What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
414
அத்தியாயம் 38

ஊருக்கே டிமிக்கி கொடுத்து ஓடோடி வந்த விரனுக்கு நவராத்திரி அடித்த ஆப்புதான் அன்றைய ஆண்டின் தலை சிறந்த நெத்தியடியாக இருந்தது.

ஆசையாக வந்தவன் கடைசியில் இனிப்பை கையளவில் கூட தொட்டு பார்த்திட முடியா துரதிஷ்டனாகி போனான்.

எப்படியோ பல்லை கடித்துக் கொண்டு தாக்கு பிடித்திட நினைத்தவனால் ஒரு வாரம் கூட சும்மா இருக்க முடியவில்லை.

இதில் ரேக்காவோடு சண்டை வேறு கொண்டு முகங்காண்பிக்க ஆரம்பித்தான் தாயாரவர் பொறுப்புகளை பொஞ்சாதியின் தலையில் கட்டியிருக்க.

அவிரனின் ஆத்திரத்திற்கு சின்ன டிக்கியொன்றும் விதிவிலக்கல்ல. அவளையும் புல்டாக் (bulldog) போல குதறிக் கொண்டுதான் இருந்தான் வார்த்தைகள் கொண்ட செயல்களால்.

''அதான் நானே போட்டுக்கறேன்னு சொல்றேன்லே! அப்பறம் என்னே இன்னமும் இங்கையே நின்னுக்கிட்டு இருக்கே! போ! போய் உன் சாமியவே கட்டிக்கிட்டு அழு!''

என்றவனோ எரிச்சலோடு காலையிலேயே நிழலிகாவின் விழிகளை கலங்கிட வைக்க,

''விரன்!''

என்ற ஓங்கிய குரலோடு மகனை நோக்கி வந்தார் ரேக்கா.

''அத்தே நான் அவருக்கு பரிமாறிட்டு வந்துடறேன். நீங்க பூவே நேரா பூஜை ரூமுக்கு கொண்டு போயிடுங்க.''

என்றவளோ துளிர்த்த மிழி நீரை பட்டென விரல்களால் காணாக்கி விரனின் தட்டில் புதினா சட்னியை வைக்க,

''அதான் எனக்கு வேணாங்கறேன்லே!''

என்றவனோ அவன் தோசை தட்டில் சட்டினியை ஊற்றியவளின் கையிலிருந்த கரண்டியை பிடிங்கி தூரப்போட்டான் அவனின் அதிருப்தியை வெளிக்கொணர்ந்து.

''விரன்! என்னடா பிரச்சனை உனக்கு! ஏன் இப்போ கிறுக்கன் மாதிரி நடந்துக்கறே! நீ வந்த நாளிலிருந்து நானும் பாக்கறேன் சிடுசிடுன்னே இருக்கே!! காரணமே இல்லாமே எரிஞ்சு விழறே! என்னதான்டா ஆச்சு உனக்கு!''

அம்மாவின் அதட்டல் ஒன்றும் பையனை வாய் மூடிட வைக்கவில்லை. மாறாய், தொனியை மட்டும் மைல்டாக்கி பேச வைத்தது.

''ஆமா! கடுப்பே வேறெப்படி காமிக்கறதுன்னு தெரியலே! அதான் இப்படி பைத்தியக்காரன் மாதிரி நடந்துக்கறேன் போதுமா!''

என்றவனோ சட்னி அடுக்கை மொத்தமாய் அவன் தட்டில் கவிழ்த்து தோசையை வேண்டா வெறுப்பாய் அதில் தொட்டு வாயுக்குள் திணித்துக் கொண்டான்.

''விரன்! இப்படியே பண்ணிக்கிட்டிருந்தே வளர்ந்தவன்னு கூட பார்க்க மாட்டேன் செவில்லையே ரெண்டு விட்ருவேன் சொல்லிட்டேன்!''

என்ற ரேக்காவோ கதங்கொண்டு மகனின் கரத்தை அழுத்தமாய் பற்ற,

''என் பொண்டாட்டிக்கிட்டே இந்த நவராத்தி வேலையே கொடுக்கறதுக்கு முன்னாடி என்கிட்டே நீங்க ஒரு வார்த்தை கேட்டிருந்தா இந்த பிரச்சனையே வந்திருக்காதுமா!''

என்றவனின் குரலோ ஆவேசங்கொண்டு அடங்கியது ஆணவனின் கால்கள் தன்னிச்சையாய் வாஷ் பேஷன் நோக்க.

''என்னடா இதெல்லாம் ஒரு பிரச்சனையா! நான் உன் பொண்டாட்டிக்கு எந்த வேலையும் கொடுக்க கூடாதா! ஏன் அவே செய்ய மாட்டாளா இல்லே உன்கிட்டே வந்துதான் நான் கொடுமே படுத்துறேன்னு கம்பளைண்ட் பண்ணாளா! சொல்லுடா!''

என்ற ரேக்காவோ வாய் கொப்பளித்துக் கொண்டிருந்த மகனின் முழங்கையை உலுக்க,

''அதெல்லாம் ஒரு மண்ணும் கிடையாது! அவளுக்கு அப்படி பண்ணவும் தெரியாது! நான் கேட்டது என்னே கேட்காமே ஏன் அவளே நீங்க பூஜையிலே உட்காரே வெச்சிங்கன்னுதான்! அதுக்கு உங்கக்கிட்டே நான் கூலாகறே மாதிரியான பதிலேதும் இருந்தா சொல்லுங்கம்மா..''

