- Joined
- Jul 10, 2024
- Messages
- 414
அத்தியாயம் 26
மணி விடியற்காலை ஐந்து.
அலைபேசி கதற எழுந்த விரனோ குளித்து முடித்து கிளம்பி விட்டான் ஜிம்முக்கு. அம்மணியோ இனியென்னே கவலை என்பது போல் இழுத்து போர்த்திக் கொண்டு நன்றாய் தூங்க மணி பத்தாகி கடைசில் மதியம் மூன்றில் வந்து நின்றது.
எதர்ச்சையாய் தூக்கம் கலைய, ஐயோ அம்மா என்றவள் அரக்க பறக்க ஓடினாள் குளிக்க.
ஷவரில் ஒரு குத்தாட்டம் போட்டு பத்தாவது நிமிடத்தில் வாஷ் ரூமிலிருந்து வெளி வந்தவள் அவளுக்கு ஏத்தாற்போன்ற சைசில் உடுப்பேதும் விரனிடத்தில் இருக்கிறதா என்று ஆணவனின் அலமாரியை அலசோ அலசென்று அலசி தும்சமாக்கினாள் உள்ளிருந்த ஆடைகளை கலைத்து போட்டு.
எல்லாவற்றையும் தூக்கி பின்னோக்கி வீச விறலியின் கரங்களோ சடன் பிரேக் போட்டு விழிகளை அகல விரித்தன கையில் சிக்கிய டாப்ஸ், லெகிங்ஸ், சுடிதாரென்ற லேடிஸ் வெர்களால்.
''அடப்பாவி சண்டாளா!! நல்ல குடும்பத்துலே இப்படி ஒரு நாறப்பையனா!! ச்சை!! இதுக்குத்தான் எனக்கு டிமிக்கி கொடுத்தியா!! எவே அவன்னு இன்னைக்கு பார்த்திடறேன்!!''
என்று பல்லை கடித்து கோபம் கொண்டவளாய் சிதறிக் கிடந்த ஆடைகளையெல்லாம் படம் பிடித்து இன்ஸ்டா மெசஞ்சரில் விரனுக்கு அனுப்பி நியாயம் கேட்க அதுவோ பெண்டிங் செய்தியாகி போனது.
கடுப்பானவளோ அப்படத்தை அப்படியே இன்ஸ்டாவில் பதிவிட்டு எழுதினாள் கொளுத்தி போட வேண்டிய கேப்ஷனை இப்படி.
''Drogam of second day of the marriage!!''
(திருமணமான இரண்டாவது நாளின் துரோகம்!)
நிம்மதியாய் கலகத்தை தொடங்கியவளோ ஆபத்துக்கு பாவமில்லை என்று புதுத்துணி வாசம் கூட மாறிடாத சுடி ஒன்றை எடுத்து போட்டுக் கொண்டு கீழ் தளம் நோக்க தயாராகினாள் குடும்ப குத்துவிளக்காய் உச்சியில் குங்குமம் வைத்து.
லேட்டாக எழுந்தாள் பரவாயில்லை பொழுது சாய போகின்ற வேளையில் எழுந்தாள் என்னதான் சொல்லி சமாளிப்பதாம்.
இருந்தாலும் பசிக்கும் வயிறை காய போட்டிட முடியாதல்லவா. ஆகவே, வடிவேலுவின் பாணியில் சமாளிப்போம் என்று சொல்லிக்கொண்டு மானினியவள் மாடிப்படி இறங்க மொத்த குடும்பமும் வரவேற்பறையில் குந்தியிருந்தது விரனை தவிர.
''ஆத்தி!! என்னே.. பெருசுலருந்து சிறுசு வரைக்கும் எல்லாமே குறுகுறுன்னு பாக்குது!!''
என்றவளோ சீன் போட்டிட ஆரம்பித்தாள் எங்கே யாரேனும் வாய் திறந்திட போகிறார்கள் என்ற யொள்ளில்.
''ஐயோ!! அம்மா!! இடுப்பு வலிக்குதே!! நடக்கக்கூட முடியலையே!!''
என்று வெறுமனே ஊரை கூட்டி அடிகளை அன்னமாய் படியில் பதித்து,
''ஏன் அண்ணி.. கட்டிலிலிருந்து உருண்டு கீழே விழுந்திட்டிங்கள்ளா!''
என்ற சரனோ டிவி பார்த்துக் கொண்டே நமட்டு சிரிப்பு சிரிக்க,
''டேய்!! சும்மா இருடா!!''
என்று முனகியவளோ முகத்தை தொங்க போட்டு,
''ஹான்.. நான் கீழே விழலே சரன்.. உங்கண்ணந்தான் என் மேலே விழுந்திட்டாரு!! விடிய விடிய!! சொன்னேனே!! கேட்டானா படுபாவி!! இப்படி கூனு விழுந்த கிழவியாட்டம் ஆக்கிட்டானே!!''
என்று சகட்டு மேனிக்கு பீலா விட,
''ஏய் லடிக்கி!! சுப்!!''
என்ற சிங் தாத்தாவே போட்டார் ஒரு அதட்டு சரோஜா தேவி கணக்காய் நடித்தவளை நோக்கி.
