- Joined
- Jul 10, 2024
- Messages
- 414
அத்தியாயம் 24
தடாலடியாக கல்யாணம் முடித்து வந்த நிழலிகாவோ பெத்த புண்ணியவான் நேசமணியை தேடி ஓடினாள் விரன் வெளியான அடுத்த நொடியே மனையிலிருந்து.
வீடு போனவளை கலங்கிய கண்களோடு வரவேற்றார் நேசமணி.
''அப்பா!! சோரிப்பா!! சோரி!! சோரிப்பா!! சத்தியமா விரன் என் கழுத்திலே தாலி கட்டுவாருன்னு நான் எதிர்பார்க்கலப்பா!! உங்க கனவுல மண்ணள்ளி போட நான் நினைக்கலப்பா!! தயவு செஞ்சு என்னே மன்னிச்சிடுங்கப்பா!! மாமா.. முகிலனெல்லாம் எங்கப்பா.. நடந்த விஷயத்துக்காக அவுங்க எல்லார்கிட்டையும் நான் மன்னிப்பு கேட்கணும்ப்பா..''
என்று கண்ணீர் கொண்ட மகளை அழைத்து போய் சோபாவில் அமர்த்தினார் பெரியவர்.
''எங்கப்பா எல்லாம்.. அத்தையே பார்க்கே ஹோஸ்ப்பிட்டல் போயிருக்காங்களா..''
வினவினாள் வருத்தங்கொண்டவள் பிடிக்காத திருமணமாகினும் மணமேடை வரைக்கும் வந்த குடும்பத்திற்கு இழுக்கு அவளால் என்பதால்.
''அவுங்களாம் அவுங்க வீட்டுக்கு போயிட்டாங்கம்மா..''
என்ற நேசமணியோ மகளின் முன் ஒரு கப் ஜூஸை வைத்து தொடர்ந்தார் எதிர் சோபாவில் உடலை தளர்த்தி.
''ஜூஸே குடிமா..''
''என்னப்பா சொல்றிங்க.. கோவப்பட்டு கோச்சிக்கிட்டு போயிட்டாங்களா..''
என்றவளோ அப்பாவை கலக்கத்தோடு வெறிக்க,
''இல்லமா.. நான்தான் கழுத்தே பிடிச்சு துரத்தாத குறையா நாக்கே புடிங்கிக்கறே மாதிரி திட்டி விரட்டி அடிச்சிட்டேன்!!''
நேசமணியின் பதிலில் நிழலிகாவிற்கோ பேரதிர்ச்சி.
''என்னப்பா சொல்றிங்கே!! எனக்கு ஒன்னுமே புரியலே!!''
''நான்தான்மா தப்பு பண்ணிட்டேன்! நீ சொல்லும் போதே சுதாரிச்சிருந்திருக்கணும்!! வந்தவங்க உறவு கொண்டாட வரலமா.. உன்னே கொன்னு அவுங்க தோட்டத்துக்கு உரமாக்க வந்திருக்காங்க!!''
என்ற நேசமணியின் கவலைக் கொண்ட தொனியில் ஆடிப்போனாள் விரனின் சின்ன டிக்கியவள்.
புதிதாய் வந்து ஒட்டிக்கொண்ட தங்கை குடும்பம் பாசத்தால் இணைந்த உறவென்று நேசமணி நினைத்திருக்க அதுவெல்லாம் வெறும் நடிப்பென்று கல்யாணம் நின்ற நொடி மருத்துவமனைக்கு விரைந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் தெரிந்துக் கொண்டார் நேசமணி.
சாகக்கிடப்பதாய் சொன்ன தங்கையும் சரி, மச்சானின் கையைப் பிடித்து கதறிய அவள் புருஷனும் சரி; மருத்துவருக்கு பணங்கொடுத்து இதுநாள் வரை குட்டு வெளிவராமல் போலி வேஷம் போட்டு ஏமாற்று வேலை பார்த்திருக்கின்றனர்.
அறைக்குள் தம்பதிகள் இருவரும் பேசியதை எதர்ச்சையாய் நேசமணி கேட்க அப்போதுதான் உணர்ந்தார் நிழலிகாவை பெத்தவர் அவர்களின் ஒட்டு மொத்த சதியையும்.
முகிலனுக்கு ஏற்கனவே திருமணமாகி ரெண்டு குழந்தைகளிருக்க அவனின் தர்மபத்தினியோ கிளம்பி போய் விட்டாள் அவளின் ஆத்தா வீட்டுக்கு மூன்றாவது பிரசவத்தை பார்க்க.
அந்நேரம் பார்த்து வீட்டின் பெரிசோ மண்டையை போட, உயிலை படித்த லாயரோ வாரிசுகளின் தலையில் குண்டை போட்டார்.
குடும்ப சொத்து கைவிட்டு போக கூடாதென்று முடிவெடுத்த முகிலனின் பெற்றோர்களோ மகனவனையும் கூட்டு சேர்த்துக் கொண்டு களவானி தனத்தை ஆரம்பித்தனர்.
அவர்களின் திட்டப்படி நேரடியாக போய் பொண்ணு கேட்டு சட்டுபுட்டென்று கல்யாணத்தை நடத்தி சொத்தை எழுதி வாங்கிட வேண்டும் நிழலிகாவிடமிருந்து.
ஒருகால் பெண்ணவள் தாலி செண்டிமெண்ட் கொண்டாள் அவ்வப்போது முகிலனை சந்தோஷப்படுத்தி அதே வீட்டில் ஒரு மூலையில் வேலைக்காரியாய் அவளை வாழாவெட்டியாக்க பேசி வைத்திருந்தனர்.
