- Joined
- Jul 10, 2024
- Messages
- 414
அத்தியாயம் 37
பழசில் உழன்று சுகங்கண்டிருந்த நிழலிகாவின் மேனியோ தகித்து தண்ணீரை தரையிறக்கியிருந்தது.
சோர்ந்து போனவள் தலையணைகளில் வெட்கம் ஒளிக்க, தடைப்பட்டு போனது தாட்டியவளின் தணல் வேட்கை வெளியில் கேட்ட ரேக்காவின் குரலால்.
தளர்ந்திருந்தவள் நிலையை சமன் செய்துக் கொண்டாள். முகங்கழுவி வாஷ் ரூம் போனவள் பின்னர் கீழ்தளம் நோக்க மாமியாரோ குண்டை தூக்கி மருமகளின் தலையில் போட்டார்.
''வாமா.. வா.. ஐயா.. இதுதான் விரன் வைஃப். இனிமேல் இந்த வீட்டுலே எல்லாமே இவதான்..''
என்றவாறு அறிமுகப்படுத்தினார் வந்திருந்த குருக்களிடம் ரேக்கா மகனின் பொஞ்சாதியை.
புரியாது விழித்தவள் சிரித்தே வைத்தாள் வஞ்சியின் குழப்ப முகம் வந்திருந்தோர் உணராது.
''நல்லது நல்லது.. ரொம்ப நல்லதுமா.. தீர்க்காசியா இருமா..''
என்றவரோ குட்டி குஞ்சனின் காதல் மணவாட்டியை ஆசிர்வதித்து பேச்சை தொடர்ந்தார்.
''ரேக்காமா.. அப்போ துர்கா பூஜையே உங்க மருமகளே வெச்சே ஆரம்பிச்சிடலாம் தானே..''
''கண்டிப்பா ஐயா.. எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லே.. என்னகப்பறம் இந்த வீட்டுக்கு நிழலிக்காதானே எல்லாமே..''
என்ற விரனின் மம்மியோ வாஞ்சையாய் சின்ன டிக்கியின் தலையை தடவ அப்போதுதான் உணர்ந்தாள் விறலியவள் செப்டெம்பர் மாதம் தொடங்கியிருந்த சங்கதியை.
தயங்கினாள் மாதவள் தைப்பூச அனுபவம் கண் முன் வந்து போக.
''வேண்டாம் அத்தே.. எதுக்கு இப்போ நான் இதுலே முதல் ஆளா.. அதான் நீங்க இருக்கிங்களே..''
என்றவளோ கைகளை பிசைய,
''நீ ஏன் இப்படி சொல்றன்னு எனக்கு புரியுது நிழலிகா.. அந்த நெருடல் உன் மனசுலருந்து போகணுங்கறதுக்காகத்தான் இந்த பொறுப்பே உன்கிட்டே நான் ஒப்படைக்கிறேன்மா..''
என்றவறே நம்பிக்கையோடு சின்ன டிக்கியின் கைகளை பிடித்திட,
''பயமா இருக்கு அத்தே.. எங்கே அன்னைக்கு மாதிரி நவராத்திரி அப்பவும் ஏதாவது..''
என்று ஆரம்பித்த வாக்கியத்தைக் கூட சொல்ல நிழலிகா அச்சங்கொள்ள,
''அதெல்லாம் ஒன்னும் ஆகாது.. நான் இருக்கேன்.. ஐயா இருக்காரு.. அப்பறம் என்னே பயம்.. ஹான்.. நல்லப்படியா கொலு வெச்சு நவராத்திரியே சிறப்பா கொண்டாடிடலாம் நிழலிகா..''
என்றவறோ சமாதானப்படுத்தி ஒருவழியாய் குட்டி குஞ்சனின் மணவாளியின் வதனத்தில் வனப்பை மலர விட்டார்.