''டேய்! என்னடா இது உன்னோட வம்பா போச்சு! நான் என்னே நிழலிகாவே உன் ஜிம்மையா டெக் ஓவர் பண்ணே சொன்னேன்? இந்த வருஷ நவராத்திரி பூஜைகளை தானே அவளே பார்த்துக்க சொன்னேன்! இதுலே என்னடா குறையே கண்டே நீ! இதுக்கு எதுக்குடா உன்னோட பர்மிஷன் எனக்கு!''

என்ற மம்மியோ கைகளை அலம்பிக் கொண்டு காது கேளாதவனாய் வரவேற்பறை நோக்கி பைக் சாவியை கையிலெடுத்தவனை பின் தொடர,

''நில்லுங்க!''

என்ற சத்தத்தோடு சின்ன டிக்கியோ வந்து சேர்ந்தாள் இறுதியாய் முதலில் கரண்டி வீசியெறியப்பட்ட நேரத்தில் அழுகையை கட்டுப்படுத்திட முடியாது அங்கிருந்து ஓடிப்போய் திரும்பவும் இப்போது.

''என்னே!''

என்றவனோ நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நிற்க முகத்தில் எள்ளும் கல்லும் வெடிக்கும் தோரணையில்,

''வாங்க!''

என்ற நாச்சியவளோ தரதரவென்று இழுத்து போனாள் விரனை பூஜையறை நோக்கி.

''ஏய்! என்னடி பண்றே! கையே விடு! நான் எங்கையும் வரலே! சத்தியமும் பண்ணலே!கையே விட்றி!''

என்றவனோ குலியவளின் பிடியை பலங்கொண்டு உதறி தள்ளிட,

''விரன் இப்போ மட்டும் நீங்க என் கூட வரலே சத்தியமா சொல்றேன் நான் சாகர வரைக்கும் உங்கக்கிட்டே பேசவே மாட்டேன்!''

என்றவளோ மூச்சு வாங்கி கட்டியவனை முறைக்க,

''அப்படியே வெச்சேன்னா ஒன்னு தெரியும்! பேச்சே பாரு!''

என்றவனோ அடிக்க கையை ஓங்கி நிறுத்த ஆத்திரங்கொண்டு,

''விரன்!''

என்ற மம்மியோ அடிக்கடி ஸ்பீக்கரை விழுங்கிய ஆத்தாவாய் மாறிப்போனார்.

நிழலிகாவோ புருஷனை அம்பகங்களால் ஆட்டி படைத்து மீண்டும் பற்றியிழுத்து போனாள் போக வேண்டிய டெஸ்டினேஷனுக்கு.

''அழிக்காதீங்க!''

என்றவளோ திட்டிகளை உருட்டி விரனின் செயலை தடுத்தாள் தாரமவள் போட்ட திருநீறு பட்டையை ஆணவன் அழிக்க முயற்சிக்க.

''எல்லாம் என் தலையெழுத்து!''

என்ற சலிப்போடு கூடிய அமரிஷணத்தோடு திரும்பிக் கொண்ட அவிரன் சிங்கின் கந்தரத்தில்,

''ஓம் நமச்சிவாய!''

என்ற நாமத்தை சொல்லி அணிவித்தாள் நிழலிகா அவனின் ருத்ராக்ஷ மாலையை.

''ஏய்! என்னடி பண்றே!''

என்றவனோ அதை கழட்டிட போக பொத்துக்கொண்டு வந்த கோபத்தோடு,

''வேணாம் தம்பி கழட்டாதிங்க!''

என்ற பூசாரியோ குறுக்கிட்டு விரனின் தலையில் கையை வைத்து மந்திரம் ஓதினார் நிலைமை புரியாது.

பல்லை கடித்துக் கொண்ட நின்றவனோ விலோசனங்களாலேயே குத்தி கொன்றான் சின்ன டிக்கியவளை பெரியவரை தடுத்திட இயலாது.

''நீங்களும் இவுங்க கூட சேர்ந்து இந்த மாசம் முழுக்க அம்மாவே நினைச்சு சுத்தபத்தமா இருந்து சைவம் சாப்பிட்டு பூஜையிலே ஒரு மனசா கலந்துக்கோங்க தம்பி. எல்லாம் நல்லப்படியா நடக்கும்.''

என்றவர் முடிக்கவும் சினத்தை அடக்கிய சிங்கமாய் வெறியோடு அங்கிருந்து வெளியேறினான் விரன் அனைவரையும் இடித்து தள்ளிய வேகத்தோடு.

கவ்லி உச்சுக்கொட்ட ஆணவனின் மார் சேர்ந்திருந்த ருத்ராட்ச மாலையோ தற்சமயத்திற்கு காப்பாற்றியிருந்தது சின்ன டிக்கியின் குட்டி குஞ்சனை சனியின் பிடியிலிருந்து.

உயிர் துஞ்சிடுவான் விரன்...

முந்தைய அத்தியாயங்களை படிக்க:


https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/
 

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 38
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: Jai
Top