- Joined
- Jul 10, 2024
- Messages
- 414
அத்தியாயம் 39
மார்கழி காத்ததென்னவோ புரட்டாசியில் அடிக்க, பாவம் விரன் மட்டும் கழுத்தில் மாலை கொண்டு பஞ்சணை தேவியை மரக்கட்டையாய் தழுவிக் கிடந்தான் கூட வேண்டிய பத்தினியோ பக்கத்து அறைக்கு வாக்கப்பட்டிருக்க.
முதல் மூன்று நாட்களுக்கு முரண்டு பிடித்த மனசை அடுத்து வந்த நாட்களில் இழுத்து பிடித்து சமன் செய்த விரனோ காஜியை துரத்தி பக்தியில் மூழ்கி போனான்.
அவ்வப்போது சின்ன டிக்கியிடம் எரிந்து விழுந்தாலும் மற்ற நேரங்களில் வெறுமனே அவளை ஏற இறங்க பார்த்து பதற வைத்தான்.
மகனின் கோபம் முதலில் புரியாது போக பின்னர் உணர்ந்து கொண்டார் தாயவர் ஒவ்வொரு முறையும் அவனறை தலையணைகள் தரையில் பறந்து கிடக்க.
தோளுக்கு மேல் வளர்ந்து கல்யாணமும் ஆகிப்போனவனிடம் என்னத்த சொல்லி எப்படி ஆரம்பிப்பதென்று தெரியாத அன்னையோ மருமகளிடம் மனசின் பாரத்தை இறக்கி வைத்து மன்னிப்பும் கேட்டார்.
''நிஜமாவே நான் யோசிக்கலமா.. இல்லன்னா கண்டிப்பா இந்த பொறுப்பே உன்கிட்டே கொடுத்திருக்க மாட்டேன்.. ரெண்டு பேரையும் ஹனி மூன் அனுப்பி வெச்சிருப்பேன்..''
''ஐயோ அத்தே! விடுங்க! என்னே நீங்க ஒன்னுமில்லாத விஷயத்துக்கு போய் இவ்ளோ வருத்தப்பட்டுக்கிட்டு கிடக்கறிங்க. இன்னும் ஒரு பத்து நாள்தான். அதுவரைக்கும் அவருக்கு பொறுக்க முடியாதா என்னே. ஆறு மாசம் நான் தனியாதானே கிடந்தேன். இப்போ அவருக்கு மட்டும் என்னவாம் இருக்கட்டும். ஒன்னும் ஆகிடாது!''
என்றவளோ கிண்டலாய் சொல்லி நகைக்க,
''அடிப்பாவி! பெத்தவக்கிட்டையே பையனே பழி வாங்கறதே எவ்ளோ நாசூக்கா சொல்றே நீ!''
என்ற மாமியாரோ அவளோடு சேர்ந்து சிரிக்க அடுக்களையோ காதுகளை பொத்தி கொண்டது அவர்களின் அலப்பறையில்.
நாட்கள் உருண்டோடிட நாவாரத்தி நாட்களின் ஒவ்வொரு நாள் பூஜைகளும் சிறப்பாய் நடந்தேறி முடிந்தன. மாதத்தின் கடைசி நாளை பக்தியோடும் மனநிறைவேடும் கடந்திட அன்றைய பொழுது இன்பகரமாகவே கழிந்தது அனைவருக்கும்.
''அப்பாடா! இப்போதான் நிம்மதியா இருக்கு!''
என்ற ரேக்காவோ வந்தவர்களை வழியனுப்பியப்படி மருமகளிடம் சொல்ல,
''ஆமா அத்தே.. இன்னையிலிருந்து ஒரு வாரத்துக்கு கிட்சன் லீவு!''
என்றவளோ பெருமூச்சோடு வரவேற்பறை நுழைய ரேக்காவோடு,
''எல்லாரும் வாங்கே கார்ட்ஸ் விளையாடலாம்.''
என்ற சரனோ நடு ஹோலில் கடையை போட்டான்.
சுவர் கடிகாரமோ டிங் டாங்கென்றது மணி சரியாக விடியற்காலை பனிரெண்டாகியிருக்க.
ரேக்கா சோபாவில் அமர்ந்துக் கொள்ள, மருமகளோ மாமியாரின் கால்களில் முகம் சாய்த்தப்படி கீழே அமர்ந்துக் கொண்டாள்.
தாத்தாவின் கால்களுக்கு பக்கத்தில் விரனும் மற்றவர்களுக்கு முன்னிலையில் சரனும் அமர்ந்து கார்ட்ஸை ஆளாளுக்கு தனித்தனியே பிரித்து கொடுத்திட ஆரம்பித்தான்.
குடும்ப ஒற்றுமையில் வயிறெரிந்த மின்சாரமோ பொறாமை தாங்காது பட்டென நின்று போய் அனைவரையும் திடுக்கிட வைத்தது.