பிறகென்னே, மேடம் அத்தைக்கு ஒத்தாசையாய் மனையை அடித்து துவைத்து காயப்போட்டு பூஜைகளில் ஈடுப்பட வேண்டிய சூழ்நிலை கைதியாகி போனாள்.
தலையோடு தண்ணீர் ஊற்றிக் கொண்டு காஜிக்கு ஒரு எண்ட் கார்டு போட்ட அம்மணியோ பூஜையில் லயித்து சாம்பிராணி கொண்ட பூஜை தட்டோடு முன் வாசல் போக, வந்து நின்றான் புருஷனவன் இன்ப அதிர்ச்சியாய் அருணியவள் கண் முன்னாடி.
சந்தோஷத்தில் குதிக்க நினைத்தவள் கையில் கொண்ட பூஜை தட்டிலிருந்த திருநீறு கீற்றை மட்டும் மிருணாலியாய் மலர்ந்து கணவனின் நிடலத்தில் பதித்தாள் பக்தி பரவசம் பிரிவின் தாக்கத்தினை தள்ளி நிறுத்த.
''உன்னே ரொம்ப மிஸ் பண்ணேண்டி சின்ன டிக்கி!''
என்றவனோ பக்தி மானவள் இடையை அவன் நோக்கி இழுத்து உடும்பு புடியொன்றை புடிக்க,
''ஐயோ! விடுங்க! விடுங்க விரன்!''
என்றவளோ கையில் தட்டோட கரகாட்டம் கொள்ள,
''விடத்தான் ஓடோடி வந்திருக்கேன்டி என் சின்ன டிக்கி!''
என்றவனோ சொல்லிய வார்த்தை வேகத்தை வல்லபியின் இதழ்களை கவ்வி உரைக்க,
''கடவுளே! விரன்!''
என்றவளோ கள்ளியாய் முத்தியை வாங்கிக் கொண்ட பிறகே அவனை கோபித்து முகமாய் முறைத்துக் கொண்டு நின்றாள்.
''என்னடி.. இங்க வேணவா.. நாலு சுவருதான் வேணுமா! சரி வா.. இந்த பூஜை ஐட்டத்தையெல்லாம் கொண்டு போய் சாமி மேடையிலே வெச்சிட்டு.. நாமே நேரா அப்படியே நம்ப ரூமுக்கு விசிட் அடிச்சிடுவோம்!''
என்றவனோ குலியவளின் இட்லி கன்னமொன்றை விரலால் பீய்த்து தின்னும் சைகை கொண்டு முறுவலித்தப்படி யுவதியவள் தோளில் கரங்களை மாலையாக்க,
''வாய்ப்பில்லே ராஜா! வாய்ப்பில்லே! இது செப்டெம்பர் மாசமில்லையோ.. சோ.. நாவராத்திரி கொலு.. நாந்தான் முன்னே நின்னு எல்லாத்தையும் பண்ணணுங்கறது அத்தையோட செல்லமான ஆர்டர்..''
என்றவளோ சொல்லி நகைக்க,
''என்னடி சொல்றே.. போறப்பத்தான் முருகன் ஆப்படிச்சான்னு பார்த்தா.. இப்போ அவன் ஆத்தாளுமா!''
என்றவனோ ஏமாற்றத்தோடு கூடிய ஏக்கங்கொள்ள,
''வேறே வழியே இல்லடா புருஷா.. இந்த மாசம் முழுக்க நீங்க பக்கத்து ரூம்தான்.. நான் நம்ப ரூம்தான்!''
என்றவளோ சோகமாகி போன விரனின் கேசத்தை கலைத்து சிரிக்க,
''அட போடி! உன்னே போடறதுக்கு இப்படி காத்திருக்கறதுக்கு பதிலா நான் ஐயப்பனுக்கே மாலை போட்டிருக்கலாம் போலே!!''
என்றவனோ சலிப்பை செயலில் காட்டினான் பெண்ணவளை விலகி மனைக்குள் நுழைந்து.
உயிர் துஞ்சிடுவான் விரன்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 37
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.