமே அவரே உதைச்சு தள்ளிட்டு நீ பாட்டுக்கு நடந்து போய்கிட்டே இருக்கே பெரிய மனுஷங்கறே மரியாதையே இல்லாமே!''

என்றவளின் மையற்ற விழிகள் கண்ணீரை அருவியாக்க,

''ம்ம்ச்ச்ச்.. ஏய்..''

என்றவனோ அவளின் கைப்பிடியை தளர்த்தி நெற்றியோரத்தை தேய்த்தான் தேவதையவள் அழுவதை ஒருக்காலும் பொருத்திட முடியாது.

''தப்பு பண்ணது நான்!! தண்டனையே எனக்கு கொடு!! திட்டு.. அடி.. கோபப்படு.. அவமானப்படுத்து.. என்னே வேணும்னாலும் பண்ணு!! உனக்கு எல்லா உரிமையும் இருக்கு!! ஆனா.. எங்கப்பாவே என் கண் முன்னாடி இப்படி நடத்தாதே பிளீஸ்!! என்னாலே அந்த வலியே தாங்கிக்க முடியாது விரன்..''

என்றவளின் அம்பகங்கள் ஆறாய் வழிந்திறங்க கைகளோ அவனின் சட்டையை பற்றி உலுக்கியது.

''இங்கப்பாரு நிழலிகா அவர் வந்து என் காலே பிடிப்பாருன்னு நான் எதிர்பார்க்கலே!! அங்கிள் கீழே விழுந்தது எதார்ச்சையா நடந்தது! அவரே அசிங்கப்படுத்தறதோ வேதனைப்படுத்தறதோ என் இன்டென்ஷன் கிடையாது!''

என்றவனோ இடையில் கரமிறுக்கி சண்டைக் கொண்ட காதலியை சமாதானம் செய்ய மண்டபத்தில் குழுமியிருந்த கூட்டத்திற்கோ லைட்டாய் கண்ணை கட்டியது அடித்துக் கொண்டு நிற்பவர்கள் இருவரும் காதலர்களோ என்று ட்ரேக் வேறு மாதிரி போக.

''சும்மா கதை சொல்லாத விரன்! அதான் இத்தனே பேர் சொல்றங்கள்ளே!! அப்பறம் என்னே!! கல்யாணம் முடிஞ்சிரட்டுமே!! பொறுக்க முடியாதா உனக்கு!! இல்லே நான் தெரியாமத்தான் கேட்கறேன் நான் என்னே உன் பொண்டாட்டியா!! நீ பாட்டுக்கு வந்து இழுத்துக்கிட்டு போறே!!''

''ஓஹ்!! இப்போ உனக்கு அதான் பிரச்சனையா!!''

என்றவனோ துளியும் தாமதிக்காது போகின்ற பாதையில் யூ டர்ன் அடித்து மீண்டும் அருணியவளை மணமேடைக்கே இழுத்துச் சென்றான்.

''கொடுடா தாலியே!!''

என்ற விரனோ மொக்கை பீஸ் முகிலனின் முன் உள்ளங்கையை நீட்ட,

''தம்பி இதெல்லாம் ரொம்ப தப்பு தம்பி!!''

என்ற நேசமணியோ தங்கச்சி புருஷனின் உதவியோடு மணமேடையில் கூச்சல் கொள்ள,

''அடிங்!!!''

என்று தாலியை ஒரே வீச்சில் முகிலனின் கையிலிருந்து புடிங்கிய விரனோ திரும்பிய வேகத்தில் போட்டான் மூன்று முடிச்சுகள் அவன் சின்ன டிக்கியின் கந்தரத்தில்.

உயிர் துஞ்சிடுவான் விரன்...

முந்தைய அத்தியாயங்களை படிக்க:


https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/
 

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 21
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: Jai
Top