- Joined
- Jul 10, 2024
- Messages
- 414
அத்தியாயம் 55
மாட்டு சாணியை ஒளித்து வைத்தால் எப்படி அதன் வாடையே, இருக்குமிடம் காட்டி கொடுத்திடுமோ அப்படித்தான் விரனின் நிலைமையும்.
என்னதான் குட்டி குஞ்சனவன் சின்ன டிக்கியோடு சந்தோஷமாய் குடும்பம் நடத்தினாலும், பதுங்கியிருந்த ஆணவனின் இருபாலின உணர்வுகளோ காத்தேதான் இருந்தன தக்க சமயத்துக்கு வெடித்தெழ.
அப்படி அடக்கி வைக்கப்பட்டிருந்த உணர்ச்சிகளுக்கு கிடைத்த வாய்ப்பாய் அமைந்ததுதான் விரனின் தாய்லாந்து பயணம்.
பணி தொடங்கிய நாட்களில் எல்லாம் நன்றாகத்தான் போய் கொண்டிருந்தது. நடிகர்கள் நடிகைகள் என்று எல்லோரும் விரனோடு சகஜமாய் பழக ஆரம்பித்தனர்.
தேவதை கணக்காய் சினிமா சார்ந்த பெண்கள் புடைசூழ இருந்தாலுமே, விரனுக்கோ எவளை பார்த்தும் மூடென்ற ஒன்று வரவேயில்லை.
இருந்த போதும், நிழலிகாவின் எண்ணம் மட்டும் நெஞ்சை விட்டு அகலாமல் பார்க்கும் பெண்களின் பின்னழகில் அவளையே ஞாபகப்படுத்தியது.
கையடிக்கும் பழக்கத்தை விரும்பிடாதவன் பிட்டு படம் பார்த்தாலுமே சின்ன டிக்கியின் படங்களை பார்த்து ரசித்து உறங்கி போனான் எவ்வித சுயஇன்பமும் காணாது அவளின் டவலை கட்டிக்கொண்டு.
விரன் அப்படித்தான், வித்தியாசமானவன். எல்லாம் பொஞ்சாதியின் சட்டையை எடுத்து வந்திடுவார்கள். ஆனால், விரனுக்கோ சின்ன டிக்கியின் உடல் முழுதும் வளம் வந்த பூந்தூவளைத்தான் துணை வெளிநாட்டு பயணங்களின் போது.
தன்னவளின் மேனி வாசத்தை உள்ளிழுத்து கொண்ட நிழலிகாவின் துண்டொன்றே போதும் விரனை போதையாக்கி ஈரமாக்க எவ்வித சீண்டலுமின்றி.
வந்த வேலையில் மட்டும் கவனம் செலுத்திய விரன், மீதி நேரங்களில் டாக்டர் டர்ஷிக்கின் அறிவுரைப்படி தாய்லாந்தின் கோவில் குளங்களில் சுற்றி திரிந்தான்.
அவனோடு சேர்ந்துக் கொண்டான், விரன் யாருக்காக தாய்லாந்து வந்தானோ அந்நடிகனும். இருவரும் மக்கள் பார்வையில் படாதவாறே பொது இடங்களில் உலா வந்தனர்.
பெண்கள் இருவர் ஒருவரின் கையை மற்றொருவர் பிடிப்பதை சாதாரணமாக பார்க்கும் கண்கள் ஏனோ, ஆண்கள் அப்படி நடந்துக் கொள்கையில் அருவருப்பு கொண்டு ஏளனம் பேசுதென்று தெரியவில்லை.
என்செய்ய, உலக டிசன் அப்படி. ஒன்றும் செய்ய முடியாது.
ஆண்மையை கொண்டு போய் அங்கு வைத்த அறிவாளிகள் வாழ்க.
கூலிங் கிளாஸ் மற்றும் தலையில் தொப்பி அணிந்திருந்த நடிகனோ கூட்ட நெரிசலில் பற்றி பிடித்தான் விரனின் முழங்கையை.
இதுநாள் வரை சின்ன டிக்கியிடம் மட்டுமே அப்படியான பிடிதலை உணர்ந்திருந்த விரனோ முதல் முறை அதை ஓர் ஆணிடத்தில் உணர, அதிர்ந்து அதிர்ச்சிகொள்ளாது ஏனோ நடிகனின் இறுக்கத்தை ரசித்தான்.
எவ்வித தொந்தரவுமின்றி கோவில்களை சுற்றி பார்த்தனர் இருவரும் காதல் ஜோடிகள் போல. நடிகனின் அன்றைய டின்னர் ஏனோ விரனோடு தனியாகவே செட் செய்யப்பட்டது.
மதுப்பழக்கம் இல்லாத விரனோ அதை குடித்து விட்டு ஆட்டம் போட்ட நடிகனை வைத்த கண் வாங்காமல் ரசித்தான். புதிய உணர்வதை மனமும் விரும்பியது ஏனோ காரணம் புரியவில்லை.
ஆடைகளோடு ஆடிய நடிகனோ நேரங்கடக்க கந்தல் கலைந்தான். கடுப்பாகிய விரனோ அங்கிருந்து நகர பார்க்க, காலை பற்றிய நடிகனோ கொஞ்சினான், கெஞ்சினான் கவர்ச்சியான உடல்வாகு கொண்ட விரனிடத்தில்.
ஆனால், சின்ன டிக்கியின் குட்டி குஞ்சனோ எதற்கும் மசியவில்லை. கழுத்திலிருந்த ருத்ராக்ஷ மாலையை விரல்களில் இறுக்கியப்படி அங்கிருந்து வெளியேறினான்.
வேலையும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம், நிழலிகாவிடமே ஓடி விட தோன்றியது விரனுக்கு. மறுநாள் காலையிலேயே குட்டி குஞ்சனவன் மலேசியா கிளம்ப தயாராகினான்.
நடிகனோ தகவல் தெரிந்து ஓடோடி வந்தான். காலில் விழாத குறையாய் விரனை தனியே அழைத்து போய் மன்னிப்பு கேட்டான்.
நேற்றிரவு சம்பவத்தை ஊர் காறி துப்பும்படி பகிங்கரப்படுத்திட வேண்டாமென்று மன்றாடி கேட்டான். காரணம், நடிகன் வெறும் நடிகன் மட்டுமல்ல கல்யாணமாகி ஒரு குழந்தைக்கு தந்தையும் ஆவான்.
விரனுக்கு அதிர்ச்சிதான். இருந்தும், வெளிகாட்டிடாமல் மௌனம் சாதித்தான். தொடர்ந்து பேசிய நடிகனோ, இனி அப்படியான அத்து மீறல்கள் எதுவும் நடக்காது என வாக்குறுதி அளித்தான் விரனுக்கு.
இறுதியாய், தானொரு பைசெக்ஸுவல் என்பதையும் விரனிடத்தில் சொல்லி விலகி போனான்.
உயிர் துஞ்சிடுவான் விரன்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 55
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.