What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
414
அத்தியாயம் 42

தந்தையாகிட தகுதியற்றவன் என்ற குற்ற உணர்ச்சியே இத்தனை நாளும் விரனை மிருகமாக்கியிருந்தது என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டாள் சின்ன டிக்கி உண்மையறியாது.

ஆகவே, அதற்கான தீர்வாக என்ன செய்யலாம் என்று யோசித்தவள் குழந்தை பேரு கிடைக்காத தம்பதிகள் வழக்கமாய் செய்திடும் நடைமுறைகளை பற்றி படித்து, பார்த்து தெரிந்துக் கொண்டாள்.

அதை பற்றி விரனிடத்தில் பேச நினைத்தவள் ஒரு வாரமாய் அவன் ஜிம்மிலிருந்து தாமதமாய் வர தொந்தரவு செய்யாது அமைதியாகவே இருந்தாள்.

அதற்குள் அம்மணியோ ஓராயிரம் திட்டத்தை பல்வகைகளில் மூளைக்குள் தீட்டி வைத்து விட்டாள்.

வாடகை தாய் தொடங்கி டெஸ்ட் டியூப் பேபி வரை கண்டறிந்துக் கொண்ட சின்ன டிக்கியோ மீடியாவிற்கு பெயர் போன கணவனின் கெளரவத்திற்கு எவ்வித இழுக்கும் வந்திடக் கூடாதென்பதில் ரொம்பவே கவனமாய் இருந்தாள்.

ஆகவே, ஐ.பி.எப். ஆகட்டும் கருவை சுமக்க போகும் தாயாகட்டும் விரனின் விருப்பம் எதுவாகினும் அவையனைத்தும் வெளிநாட்டில் ரகசியமாய் காதும் காதும் வைத்தாற்போல செயல்படுத்தி பின் குழந்தையோடு தாயகம் திரும்புவது போல் பலவாறான மனக்கணக்குகளைக் கொண்டிருந்தாள்.

ஒரு வாரம் கடந்தும் விரனை கையில் பிடித்திட முடியா நிழலிகா இதையே அவளுக்கான கால அவகாசமாய் எடுத்துக் கொண்டாள், இனி தம்பதிகளாக அவர்கள் எடுக்க போகும் முடிவுகளின் பாதகங்களையும் சாதகங்களையும் பற்றி தெரிந்துக் கொள்ள.

இலவு காத்த சின்ன டிக்கிக்கு நல்ல காலம் பிறந்தது சனிக்கிழமை இரவன்று.

''பொடனிக்கிட்டே மிதிடி..''

என்றவனோ கட்டிலில் குப்பிற கிடக்க,

''ஓகே வா..''

என்ற சின்ன டிக்கியோ புருஷனின் முதுகில் ஏறி நின்று கிருஷ்ண ஜெயந்தி நடத்திக் கொண்டிருந்தாள்.

''நல்லா மிதிடி! இப்போதானே வஞ்சகமே இல்லாமே என் பிரியாணியையும் சேர்த்து முழுங்கிட்டு வந்தே!''

என்றவன் கிண்டலடிக்க,

''ஓஹ், கொடுக்கறே மாதிரி கொடுத்திட்டு சொல்லி காட்டுறியா!''

என்றவளோ ஒரே குதியாய் முரட்டு குதியொன்றை குதித்தாள் விரனின் நெஞ்சு பஞ்சாய் போக.

''அடிப்பாவி!''

என்றவனோ சின்ன அலறலோடு மல்லாக்க திரும்ப அவன் மீதிருந்த மங்கையோ தடுமாறி அவன் மாரிலே பொத்தென விழுந்தாள்.

''இந்த மிதி போதுமாடா குட்டி குஞ்சா!''

என்றவளோ விரனின் மீதேறி வசதியாய் அமர்ந்துக் கொள்ள,

''தின்னதெல்லாம் செறிச்சிடுச்சாடி சின்ன டிக்கி!''

என்றவனோ சுளீரென்று வைத்தான் அடியொன்றை அம்மணியின் பிட்டத்தில், ஆணவனின் கொஞ்சல் முறுவலிப்போ கலையாது இதழில் ஒட்டிக்கிடக்க.

''ஆர்ர்ஹ்ஹ்ஹ! எரியுதுடா குட்டி குஞ்சா!''