''கடவுளே! என்னதிது அபசகுனமா!''
என்ற ரேக்கவோ நெஞ்சில் கைவைக்க,
''இருங்கம்மா நான் பார்த்திட்டு வறேன்..''
என்ற விரனோ டிபி பாக்ஸ்ஸை நோக்கி நடையை கட்டினான்.
''அத்தே நான் போய் கிட்சன் ஜன்னல் கதவெல்லாம் சாத்திருக்கான்னு ஒரு தடவே பார்த்திட்டு வந்துடறேன்.''
என்ற சின்ன டிக்கியோ அடுக்களை விரைந்தாள்.
''மா.. நான் போய் வெளியே பார்த்திட்டு வறேன். நமக்கு மட்டும்தான் கரண்ட் கட்டா இல்லே எல்லாருக்குமான்னு.''
என்ற சரனோ ஓடினான் நடையில் வேகத்தை கூட்டி வாசல் நோக்கி.
''மா.. நமக்கெல்லாம் ஓகேவாதான் இருக்கு. அனேகமா மெயின்லதான் ஏதாவது பிரச்சனையா இருக்கும் போலே.''
என்ற விரனோ சோபாவை நோக்கி வர,
''ஆமா.. எங்கையும் கரண்டில்லே! நானும் இப்பதான் பக்கத்து வீட்டுலலாம் கேட்டுட்டு வந்தேன்.''
என்ற சரனோ மூச்சு வாங்கியப்படி வந்து நின்றான் மற்றவர்கள் முன்னிலையில்.
''அப்போ சரி! டேய் சின்னவனே காரே எடு நாமே அந்த வீட்டுக்கு கிளம்புவோம். ரேக்காமா நீ வறியா இல்லே இங்கையே இருக்கியா?''
என்ற தாத்தாவோ சோபாவிலிருந்து எழ,
''எப்படி மாமா கொலு வெச்சே வீட்டே சாத்திப்போட்டு வர முடியும்? நீங்க இவுங்க எல்லாரையும் கூட்டிக்கிட்டு கிளம்புங்க. நான் நாளைக்கு வறேன்.''
என்ற ரேக்காவோ மருமகளின் தோளை மகன் நோக்கி தள்ளிட,
''மா.. நீங்க தாத்தா கூட கிளம்பி போங்க. நானும் நிழலிகாவும் நாளைக்கு வறோம்.''
என்ற விரனோ டக்கென்று சொல்லி கார் சாவியையும் எடுத்து வந்து கொடுத்தான் சரனின் கையில்.
''சரி.. யார் வறிங்களோ வாங்கே. எனக்கு தூக்கம் வருது. நான் கார்லே கொஞ்ச நேரம் தூங்கிக்கறேன்.''
என்ற சிங் தாத்தாவோ வாசற்படி நோக்கினார். கூடவே, ரேக்காவும் சரனும் அவரை பின் தொடர்ந்தனர் அலைப்பேசி டார்ச் வெளிச்சத்தில்.
''அத்தே இருங்க நானும் வறேன்.''
என்றவளோ விட்டால் போதுமென்ற கலக்கத்தில் ஓடினாள் ரேக்காவின் வழிப்பாதையை நோக்கி விரன் முன்னரே கண்ணால் அவளை மிரட்டியிருக்க.
''எங்கே ஓடறே! நில்லு!''
என்றவனோ அழுத்தமாய் அம்மணியின் கரம் பற்ற,
''விரன் விடுங்க! நான் அத்தே கூட போறேன்! எனக்கு இருட்டுன்னா பயம். வெக்கையிலே தூக்கம் வராது.''
''ஓஹ்! அப்போ சரி, வேறே வழியே இல்லே.. நிலாவே தரையிறக்கி மேடமே பாத் டாப்லே போட்டு ஜிலுஜிலுன்னு தாலாட்டி தூங்க வெச்சுட வேண்டியதுதான்!''
''இல்லே, வேணாம்! நான் போறேன்! விடுங்க!''
என்றவளோ மல்லுக்கட்ட,
''அண்ணி..''
என்ற குரலோ வெளியிலிருந்து கேட்டது.
''அச்சோ விடுங்க விரன்! சரன் கூப்பிடறான்! கிளம்பறாங்கே, வழி அனுப்பனும்.''
''மவளே ஓட நினைச்சே.. மாலையே கழட்டி, இடுப்பே வளைச்சு, குனியே வெச்சு..''
என்றவனோ இதழோரம் பரவிய நக்கல் சிரிப்பை அடக்காது வெளிக்கொணர,
''சிவ! சிவா! போடா குட்டி குஞ்சா!''
என்றவளோ விரன் பிடியை விட்ட நொடி மற்றவர்களை வழியனுப்பிட முன் வாசல் நோக்கினாள்.
உயிர் துஞ்சிடுவான் விரன்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 39
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.