What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
414
அத்தியாயம் 50

மருதாணி கடை இருட்டி கிடந்தது.

நிழலிகா உடைந்து போன ஊமையாய் கதறிக்கொண்டிருந்தாள் விளக்கணத்தை கடைக்குள் அமர்ந்தப்படி.

அவளின் அழுகையை வெளிச்சம் போட்டு கடைக்கு காட்டிட காரிகையவளுக்கு விருப்பமல்ல. ஆகவே, கும்மிருட்டில் கொலு கொண்டாள் வஞ்சிக்கப்பட்ட பாஞ்சாலியாய்.

பணியாளர்களுக்கு மூன்று நாட்களுக்கு விடுப்பு கொடுத்திருந்தாள். கடைக்கும் அதே மூன்று நாள் லீவுதான்.

தந்தையாகிட முடியாத விரக்தியில்தான் இப்படியெல்லாம் நடந்துக் கொள்கிறான் விரனென்று அவளுக்கு அவளே சமாதானம் சொல்லிக்கொண்டாள் பேதையவள் நிஜமறியாது.

உல்லியவள் உண்டான தகவலை சொல்லி இதுநாள் வரை தம்பதிகள் இருவரும் கொண்டிருந்த பிணக்கையெல்லாம் முற்றாய் துடைத்தெடுத்து தூக்கி வீசிட நினைத்திருந்த நேரம் எல்லாம் தலைகீழாய் மாறிப்போய்விட்டது.

கருத்தரித்த நேரமேதும் சரியில்லையே என்று கூட யோசித்தாள் நிழலிகா. ஆனால், குழந்தை மீது கோபமோ வெறுப்போ அவள் கொள்ளவேயில்லை.

தாயவளை பொறுத்த மட்டில் முறுக்கிக் கொண்டு நிற்கும் அப்பனை இழுத்து வந்து பொஞ்சாதியிடத்தில் ஒட்ட வைக்க போவதே குட்டி குஞ்சனின் சின்ன குட்டித்தான் என்று பெரிதும் நம்பிக்கை கொண்டிருந்தாள்.

இருப்பினும், நினைத்ததோ ஒன்று நடந்ததோ வேறொன்று. சொப்பனமும் சொல்லவில்லை சீமாட்டியவள் அனுபவிக்க போகும் அவலத்தை.

அப்பனின் குரலை இதுவரை எப்படி எப்படியோ கேட்டு வளர்ந்த கரு, இன்றைக்கு தந்தை கொஞ்ச பூரித்து போயிடுவான் என்றெண்ணிய தாயின் உள்ளமோ ஒரு நொடி மரித்து ஜனித்தது அப்பனின் ஈவிரக்கமற்ற பேச்சிலும் உருவாகியிருந்த உயிரின் துடிப்பிலும்.

''சின்ன குட்டி இனி நாமே இங்கதான் தூங்க போறோம். இதுதான் நம்ப வீடு, ரூம் எல்லாமே, சரியா. தினமும் ஏசி யூஸ் பண்ணே முடியாதுடா குட்டி. கட்டுப்புடி ஆகாது அம்மாக்கு. அதனாலே, நைட் தூங்கும் போது அம்மா ஃபேன் போட்டு விடறேன் குட்டிக்கு, சரியா.''

என்றவளோ விசும்பியப்படி குட்டி குஞ்சனின் வாரிசை சுமந்திருந்த வயிற்றை தடவி கொடுத்தாள் கண்ணீர் கன்னங்களை தாண்டி நெஞ்சிறங்க.

''சின்ன குட்டி, நீங்க ஏதும் அப்பாவே தப்பா நினைச்சிடாதிங்க சரியா, அவர் ரொம்ப நல்லவர். கோபம் வந்தாதான் கொஞ்சம் கெடுபிடி. மத்தப்படி அப்பா ரொம்ப பாசமானவரு. நீங்க இருக்கறே விஷயமே அப்பாக்கு தெரியாதுடா குட்டி! அதான், சத்தம் போட்டுட்டாரு! நீங்க ஏதும் அப்பாக்கிட்டே கோச்சிக்காதிங்க சரியா.''

என்றவளோ மானினியவள் சடரத்துக்குள் கைகால்கள் எல்லாம் முழுமையாய் உருக்கொண்டு வாய் திறந்து மூடுடிய பச்சிளங் குழந்தையிடம் சம்பாஷணை கொண்டாள் விரனுக்கு வக்காலத்து வாங்கி.

