What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
414
அத்தியாயம் 51

இப்புவியில் பிறந்த ஒவ்வொரு உயிரும் அர்த்தநாரீசுவரர் வடிவத்தை உணர்வால் கொண்டவர்களே.

சிவனின்றி சக்தியில்லை, பார்வதியின்றி பரமேஸ்வரன் இல்லை என்பது போல் ஆணுக்குள் பெண்ணுக்குண்டான குணாதிசயங்களும் யுவதிக்குள் ஆடவன் குணமிருப்பதும் ஒன்றும் அச்சத்துக்குரிய விடயமில்லை.

பந்துரம் கொண்ட ஆளை பார்க்கையில் ஆணெண்ணெ பெண்ணெண்ணெ ஒரு படி மேலே போய் ரசிப்பதை ருசி பார்த்திட மனம் விரும்பிட தவறுவதில்லை, ரகசியமாய்.

இப்படியான உணர்வுகளை கடந்த சுயமாற்றத்தில் உருவாகும் திருநம்பிகளும் நங்கைகளும் ஒருவிதம் எனில், இருபாலினத்தையும் ஒருசேர அன்பு செய்ய விரும்பும் பைசெக்ஸுவல் ரகமோ தனிவிதம்.

இருபால் உறவானது ஒன்றும் கொச்சையானதோ தவறானதோ கிடையாது, இப்பிரபஞ்சத்தில் மனித உருக்கொண்ட அரக்கர்களே மிடுக்காய் இன்னும் நடமாடிக்கொண்டிருக்கும் வேளையில்.

ஒருபாலினத்தை மட்டுமே திருப்திப்படுத்தக்கூடிய உறவில் மற்றொரு பாலினத்தையும் சந்தோஷமாக வைத்துக் கொள்ளும் திறனானது தனித்துவமிக்கதே. இப்படியான பாக்கியம் ஒரு சிலருக்கே கிடைக்கும்.

கெஞ்சல், கொஞ்சலென்று ஒரு பாலினத்தை ஆட்சி செய்தாலும் மற்றொரு பாலினத்தை கெத்தாக மிரட்டியோ அடிபணிந்தோ உறவு கொள்வதென்பதும் ஒருவகையான சிலாகிப்புதான், அதை மறுக்கலாகாது.

இப்படியான உணர்வோடு ஒருவரை படைத்தது கடவுள் என்கையில் இங்கே விருப்பு வெறுப்புக்கான எவ்வித வழியும் இல்லாது போவதென்பது விதியே. இருப்பினும், விதியோடு மதி சேர்த்து வாழ்க்கையை வென்றிடலாம் இத்தகையானவர்களை சுற்றம் அப்படியே ஏற்றுக் கொள்ள.

ஏற்றுக்கொள்வதிலும் எதிர்பார்ப்புகளிலும்தான் பலரின் வாழ்க்கையே ஓடிக்கொண்டிருப்பது என்பது சத்தமில்லா நிதர்சனமாகும்.

நல்லதொரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்த விரனுக்கு இப்படியான வினோத ஆர்வம் சிறு வயது தொட்டே உள்ளுக்குள் இருந்து வருவது யாரும் அறியா விடயமே, ஏன் அவன் கூட.

ஆனால், காலப்போக்கில் அது வெளிவரமாலேயே போனது ஆணவன் குறிக்கோளோடு சேர்த்து சுயத்தை தெய்வ காரியங்களில் ஈடுப்படுத்திக்கொள்ள.

எப்போது அவன் சின்ன டிக்கியை முதன் முதலில் பார்த்தானோ அப்போதே அவளின்பால் காதல் கொண்டான், அதுவும் கைக்கு அடக்கமான அவளின் நிதம்பத்தை கண்டே.

காதலர்களுக்கான ஊடல் கொண்டு கோபித்திருந்தாலுமே தக்க சமயத்தில் வந்து நிழலிகாவின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டு மனையழைத்து வந்தான் விரன்.

காதல் மணவாட்டியாகினும் நெருங்கி வந்த சின்ன டிக்கியை எட்டி போனான் எங்கே போட்டிகளில் கவனம் சிதறிடுமோ என்று.

தள்ளி போன தாம்பத்தியம் அவனுக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திடவில்லை காரணம், ஜிம்மில் அவனைப் போலவே கட்டுமஸ்தான ஆண்களை காண சுயமாகவே விந்து முந்தி விரனை களைப்பாக்கியது.

ஆடை மாற்றுகையில் இப்படியான சங்கடத்தை எதிர்கொண்ட விரனோ இதை இப்படியே விட்டு வைப்பது சரியில்லை என்று எண்ணினான்.

அவனிடத்தில் எவ்வித மாறுதல்களும் இல்லை என்றுணர்ந்தவனோ ஆண்களின் மேல் மட்டும் பதியும் அவன் கண்களை அடக்கிட முடியாது சிரமத்தை எதிர்கொண்டான்.

