What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
414
அத்தியாயம் 49

சாகும் நாள் தெரிந்து விட்டால் வாழும் நாள் நரகமாகிடும் என்பது போல், காதல் மனைவியை தெரிந்தே விட்டு பிரிவதென்பது கொடுமையிலும் கொடுமையே.

ஷவரை அதீத சூட்டில் வைத்த விரனோ குளியலறை பளிங்குகளை முஷ்டி மடக்கி குத்தி ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டான்.

அழுகையை பட்டென வெளிக்காட்டும் ரகம் இவனில்லை என்றாலும் இன்றைக்கு ஏனோ துணைவியவள் மீது அப்பட்டமான பழி சுமத்திய எல்லை மீறலை எண்ணி வெகுவாகவே வேதனை கொண்டான் ஆணவன்.

நம்பிக்கை குலைந்த நாயகியின் வெளிறிய முகமும் அவளின் வலிக்கொண்ட பார்வைகளும் மூடிய விரனின் கருவிழிகளுக்குள் காட்சியாய் விரிந்தது.

''சோரிடி! எனக்கு வேறே வழி தெரியலே! நீயாவது நல்லாருக்கணும்!''

என்றவனோ சட்டென விழிகள் விரித்தான் மூளை வேறொரு விடயத்தை செவிக்குள் அருவமாய் உணர.

பக்கென்றது நெஞ்சம் ஆடவனுக்கு அவசர அவசரமாய் குளித்து வெளியேறினான் வீட்டிலிருந்து சின்ன டிக்கியவளை தேடி.

அம்மணியின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை பார்த்து பதறி பயந்தவன் வீடு நோக்கியது என்னவோ உண்மைத்தான்.

பின், அவள் அங்கில்லை என்றுணர்ந்து அதுவும் மலரவள் அழைப்பின் மூலம் பிரச்சனை ஏதுமில்லை என்றறிய, மூன்று நாட்களுக்கு பிறகு கிளம்ப வேண்டிய தாய்லாந்துக்கு உடனடியாக கிளம்பினான் விரன் அவசர கோலொன்று அங்கிருந்து வர.

அதையே சின்ன டிக்கியிடம் சண்டை போட்டிட சாதகமாக பயன்படுத்திக் கொண்டான் விரன் ஏர்போட் போகும் வழியில் அவள் அழைக்க.

ஆனால், அவன் கனவிலும் நினைக்கவில்லை அப்பயணமே அவன் அவளை நிரந்தரமாக பிரிந்திட வழி வகுத்திடுமென்று.

வேறு வழியில்லாதவன் கையிலெடுத்தான் கடைசி ஆயுதமான பொஞ்சாதியவளின் கற்பை. அவனுக்கு தெரியும் ஓரளவுக்கு மட்டும் தான் நிழலிகாவால் பொறுத்துக் கொள்ள முடியுமென்று.

ஆகவே, கணினி நுட்பம் தெரிந்த சிலர் மூலம் மூன்றாவது ஆள் போல் பேசி சொந்த பொண்டாட்டியின் முகத்தையே மோர்பிங் செய்ய பணம் கொடுத்தான் விரன்.

அதைக் கொண்டுதான் மலேசியா திரும்பியவன் திருமதியவளை ஒழுக்கமற்றவள் என்று முத்திரை குத்தினான்.

அவனின் தேவையறிந்தவள் பழியை ஏற்றுக் கொண்டு வெளியேறினாள் வீட்டை விட்டு.

விரனின் கவலையெல்லாம், இல்லை, இல்லை தயக்கம் கலந்த குற்ற உணர்ச்சியெல்லாம் எங்கே உண்மை தெரிய அவனை நிழலிகா ஏற்றுக் கொள்ள மனமின்றி நிராகரித்திடுவாளோ என்பதே ஆகும்.

இருப்பினும், நெஞ்சமோ கொஞ்சமும் வெட்கமின்றி சின்ன டிக்கியவள் அவனை வெறுத்திட மாட்டாள் என்று நம்பிக்கை கொண்டது.

அவளை இவ்வளவு பாடு படுத்தி வாழ்நாளில் மறக்க முடியா வலியை தந்தவனுக்கு தெரியவில்லை அவனின் இப்படியான கோரிக்கை சரியா தவறா என்று.

காதலில் எல்லாம் சரியென்பார்களே அதுபோல விரனையும் ஊடையவள் மன்னித்து ஏற்றுக் கொள்ள மாட்டாளா இல்லை, அவனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்திட மாட்டாளா என்ற ஏக்கம் இல்லாமல் இல்லை சின்ன டிக்கியின் மீது அளவுகடந்த நேசம் கொண்டவனுக்கு.

அவனுக்கு மட்டும்தான் தெரியும் ஒவ்வொரு 'போ'க்கு பின்னாடியும் விருந்தனையின் காலடியில் துஞ்சி கிடக்கும் அவன் இதயத்தின் ரணம்.

காதால் கேட்ட சங்கதி நெடு நேரத்திற்கு பின்பே மூளைக்கு உரைத்தது. அதை உறுதி படுத்திக்கொள்ள விரும்பினான் ஆளானவன்.

விரனுக்கு தெரியும் நிழலிகா கண்டிப்பாய் அவள் அப்பா வீட்டுக்கு சென்றிருக்க மாட்டாளென்று. ஆகவே, கடையை நோக்கி விட்டான் பைக்கை ஆணவன்.

உயிர் துஞ்சிடுவான் விரன்...

முந்தைய அத்தியாயங்களை படிக்க:


https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/
 

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 49
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: Jai
Top