What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
416
அத்தியாயம் 31

மணி ஐந்து நாற்பதை தொட மேடம் சின்ன டிக்கியோ கைப்பையோடு கடைக்கு வெளியில் வந்து எட்டி பார்த்தாள் குட்டி குஞ்சனின் தலை தெரிகிறதா என்று.

ஆணவனோ அவளுக்கு முன்பாகவே பைக்கின் முன் கைக்கட்டி நிற்க விசிலடித்தவனின் பக்கம் தன்னிச்சையாக வெட்க புன்னகை கொண்டவளின் கால்கள் மின்னலாய் நடைப்போட்டன.

''எங்க போறோம்..''

என்றவளோ பைக்கில் ஏறி அமர,

''வா.. வந்து பாரு.. அசந்திடுவே..''

என்றவனோ அவனை கட்டிக்கொண்டவளின் கைகளை நெஞ்சோடு சேர்த்திறுக்கிக் கொண்டான்.

''பி.டி. போறோமோ..''

''ஹுஹும்..''

''கெந்திங்..''

''ஹுஹும்..''

''காராக்..''

''கேமரன் ஹைலண்ட்ஸ்..''

''ஹுஹும்..''

''ஐயோ!! சொல்லி தொலைடா குட்டி குஞ்சா.. எங்க போறோம்..''

ஆர்வம் தாளாது பல இடங்களை சிந்தித்து அதை விரனிடத்தில் சொல்லி நச்சரித்தாள் எனலாம்.

''பத்து நிமிஷம் பொறுத்துக்கோ.. கிட்டே வந்திட்டோம்..''

''என்னே.. வந்திட்டோமா!!''

என்றவளோ சுற்றி முற்றி பார்க்க மலரவள் இன்னமும் தலைநகர் தாண்டிய ஏரியாவில்தான் இருந்தாள்.

''வந்தாச்சு..''

என்றவனோ சொல்லி சிரித்து பைக்கை நுழைக்க வேண்டிய வளாகத்துக்குள் நுழைக்க,

''எங்..''

என்று ஆரம்பித்து அப்படியே பாதியில் நிறுத்தினாள் சின்ன டிக்கி தலையை திருப்பி வேலோடு நின்ற முருகனை பார்த்த மாத்திரத்தில் அப்படியே பார்வைகளை பைக்கின் சைட் மீரரில் பதித்து விரனை முறைத்து.

''இதுதான் உங்கூர்லே டேட்டிங்கா!!''

என்றவளோ கடுப்போடு பைக்கிலிருந்து கீழிறங்க,

''வாடி..''

என்றவனோ முகத்தை தூக்கி வைத்துக் கொண்டவளின் கையை பிடித்திழுத்துக் கொண்டு சென்றான் பத்து கேவ்ஸின் கீழ் தள சிவன் சன்னிதானத்திற்கு.

''கையே விடு..''

என்றவளோ கலங்கி ஊற்றி விட்ட கண்ணீரை துடைத்துக் கொண்டாள் கனவில் மண் விழுந்து போக ஆணவன் கையை உதறி.

ஆசையாக காத்திருந்து பைக்கேறியவள் தலையில் குட்டி குஞ்சன் இப்படி குண்டை போட்டிடுவான் என்றவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்லை.

கோவிலுக்கு காரிகையவளை கணவனவன் கூட்டி வந்ததொன்றும் தப்பில்லை. இருந்தும், நிழலிகா வேறு மாதிரி கற்பனை செய்திருக்க ஏமாற்றங்களில் வருத்தம் கொண்டவளுக்கோ வலி அதிகமே நாளை விரன் வேறு கிளம்ப.

''அங்கென்னே பார்த்துகிட்டு இருக்கே.. சாமி கும்பிடு..''

என்றவனின் பக்கம் திரும்பி ஒரு முறைப்போடு சேர்த்து வாயை வெட்டியிழுத்துக் கொண்டவளோ கையெடுத்து கும்பிட்டு பரமேஷ்வரனிடத்தில் முறையிட்டாள் புருஷன் செய்வது சரிதானா என்று.

''வரியா.. படியேறிட்டு வருவோம்..''

என்றவன் கேட்க திருநீறை நெற்றியில் இட்டு,

''அதை விட்டு வேறெங்க போயிட போறோம்!! டேட்டிங்காம்!! டேட்டிங்கு!! மூஞ்சியையும் முகரையையும் பாரு!! எரிச்சலா!!''

என்றவளோ விரனுக்கு விளங்கும் படியாகவே ஆதங்கத்தை கோபமாய் வெளிப்படுத்தி நடைப்போட்டாள் படியை நோக்கி.