என்றவளோ டிக்கியை கையால் தேய்த்துக் கொண்டு மறுகையால் புருஷனின் நெஞ்சில் ஒரு குத்து வைக்க, முஷ்டி மடக்கியவளின் கையை பற்களால் கடி போட்டு சில்மிஷம் கொண்டான் விரன்.

''ஹான்ன்ன்ன்.. வேணாம்! வேணாம்! விடு! போதும்!''

என்றவளோ கணவனின் நெஞ்சில் கும்பிட்டு போட்டு சாய்ந்தாள் விரனின் கடியெல்லாம் உள்ளங்கை கூசும் நா வருடலாய் போக.

''நண்டு வருது நரி வருது.. நண்டு வருது நரி வருது..''

என்றவனோ பொஞ்சாதியின் தொடையில் படியேற்றம் கொள்ள,

''ஒன்னும் வர வேணாம்!''

என்றவளோ விரனின் விரல்களை மெதுவாய் பற்றியிழுத்து வாயுக்குள் வைத்துக் கொண்டாள்.

''என்னடி, சின்ன டிக்கி கோன் ஐஸ் வேணுமா?''

சிரித்துக் கொண்டே டபுள் மீனிங்கில் விரன் கேட்க,

''வேணுந்தான்.. ஆனா, அதுக்கு முன்னாடி நான் சில விஷயங்கள் உங்கக்கிட்டே பேசணும் விரன்.''

என்றவளோ அவனை மெதுவாய் விலகி வார்த்தையில் மரியாதையைக் கொள்ள,

''சரி, பேசு.''

என்றவனோ அவளை விடாது இழுத்தணைத்துக் கொண்டான்.

''ம்ம்ச்ச்ச்.. கையே எடுங்க விரன்!''

என்றவளோ கண்டிப்பான கொஞ்சல் தொனி கொள்ள,

''முடியாது! இப்படியே சொல்லு!''

என்றவனோ விரலால் பாவையவள் கவசம் கொண்ட பசும்புல் தரையை சிறையெடுக்,

''டேய்.. ஆஹ்ஹ்ஹ்..''

என்றவளோ கண்களை மூடி கிறங்கினாள் கணவனின் தோளில் தலை சாய்த்து.

''சொல்லுடி சின்ன டிக்கி என்னே மேட்டர்?''

என்றவனோ விட்டம் நோக்கி கிடந்த லலனையின் கிரீபத்தில் சீக்குவைக் கொண்டு வருடல் கொள்ள,

''இப்.. எப்.. ஆஹ்ஹ்.. வி.. ம்ம்..''

என்ற சனிகையோ மோக சுரம் கொண்டு தளர,

''இப்போ மேட்டர் பேசவா இல்லே..''

என்றவனோ விழிமூடியப்படி மடந்தையின் காதில் கிசுகிசுக்க,

''போடா குட்டி குஞ்சா!''

என்ற சின்ன டிக்கியோ தெளிந்தவளாய் அவனை பட்டென விலகி முகம் பார்த்தமர்ந்தாள்.

''முதல்லே வாய் வார்த்தே அப்பறமா மத்தே மேட்டர்!''

என்றவளோ கணவனின் நெற்றியில் செல்ல அடியொன்றை வைக்க,

''சரி! சரி! சொல்லு!''

என்றவனோ தாட்டியவளை இழுத்து நெஞ்சில் போட்டுக் கொண்டான்.

''விரன், பேபி சம்பந்தமா நான் நாலு ஐடியா வெச்சிருக்கேன். ஃபர்ஸ்ட், ஆசிரமத்துலருந்து ஒரு குழந்தையே தத்தெடுத்துக்கறது.''

என்று பேதையவள் ஆரம்பிக்கும் போதே விரனின் முகம் சுணங்கியது.

''செகெண்ட், ஸ்பெர்ம் தானம் வாங்கி என் கருமுட்டையோட கலக்க விட்டு நம்ப குழந்தையே நானே சுமந்து பெத்துக்கறது.''

என்றவளோ அவனை ஆர்வத்தோடு ஏறெடுக்க,

''ஹ்ம்ம்..''

என்றவனின் தொனியோ கருகிய நெடி கொண்டது.

