- Joined
- Jul 10, 2024
- Messages
- 414
அத்தியாயம் 46
பிரியமானவர்கள் ஒருபோதும் காயப்படுத்திட மாட்டார்கள் என்பது மிகப்பெரிய முட்டாள்தனமான நம்பிக்கையாகும்.
எதிரியை விட மோசமான வேதனையை அவர்கள்தான் கொடுத்திடுவர் என்பது நிதர்சனமாகும் வேளையில் சில்லாய் உடைந்திடும் மனதும் அது சார்ந்து நம்பிக்கையும்.
இறுகிய முகத்தோடு அமர்ந்திருந்தாள் நிழலிகா மருத்துவரின் முன், பார்வையும் சிந்தையும் வேறெங்கோ பார்த்திருக்க.
''ரிப்போர்ட்டே பார்க்கும் போது ஒரிஜினல் மாதிரிதான் இருக்கு. எந்த பித்தலாட்டமும் என் கண்ணுக்கு தெரியலே. ஒரு வேலே கைதேர்ந்த டாக்டர் ரெடி பண்ணே க்பேக் ரிப்போர்ட்டா கூட இருக்கலாம்.''
என்ற ஆண் மருத்துவனோ கையிலிருந்த பச்சை வர்ண கோப்பை மூடி வைத்தான் மேஜையின் மீது.
அம்மணி என்னவோ பெண் டாக்டர்தான் வேண்டுமென்று ஒத்தைக்காலில் நின்றாள். ஆனால், மேடமின் அவசரத்திற்கு மகப்பேறு மருத்துவன் தமிழ் செல்வன்தான் ஃபிரீ என்று சொல்லி அவனை சந்திக்க ஏற்பாடு செய்தனர் கைனோகாலஜிஸ்ட் டிபார்ட்மெண்ட் ஸ்டாப்ஸ்.
விரனின் மருத்துவ கோப்பைத்தான் தூக்கிக் கொண்டு வந்திருந்தாள் சின்ன டிக்கியவள் அவர்களின் விவகாரம் நோட்டிஸ் வரைக்கும் போயிருக்க மருத்துவனவனை பார்த்திட.
ஆணவன் அப்பாவாக முடியாது என்ற கூற்றை என்னதான் ஆட்டியவள் முழுமனதாய் ஏற்றுக் கொண்டிருந்தாலும் விரனின் அவசரமும் அவனின் இரு வார ராத்திரி செயல்களும் பெருங்குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது பேதையவளுக்குள்.
போவென்று துரத்துகிறவன் அவளை ராவெல்லாம் போட்டு படுத்தி எடுத்தாலுமே வேட்கை தீர ஆளனவன் வாய் மொழிந்ததெல்லாம் என்னவோ நிழலிகா என்ற பெயரே.
கூடவே, சில புரியா உளறல்கள். என்னவோ அவன் பெரிய கொலை குத்தம் செய்தவனை போல் பாவ மன்னிப்பில் தொடங்கி குற்ற உணர்ச்சியில் ஏதேதோ பேசி அந்திகையவள் மார்பில் துயில் கொள்வதும் அவன் மீது நேரடி சந்தேகத்திற்கு வழி வகுத்தது.
மது கொண்ட போதையே இதுக்கெல்லாம் காரணம் என்றெண்ணினாலும் அவ்வளவு சீக்கிரத்தில் மனம் சமாதானம் ஆகவில்லை பாரியாள் அவளுக்கு.
அவனுக்கு மறந்திருக்கலாம் இல்லை நினைவில் கூட இல்லாமல் போகலாம். ஆனால், கேட்டவளுக்கு அப்படியில்லையே. கணவனின் அனத்தல்களுக்கு பின்னாடி ஏதோ ஒன்று ஒளிந்திருப்பதை மனைவியவளால் உணர முடிந்தது.
சொல்ல முடியா காரணத்துக்காகத்தான் விருப்பமின்றியே விலகுகிறேன் விரன் என்பதை ஒவ்வொரு நாள் அரிபுதையிலும் அவளுக்குள் அவன் புதைவதை வைத்து கணித்துக் கொண்டாள் வீட்டாளவள்.