மிழிகள் ரெண்டும் லேசாய் சொருகியது செயிழைக்கு. களைப்பு வேறு லேசாய் எட்டி பார்த்தது தெரிவையவள் தேகத்தில். மெதுவாய் தலையை சுவற்றில் சாய்த்து கொண்டாள் நிழலிகா நித்திரை அவளை வாரியணைக்க.

மேடு காண வயிற்றை விரல்களால் வருடிக்கொண்டிருந்தவள் விரல் அப்படியே நின்றது அணங்கவளின் நெஞ்சம் பக்கென்று தூக்கி வாரி போட. பின்பக்க வாஷ் பேஷனுக்குள் ஏதோ விழுந்த சத்தமது.

இடத்திலிருந்து நகராதவளோ எக்கி பார்த்தாள் கடையின் பின்புறம். தெரிந்தான் விரன் திறந்திருந்த ஜன்னல் வழி. ரொட்டொர விளக்கு வெளிச்சம் திறந்திருந்த ஜன்னல் வழி கடையை அலங்கரித்தது.

உதட்டை கடித்தப்படி கவலை தேய்ந்த முகத்தோடு திராணியற்ற அம்பகங்களால் இமைக்காது வெறித்தான் பொண்டாட்டியவள் முகத்தை வா வென்று அவள் அழைத்திடா மாட்டாளா என்ற ஏக்கத்தோடு.

அவனை பார்த்த மாத்திரத்தில் ஓடி சென்று அவன் நெஞ்சில் மழலையாய் துஞ்சிக் கொள்ள துடித்தது தாய்மையை அனுபவிக்க ஆரம்பித்திருந்த அந்திகைக்கு.

அதே வேளையில் அவனை இழுத்து நாலு சாத்து சாத்திடவும் கை பரபரத்தது புருஷனின் வேண்டாத வேலைகளை நினைத்து கடுப்பேற.

விறலியின் விழிப்படலங்கள் வீங்கி உப்பி கிடக்க அதை கூட ரசித்து பார்த்தான் விரன். தலையை கீழ் குனிந்த கொண்டாள் நிழலிகா. அவனை வாவென்று அழைக்கவும் முடியாது போவென்று சொல்லவும் முடியாது தவித்து போனாள் ஆட்டியவள்.

சின்ன டிக்கியவளுக்கு தெரியும் விரனின் கையிலிருந்த பைக் சாவிதான் வாஷ் பேஷனுக்குள் விழுந்திருக்குமென்று. சில நொடிகள் கழிய ஏறெடுத்தாள் நிழலிகா இன்னும் அவளை பார்த்தப்படியே நின்றிருந்த ஆண்மகனை.

கெஞ்சியது விரனின் பார்வைகள் அலரவளிடத்தில் வாய்ப்பு பிச்சை கோரி. வல்லபியவளோ அவன் விழிகளை அடிப்பட்ட பார்வை பார்த்து மீண்டும் பழையபடியே அமர்ந்துக் கொண்டாள் சுவற்றில் முதுகொட்டி.

இப்படியான சந்திப்பு அவர்களுக்கொன்றும் புதிதல்ல. இருவருக்கும் மாட்டிக்கொண்டால் விரன் இப்படித்தான் அடிக்கடி கடையின் பின்பக்கமாய் வந்து சைட்டடித்திடுவான் சின்ன டிக்கியவளை.

நிழலிகாவோ, குட்டி குஞ்சனை பார்த்திட இவ்வளவெல்லாம் மெனக்கெட்டிட மாட்டாள். நேரடியாய் அவன் ஜிம் போய் அவனை பார்த்து பேசி மேட்டரை முடித்துக் கொள்வாள்.

விரன் அவனிடமிருந்த ஸ்பேர் சாவி கொண்டு மருதாணி கடையின் பின்பக்க கதவை திறந்து உள்ளே நுழைந்தான். இருண்டிருந்த கடையை விளக்கொன்றை தட்டி வெளிச்சமாக்கினான்.

சின்ன டிக்கியோ எங்கே அவன் வாய் திறக்கும் முன்னரே எக்கி பாய்ந்து அவனை இறுக தழுவி அசிங்கப்பட்டு போயிடுவாளோ என்ற அச்சத்தில் முகத்தை ஒளித்தாள் கால்களுக்கு மத்தியில்.

விரனோ முட்டிக்கால்களில் ஆனனத்தை பதுக்கியிருந்த நிழலிகாவின் அருகில் வந்தமர்ந்தான்.

சலனமில்லா அமைதி இருவரிடத்திலும். அளகவளின் விசும்பல் மட்டும் மெல்லிய கீர்த்தனையாய் ஒலிக்க, ஆளனின் சுவாசமோ வேகம் வாங்கியது; அவனுமே அழுகையை மனசுக்குள் போட்டு மென்று தின்றுக்கொண்டிருக்க.