''மூணாவது, எனக்கும் வேணாம் உங்களுக்கும் வேணாம். ஸ்பெர்ம் தானம் வாங்கறே மாதிரி கருமுட்டையையும் தானம் வாங்கி நமக்கான குழந்தையே நானே இந்த உலகத்துக்கு கொண்டு வர்றது. அப்படி இது வேணா அப்படிங்கறே மாதிரி தோணுச்சுன்னா நம்ப குழந்தையே வாடகைத்தாய் மூலமா பெத்துக்கலாம்.''

என்றவள் சொல்லி முறுவலிக்க,

''நான் ஆம்பளே இல்லன்னு குத்தி காட்டுறியாடி!''

என்றவனோ அழுத்தமாய் சொல்லி பல்லை கடிக்க,

''விரன்!''

என்றவளோ அதிர்ந்து போனாள் கணவனின் பேச்சில்.

''அன்னைக்கு என்னவோ நீ எனக்கு குழந்தை நான் உனக்கு குழந்தன்னு கதை சொன்னே! இப்போ, எங்கே போச்செல்லாம் அதெல்லாம்?!''

என்றவனோ மஞ்சத்திலிருந்து எழ,

''ஐயோ விரன்! ஏன் இப்போ அதுக்கும் இதுக்கும் முடுச்சு போடறிங்க? அன்னைக்கு இருந்த நிலையிலே உங்க மனசு ஆறுதலா இருக்க அப்படி சொன்னேன்.''

என்றவளும் எழுந்துக் கொள்ள,

''தெரியுண்டி! தெரியும்! அதானே பார்த்தேன்! நீயும் சராசரி பொண்ணுதானே! உனக்கு மட்டும் என்னே குழந்தை ஆசை இல்லாமலா போயிடும்! ஆனா, என்ன பண்ணே?! எல்லாம் என் தலையெழுத்து! நான்தான் வக்கத்தவனா போயிட்டேன்!''

என்றவனோ கோபத்தில் தலையணையை தூக்கி விசிறியடிக்க,

''விரன் பிளீஸ்! இப்படி பேசாதிங்க! நான் எனக்காக இந்த ஐடியாஸ் பத்தி பேசலே!''

என்றவளோ கணவனின் முன் சென்று அவன் முகம் பார்க்க,

''பின்னே! யாருக்காக?! எனக்காகவா?! நான் கேட்டேனா?! நான் கேட்டேனா உன்கிட்டே எனக்கு குழந்தை வேணும்னு?! சொல்லு?!''

என்றவனோ அளகவளை உலுக்க,

''டேய், குட்டி குஞ்சா கொஞ்சம் பொறுமையா நான் சொல்றதே கேளுடா! எதையும் முழுசா கேட்காமே இப்படி தப்பா பேசாதடா!''

என்றவளோ பற்றினாள் ஆம்படையான் அவனின் முகத்தை இருக்கரங்களால் இன்னமும் அவன் நாடகத்தை நம்பிக்கொண்டு.

''ஏய்! சீ! கையே எடுடி!''

என்றவனோ சின்ன டிக்கியின் கையை முகத்திலிருந்து தட்டிவிட,

''புரிஞ்சிக்கோங்க விரன்! நீங்க கேட்டாலும் கேட்காட்டியும் நான் சொன்னதெல்லாம் உங்களுக்காகத்தான்! உங்களுக்காக மட்டும்தான்!''

என்றவள் மீண்டும் விரனின் வதனத்தை விரல்களுக்குள் பதுக்கி நேரெதிரே விழிகள் பார்த்து உரைத்து தொடர்ந்தாள் அவளின் எண்ணத்தை வார்த்தைகளில் வடித்து.

''வீட்டுக்கு மூத்த பையன் நீங்க ஒரு வாரிசுக்கு அப்பாவாக முடியாதுன்னா, அத்தையும் தாத்தாவும் எவ்ளோ வேதனை படுவாங்கன்னு அவுங்க இடத்துலருந்து நான் யோசிச்சு பார்த்தேன் விரன். அதுக்காகவாவது நான் சொன்னே ஏதாவது ஒரு வழியிலே நாமே ஒரு குழந்தைக்கு அப்பம்மா ஆகியே தீரணும்! இது நமக்காக இல்லே! நம்ப குடும்பத்துக்காக!''