ஆனால், அப்படி எதற்கும் மசியாதவளாய் இருந்தாள் எப்படியாவது திருமணத்தை நிகழ்த்தி தோட்டத்தில் புதைகுழி வெட்டி அவள் கதையை முடித்திடவும் நினைத்திருந்தனர்.
இருப்பினும், துடுக்குத்தனமும் சொந்தக்காலில் நின்று சம்பாரிக்கின்ற திமிரும் கொண்ட நிழலிகாவை அவ்வளவு சுலபத்தில் அவர்களால் நெருங்கிட முடியவில்லை.
ஆகவே, நேசமணி அவர் தங்கையின் மீது கொண்ட அளப்பரிய அன்பை பகடைக்காயாய் பயன்படுத்திக் கொண்டனர் கூட்டு களவாணிகள் மூவரும்.
பொய்யான நாடகமொன்றை நடத்தி மருத்துவமனை, ஹார்ட் அட்டாக், மரணம் அது இதுவென நேசமணியை எமோஷனலாய் டார்கெட் செய்து அதன் மூலம் நிழலிகாவை மணவாழ்க்கைக்கு சம்மதிக்க வைத்தனர் நயவஞ்சகர்கள்.
ஆனால், கயவர்களின் ஒட்டு மொத்த திட்டமும் விழலுக்கு இறைத்த நீராய் போனது விரன் சடீரென்று எண்ட்ரியாகி சம்பவம் நிகழ்த்த.
பிளான் ஊத்திக்கொள்ள கடுப்போடு அப்பாவும் மகனும் மருத்துவமனையில் சும்மாவே உட்கார்ந்து மூன்று வேளையும் மூக்கு பிடிக்க தின்று செரித்த நேசமணியின் தங்கையை நாடி போயினர்.
குற்ற உணர்ச்சிக் கொண்ட நேசமணியோ எல்லோருக்கும் செட்டில் செய்ய வேண்டிய செலவுகளை செய்து பின் மருத்துவமனை விரைந்தார் தங்கையை சந்தித்து நடந்த விடயத்திற்காய் மன்னிப்பு கோர.
ஆனால், கடவுள் புண்ணியத்தில் நிழலிகாவின் வாழ்க்கை அவர்களிடமிருந்து காப்பாற்றப்பட்டது விரானால் என்பதை அதன் பின்னரே அவர் புரிந்துக் கொண்டார் முதலில் ஆணவன் மீது கடுங்கோபம் கொண்டிருந்தாலுமே.
அண்ணன் நேசமணிக்கு எல்லாம் தெரியும் என்ற சங்கதி அறியா தங்கையோ டிஸ்சாஜ் ஆகி வீட்டிக்கு படையெடுத்தார். சின்ன டிக்கிக்கு உடனே டிவோர்ஸ் வாங்கிக் கொடுக்க ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார்.
பொறுத்திருந்த நேசமணியோ பொங்கினார் நல்வாழ்க்கை கொண்ட நிழலிகாவின் வாழ்க்கையை அழிக்க பார்த்த பணபேய்களின் கொட்டம் எல்லை மீறிட.
மொத்த குடும்பத்தையும் மனையிலிருந்து வெளியேற்றி அவர்களின் உடமைகளை நடு வீதியில் தூக்கி வீசினார்.
ஊரே பார்க்க அவர்களுக்கு சரமாரியான வசைகளை இலவச இணைப்பாய் வழங்கியவரோ அவர்களின் திட்டம் அவர் அறிந்ததே என்பதையும் சொல்லி வீட்டின் கதவை அடித்து சாத்தினார்.
நேசமணி நடந்தவைகளை சொல்லி முடிக்க,
''அப்பப்பப்பா!! கேட்கவே தலை சுத்துதுப்பா!! ஈரக்குலையே நடுங்குது!! என்னே ஜென்மம் இவுங்களாம்!! ச்சை!!''
என்றவளோ ஜூஸை பருக,
''பணம் பத்தும் செய்யும் நிழலிகா.. இந்த மாதிரியான ஆட்களுக்கு கடவுள்தான் தண்டனை தரணும்!!''
''அப்பா.. இவ்ளோ தூரம் ஆனப்பிறகு நமக்கு அந்த சொத்து வேணுமாப்பா..''
''கண்டிப்பா வேணாமா.. நான் சொல்லிட்டேன்.. நீயும் மாப்பிள்ளையும் நேரடியா போய் சந்திச்சு எல்லாத்தையும் முறையா எழுதி கொடுத்திட்டு வந்திடுங்க..''
நேசமணி காதல் கணவனை மாப்பிள்ளை என்றதும் மேடமின் முகம் மலர்ந்தது.
''அப்பா.. அவர் உங்களே..''
என்றவளோ எப்படி ஆரம்பிப்பதென்று தெரியாது இழுத்தாள் நடந்த நெருடலை நினைவுக்கூர்ந்து,
''நான் பார்த்தேன்மா நீ எனக்காக அவர் சட்டையே புடிச்சதையும்.. அவர் உன்னே சமாதானப்படுத்தே விளக்கம் கொடுத்ததையும்..''
''அப்பா.. அது..''
''சொல்லிருக்கலாம் நிழலிகா.. நான் ஒன்னும் காதலுக்கு எதிரியில்லையே..''
என்ற நேசமணியோ குரலில் சிறு வருத்தம் கொள்ள,
''நாங்களே இன்னும் சொல்லிக்கலையேப்பா..''
என்றவளோ முகம் சிவக்க தலை குனிந்துக் கொண்டாள் தன்னவனை நினைத்த வெட்கத்தில்.
உயிர் துஞ்சிடுவான் விரன்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 24
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.