- Joined
- Jul 10, 2024
- Messages
- 414
அத்தியாயம் 22
அவசர கல்யாணம்தான். ஆனால், விருப்பமில்லா விவாகமெல்லாம் ஒன்றுமில்லை. காரியக்காரர்களே இருவரும். அதுவே நிஜம்.
கோபம்தான் விரனுக்கு இல்லையென்றிட முடியாது. சின்ன டிக்கியின் துடுக்குத்தனமும் அவசர புத்தியும் ஆணவன் அறிந்த விடயமே. ஆனால், அதற்காகவெல்லாம் அவளை இன்னொருத்தனுக்கு விட்டுக் கொடுத்திட ஜிம்காரனால் சத்தியமாய் முடியவே முடியாது.
அதேப்போல்தான் நிழலிகாவும், காதலன் அவன் மட்டும் தக்க சமயத்தில் வராது போயிருந்தால் நிச்சயம் ஐயரின் கெட்டி மேளத்திற்கு பிறகான மாங்கல்யத்தை உள்ளங்கையால் பற்றி பிடித்து கல்யாணத்தை நிறுத்தியிருப்பாள்.
விரன் சின்ன டிக்கியின் நிகாலத்தில் மூன்று முடிச்சு போடுகையில் இருவரின் விழிகளும் பேசிக்கொண்டன விதியின் சதியை யாராலும் மாற்றிட முடியாதென்று.
பதறி விட்டேன் என்றவளும் விட்டிடுவேனா என்றவனும் மௌனங்களில் கதை பேச இரு மனங்களும் இணைந்த சந்தோஷத்தை அடுத்தென்னே என்னெவென்று ஏங்கின ஆரத்தழுவி காதலில் கூட.
கல்யாண மண்டபத்தில் நடக்க வேண்டிய திருமணமோ மிகச்சிறப்பாக நடந்தேறிட பொண்டாட்டியாகி விட்ட சின்ன டிக்கியை அவன் வீட்டுக்கு கூட்டி போக முடிவு செய்து விட்டான் விரன்.
அவ்வளவு பெரிய கலவரத்தின் இடையே கழுத்தில் தாலி ஏறியிருக்க அம்மணியோ ஆணவனோடு பைக்கில் கட்டிக்கொண்டே வந்துச் சேந்திருந்தாள் புருஷன் வீட்டிற்கு.
பைக் கண்ணாடியை அட்ஜர்ஸ்ட் செய்தவனோ பொஞ்சாதிக்கு தப்பாது தாளம் போட்டான் அதில் குயிலவளின் அழகு முகம் பார்த்து.
''நல்லா இறுக்கமா புடி!! அப்பறம் கீழே விழுந்து தொலைச்சிட்டா நான்தான் வம்படியா விழ வெச்சேன்னு சொல்லி ஊரே கூட்டுவே!!''
என்றவனின் கூற்றில் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டவளாய் சைட்டு வாக்காய் அமர்ந்திருந்த மணவாட்டியவளோ நெஞ்சம் உரச விரனை இறுக்கமாய் கட்டிக்கொள்ள,
''நீ பைக் கம்பியே கூட புடிக்கலாம்!! என்னத்தான் உரசனும்னு அவசியம் இல்லே!!''
என்றவனோ உடலை முன்னோக்கி கொள்ள,
''ஏன் நான் ஒட்டி உட்கார கூடாதா!! எனக்கந்த உரிமையில்லையா!!''
என்றவளோ முன்னோக்கி அவனை விடாது கட்டியணைக்க,
''இன்னும் நல்லா புடி!! எனக்கு மூச்சு முட்டுறே அளவுக்கு!! உனக்குத்தான் இங்கிதமே தெரியாதே!! எங்கே எப்படி பேசணும்!! எதை யாருக்காக எழுதணும்!! சொந்த புத்தியும் இல்லே!! சொல் புத்தியும் இல்லே!!''
என்றவனின் கோபமான குத்தலில் மெதுமெதுவாக தளர்ந்தது தாரமவளின் கரங்கள் ஆணவனின் நெஞ்சிலிருந்து.
''நீ அடிச்சே கூத்து பத்தாதுன்னு இப்போ என் பேரே நாறடிக்க போறானுங்க இந்த மீடியாவும் கலாச்சார காவலர்களும்!! ஆளாளுக்கு கையிலே கேமரா அந்த மண்டபத்துலே!! எவன்லாம் லைஃவ் போனான்னு தெரியலே!!''
