What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
414
அத்தியாயம் 30

தைப்பூச மாதத்திற்கு ஒரு கும்பிடு போட்ட தம்பதிகள் இருவரும் மார்ச்சில் அடியெடுத்து வைக்க விரன் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு கிளம்பும் நேரம் வந்தது.

கல்யாணம் கலாட்டா என்று எல்லாம் நல்லபடியாய் போக பிரிவென்ற ஒன்று இருவரின் உறவையும் மேலும் வலுப்படுத்த தயாராகி விட்ட நிலையில் இருவருக்குள்ளும் தாம்பத்தியம் என்ற ஒன்று மட்டும் இன்னும் நடவாதே தள்ளி போனது.

பாலபிஷேகம் நிறைவேறாது போன நாளிலிருந்தே விரனும் சரி நிழலிகாவும் சரி அவரவர் தொழிலில் பிசியாகி போயினர். உச்சு போக கூட நேரமின்றி சுழன்றாள் சின்ன டிக்கி ஆட்கள் இருவரை வேலைக்கு புதிதாய் சேர்ந்திருந்தாலுமே.

விரன் புதிதாய் இன்னொரு ஜிம் கிளையை சிட்டியை தாண்டிய இடத்தில் திறந்திருக்க தினமும் அங்கிருக்கும் பணிகளை கவனித்து வீடு வந்து சேரவே ஆணவனுக்கு மணி பனிரெண்டுக்கு மேலானது.

ஆகவே, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்வதென்பது என்னவோ அவர்கள் ஜோடி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்ற பட்சத்தில் மட்டுமே. ஒருகாலத்தில் அறையில் ஓடி பிடித்து விளையாடி பொழுதை கழித்தவர்கள் இப்போது முகம் பார்த்து பேச கூட நேரமின்றி போயினர்.

விரனின் நிலவரங்களை எப்படி சின்ன டிக்கியவள் இன்ஸ்டா பார்த்து தெரிந்துக் கொண்டாளோ அதே போலவே பொண்டாட்டியின் முன்னேற்றங்களையும் அதே இன்ஸ்டா மூலமாகவே கண்டறிந்துக் கொண்டான் விரன்.

தம்பதிகளே இங்கு நேரமற்று கிடக்க கோபக்கார தாத்தாவோ ஒரே மாதத்தில் கேட்டிட தொடங்கிவிட்டார் பிள்ளை எங்கே குட்டி எங்கே என்று.

சொந்தமும் பெத்த தாயும் வாய் திறக்கும் முன் விரன் பொத்தம் பொதுவாய் அனைவரின் வாயையும் அடைத்து விட்டான் பேபி மேட்டர் ரெண்டு வருஷத்துக்கு கிடப்பில் என்று.

இப்போதைய இளசுகள் எல்லாம் இப்படித்தான் என்று என்னதான் சிங் தாத்தா நைநை என்றாலும் விரன் எதையும் மண்டையில் ஏத்திக்கொள்ளவில்லை. ஜாடிக்கேத்த மூடியாய் நிழலிகாவும் ஒன்றையும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.

விரன் திருமணம் முடிந்த கையோடு ஆறு மாத ப்ரொஜெக் ஒன்றில் காமிட்டாகி பாரங்களில் கையெப்பம் இட்டிருக்க, நாடு விட்டு நாடு கிளம்பும் முன் இரு நாட்களுக்கு எல்லாவற்றிலிருந்தும் ஓய்வெடுத்திருந்தான்.

குடும்பமாய் ஒரு நாள் ஸ்பெண்ட் செய்தவன் மறுநாளை சின்ன டிக்கிக்காய் ஒதுக்கினான். அதைக்கூட மேடமின் இன்ஸ்டா படத்தின் பதிவுக்கு கீழ் கமெண்ட் செக்ஷனில் அவனின் பாணியில் கேட்டிருந்தான் இப்படி.

