What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
414
அத்தியாயம் 34

விரன் சிங் நாடு விட்டு நாடு போய் சரியாக ஒரு வாரம் கடந்திருந்தது.

ஆணவன் போகும் போது சும்மா இருக்க முடியாது பேதைக்கு சுகம் காட்டி போக பாவம் சின்ன டிக்கியவள் அனுதினமும் குட்டி குஞ்சனின் லீலைக்காய் ஏங்கினாள்.

ஆணவனோ பொஞ்சாதியின் நிலையறிந்து தினம் ராத்திரி அவளோடு போனில் அளவளாவி அம்மணியின் ஆசையை தீர்த்தான்.

ஆனால், சின்ன டிக்கியவள் எவ்வளவோ கேட்டும் வீடியோ அழைப்பில் மட்டும் வெட் கோல் மெயிண்டன் செய்திட தவிர்த்து விட்டான். கேமரா முன் நிழலிகா ஆடைகள் கலைவதை ஆணவன் விரும்பவில்லை.

அதுவும் நவநாகரீகமான இக்காலத்தில் எது எப்போது எங்கிருந்து களவாடப்படும் என்று தெரியாது. அதுவும் மறைக்கப்பட்ட ரகசியங்கள் என்று சொல்லப்படும் எதுவாகினும் தோண்டியெடுக்கப்படும் அவலமே இக்காலத்தின் சாபமாகும்.

ஆகவே, நிழலிகா எப்படி மன்றாடினாலும் எவ்வளவு போதையேற்றி ஆசை வார்த்தை கொண்டாலும் அழைப்பதை துண்டித்தானே ஒழிய சின்ன டிக்கியின் பிளானுக்கு துளியும் அசைந்து கொடுத்து சிக்கிடவில்லை புருஷனவன்.

கோபித்துக் கொண்ட அம்மணி ஒரு வாரம் முகத்தை கூட தூக்கி வைத்துக் கொண்டாள். வாரம் ரெண்டாகி போனது.

அப்போதும் விரன் அம்மாவிற்கு போனை போட்டு குசலம் விசாரித்தானே ஒழிய சமாதானம் செய்ய கொஞ்சமும் முனையவில்லை சின்ன டிக்கியை.

விரனுக்கு தெரியும் அவன் கொஞ்சம் இறங்கி வந்தால் மேம் அவன் தலையில் ஏறி உட்கார்ந்து மிளகாய் அரைத்திட பார்ப்பாளென்று. சோ, ஸ்ட்ரிக்லி நோ காம்பிரமாய்ஸ் என்று அவன் பிழைப்பில் கவனத்தை செலுத்தினான் ஊர் விட்டு ஊர் போனவன்.

இப்படியான சூழ்நிலையில் தான் மருமகளும் மாமியாரும் நெருக்கமாகி போனார்கள். தாத்தாவும் சில நாட்களில் கொஞ்ச கொஞ்சமாய் பேச ஆரம்பித்து பின் நிழலிகாவோடு நல்லுறவை மெயிண்டன் செய்துக் கொண்டார்.

சரண் முழு நேர படிப்பில் வெளியூர் போக தாத்தாவின் வட்டி பிஸ்னல் கொடுக்கல் வாங்கல் எல்லாம் புதிதாய் பணிக்கு அமர்த்தப்பட்ட அஜயின் கையில் கொடுக்கப்பட்டது.

நாட்கள் உருண்டோட மகளவளை தேடி புகுந்த வீடு வந்தார் நேசமணி சொத்து விவகாரம் பேச. முன்னரே பெத்தவர் சொல்லியிருக்க பணப்பேய் குடும்பம் அழைத்தால் ஒழிய போகலாம் என்றெண்ணி அம்மேட்டரை மேடம் சின்ன டிக்கி கிடப்பில் போட்டிருந்தாள்.