ஜிம்மில் இருந்தால்தான் பிரச்சனை என்றெண்ணிய விரனோ வெளிநாட்டு ப்ரொஜெக்ஸ் சைன் செய்து பயணம் போனான், இப்படியாவது அவன் நெருடலுக்கு ஒரு தீர்வு கிடைத்திடும் என்று.

பேச்சு வாக்கில் வேடிக்கையாய் விரன் ஒருமுறை பட்டும் படாமலும் ஆண்களை கண்டால் கூட மூடு வருகிறதென்று வீரிடத்தில் சொல்ல, அவனோ சீக்கிரமாய் குடும்ப வாழ்க்கையில் நண்பனை ஈடுப்பட சொல்லி வலியுறுத்தினான் தோழனின் நிஜமறியாது.

விரனும் நிம்மதியற்ற இந்நிலையிலிருந்து தப்பிக்க இறுதியாய் நிழலிகாவோடு இணைசேர எண்ண, நந்தியாய் வந்தது நவராத்திரி பூஜை. கோபம் வந்தது விரனுக்கு அவன் நிலை திண்டாட்டம் ஆகிப்போக.

இருப்பினும், இதில் நிகழ்ந்த நல்லதொரு விடயம் யாதெனில் ஐயாவின் கழுத்தில் ருத்ராக்ஷ மாலையிருக்க விரனோ பக்திமானாக வளம் வந்தான் காஜி தூரம் போக அந்த ஒரு மாதத்திற்கு மட்டும்.

பின், ஒருவழியாய் தாம்பத்தியம் அமோகமாய் அரங்கேற, அளவில்லா ஆனந்தம் கொண்டான் விரன், மனசுக்கு பிடித்த சின்ன டிக்கியோடு அவன் விருப்பங்கள் எல்லாம் எவ்வித தடையுமின்றி நிறைவேற, தினம் இரவு.

முழுசாய் ரெண்டு வாரங்கள் குட்டி போட்ட பூனையாய் நிழலிகாவையே சுற்றி வந்தான் விரன், விறலியவள் நேரங்காலம் பாராது புருஷனின் இழுப்பிற்கு இணங்கி வசதியாய் வாரிக்கொடுக்க.

எல்லாம் நன்றாய் போய் கொண்டிருக்க, மீண்டும் தலைதூக்கியது ஆணவனின் ஆண்மை ஜிம்மில் சில புதியவர்கள் கண்டதும்.

தனியாக இதை சமாளிக்க முடியாத விரனோ என்னதான் ஜிம்முக்கு சென்றாலுமே அவனுக்கான அறைக்குள்ளேயே தஞ்சம் கொண்டான் வெளியில் வராது.

இவ்விஷயம் சார்ந்து மருத்துவரை பார்த்திடவோ அல்லது சின்ன டிக்கியிடத்தில் சொல்லிடவோ விரனுக்கு விருப்பமில்லை. ஈகோவெல்லாம் ஒன்றுமில்லை. ஆனால், வெட்கம் கொண்டான் அவனின் அவல நிலையை நினைத்து.

அவனுக்குள்ளாரேயே பதுக்கிக் கொண்டான் விரன் அவன் பிரச்சனையை. இதனால், மன உளைச்சலுக்கு ஆளானான். ஆசை மனைவியுடன் கொள்ளும் முயங்கலும் கசந்து போனது ஆணவனுக்கு.

அதன் தாக்கமே சின்ன டிக்கியை நாய் போல் பாவித்து சுகம் கொண்டான் அவளுக்கு வலித்தாலுமே சில சமயங்களில், அதுவும் அவள் சம்மதத்துடன்.

விரன்தான் உலகம் எனும் நிழலிகாவிற்கோ கணவன் கேட்டு கொடுக்க முடியாது என்ற ஒன்றே இருக்க கூடாதென்ற பாலிசி. ஆகவே, ரணம் உயிர் போனாலும் சரி, தலையணை கடித்து இன்பம் கொடுப்பாள் அவனில் கலந்து.

எப்படியிருந்தாலும் அவனால் ஜிம்மில் உருப்படியாக எதையும் செய்ய முடியவில்லை, ஆண்மை அசதியை கொடுக்க. கையடிக்கும் பழக்கமெல்லாம் இல்லாதவனோ மனம் சஞ்சலம் கொள்ள உடனே கீழ் தளம் சென்று சின்ன டிக்கியோடு குட்டி ரொமன்சில் ஈடுப்பட்டிடுவான்.

துணைவியவளோ கணவனின் சில்மிஷத்தில் தாங்க முடியா தாபம் கொள்ள, அவனை இழுத்துக் கொண்டு ஓடிடுவாள் மேல் மாடி ஜிம்மறைக்கு, அவனை கட்டிலில் வதம் செய்ய.

உயிர் துஞ்சிடுவான் விரன்...

முந்தைய அத்தியாயங்களை படிக்க:


https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/
 

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 51
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: Jai
Top