''ஒரு ஒருத்தனுங்க அவனுங்க பொண்டாட்டியே எங்கலாம் கூட்டிக்கிட்டு போறானுங்க!! இதுவும்தான் இருக்கே!! கோவிலுக்காம்!! கோவிலுக்கு!!''

என்ற முனகலோடு பத்து பதினைந்து படிகளை சினங்கொண்ட சிங்கமாய் முன்னோக்க,

''க்ரிக்.. கிரீக்..''

என்ற சத்தத்தில் தலை தூக்கியவளோ,

''ஆத்தி இவனா!! ஹேண்ட் பேக்கை புடுங்காமே விட மாட்டானே!!''

என்றப்படி படியில் யூ டர்ன் அடிக்க,

''வா.. அவன் ஒன்னும் பண்ணே மாட்டான்..''

என்ற விரனோ மனைவியின் கரம் பிடித்து மேல் படி நோக்கினான். பக்கு பக்கென்றது அம்மணிக்கு. துணைவியவள் பார்த்து பயந்த ஹனுமான் சிஷியனோ நெருங்கி வந்தான் குட்டி குஞ்சனை.

''இப்படியே நில்லு.. பயப்படாதே.. ஓடாதே.. அவன் எதுவும் பண்ணே மாட்டான்..''

''இல்லே விரன்.. வேணாம் விரன்.. பயமா இருக்கு விரன்.. வேணா விரன்.. வா போலாம்..''

என்றவளோ புருஷனின் பின்னாடி நின்று அவன் சட்டையை இழுத்து இறுக்க,

''பேசாமே இரு.. அவன் பாட்டுக்கு தேங்காயே வாங்கிட்டு போயிடுவான்..''

என்ற விரனோ அர்ச்சனை தேங்காயை தூக்கி குரங்கிடம் நீட்ட, அதுவோ ஆணவன் சொன்னது போலவே இடத்தை காலி செய்தது.

பிறகென்னே குரங்கு அதன் ஜோலியை பார்த்துக் கொண்டு கிளம்ப, நாயகிக்கோ மீண்டும் கொம்பு முளைத்தது. குடுகுடுவென படியேறினாள் விரனை கழட்டி விட்டு.

''போ.. மேலே இன்னும் நிறையா இருக்கும்..''

என்றவனோ நக்கலாய் சிரித்து படியேற,

''ஆஹ்.. நான் எங்கே வேகமா போனேன்.. ஜஸ்ட் ரெண்டு ரெண்டு படியா அடி வெச்சேன்.. அதான் முன்னுக்கு போயிட்டேன்.. இப்போ நாமே சேர்ந்தே போலாம்..''

என்றவளோ மீசையில் மண் ஒட்டிடாத குறையாய் அவனோடே பயணித்தாள் வாயை மூடிக்கொண்டு.

மலை முருகனை வழிப்பட்டு அங்கிருக்கும் நடுபடிக்கட்டினில் அமர,

''நான் ஒரு புக்லே படிச்சிருக்கேன்.. ஒரு போலீஸ்கார் அவரோட காதலியே இங்கதான் கிஸ் பண்ணே ட்ரை பண்ணாராம்..''

என்றவனின் முகம் பூரிப்பில் மிளிர,

''கொஞ்சமாவது அறிவிருக்கா அவனுக்கு!! கோவில்லே போய் யாராவது இப்படி காஜியா நடந்துப்பாங்களா!! நிஜமாவே அவன் போலீஸ்காரன்தானா!!''

''அதை நீ உன் அண்னேகிட்டத்தான் கேட்கணும்..''

என்றவனோ நக்கலாய் சிரிக்க,

''எங்கண்ணனா!!''

''ஆமா.. கர்ணா உன் நொண்ணந்தானே!!''

என்றவனோ கிண்டலில் கொஞ்சம் சிரிப்பை கூட்ட,

''உன்கிட்டே அண்ணே சொன்னாரா இந்தக் கதையே!!''

''உங்கே அண்ணன் சொல்லலே அண்ணி எழுதிருந்தாங்க அவுங்களோட பயோகிராப்பிலே..''

என்றவனோ மினரல் வாட்டரை தொண்டைக்குள் இறக்க,

''நீ படிப்பங்கறதே எனக்கு அதிர்ச்சி.. அதுவும் சுயசரிதை புக்கலாம் என்னாலே நினைச்சு கூட பார்க்க முடியலடா குட்டி குஞ்சா!! இப்பவே கண்ணே கட்டுது!!''

''அது சரி.. சரஸ்வதியையே டீல்லே விட்டே ஆள்தானே நீ..''

என்றவனோ பொண்டாட்டியவளை கேலி செய்ய,

''ஆஹ்.. போதும்!! போதும்!! நாளைக்கு சிரிக்கறேன்.. அடுத்து எங்கே.. ஐயனார் கோவிலுக்கா..''

