- Joined
- Jul 10, 2024
- Messages
- 414
அத்தியாயம் 48
விரன் சிங் அவனுக்குள்ளேயே மௌனித்து வாழும் நரக வாழ்க்கை யாரும் அறியா ரகசியமே.
அவன் நிலையை வெளியில் சொல்லவும் முடியாது மெல்லவும் முடியாது திணறி கொண்டிருப்பவனின் எண்ணமெல்லாம் ஒன்றே ஒன்றுதான் அது அவனின் சின்ன டிக்கி. அவளை எப்படியாவது கரை சேர்த்திட வேண்டும், அவ்வளவே ஆளனின் ஆசை.
ஆனால், இதேதும் அறியா புள்ளைத்தாச்சியோ தினம் இரவு அழுகையில் குளித்தாள் நெஞ்சம் புருஷனின் விலகலை ஜீரணிக்க முடியாது தவிக்க.
பத்து நாட்கள் பஞ்சாய் பறக்க வந்து சேர்ந்தான் விரன் பணி முடிய மீண்டும் தாயகம்.
கணவனவன் வந்து விட்டான், நல்செய்தி சொல்லிடலாம் என்று காத்திருந்தவளோ சற்றும் எதிர்பார்த்திடவில்லை இன்றைய நாளுக்கு பின் நிழலிகாவின் வாழ்க்கை சூனியமாக போவதை.
''ஏய்! அப்படியே நில்லு! கண்டவனே தொட்டே கையாலே என்னே தொடாதே!''
என்றான் விரன் ஓடோடி வந்தவளை வாசலிலேயே தடுத்து நிறுத்தி ஆவேசங்கொண்டு.
''என்னடா சொல்றே குட்டி குஞ்சா?!''
என்றவளோ அதிர்ச்சி மறையா விழிகள் அகல விரிய வேள்வி கொண்டாள் பொய்நகைப்பொன்றை இதழில் கொண்டு.
''சும்மா நடிக்காதடி! எனக்கு எல்லாம் தெரியும்! என்னாலே உனக்கு ஒரு குழந்தையே கொடுக்க முடியாட்டியும் சந்தோஷமா வெச்சுக்க முடியும்னு நினைச்சேன்! ஆனா, உனக்கு அது மட்டுமே பத்தாததுன்னு இந்த பத்து நாள்ளத்தான் நான் தெரிஞ்சிக்கிட்டேன்!''
என்றவனோ நஞ்சை கக்கினான் வேண்டிய அளவு வார்த்தைகளை கொட்டி.
''விரன்! என்னே பேசறிங்க நீங்க! ஏன் பைத்தியக்காரன் மாதிரி ஏதேதோ உளறீங்க!''
என்றவளோ புருஷனின் குற்றசாட்டுகளில் கோபங்கொள்ள,
''நான் கண்டதையும் பேசறேனா! அப்போ, இதென்னே!''
என்ற விரனோ அலைபேசியை கையிலெடுத்து தொடுதிரையை தட்டி அவளிடம் நீட்டினான்.
உடம்பெல்லாம் நடுங்கி நா தழுதழுத்தது தாட்டியவளுக்கு. குப்பென்ற வியர்வையில் தொப்பையாகி போனாள் முதுகுத்தண்டு உறைந்து கிடைக்க சின் டிக்கியவள்.
''சொல்லுடி! சொல்லு! அப்போ இதுக்கு பேரேன்னே சொல்லு!''
என்றவனின் கர்ஜனையில்,
''இல்லே! இல்லே விரன்! இல்லே! இது நான் இல்லே!''
என்றவளோ அலறினாள் அலைபேசி காட்சியோ பெண்ணவள் ஒழுக்கத்தை கணவனின் முன் கேள்விக்குறியாக்கி நிற்க.
''ஏய்! சும்மா உத்தமி மாதிரி கத்தாதடி! ஒரு பத்து நாள் உன்னாலே ஆம்பளே சுகம் இல்லாமே இருக்கே முடியலல்லே!''
என்றவனின் வாய் கூசா புகாரில் இதுநாள் வரை அவர்கள் கொண்ட தாம்பத்தியம் வெட்கி தலைகுனிந்தது.
''ஐயோ! கடவுளே! விரன் பிளீஸ் விரன் என்னே நம்பு விரன்! சத்தியமா அது நான் இல்லே! அது பொய்! மோர்பிங்! நான் இல்லடா குட்டி குஞ்சா அது! நம்புடா!''
என்றவளின் மிழிகளோ பொலபொலவென கண்ணீரை கொட்ட, விரனின் முகத்தை காதலோடு பற்றிட முனைந்தாள் வதூ அவள், கரங்கள் கொண்டு அவனை சமாதானம் படுத்தும் வகையில்.
''சீ! கையே எடுடி வெட்கங் கெட்டவளே!''
என்றவனோ வார்த்தைகளோடு நில்லாது நெருங்கிய இளம்பிடியாளின் கையை தட்டி விட்டான் நாச்சியவள் தடுமாறி தரையில் விழ.
''விரன்! என்னடா பண்றே! கிறுக்கனா நீ!''
என்ற ரேக்கவோ கையிலிருந்த பூக்கூடையை பறக்க விட்டு பளிங்கு தரையில் சரிந்துக் கிடந்த மருமகளை கைத்தாங்கலாய் மேல் தூக்கினார்.