என்று என்னதான் கடுப்பில் கத்தினாலும் தலை குனிந்திருந்த சின்ன டிக்கியவளை கவனிக்காமல் இல்லை விரன்.
''கல்யாண மண்டபத்தில் கலாட்டா!! கொச்சையாக காமெண்ட் போட்ட பெண்ணையே மனைவியாக்கிக் கொண்டார் அவிரன் சிங்!!''
என்றவனோ கண்ணீரை விரல்களால் துடைத்தப்படி பைக்கின் ஓரங்களையும் பிடிக்காது ஆணவனையும் பிடிமானத்திற்காக பிடிக்காது வெறுமனே கிடந்தவளின் கையை இழுத்து இயமானியவளை முதுகோடு ஒட்டிக் கொண்டான்.
''பரவாலே.. நான் எட்டியே இருந்துக்கறேன்..''
என்றவளின் கண்ணீர் துளிகளோ புது தாலியில் உதிர,
''எப்போ வரைக்கும்!! அப்பறம் சொல்லவா கொடுமைக்காரன் ஒட்டியும் உட்கார விடமாட்டறான்.. வெட்டியும் விட மாட்டறான்னு!!''
சொன்னவனின் பின்முதுகு தோளிலே வைத்தாள் ஒரு குத்து சின் டிக்கியவள் முஷ்டி மடக்கி.
''நல்ல வார்த்தையே வராது உங்க வாயிலே!! தாலி கட்டி இன்னும் முழுசா ஒரு மணி நேரங்கூட ஆகலே.. அதுக்குள்ளே வெட்டி விடறேன் அது இதுன்னு!! இப்போ உங்களுக்கு என்னே நான் விழுந்திடக்கூடாது அதானே..''
என்றவளோ பைக்கின் விளிம்புகளை பற்றிக் கொள்ள,
''நான் அப்படி இப்படி வளைஞ்சி நெளிஞ்சி போவேன்.. தடுமாறுவே.. தள்ளாடி விழுந்திடவே..''
என்றவனோ பின்னோக்கி சாய,
''அதுக்கு..''
என்றவளோ புருவம் தூக்க,
''லைட்டா கட்டிப்புடிச்சிக்கிட்டாலாம் நான் ஒன்னும் சொல்லே மாட்டேன்!!''
என்றவனின் குமட்டில் குத்தியவளோ,
''இதுக்கொன்னும் குறைச்சலில்லே!!''
என்றிட பெண்ணவளின் கையை இழுத்து மடியில் வைத்துக் கொண்டவனே,
''நடந்தது காதல் திருமணமா அல்லது கட்டாய திருமணமா!! இன்ஸ்டா பதிவுகள் ஜோடிக்கப்பட்ட நாடகமா அல்லது நிதர்சன எதிர்ப்புகளா!! நல்லா கேட்டு மண்டையிலே ஏத்திக்கோ.. இப்படித்தான் இனி ஒரு வாரத்துக்கு அடுத்த இளிச்சவாயன் எவனாவது கான்ட்ரவெர்ஷியலா சிக்கிர வரைக்கும் நம்பலே போட்டு அடி அடின்னு அடிப்பானுங்க!! தயவு செஞ்சு உன் குரங்கு கையையும் கொண்டி வாயையும் வெச்சுக்கிட்டு சும்மா இரு அது போதும்!! இந்த விஷயம் அப்படியே காணாமே போயிடும்!! புரிஞ்சுதா!!''
''இதெல்லாம் இருக்கட்டும்.. அதென்னே கொண்டி..''
''அதுவா..''
என்றிழுத்தவனோ அப்படியே பைக்கை மனை வாசலின் முன்னிறுத்தினான்.
''ஹ்ம்ம்.. சொல்லு.. என்னே..''
என்றவனின் தோளில் கைக்கொண்டிருந்த மங்கையவளை அவன் காதோரமாய் இழுத்த விரனோ,
''வீடு வந்துருச்சு.. நான் சொன்னதையெல்லாம் கேட்டு நீ நல்ல புள்ளையா நடந்துக்கிட்டா அப்பறம் சொல்றேன் கொண்டிக்கான அர்த்தத்தை!!''
என்றான் பைக்கிலிருந்து கீழிறங்கி.
உயிர் துஞ்சிடுவான் விரன்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 22
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.