- Joined
- Jul 10, 2024
- Messages
- 414
அத்தியாயம் 36
புருஷன் அடித்து போன கூத்தில் சிரித்து மாளாதவளோ அதற்கு பிறகான நித்திரைக்கு வழியில்லை என்றறிந்து நேராய் சென்று நுழைந்தாள் வாஷ் ரூமுக்குள்.
குளித்து முடித்தவளாய் நேராய் விரைந்தாள் விரனின் ஜிம் நோக்கி நாயகியவள் அவனை வம்பு பண்ண நிந்தித்து.
வழக்கமாய் அதிகாலை வேளை யாரும் அவ்வளவாய் ஜிம்மில் இருந்திட மாட்டார்கள். அதுவும் வீக்கெண்ட்சில் மதியத்திற்கு மேலேயே கூட்டம் கூடும்.
சின்ன டிக்கியவள் ஜிம்மின் கதவை திறந்து உள்ளே நுழைய மணி சரியாக ஆறு. வீட்டோடு தங்கி வேலை பார்த்திடும் இந்தோனேசிய பணிப்பெண்ணிடம் விரனின் வீர விளையாட்டை கொஞ்சம் கிளீன் செய்ய சொல்லிவிட்டே வந்திருந்தாள் நிழலிகா அவள்.
''வாங்க! வாங்க! அப்பறம் என்னே கதை.. காஜூ கட்லி திருடலாம்னு வந்திங்களா..''
என்றவனோ தூரத்திலிருந்து அவளை பார்த்த வண்ணம் பழசை கிளறி நக்கல் செய்ய,
''ஆமா.. நாலு சுவத்துக்குள்ளே சாப்பிடலாம்னு நினைச்சேன்.. நடக்கலே.. அதான்.. நேரா கிளம்பி ஜிம்முக்கு வந்துட்டேன்..''
என்றவளோ அவன் முன் ஒரு சுற்று சுற்றி காண்பித்தாள் அணிந்திருந்த புதிய அனார்கலி உடையை.
''ஏய்.. இது அந்த சரண் பிரெண்ட்டோட அம்மாகிட்டே வாங்கினதுதானே..''
என்றவனோ கார்டியோ சைக்கலிங் பைக்கை ஓட்டியப்படியே வஞ்சியவளை ரசித்து வினவ,
''ஹ்ம்ம்.. நல்லாருக்கா..''
''சூப்பரா இருக்கு.. ஆனா.. இதைவிட இன்னும் சூப்பரான ட்ரஸ் ஒன்னு என்கிட்டே இருக்கு.. வெயிட்..''
என்றவனோ துணைவியவளை தனியே கழட்டி விட்டு ஸ்டாப் அறைக்குள் நுழைந்து பின் சில வினாடிகளில் வெளிவந்தான்.
''இந்தா புடி..''
என்றவனோ நீட்டினான் பையொன்றை உல்லியிடத்தில்.
''என்னதிது..''
என்றவளோ அதை பிரித்து கையிலெடுத்து உதறி முகம் கோண பார்த்தாள் ஒரு ஜோடி ஆடையை.
''நல்லா பார்த்துட்டியா.. இதைத்தான் இனி நீ தினங்காலையிலே போட்டுக்கிட்டு வந்து இந்த ஜிம்மே கூட்டி பெருக்கி சுத்தம் பண்ணணும்..''
என்றவனோ சொல்ல நகைப்பை மறைத்து,
''என்ன கன்றாவிடா இது குட்டி குஞ்சா! கரக்காட்டே கனகா ட்ரஸ் மாதிரி இருக்கு! இதைப்போய் என்னே போடறே சொல்றே! குனிஞ்சா பின்னாலே தெரியும் நிமிந்தா முன்னாலே தெரியும்! எனக்கு இது வேணாம்பா!''
என்றவளோ நிஜமாலுமே கரகாட்டத்துக்கான அளவிலிருந்த உடைகளை ஊடையவள் மேனியில் வைத்து பார்த்து சொல்ல,
''அந்த பேச்செல்லாம் நீ பேசாதே! நான் சொல்றதே செய்யறது மட்டுந்தான் உன் வேலே!''
''அடேய்!! என்னே விளையாடறியா!! இதெல்லாம் என்னாலே போட முடியாது! உனக்கென்னே இந்த ஜிம்மே கிளீன் பண்ணணும் அவ்ளோதானே குட்டி குஞ்சா.. நான் பண்ணி தறேன்.. கவலையே விடு..''