பக்கென்று தூக்கிவாரிப்போட நெஞ்சில் கைவைத்துக் கொண்ட நிழலிகாவோ அப்படியே அதிர்ந்து நின்றாள் குண்டு விழிகளை பிதுக்கி படியிலியே.
''நீ வாமா.. சாப்பாடு எடுத்து வைக்கறேன்.. சாப்பிடலாம்..''
என்ற ரேக்கவோ மருமகளின் கையை பிடித்து கூட்டி போனார் அடுக்களை பக்கமிருந்த டைனிங் டேபிள் நோக்கி.
''அத்தே நிஜமாவே நேத்து..''
என்றவளோ இழுக்க எப்படி சமாளிப்பதென்று தெரியாது,
''அண்ணி இதுக்கு மேலே பொய் சொன்னிங்க தாத்தா டெரர் பார்ட்டி கையிலிருக்கறே கம்பே தூக்கி அடிச்சிடுவாரு பார்த்துக்கோங்க!!''
என்ற சரனோ டைனிங் டேபிளிலிருந்த பழத்தட்டை தூக்கிக் கொண்டு வரவேற்பறை நோக்கினான் கிண்டலோடு.
''நிஜமாவே தாத்தா அடிச்சிடுவாரா அத்தே..''
என்றவளோ பரிமாறிக் கொண்டிருந்த ரேக்காவிடம் அச்சங்கொண்டு கேட்க,
''விரன் நேத்து ஹோல் சோபாலத்தான்மா படுத்து தூங்கினான்.. எப்போதும் போல ஐஞ்சு மணிக்கெல்லாம் கிளம்பிட்டான் ஜிம்முக்கு..''
என்ற ரேக்கவோ டீசண்டாக பதிலளித்தார் மருமகளின் கேள்விக்கு.
''ஓஹ்!! ஆமாவா அத்தே!! நான் கவனிக்கலே!!''
என்றவளோ அசடு வழிய மாமியாரை ஒரு லுக்கு விட,
''ஹனிமூன் எங்கே போக போறிங்க..''
என்ற ரேக்காவின் கேள்வியில் புரையேறிக் கொண்டது சின்ன டிக்கிக்கு.
''தண்ணி குடி..''
என்று ரேக்கா நீட்டிய தண்ணீர் கிளாஸை வாங்கி சில முடக்குகள் வைத்தவளோ,
''இன்னும் அதை பத்தியெல்லாம் எதுவும் யோசிக்கலே அத்தே..''
என்று பல்லை காட்டியவளோ மனசுக்குள் கறுவிக் கொண்டாள் இப்படி.
''இங்கையே என்னே போட முடியலையாம் இதுலே கடல் தாண்டி போயிட்டா மட்டும் போட்டிடுவானா!! குட்டி குஞ்சா!!''
''நிழலிகா.. நேத்து மாமா பேசினே எதையும் மனசுலே வெச்சுக்காதே.. பெரியவங்க அப்படித்தான்.. நானும் விரனோட அப்பாவும் கூட லவ் மேரேஜ்தான்..''
''வாவ்.. செம்மே அத்தே நீங்க!!''
''விரன் அப்பா இறந்த பிறகுதான் மாமா எங்களே ஏத்துக்கிட்டாரு.. அதுவும் பையன் சாவுக்கு தான்தான் காரணங்கிற குற்ற உணர்ச்சியிலே.. நல்ல மனுஷன்தான்.. ஆனா.. இந்த மதம் சார்ந்த விஷயங்களே ரொம்ப கெடுபிடி.. நீ ஏதும் தப்பா எடுத்துக்காதே.. போக போக எல்லாம் சரியாகிடும்..''
''நீங்க கவலப்படாதீங்க அத்தே.. என்னாலே எப்போதுமே இந்த குடும்பம் பிரியாது..''
என்ற மருமகளை தலையை வாஞ்சையாய் தடவிக் கொடுத்த மாமியாரோ,
''எப்போலாருந்து லவ்வு..''
என்று கேட்க,
''ஹான்.. அது வந்து.. எங்களுக்கே தெரியலே அத்தே.. அது அப்படியே வந்துடுச்சு..''
என்றவளோ வெட்க சிரிப்போடு சோற்று தட்டில் விரலால் குழி வெட்ட,
''சொல்லிருந்தா முறைப்படி பொண்ணு கேட்டு ஊரே கூட்டி கல்யாணம் பண்ணி வெச்சிருப்போம்.. ஆனா.. என்னே அதுக்கு எப்படியும் ரெண்டு வருஷமாவது ஆகியிருக்கும் மாமாவே சமாளிக்க! அதுக்கு பதிலா இப்போ அதே ரெண்டு வருஷத்துலே நாலு புள்ளே நீங்க பெத்துடுவிங்க!''
என்ற மாமியாரோடு சேர்ந்து சின்ன டிக்கியும் சிரித்தாள்.
உயிர் துஞ்சிடுவான் விரன்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/உயிர்-துஞ்சும்-விரனா.6/

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 26
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.