''மா, தயவு செஞ்சு சொல்றேன்! நீங்க இவளுக்கு சப்போர் பண்ணாதீங்க!''
என்றவனோ பொஞ்சாதியவளின் கையை ரேக்காவிடமிருந்து பிரித்திழுத்ததான்.
வாழலாம் என்று சொல்லி புகுந்து வீடு கூட்டிவந்தவனோ இன்றைக்கு நடு வீட்டில் அவளை கொச்சைப்படுத்த, சின்ன டிக்கியோ உணர்ச்சியற்ற ஜடமாய் வெளிறி கிடந்தாள், இனி இன்னும் என்னென்னெ பழிச்சொல்லுக்கெல்லாம் ஆளாகிடுவாளோ என்று தெரியாது என்று கண்ணீர் சொரிந்து.
''விரன், அம்மா நான் சொல்றேன்! விடு அவளே! விடுடா அவளே!''
என்ற அத்தையோ தரதரவென இழுத்து போகும் மருமகளை மகனிடமிருந்து காப்பாற்றிட முயற்சித்தார்.
''ஐயோ, அம்மா! தயவு செஞ்சு இந்த கேடு கெட்டவளுக்கு சப்போர்ட் பண்றதே நிறுத்துங்க! இவளோட சுயரூபம் தெரிஞ்சா நீங்க ரொம்ப வருத்தப்படுவிங்க!''
என்றவனோ யார் பேச்சையும் கேளாது இழுத்து போய் வீட்டு வாசலுக்கு வெளியில் தள்ளினான் காதலித்து கரம் பிடித்த இல்லாளவளை.
நிழலிகாவோ நடைப்பிணமாய் வெறித்தாள் விரனின் முகத்தை ஒரு வார்த்தை கூட பேசாது. மனம் மரித்தவளாய் அவன் இழுத்த இழுப்பிற்கு இணங்கினாள் அது அவளுக்கு வலித்தாலுமே.
எதிர்த்து சண்டை போட திராணியிருந்தும் மனமில்லை மாயோள் அவளுக்கு புருஷனே அவளை தகாத வார்த்தை சொல்லி குற்றவாளியாக்கியிருக்க.
பொறுத்து போன தாயோ பொங்கி எழுந்தார். வைத்தார் சப்பு சப்பென்று நாலறைகள் அவன் கன்னங்களில் பெத்த மகன் என்றும் பாராது, விரன் எல்லை மீறி போயிட.
''ஒழுங்கு மரியாதையா நிழலிகாவே வீட்டுக்குள்ளே கூட்டிக்கிட்டு போ விரன்!''
என்றவரின் அழுத்தமான வார்த்தைகளுக்கு துளியும் பயங்கொள்ளாதவனோ,
''இந்த நடத்தகெட்டவே கூட என்னாலே இனி ஒரு நிமிஷம் கூட வாழ முடியாதுமா!''
என்றவனோ சொன்ன வேகத்தோடு வீட்டுக்குள் நுழைய,
''விரன்! நில்லு! விரன்!''
என்ற மம்மியோ கோபங்கொண்டு மகனை அழைக்க,
''வேண்டாம் அத்தே! விடுங்க, அவர் போகட்டும்! அவருக்கு நான் வேண்டாம்! இதெல்லாம் அதுக்காகத்தான்! மத்தவங்க பார்வைக்கு நான் ஒழுக்கமில்லாதவளாவே இருந்திட்டு போறேன் அத்தே! வாழ்ந்த அவருக்கு தெரிஞ்சா போதும் நான் பத்தினியா இல்லையான்னு!''
என்றவளோ மனையின் வாசலிலிருந்து வெளியேற,
''நிழலிகா! நில்லுமா! அவன்தான் வந்ததும் வராததுமா ஏதேதோ பேசி பிரச்சனை பண்றண்ணா, நீயுமா இப்படி முரண்டு பிடிப்பே! வாமா உள்ளே போகலாம்!''
என்ற ரேக்காவோ சின்ன டிக்கியின் கரம் பற்றி வீட்டுக்குள் அழைத்து போக எத்தனிக்க,
''ஒருத்தனுக்கு மட்டுமே பொண்டாட்டியா இருக்கறே எந்த நல்ல பொண்ணும் இந்நேரத்துக்கு தீக்குளிச்சிருப்பா இப்படியான அசிங்கத்துக்கு! மாமியார் கூப்பிட்டாங்கன்னு ஆட்டிக்கிட்டு வீட்டுக்குள்ளே வந்து இளிச்சவாய் புருஷன் தலையிலே மொளகா அரைக்க மாட்டா, உன்னே மாதிரி!''
என்ற விரனோ இடையில் இருக்கரங்கள் இறுக்கியப்படி நாராசமாய் பேசினான்.
அவனுக்கு வேண்டியதெல்லாம் சின்ன டிக்கி விரனை வெறுத்திட வேண்டும்.
''கண்டிப்பா கொழுத்திக்கிட்டு செத்திருப்பேன், நான் மட்டுமே இருந்திருந்தா!''
என்ற சின்ன டிக்கியோ அதுவரை பொறுமை காத்து வைத்திருந்த கோபத்தை வெளிப்படுத்தினாள் உக்ரமாகி.
நிழலிகாவின் சினத்தில் நிம்மதி கொண்டான் விரன் இதுவே அவளின் வெறுப்பை சம்பாரித்திடும் நேரமென்றுணர்ந்து.
உயிர் துஞ்சிடுவான் விரன்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 48
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.