மெடிக்கல் ரிப்போர்டில் ஏதாவது தில்லு முள்ளு பண்ணியிருப்பானோ என்ற சந்தேகம் எழும்ப உடனே புறப்பட்டு வந்து விட்டாள் நிழலிகா புருஷனின் கோப்பை தூக்கிக்கொண்டு மகப்பேறு மருத்துவரை சந்திக்க.
''டாக்டர், மிஸ் நிழலிகா ரிப்போர்ட்ஸ்.''
என்ற நர்ஸோ கொண்டு வந்திருந்த புது கோப்பையை மருத்துவரிடம் நீட்டி நகர்ந்தார் அங்கிருந்து.
''மிஸ் நிழலிகா, உங்களுக்கு இதுலே பரிபூரண சம்மதம் தானே?''
என்ற டாக்டரோ கோப்பின் பக்கங்களை திருப்பிக் கொண்டே கேட்க,
''யாருக்காகவும் எதுக்காகவும் என்னாலே இந்த முடிவே மாத்திக்கே முடியாது டாக்டர்! தயவு செஞ்சு என்னே கன்வின்ஸ் பண்றே ஐடியா ஏதாவது இருந்தா கைவிட்டுடுங்க!''
என்றவளோ காட்டமாய் சொல்லி கைகளை பிசைந்து அவளுக்கு அவளே தைரியம் கொடுத்துக் கொண்டாள்.
''எனக்கு ஏங்கே தேவையில்லாத வேலை!''
என்ற தமிழோ பெருமூச்சு ஒன்றோடு கோப்பின் முதல் பக்கத்தில் முற்றுகை கொண்ட விரல்களை லேசாய் தட்ட,
''எப்போ வெச்சுக்கலாம் டாக்டர் சர்ஜரியே?''
என்றவளோ மனசை கல்லாக்கிக் கொண்டு வினவினாள் முதல் முறை அவ்வளவு ரிஸ்க்கான முடிவொன்றை எடுத்திருக்க.
''அதுக்கென்னே நாளைக்கு கூட வெச்சுக்கலாம்.''
என்றவனோ புருவங்கள் சுருக்கி நக்கல் தொனி கொள்ள,
''அப்போ நாளைக்கே நான் ரெடியாகி வந்துடறேன் டாக்டர். என்ன பண்ணணும்னு மட்டும் சொல்லிடுங்க டாக்டர்.''
எனும் போது கலங்கி விட்டது சின்ன டிக்கிக்கு கண்கள்.
''கண்டிப்பா! ஆனா, மிஸ் நிழலிகா இந்த மேட்டர் பத்தி நீங்க உள்ளே இருக்கறே ஆள்கிட்டே டிஸ்கஸ் பண்ணிட்டிங்களா?''
என்றவனோ உதட்டை மடித்து முறுவலிக்க,
''என்னே? என்னே கேட்டிங்க?''
என்ற சின்ன டிக்கியோ டாக்டர் தமிழின் கூற்று புரியாது முதுகை நாற்காலியிலிருந்து பிரித்துக் கொண்டு கொஞ்சம் முன்னோக்கி வினவினாள்.
''அதாங்கே.. நீங்க வேணா எடுத்துடுங்கன்னு சொல்றிங்களே உங்க கர்ப்பப்பை, அதுக்குள்ளாரே ஜம்முனு உட்கார்ந்திருக்காறே ஒரு பெரிய மனுஷன், அவர்கிட்டே ஒரு வார்த்தை கேட்டிங்களான்னு கேட்கறேன்?''
என்றவனோ நிறுத்த,
''என்.. என்னே சொல்றிங்க டாக்டர்?!''
என்ற சின்ன டிக்கியின் முகமும் ஆயிரங்கேள்வி கொண்டு டாக்டர் தமிழை நோக்க,
''மூனு மாசம்..''
என்றவனின் தகவலில் விழிகளை அகல விரித்தவளோ சட்டென தலைகுனிந்து நோக்கினாள் அவளின் வயிற்றை கைகளை அதில் பதித்து.
''இதுக்கு மேலையும் உங்க முடிவிலே நீங்க உறுதியா இருந்தா சர்ஜரி பண்ணிடலாம். ஆனா, அதுக்கு முன்னாடி நீங்கதான் சொல்லணும்? சின்ன குட்டி வேணுமா இல்லையான்னு?''
என்றவன் நிதானமாய் சொல்லி முடிக்க,
''எப்படி டாக்டர் வேணான்னு சொல்லுவேன்! எங்களே சேர்த்து வைக்கே போறே கடவுளே இந்த குழந்தைத்தானே டாக்டர்!''