''hi
👋
hello
🙋‍♂️
enna niyabagam irukka
😊
naan thaan unga purushan Viran Singh
🤗
6 months of Philippines project
🇵🇭
so, kilambarathuku munnadi date panna oru chance taruvingala
😁
please
😌
ippadiku Mr tangga puthayal
😅
''

இதை படித்து எத்தனை முறை சிரித்திருப்பாளென்று சின்ன டிக்கிக்கே தெரியவில்லை. அப்படி ஒரு காமெடியை உணர்ந்தாள் உல்லியவள் புருஷனின் வாக்கியத்தில்.

அலைபேசியை கையிலெடுத்தவளோ,

''Hi purusha
🤭
paarthu romba naal aachu
😅
date ketkare
😒
hmm
🤨
yosichen
🤔
pavama thonuchu
😌
so, unakoru chance tara mudivu panniden
🥰
irunthalum dating pannum pothu romba demand pannuven ippave solliden
😂
appram ni kanne kasaka kodathu
🤣
therefore, again think about to inviting me to date.. ippadiku Ms Kaaju Kadli
❣️
''

என்று இப்படி பதிலளித்தாள் விரனுக்கு.

காதல் தம்பிராட்டியின் ரிப்ளையை கண்டவனுக்கோ குஷியில் கைகால்கள் ஓடவில்லை ஏதோ அவளை முதல் முறை பார்த்தாற்போன்ற மகிழ்ச்சியில்.
''with pleasure.. I'm ready for everything my lady.. date start sharp at 6pm today up to tomorrow 6pm
😅
love you
❤️
''

என்று பதில் கமெண்ட் போட்டவனோ வீட்டாள் அவளை ப்ரொபோஸ் செய்திட தேவையான ஏற்பாடுகளை செய்ய ஆயத்தமானான்.

விரனின் பதிலை கண்ட நொடி வானில் பறப்பது போலிருந்தது நிழலிகாவிற்கு. அவனின் ஐ லவ் யூ வில் உலகம் மறந்தாள். அன்றைய நாள் முழுக்க அம்மணிக்கு வேலையே ஓடவில்லை.

இதுவரை இருவரும் ஒருமுறை கூட அவர்களின் காதலை வெளிப்படுத்திக் கொண்டதே இல்லை. அப்படியிருக்க முதல் தடவை விரனாகவே பொதுவில் அன்பை மூன்றெழுத்தில் வெளிப்படுத்தியிருக்க வேறென்ன வேண்டும் இனி இல்லாள் அவளுக்கு என்பது போலிருந்தது பாவையவளுக்கு.

முப்பொழுதும் விரன் சிங்கின் நினைவேநாயகிக்கு. கடையை பணியாளர்களின் பொறுப்பில் விட்டுவிட்டு நடையை கட்டினாள் காரிகையவள் தலைநகரின் கே.எல்.சி.சி.க்கு. அதற்குள் இல்லாத கடைகளா. ஒவ்வொன்றும் பல ஆயிரங்களின் பெயர் சொல்லும்.

கைக்கடிக்கார கடையொன்றில் நுழைந்து விரனுக்கு பிடித்தாற்போன்ற டிசைனில் வாங்கினாள் ஸ்போர்ட்ஸ் கைக்கடிகாரம் ஒன்றை சின்ன டிக்கியவள்.

அதை அழகாய் பேக்கிங் செய்ய சொன்னவள் முன் கூட்டியே மாமியாருக்கு போனை போட்டு விரனின் விருப்பம் எப்படியென்றும் கேட்டறிந்துக் கொண்டாள்.

பின், விரனின் தேர்வான பியர் கார்டின் பிராண்டில் லெதர் ஜாக்கெட் ஒன்றையும் அரை டஜன் ஜட்டிகளையும் வாங்கி கிஃப்டாய் ரெடி செய்து விட்டாள் அவனோடான டேட்டிங்கிற்கு.

உயிர் துஞ்சிடுவான் விரன்...

முந்தைய அத்தியாயங்களை படிக்க:


https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/
 

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 30
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: Jai
Top