ஆகவே, விரன் இல்லா இச்சமயமென்று சொத்துக்கு அலையும் குடும்பம் நேசமணியை போனில் காய்ச்சியெடுக்க கோபம் கொண்டவரோ இன்றைக்கு எப்படியாவது இச்சிக்கலுக்கு ஒரு முற்று புள்ளி வைத்தே ஆகா வேண்டுமென்ற எண்ணத்தோடு மகளை தங்கை வீட்டுக்கு அழைத்து போக சம்பந்தி வீடு வரை வந்து சேர்ந்திருந்தார்.

மாமியாரோ கல்யாணத்துக்கு போயிருக்க, தாத்தாவோ உடம்பு சுகவீனத்தில் ஓய்வெடுத்திருக்க; சரண் கூட மனையிலில்லா நேரம் பார்த்து எப்படி எல்லாவற்றையும் கிடப்பில் போட்டு அப்பாவோடு கிளம்பி போவதென்று குழம்பியிருந்தவளுக்கு உதவினான் அஜய்.

நிழலிகாவிற்கு பதில் நேசமணியோடு கிளம்பி போனான் அஜய் சொத்துக்கு அடித்துக் கொள்ளும் குடும்பத்தை ஒரு வழியாக்க. சட்டபூர்வமாய் அவர்களை மிரட்டி நிழலிகாவிற்கு சேர வேண்டிய சொத்தை கொடுக்க முடியாதென்ற சவாலோடு திரும்பி வந்தான்.

நேசமணிக்கோ கூட்டி போனவனின் செயலில் கொஞ்சமும் திருப்தியில்லை. நிழலிகாவிற்கு கூட சொத்து மெட்டரில் அஜயின் நடவடிக்கை பிடிக்கவில்லை. ஆனால், பணியாளன் அவனோ ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டான் எல்லாம் விரனின் இன்ஸ்ட்ரக்ஷன் என்று.

அத்தாட்சிக்கு விரன் அவனுக்கு அனுப்பிய வாட்ஸ் ஆப் வாய்ஸ் நோட்டை அப்பா மகள் இருவரும் கேட்க வரவேற்பறையில் ஆடவனவன் ஒலிக்க விட, அப்போதுதான் சின்ன டிக்கியவளுக்கு ஞாபகம் வந்தது மேலறையில் முதலில் விரனை இது சம்பந்தமாய் தொடர்புக் கொண்டு பின் அவன் போனை எடுக்காது போக வல்லபியவள் வாட்ஸ் ஆப் அனுப்பிய சங்கதி.

மேல் மாடி ஓடிப்போய் போனை எடுத்து பார்த்தவளுக்கோ விழிகள் விரிந்தன விரனின் முப்பத்தி மூன்று மிஸ்ட்டு கோல்களில்.

குலியவளுக்கு போனை போட்டு அவளை பிடிக்க முடியாது போன விரனோ மாமனாருக்கு போனை போட, மகளுக்கு தப்பாத அப்பா போல் அவரும் போனை எடுக்கவில்லை. பின்குறிப்பு, நேசமணியின் போன் இன் சைலண்ட் மோட்.

கடுப்பாகியவன் வேறு வழியின்றி அஜய்க்கு அழைத்து தகவலை சொல்லி நிழலிகாவிற்கு உதவிட பணித்தான். அவன் சொல்லியே அஜய் போன இடத்தில் அவர்களை ஒரு கை பார்த்து வந்திருந்தான்.

மருமகனே சொத்து பிரச்சனைக்கு ஒரு தீர்வை கண்டிருக்க நேசமணிக்கோ இதற்கு மேல் பயமில்லை என்பது போல் ஆகிப்போனது.

நிழலிகாவும் கணவனவன் என்ன செய்தாலும் அதில் நிச்சயம் நியாயமிருக்கும் என்றெண்ணி அவ்விடயத்தில் மூக்கை நுழைக்க இனி அவசியமில்லையென்று அமைதி கொண்டாள்.

உயிர் துஞ்சிடுவான் விரன்...

முந்தைய அத்தியாயங்களை படிக்க:


https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/
 

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 34
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top