என்றவளோ பட்டென கேப்பில் விரனை நோஸ் கட் செய்ய,

''அட நீ வேறே ஏண்டி..''

என்றவனோ சலிப்போடு போத்தலை படிக்கட்டினில் செங்குத்தாய் நிற்க வைத்து மல்யுத்தம் கொண்டான் அதோடு.

''இந்த ரியாக்ஷன் நான் கொடுக்கணும் சார்!! நீங்க இல்லே!! இதுலே பெரிய பருப்பு மாதிரி டேட் வான்னு ஊரே பாக்கறே மாதிரி போஸ்ட் வேறே!! எல்லாம் வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பாங்க நம்ப லைஃப்க்கு..''

என்ற யுவதியோ உதடு பிதுக்க கவலை கொண்ட குரலோடு,

''அதை விடுடி.. நான் எவ்ளோ சோகமா இருக்கேன் தெரியுமா.. நிஜமாவே நான் வேறே லெவல்லே பிளான் பண்ணிருந்தேன் நிழலிகா.. கென்டால் லைட் டின்னர்.. மூவி.. லோங் ட்ரைவ்.. ம்ம்ச்ச்ச்.. எல்லாம் போச்சு..''

என்றவனோ தொங்கியா முகத்தோடு சுரமின்றி பேச,

''அப்பறம் ஏன் நாமே இங்கிருக்கோம்!! என்னாச்சு விரன்..''

என்றவளோ ஆணவனின் முழங்கை உலுக்க,

''தாத்தாக்கு திடிர்னு சுகர் லெவல் ஏறிடுச்சு.. மயக்கம் போட்டு விழுந்திட்டாரு.. சரண் வீட்டுலே இருக்கவும் ஹோஸ்ப்பிட்டல் போயாச்சு.. அம்மா இப்போ தாத்தா கூடத்தான் இருக்காங்க.. டாக்டர் ஒரு ரெண்டு மூனு நாளைக்கு தாத்தாவே அங்கைய ஸ்டேய் பண்ணே சொல்லிட்டாரு.. சரண் பினாங் வரைக்கு போயிருக்கான் தாத்தா போக வேண்டிய ஒரு கல்யாணத்துக்கு..''

என்ற விரனோ வாக்கியங்களை ஜி.வி.எம் போல சுருக்கி சொல்ல,

''சரி வாங்க கிளம்பலாம்.. தாத்தாவே போய் ஒரு எட்டு பார்த்திடலாம்..''

''உனக்கு நிஜமாவே ஓகே வா..''

என்றவனோ அவளோடு சேர்ந்து படியிறங்கியவாறே வினவ,

''என்னே நீங்க வயசானவங்க அப்படித்தான் பேசுவாங்கே அதுக்காக அவுங்க இப்படி உடம்பு முடியாமே இருக்கும் போது நாமே வீம்பு புடிக்கறது எந்த விதத்துலே நியாயம்..''

''பாருடா.. நீயா பேசறே..''

என்றவனோ வியப்பான நக்கலோடு சின்ன டிக்கியின் கையில் ஹெல்மட்டை கொடுக்க,

''ஆமா.. நானேதான்!! நீங்க படிச்சா அதே ஆத்தரோட புக்ஸ்தான் நானும் படிச்சேன்.. ஆனா சொந்தக்கதை சோகக்கதை இல்லே.. எல்லாம் நாவல்ஸ்..''

என்றவளோ குட்டி குஞ்சனின் முகத்தை சைட் கண்ணாடியில் பார்த்து உதடு குவித்து முத்தமிட,

''அப்படி என்னே கதை படிச்சிங்க மேடம்..''

''இருள் திருடும் திகழா..''

என்றவளோ புருஷனை காற்று புகா வண்ணம் கட்டிக்கொள்ள,

''வேணாண்டி.. அந்த திகழ் ரொம்ப தப்பானவன்..''

''தப்பு பண்றதுனாலதான் அவன் ஹீரோ.. வேணுன்னா நீ சொல்லு திரிலோ அண்ணிகிட்டே குட்டி குஞ்சன் கதையே..''

''ஏன் அந்த மேமு அதை எழுதி புக்கு போடவா..''

''அப்போவாவது நீ என்னே போடுவல்லே..''

என்றவளோ முகிழ்நகை கொண்டு திரும்பிய விரனின் நாசியில் வைத்தாள் முத்தமொன்றை விரக தாபம் ஏக்கங்கொண்டு நிற்க.

உயிர் துஞ்சிடுவான் விரன்...


முந்தைய அத்தியாயங்களை படிக்க:

https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/
 

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 31
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: Jai
Top