கைக்கு எட்டிய தூரத்தில் கிடந்த ஏசி ரிமோர்டாய் எடுத்து குளிரை அதிகப்படுத்தினான் விரன் வெட்கையை உணர்ந்து.

''எனக்கு வேறே வழி தெரியலடி!''

என்றான் விரன் சமிதத்தை உடைத்தவனாய்.

சொன்னவனின் நிடலம் நங்கையின் முழங்கையில் உரசி குனிந்திருக்க, உணர்ந்தாள் சின்ன டிக்கியவள் அவனுக்கு காய்ச்சலென்று.

கோபமும் அக்கறையும் ஒரு சேர வந்தது தம்பிராட்டி அவளுக்கு கணவனின் நிலையுணர்ந்து.

இருந்தும், மனசை கல்லாக்கிக் கொண்ட நிழலிகாவோ ஏனோ தலையை மேல் தூக்கி அவனை பார்க்கவே இல்லை.

''இந்த கேடுகெட்டவன் மூஞ்சே பார்க்க பிடிக்கலையாடி?''

என்றவனின் குரலில் வலி தெரிய,

''சாகும் போதும் கூட கடைசியா நான் பார்க்க விரும்பறே ஒரே முகம், இதுதான்!''

என்றவளோ சுரமற்று அவனையே வெறிக்க,

''ஏண்டி, என்னே கெட்டவனாக்கறே! இன்னும் என்னடி பண்றது நான்?! என்னே பண்ணா நீ போவே! எனக்கு சத்தியமா தெரியலடி! அதான், ஏதேதோ..''

என்றவன் முடிக்காமலேயே முந்தி விரித்தவளின் மடியில் முகம் தொலைத்தான்.

''கொடுத்துடறேன் அத்தான்.''

என்றவளோ மூடிய நேத்திரங்களோடு இதழ்கள் துடிக்க அதை அழுத்தமாய் கடித்து விரனின் தலையை கோதி சொன்னாள் நெஞ்சம் கூட நினைக்க விரும்பிடா வார்த்தையை.

''டிவோர்ஸ், உங்க விருப்பப்படி. நீங்க இனி எந்த கஷ்டமும் பட வேண்டாம். போதும், எல்லாம்!''

என்றவளின் அழுது ஓய்ந்திருந்த வதனமோ கன்றி வீங்கியிருந்தது.

''என்னே வெறுத்துட்டியாடி சின்ன டிக்கி?''

என்றவனோ ஏறெடுத்து கேட்டான் மணவாட்டியவளை கலங்கிய நயனங்களில் அவள் உருவமே தெரிய.

''தாலி கட்டி நீ இழுத்திட்டு வரும் போது உன் கையே இறுக்கமா புடிச்சிக்கிட்டவே நான், உன் மேலே அவ்ளோ..''

என்றவளோ வார்த்தைகளை முடிக்காது விரனின் முகத்தை உள்ளங்கையால் மூடி இறுக்கினாள் இயமானியின் நகங்கள் ஆணவனின் முகத்தை பதம் பார்க்க.

''சோரிமா!''

என்றவனோ வாஞ்சையாய் பற்றினான் பாவையவள் மிஞ்சுக் கொண்ட பாதங்களை பிராய்சித்தமாய் செய்த எல்லா தவறுக்கும் சேர்த்து.

''நான் தப்பான பொண்ணில்லே விரன்! என் மனசும் உடம்பும்..''

என்றவளின் வாக்கியம் முடியும் முன்னரே அவளின் இதழ்களை திறவாதப்படி மூடினான் விரன் அவன் அதரங்களை கொண்டு.

சொக்கியது சுந்தரியின் விழிகள் ரெண்டும். சின்ன டிக்கியவள் மூடிய இமைகளை நோக்கியவன் மெதுவாய் மூடினான் அவனின் திட்டிகள் ரெண்டையும்.

நிழலிகாவின் முகத்தை பத்து விரல்களுக்குள் பத்திரமாய் தாங்கியிருந்தவன் பிடி கூட இன்றைக்கு தென்றலை போல் இலகுவாகவே இருந்தது.

விரனின் கலங்கிய கண்ணீர் அவனை அறியாது வழிந்திறங்கி ஓடி சங்கமித்தது இருவரின் இதழ்களிடையே.