என்றவளோ முகத்தை மூடி ஒப்பாரி கொண்டாள்.
''இங்கப்பாருங்க மிஸ் நிழலிகா, கடவுள் பலருக்கு கர்ப்பப்பையே கொடுக்கலாம். ஆனா, அதிலே சிலருக்கு மட்டும்தான் குழந்தை பாக்கியத்தை கொடுப்பாரு. உங்களுக்கு அந்த வரத்தை கொடுத்திருக்காரு. இதுக்கு மேலையும் புருஷன் பொண்டாட்டி சண்டையிலே இப்படி முட்டாள்தனமா முடிவெதையும் எடுக்காதிங்க.''
''நான் அவரே ரொம்ப லவ் பண்றேன் டாக்டர்! அவர் குறையே நினைச்சு தினம் படறே வேதனையே என்னாலே பார்க்க முடியலே! அதுவும் அவர் அப்பாவாக முடியாதுங்கறே ஒரே காரணத்துக்காக என்னையவே வேணான்னு சொல்லறே அளவுக்கு போயிட்டாரு டாக்டர்!''
என்றவளோ கதறிக்கொண்டு மூக்கை உறிஞ்ச,
''நிழலிகா, நம்பாளுங்களுக்கு இருக்கறே பிரச்சனையே இதுதான்! ஆம்பளதானத்தே கொண்டு போய் குழந்தை மேட்டர்லே வைக்கறது! இதுலே உங்க ஹஸ்பண்ட் மேலே எந்த தப்பும் இல்லே. நம்ப சொசைட்டி டிசையின் அப்படி! விட்டு தள்ளுங்க, அதான் இப்போ அவர் அப்பாவாகிட்டறே!''
என்றவன் சொல்ல மகப்பேறு மருத்துவனுக்கே உரிய மிடுக்கில்,
''தேங்கியூ டாக்டர். நீங்க ரொம்ப கைராசின்னு சொன்னாங்க. அது எவ்ளோ உண்மன்னு இப்போதான் புரியுது.''
என்றவளோ அழுகை அருவியை நிறுத்தி சொன்னாள் சிறு புன்னகையோடு.
''ஆஹ், இப்படித்தான் எப்போதுமே சிரிச்சிக்கிட்டே இருக்கணும்! அப்பறம், இந்த ரிப்போர்ட் பத்தியெல்லாம் ரொம்ப போட்டு குழப்பிக்காதீங்க நிழலிகா. சந்தோஷமா பிள்ளை பெத்து வாழ்க்கை என்ஜோய் பண்ணுங்க!''
''எப்போ அவர்கிட்டே சொல்வேன்னு இருக்கு டாக்டர்!''
என்றவளின் முகத்திலே பூரிப்பு தாண்டவம் ஆட,
''இந்த போன்லே சொல்றே வேலையெல்லாம் வேணாம்! நேரா பார்த்து சொல்லுங்க. என் வைஃப் பாப்பு அடிக்கடி சொல்லுவாங்க நல்ல விஷயங்களே நமக்கு பிடிச்சமானவங்க கண்ணே பார்த்து சொல்லும் போது கிடைக்கறே நிம்மதியே தனின்னு!''
''ஆமா, டாக்டர். எனக்கு கூட அவர் முகம் ரொம்ப பிடிக்கும்.''
என்ற சின்ன டிகியின் கண் முன் வந்து போனது குட்டி குஞ்சனின் முகம்.
''எப்போதுமே மனசுலே வெச்சுக்கோங்க நிழலிகா, நமக்கு மேலே ஒருத்தன் இருக்கான்! அவனுக்கு தெரியும் யாருக்கு எதை எப்போ கொடுக்கணும்னு! சோ, அடுத்த தடவே நான் உங்களே பார்க்கும் போது நாலு பேரா பாக்கணும் ஓகே!''
என்றவனோ சிரிக்க,
''நாலென்னே நாலு ஒரு ஃபுட்போல் டீம் தான் டாக்டர் எங்கே டார்கெட்டே!''
என்றவள் சொல்லி சிரிக்க அவளோடு சேர்ந்து சிரித்தான் டாக்டர் தமிழ் செல்வனும்.
உயிர் துஞ்சிடுவான் விரன்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 46
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.