என்றவளோ ஆணித்தரமாய் சொல்லி நிற்க,

''ஓஹ், ஆமாவா?! அப்போ சரி! நீ சொல்றே மாதிரியே பண்ணிடலாம் நிழலிகா! கவலையே படாதே!''

என்றவனோ இடையில் ஒரு கரத்தையும் தலையை மறுகரத்திலும் இறுக்கிக் கொண்டு திக்கு தெரியா சிறுவன் போல் அங்கும் இங்கும் திரும்பியப்படி விழிகளை உருட்டி பல்லை கடிக்க,

''விரன்..''

என்ற சின்ன டிக்கியோ வாஞ்சையாய் அழைத்து அவன் முழங்கை பற்றினாள்.

''ஷு! ஷு! ஷு! ஷு! ஷு! உன்னே விட பெட்டர் ஐடியா ஒன்னு யோசிச்சிட்டுக்கிட்டு இருக்கேன் நிழலிகா! கொஞ்சம் வெயிட் பண்ணு வறேன்!''

என்றவனோ அலமாரியை நெருங்கி கையிலெடுத்தான் பச்சை வர்ண கோப்பொன்றை.

சின்ன டிக்கியோ விரனின் விசித்திரமான செயல்களை கண்டு சிறு கலக்கம் கொண்டாள் உள்ளுக்குள்.

''நிழலிகா, எதுக்கு தேவையில்லாமே ஐ.வி.எப். , ஐ. யு. ஐ எல்லாம்?!''

என்றவன் ஆரம்பிக்க,

''அப்போ, குழந்தை தந்தெடுத்துக்கலான்னு சொல்றிங்களா விரன்?''

என்றவளோ சந்தோஷங்கொண்டவளாய் விரனை நெருங்க,

''இல்லே, பேசாமே எவன் கூடையாவது படுத்திடேன்! ரொம்ப ஈஸியா போயிடும்! இந்த ஊசி மருந்துக்கெல்லாம் வேலையே இருக்காது பாரு! பணத்துக்கும் கேடு உடம்புக்கும் கேடு! இப்படின்னா சுகத்துக்கு சுகமும் ஆச்சு, புள்ளைக்கு புள்ளையும் ஆச்சு நிழலிகா!''

என்றவனின் அலறலில் எட்டி போய் பறந்து விழுந்தது ட்ரெஸிங் டேபிளின் நாற்காலி.

''விரன்!''

என்ற கதறலோடு புருஷனை அறைந்திட கரம் ஓங்கினாள் சின்ன டிக்கியவள் அடக்கிட முடியா சினங்கொண்டு.

''என்னாலே அடுத்தவனோட புள்ளைக்கு அப்பாவாகவும் முடியாது, இன்னொருத்தன் உயிருக்கு இனிஷியல் கொடுக்கவும் முடியாது!''

என்றுச் சொல்ல பற்றி பிடித்திருந்தவளின் மணிக்கட்டினை விடுவித்து கையிலிருந்த கோப்பை தூக்கியடித்தான் தெரிவையவள் முகத்தில் குட்டி குஞ்சன்.

''உனக்கொரு புள்ளையே கொடுக்க முடியாத நான், வேணுன்னா என் மீசையே சரிச்சுக்கறேன்டி! ஆனா, எப்போதுமே கண்டவன் போட்ட பிச்சையிலே எனக்கொரு பிள்ளை வேணாம்! அதுவும் அதை என் பொண்டாட்டி சுமக்கே வேணவே வேணாம்!''

என்று சொல்லி அவளை நெருங்கியவனோ,

''அது என்னே பொறுத்த வரைக்கும் நானே உன்னே கூட்டி கொடுக்கறதுக்கு சமம்! நீயே முடிவு பண்ணிக்கோ என் கூட கடைசி வரைக்கும் மலடிங்கறே பட்டத்தோட வாழ போறியா இல்லே என்னே மாமா வேலே பார்க்க வெச்சு எவனுக்கோ முந்தி விரிக்க போறியா?!''

என்றவனோ மூச்சிரைக்க பேசி அவளை வெறிக்க, நிழலிகாவோ மனதால் மரித்திருந்தாள்.

உயிர் துஞ்சிடுவான் விரன்...

முந்தைய அத்தியாயங்களை படிக்க:


https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/
 

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 42
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: Jai
Top