விரனின் கரமோ நிழலிகாவின் இடையை வளைத்து இறுக்கியது முத்தம் அவனை முறுக்கேற்ற. சூடேறி போனவளோ இதழ் முத்திக்கு விடை கொடுத்து அவன் நுதல் தொடங்கி செவி வரை உதட்டால் ஒத்தடம் கொடுத்தாள்.

மூச்சிரைக்க இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள,

''எத்தனே மாசம்?''

என்றான் விரன் தாராமவளை தூக்கி அவன் மீது அமர்த்தி.

''மூனு.''

என்றவளோ கணவனின் தோள்களை வளைத்துக் கட்டிக்கொள்ள,

''நான் உன்னே ரொம்ப லவ் பண்றேண்டி! என்னாலே நீ கஷ்டப்படறதே பார்க்க முடியாது!''

என்றவனோ தலை குனிந்தான் அவள் வயிற்றில் கரம் பதித்து.

''அப்பாவாகறது உனக்கொரு பிரச்சனை இல்லன்னு எனக்கு தெரியுண்டா குட்டி குஞ்சா!''

என்றவளோ அவன் கேசத்தை கோதி ஏறெடுத்து விரனின் நாசியை அவள் மூக்கு கொண்டு முட்டினாள்.

விரனோ உதடுகளை ஈரமாக்கிக் கொண்டான். அவன் சட்டை பொத்தான்களை ஒவ்வொன்றாய் கழட்டியப்படி ஒரு கரத்தால் நாச்சியவள் பின்னந்தலையை மென்மையாய் வருடி கொடுத்தான்.

மேலாடையை கழட்டி விரனின் டி-ஷர்ட் மீது போட்ட நிழலிகாவோ தலை சாய்த்தாள் விரனின் இடமார்பில்.

''இப்போவாவது சொல்லுடா குட்டி குஞ்சா? என்னதான் பிரச்சனை உனக்கு?

என்றவள் வினவி அவனை பார்வைகளால் அவனை ஏறெடுக்க,

''சொன்னா தாங்குவியா?''

என்றவனோ பெருவிரலால் சுமனசமவளின் பூவிதழ்களை மென்மையாய் வருடினான் இரு மனதோடு.

''கண்டிப்பா விட்டு போக மாட்டேன்.''

என்றவளோ கொஞ்சமாய் எக்கி வைத்தாள் குட்டி முத்தமொன்றை விரனின் வாய் தாடையில்.

''நிழலிகா, நான் உன்னே ரொம்ப லவ் பண்றேன். என் காதலே மட்டும் எப்போதுமே சந்தேகப்பட்டுடாதே! பிளீஸ்!''

என்றவனோ பதறித்தான் போனான் எங்கே உண்மை வெளிப்பட ஆணவனின் காதல் கேள்விக்குறியாகிடுமோ என்ற பயத்தில்.

''நீ என் குட்டி குஞ்சண்டா!''

என்றவளோ அவன் கன்னத்தை விரல்களால் பற்றி குவித்து அதை அப்படியே ஒத்தியெடுத்துக்கொண்டாள் அவள் அதரங்களில்.

மிழிகளை இறுக்கமாய் மூடி திறந்தான் அவிரன் சிங். நீண்டதொரு பெருமூச்சு இழுத்து விட்டவன் அவனை ஏறெடுத்து பார்த்திருந்த திருமதியின் நெற்றியில் முத்தம் வைத்தான்.

அவளை ஆழமாய் உற்று நோக்கினான். சொல்லலாமா வேண்டாமா என்ற பகடை உருட்டில் சின்ன டிக்கியின் காதலே வென்றது.

நிழலிகாவை அவன் முகம் பார்க்க நிமிர்த்திய விரனோ,

''நான் ஒரு பைசெக்ஸுவல் (bisexual). உன்னைத்தாண்டி இன்னொரு ஆம்பளைக்கூட ஒரே நாள்லே மூனு தடவே உறவு வெச்சிக்கிட்டேன்!''

என்று இறுகிய முகத்தோடு சொல்லி முடிக்க, அதிர்ந்த சின்ன டிக்கியோ அப்படியே அவன் கையில் சரிந்து விழுந்தாள் அதிர்ச்சி தாளாது.

உயிர் துஞ்சிடுவான் விரன்...

முந்தைய அத்தியாயங்களை படிக்க:


https://amydeepz.com/forums/உயிர்-துஞ்சும்-விரனா.6/
 

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 50
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

nisha

New member
Joined
Jul 17, 2024
Messages
3
Yenma enga irundhu pudikkireenga ipdipatta twist a 😲.......... but ovvoru kadhailayum ovvoru twist um vera level😎
 
Top