என்றவளோ அங்கிருந்து நகர்ந்து துடைப்பத்தை கையிலெடுக்க பார்க்க,
''எப்படியிருந்தாலும் நீதான் பன்ணணும் சின்ன டிக்கி.. ஆனா.. இந்த ட்ரஸை போட்டுக்கிட்டுதான் பண்ணணும்..''
என்றவனோ பெண்டு அவள் மார்பில் மிக உரிமையோடு பதித்தான் கையிலிருந்த ஆடையை.
''போடா டேய்!! என்னாலலாம் இது முடியாது!''
என்றவளோ ஜிம்மை பெருக்கிட ஆரம்பிக்க,
''அப்போ சரி.. இனி எப்போதுமே உன் மேலே எனக்கிருக்கறே கோபம் போகாது! நமக்கு மேட்டரும் நடக்காது! நீ இது எதையுமே ஒரு விஷயமா எடுத்துக்கவும் கூடாது! ஓகே!''
என்றவனோ குட்டி டவலால் சின்ன டிக்கியின் பிட்டத்தை அடிக்க,
''என்னடா இது உன்னோட ஒரே ரோதனையா போச்சு.. அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்! கழட்டி போட்டே நின்னுட்டேன் உனக்கு தூக்கி நிக்கறே மாதிரி அப்பறமும் ஏன்டா குட்டி குஞ்சா இந்த அரை இன்ச் துணியவே புடிச்சுக்கிட்டு தொங்கறே!''
என்றவளோ தரையில் காலுதைத்து உதட்டை பிதுக்க,
''அவிரன் சிங் பத்தினியே.. முழுசா பாக்கறதுலே என்னடி இருக்கு.. அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் மறைப்பா ஒளிஞ்சிருக்கறதே பாக்கறதுலதாண்டி தனி கிக்கே இருக்கு..''
என்றவனோ செல்ல சுந்தரியின் இருப்பக்க தோள்களிலும் கைகளை தொங்கப்போட்டு அவளை பின்னோக்கி படர்ந்த சாளரத்தில் சாய்க்க,
''நிஜமாவே நான் இதை போட்டாத்தான் உன் கோபம் குறையுமாடா குட்டி குஞ்சா..''
என்றவளோ அவனை அப்பாவியான பார்வை பார்க்க,
''போட்டா கொஞ்சம்.. இதை போட்டுக்கிட்டு குனிஞ்சு நிமிந்து வேலை பார்த்தா கொஞ்சம்.. அப்படியே படிப்படியா முழுசா குறைஞ்சிடும்..''
என்றவனின் எதார்த்தமான நெருக்கத்தில் நெருப்பாய் கொதித்தாள் கோமகளவள்.
முதல் முறை இருவருக்கும் இப்படியான உளவியல் மாற்றம்.
விரனின் பார்வைகள் அவனை செல்ல சிணுங்களுடன் கூடிய நாணத்தோடு ஏறெடுத்திருந்தவளின் முகபாவனைகளை உன்னிப்பாய் கவனித்து ரசித்தது.
அம்மணியின் அங்கங்களோ எல்லாம் ஆளனின் பார்வையில் மலர்ந்து விரிந்தன. குத்தீட்டியாய் விம்மிய வல்லபியின் கிண்ணென்ற மொட்டுகள் ஆடையில் அப்பட்டமாய் தெரிய புடைத்து நின்றது விரனின் புஜங்கள் செவிகள் சிவந்து உடல் முறுக்கேற.
''என்னங்க..''
என்றவளோ அடிக்குரல் கொள்ள,
''ஹுஹும்.. அத்தான் கூப்பிடு..''
என்றவனோ மணவாட்டியின் உச்சி வகிட்டோரம் அலைகலைத்திருந்த குங்குமத்தை விரல்களால் தூசி தட்ட,
''நகருங்கள் அத்தான் நான் செல்ல வேண்டும்!''
என்றவளோ அவனை விலகி ஓடினாள் சத்தமாய் சிரித்து பதமினியாட்டம் பேசி.
''மாத்திட்டு வாடி அப்பறம் வெச்சிக்கறேன்!''
என்ற விரனோ வெட்கப்புன்னகை கொண்டான்.
உயிர் துஞ்சிடுவான் விரன்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 36
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.